Saturday, December 31, 2005

2005 - 2006

Image hosted by Photobucket.com

2005 - ஏகப்பட்ட சந்தோஷங்கள், நிறைய பாராட்டு, கைகுலுக்கல், புதிய நட்புகள், செல்லத்திட்டுகள், அனுசரணையான பேச்சுக்கள் என சந்தோஷத்திற்கு குறைச்சலில்லாத வருஷமாக சொல்லப்படவேண்டியதுதான் எதிர்பாராமல் வந்த ஒரு பெரிய இழப்பினால் சோகத்துக்கு சொந்தமாகிவிட்டது. எந்த வருஷமும் பார்த்திராத இழப்பை இந்த வருஷம் பார்க்க வேண்டியதாகிவிட்டது. அடுத்தடுத்து வந்த ஏகப்பட்ட இறப்புகள். இயக்கம் ஸ்தம்பித்து சலனமற்று கிடந்த மனிதர்களால் இதயம் கனத்துப்போனது. போனது போகட்டும்... 2006 சந்தோஷமான வருஷமாக இருக்கட்டும் என்கிற பேராசையெல்லாம் எனக்கில்லை. இப்போதெல்லாம் நிதர்சனம் ஒரு சின்ன துழாவலில் கைக்கு தட்டுப்படுகிறது. சந்தோஷத்தை தொடர்ந்து வரும் கஷ்டத்தைத்தான் எதிர்கொள்ள முடியவில்லை. சந்தோஷம் வேண்டவே வேண்டாம். சந்தோஷத்தை விட நிம்மதிதான் இப்போதைக்கு முக்கியம். இந்த புதிய வருஷமாவது இறப்புகளும், இழப்புகளும், சோதனைகளும் இல்லாத நிம்மதியான வருஷமாக இருந்துவிட்டு போகட்டும்!

Monday, December 26, 2005

மாற்றுப்பாதை

பூமி ஒரு சுற்று சுற்றியிருப்பதை நம்பவே முடியவில்லை. வாணகிரி ஊராட்சி அலுவலக கட்டிடத்தை ஒட்டி தரிசாக கிடந்த இடங்களில் இப்போது கான்கிரீட் கட்டிடங்கள் முளைத்திருக்கின்றன. பீச் ஓரமாய் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் இப்போது மொட்டை மாடிக்கு இடம்பெயர்ந்திருக்கின்றன. மீனவ குடிசைகள் இருந்த இடமெல்லாம் படகுகளை நிறுத்தி வைக்கும் ஷெட்டாக மாறியிருக்கிறது. பூம்புகாருக்கு 4 கி.மீ முன்னால் இருக்கும் அந்த மெகா பாலத்தின் கட்டுமான வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது. பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்னும் பழைய பரபரப்பு மிச்சமிருக்கிறது. கலைக்கூடத்தை ஓட்டியிருக்கும் அந்த அரங்கத்தில் ஆடுகள் தூங்கிக்கொண்டிருக்கின்றன. ரோட்டில் போகிறவர்களையெல்லாம் சப்பாத்தி சாப்பிட கூப்பிட்ட அந்த சர்தார்ஜியின் முகம் ஞாபகத்துக்கு வருகிறது. ஏதோ ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பழைய போர்டு உடைந்து ஓரமாய் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் குடிக்க சரியான தண்ணீர் கூட கிடைத்திராத பூம்புகாரில் இன்று கிடைக்காதது எதுவுமில்லை. மீனவ சமுதாயத்தை மட்டுமல்லாமல் கடலோர கிராமங்களின் முகவரியை மட்டுமல்ல முகத்தையும் சுனாமி மாற்றியிருக்கிறது. ஏகப்பட்ட அரசியல் ஈகோ பிரச்னைகளுக்கும் நடுவேயும் பல நல்ல விஷயங்கள் நடந்தேறியிருக்கின்றன. நல்லதோ, கெட்டதோ இன்று எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிறது.

ஒரு வருஷமாய் இன்னும் கிடைக்காத விஷயம் ஒன்று உண்டு. 'சுனாமி'ன்னா பெருசா அலை துரத்திட்டு வரும் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. எதனால் வரும், வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருப்பவர்கள் ரொம்ப குறைவு. ஓரே மாதத்தில் பள்ளிக்கூடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. ஆனால், பள்ளிக்கூட பாடங்களில் சுனாமி பற்றிய செய்திகள் இன்னும் சொல்லப்படவில்லை. மத்திய அரசோ, மாநில அரசோ அல்லது தொண்டு நிறுவனங்களோ மக்களுக்கு இலவசங்களை இறக்குமதி செய்வதில் காட்டிய ஆர்வத்தை நாலு பேரை உட்கார வைத்து சுனாமின்னா இதுதான் என்று சொல்ல முயற்சிக்கவேயில்லை. உதவிக்கு வந்த மகளில் சுய உதவி குழுக்களினால் ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது. ஒரு அனுதாப அலையே வருமளவுக்கு அடுத்தவரிடம் பேசுவது எப்படி என்பதில் விவரமாக இருக்கும் மிஸ்டர் பொது ஜனத்துக்கும் சுனாமி பற்றி தெரிந்து கொள்ள நேரமில்லை. அடிக்கடி அந்தப்பக்கமாய் சென்று வந்தாலும் ஒரு பவர் பாயிண்ட் பிரசெண்டேஷன் கொடுக்கமளவுக்கு நமக்கும் நேரமில்லையே என்கிற மனசாட்சியின் குரலை உதாசீனப்படுத்திவிட்டுதான் மேற்கொண்டு தட்டச்ச வேண்டியிருக்கிறது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. சுனாமியோ, வெள்ளமோ எது வந்தாலும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு அப்படியே இருந்துதான் ஆகவேண்டும். எது நடந்தாலும் மாற்றம் இருந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் ஆதாரத்தையே அசைத்துப்பார்க்கும் மெகா மாற்றம் வரும் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. பாதை குழப்பமாக இருந்தாலும் செய்தி தெளிவாகத்தான் இருக்கிறது.
Image hosted by Photobucket.com

Monday, December 12, 2005

ஹேப்பி பர்த்டே!

Image hosted by Photobucket.com

'இன்று புதிதாய் பிறந்தோம்' என்கிற வார்த்தையை படிக்கும்போது அதற்கான அர்த்தம் ரொம்ப நாள் வரை புரிந்ததில்லை. ரொம்ப நாள் என்று பொதுவாய் சொல்வதைவிட பத்து வருஷத்துக்கு முன்புவரை என்று சொல்வது இன்னும் கொஞ்சம் பொருத்தமாக இருக்கும். அப்போதெல்லாம் கேள்வி கேட்பது பிடித்தமான விஷயம். பொறுப்பு, பதில் சொல்பவர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்த பதினெட்டு வயசு. தினமும் டஜன் கணக்கில் கேள்விகளை எழுதி தள்ளி அனுப்பிவிட்டாலும் பிரசுரிப்பார் யாருமில்லை. எதுவாக இருந்தாலும் பிரசவித்து, பிரசுரமாய் வந்தால்தான் பெருமை. 'ஆத்தா நான் பாஸாயிட்டேன்' ஸ்டைலில் பத்திரிக்கையை தூக்கிக்கொண்டு ஓடிவந்து உற்சாகத்தில் ஊரையே கூட்டிய அனுபவம் பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கே உண்டு என்கிறபோது என்னைப் போன்ற சில்லுண்டிகளை பற்றி சொல்லவே வேண்டாம்! மூன்று வருஷம் போராடியபோது கிடைக்காத அங்கீகாரம், மூன்று நிமிஷ பதிலில் அதுவும் எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சந்தோஷத்தில் நிஜமாகவே நெஞ்சை அடைத்தது. ஓரே நிமிஷத்தில் உயரத்திற்கு போன கால்கள் தரையை தொட சில நாட்கள் ஆனது உண்மைதான். ஒரு சாதாரண வாசகனை எழுத்தாளனாக்குவது என்கிற முயற்சிக்கான முதல் விதை பத்து வருஷத்திற்கு முன்னர் இதே நாளில் கிட்டதட்ட இதே நேரத்தில்தான் தூவப்பட்டது. விதை முளைத்து வந்திருப்பது நல்ல செடியா, முள்செடியா என்பதெல்லாம் தனிக்கச்சேரி.

12.12.1995 தூர்தர்ஷன் பேட்டியிலிருந்து.... (click here)

தியானத்தின் போது மனம் அலைபாய்கிறதே? அதை எப்படி கட்டுப்படுத்துவது? - ஜெ. ரஜினி ராம்கி, மயிலாடுதுறை.

'இந்த கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க. சில பேர் அதை ட்ரை பண்றாங்க. அதை கட்டுப்படுத்த முடியாது. அதுக்கப்புறம் கட்டுப்படுத்த முடியாம இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுது. அது தேவையே இல்லை. அதைப்பத்தி கவலைப்படாதீங்க. காலையில எழுந்தரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க. அப்படியே உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் ·பாலோ பண்ணுங்க. அது எங்காவது போகட்டு. எது பின்னால வேணும்னாலும் போகட்டும் யாரு பின்னால வேணும்னாலும் போகட்டும். ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க. பிறகு எழுந்திடுச்சுடுங்க. அதை கன்டினியூ பண்ணுங்க. அதை பண்ண பண்ண அது அப்படியே வந்து மனசு உங்க கண்டோரல்ல வரும். அப்ப வந்து உங்க .இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பத்தி கான்ஸன்ட்ரேட் பண்ணமுடியும். இது எப்படின்னு சொன்னா... ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில்ல இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதானே புதுசா போடமுடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அதுவந்து இயற்கை. அதைப்பத்தி எந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க போதும்'
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்


சுயபுராணத்துல சொன்ன மாதிரி 'நீங்க பத்திரிக்கைங்களுக்கெல்லாம் எழுதுவீங்களா'ன்னு எல்லோரும் கேட்குற நிலைமைதான் இன்னிக்கும். அதனால புதுசா நமக்கு நாமே திட்டம்! நம்மை பத்தி நாமே சொல்லிக்கிறதுதான் நமக்கு நல்லது.

ஹேப்பி பர்த்டே ரைட்டர் ராம்கி!

Thursday, December 08, 2005

விடாது கற்பு!

சர்க்குலேஷன் ரொம்பவே குறைஞ்சு போச்சேன்னு நினைச்சு கவலைப்பட்டு பந்தை எறிஞ்ச இந்தியா டுடேவுக்கும் சரி ஆட்டத்துக்கு யாரும் கூப்பிடாம கங்குலி மாதிரி இருந்தவளுக்கு வகையாக ஒரு பந்து மாட்டும்போது விளாசலாம்னு நினைச்ச குஷ்புவுக்கும் சரி, நம்பவே முடியலை! சினிமாக்காரி ஒருத்தி சிக்கியிருக்கா...பந்தை கரெக்டா புடிச்சு அவுட்டாக்கினா, பவுடர் பயலுங்க பயந்துடுவானுங்க... பந்தை புடிக்கலேன்னாலும் பரவாயில்லை, டிரை பண்ணினா பப்ளிசிட்டிக்கு உத்திரவாதம். எது நடந்தாலும் நல்லதுக்குத்தான்னு பெவிலியனில் ரெண்டு டீம் காப்டனும் படு ரிலாக்ஸ். கிரவுண்டுல யாருமே இல்லேன்னு நினைச்சு மட்டையை குறுக்கே வைச்ச குஷ்புவை மீறி பந்து அந்தரத்தில் பறக்க, இதுதாண்டா டைம்னு உஷாராகி பகுத்தறிவு, சமூக நீதி, தமிழ் பாதுகாப்பு வகையறாக்கள் கைகோர்த்துகிட்டு ·பீல்டிங் ·பார்முக்கு வர, ஒக்க நிமிஷத்தில் எல்லாம் ஓவர். மேலே போன பந்து, வெடிகுண்டாய் மாறி.... அடப்பாவமே ஒரே ரண களம்தான்.

நம்மளை தவிர சன் நியூஸ் கூத்தை யாரும் பார்க்கலைன்னு நினைச்சது தப்புதான். இரண்டு பக்கத்துக்கும் நாமதான் நாட்டாமைங்கிற மாதிரி அந்த மாடு போட்ட அட்டகாசம் தாங்கமுடியலை. 1996ஆம் வருஷம் கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்னர் புது ஆட்சி என்னவெல்லாம் செய்யணும்னு ஒரு வாசகர் கருத்து கேட்டிருந்தது. அதில் அடியேனும் கருத்து எழுதி பிரசுரமானது இன்னும் ஞாபகத்துக்கு இருக்குது. மதுவிலக்கு வேண்டாம்னு எழுதித்தள்ளிட்டு ஆசிரியர் குழு கேட்டுக்கொண்டதன் பேரில் மதுவிலக்கு வேண்டும்னு மாத்தி எழுதிக்கொடுத்ததாம் அந்த மாடு. வாக்குமூலம் கொடுத்திருப்பது அப்போது பொறுப்பாசிரியராக இருந்த ஞாநி!

நடிகர் சங்கத்திலிருந்து நோட்டீஸ் வந்தால் கோர்ட்டுக்கு போக வேண்டியிருக்கும் ஸாரின்னு சுகாசினி சொன்னதில் 'ஸாரி'ங்கிற வார்த்தையை சரத்குமாரே சென்ஸார் பண்ணிட்டாராம். இப்படியெல்லாம் நடிகருங்களே சென்ஸார் பண்ணிட்டா எஸ்.ஜே. சூர்யாவுக்கு குஷியாக இருக்கும். எல்லாவற்றையும் நியாயப்படுத்துவதற்காக துடைப்பக்கட்டையையும் பெருமையா தூக்கிப்பிடித்த திருமாவளவனின் ஆட்டமும் எஸ்.ஜே.சூர்யாவின் டூயட் டான்ஸ் மாதிரி நாராசமாகத்தான் இருந்தது. குஷ்பு விஷயத்தில் சைலண்ட்¡க சதமடித்த பெரிசு கூட சுகாசினி விஷயத்தில் டக் அடிக்க வேண்டியிருந்தது. சுகாசினி தமிழச்சியே கிடையாது. கைபர் கணவாய் வழியா வந்தவர்தான்னு சீமான் பேசியிருக்கிறதை பத்தி ஞாநி கமெண்ட் அடிக்கலாம். ஆனா, நாம கமெண்ட அடிச்சா பூணூலைத்தான் மாட்டிவிடுவாங்க.

நம்ம நமீதா மாதிரி நச்சுன்னு ஞாநி கடைசியா ஒரு கேள்வி கேட்டிருப்பதில் நியாயமிருக்கிறது. பெரியாரின் நாத்திகம், பெண் விடுதலை, ஜாதி ஒழிப்புக் கொள்கைகளை ஏற்காத ராமதாஸ் இட ஒதுக்கீட்டுக்கொள்கையை மட்டும் ஆதரித்து பெரியாரின் வாரிசுன்னு பட்டத்தை வாங்கிக்கும்போது இட ஒதுக்கீட்டை ஏற்காத வாஸந்தி, மாலன் போன்றோர் பெரியாரின் பெண் விடுதலைக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பெரியாரின் வாரிசுகளாக ஏன் ஆகக்கூடாது? நமக்கேண்டா வம்பு! திருமாவளவன் வழியையே பின்பற்றலாம். தமிழ்நாடே வெள்ளக்காடா இருக்கும்போது குஷ்பு விஷயத்தை பிடிச்சு தொங்க வேண்டாம்னு சொல்லியிருக்கார். ஓவர் டூ வெள்ள மேட்டர்.

Image hosted by Photobucket.com

கொள்ளிடத்து மக்கள் கெலிக்கிறாங்க. அரசியல் தலைவருங்க எல்லாம் அடிக்கடி வந்துட்டுப் போறாங்க. பண புழக்கம் ஜாஸ்தியா இருக்குதாம். மணிசங்கர் ஏன் வரலைன்னு ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காங்க.கையில துட்டு இல்லை. அதனால வரலை. மக்களை சந்திக்கணும்னா நிறைய சூட்கேஸ் வேணும். அரசியல்வாதிங்க கிட்டே கைநீட்டி காசு வாங்காத தமிழனின் கற்பு கொடி கட்டி பறக்குது! அரசியலுக்கு புதுசா வந்திருக்கும் கரைவேஷ்டியோ கட்டுப்படி ஆகலைன்னு பாதி வழியிலேயே ரிட்டர்ன் ஆயிட்டாராம். இதுக்கெல்லாம் அசராத சமூக நீதி போராளியோ முப்பத்திரெண்டு காரில் வந்திருந்து ஏரியாவையெல்லாம் சுற்றிப்பார்த்து மக்களின் துயர் துடைத்துவிட்டு போயிருக்கிறார். அரசியல் மேட்டரெல்லாம நமக்கெதுக்கு? கொள்ளிடம் இப்போது எப்படி இருக்கிறது? நல்லாத்தான் இருக்குது.

'கொள்ளிட பாலத்துல பன்னிங்க கூட்டமா போயிட்டிருக்கிற மாதிரி போட்டோவை போட்டிருக்கியே... வம்புதானே?'

'அய்யய்யோ.. வேற பொருத்தமான போட்டோ இல்லீங்கண்ணா... வேணும்னா அதை ஆ·ப் த ரெக்கார்டா வெச்சுக்கோங்க'

Saturday, December 03, 2005

செகண்ட் செஞ்சுரி

நெஞ்சத்தில் பெயர் எழுதி, கண்ணுக்குள் நான் படிப்பேன்...
கற்பனைகளில் சுகம், சுகம்... கண்டதென்னவோ நிஜம், நிஜம்.

Hits of 1978

Image hosted by Photobucket.com
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் - காற்றினிலே வரும் கீதம்
Image hosted by Photobucket.com
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான்
Image hosted by Photobucket.com
ஒரு நடிகை பார்க்கும் நாடகம் - ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
Image hosted by Photobucket.com
மோக சங்கீதம் - கண்ணன் ஒரு கைக்குழந்தை
Image hosted by Photobucket.com
கோயில் மணியோசை - கிழக்கே போகும் ரயில்
Image hosted by Photobucket.com
சொர்க்கம் மதுவிலே - சட்டம் என் கையில்
Image hosted by Photobucket.com
அமுத தமிழில் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
Image hosted by Photobucket.com
ஒரே நாள் உனை நான் - இளமை ஊஞ்சலாடுகிறது
Image hosted by Photobucket.com
நினைவாலே சிலை செய்து - அந்தமான் காதலி
Image hosted by Photobucket.com
ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் - வணக்கத்துக்குரிய காதலியே


Image hosted by Photobucket.com
பிளாக் எழுத ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சுங்கிறதுக்காக இப்படியா படத்தை போட்டு ஒப்பேத்துறதுன்னு கண்கலங்கி ஆ...ச்சரியப்படறது நம்ம கமல்தான்!

Thursday, December 01, 2005

1977 பாடல்கள்

ஹி..ஹி.. வணக்கம்பா. எல்லாரும் எப்பிடி கீறீங்கோ? கொஞ்ச நாளா தலையை மறைச்சுக்கினு இருக்க வேண்டியதா போச்சு. அதான் வரமுடியலை. அதாகப்பட்டது அம்மா டிவியை கிண்டலடிச்சாலும் தப்பு அய்யா டிவியை கிண்டலடிச்சாலும் தப்புன்னா இன்னாதான் பண்ணமுடியும்? சரி பாலிடிக்ஸ் மேட்டரெல்லாம் வேண்டாம்னு நினைச்சாலும் போரடிக்குதே. அதான் திரும்ப வந்தாச்சு!



சரி, ஒரு சூப்பர் மேட்டரோட ஸ்டார்ட் பண்ணுவோம். 'நீ மூணாம் கிளாஸ் படிக்கிறச்ச வந்த படம்டா இது'ன்னு யாராவது சொன்னா மனசுல கொஞ்சம் குளிர் அடிக்குமில்லியா.. அப்படியோரு ஜில் மேட்டர். 'ரெண்டு வயசா இருக்கும்போது வந்த சினிமாப்பா இது'ன்னு ஒரு பெரிசு சொன்னவுடன் பசக்குன்னு உட்கார்ந்துட்டேன். வெள்ளிக்கிழமை ராத்திரி சீரியல் தொல்லையெல்லாம் இல்லாத ஒரு சுபவேளை. பதினோரு மணிக்கு ஜெயா டிவியில 77 ஆம் வருஷம் வந்த பாட்டெல்லாம் வரிசையா எடுத்து வுட்டாங்க.....தூக்கம் போயோ போச்!

டெலிவுட் : 1977 பாடல்கள் More in www.tamiloviam.com

List of Movies

Aarupushpangal
Alukkoru Aasai
Andaman Kathali
Avar Enakke Sontham
Avargal
Chakravarthi
Dheepam
Dhurga Dhevi
Maduraiyai Meeta Sundara Pandian
Navarathnam
Nee Vazha Vendum
Odi Vilaiyaadu Thaaththaa
Palabhisekham
Pathinaru Vayathinile
Pattina Pravesam
Pen Jenman
Ponmani
Punniyam Seithaval
Rowdy Rakkamma
Sainthadamma Sainthadu
Sonnathai Seiven
Thunaiyiruppaal Meenatchi
Vayilla Poochi

Sunday, November 27, 2005

மாஜிக் - 26

நான்காவது நாளாக துண்டிக்கப்பட்டு கிடக்கிறது சிதம்பரம். கொள்ளிடத்தின் அக்கரையிலிருக்கும் பல கிராமங்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. 1977 நவம்பர் மாதத்திற்கு பின்னர் இப்படியொரு வெள்ள ஆபத்து கொள்ளிடத்தில் ஏற்பட்டதில்லை என்கிறார்கள். இக்கரையில் கொள்ளிடக்கரையோரமாய் இருக்கும் மகேந்திரப்பள்ளி, ஆச்சாள்புரம், அனுமந்தபுரம் கிராமங்களில் முழங்கால் வரை தண்ணீர். கொள்ளிடத்தில் நேற்று தண்ணீர் வரத்து குறைந்திருக்கிறது. காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா பகுதி தப்பியது. நாகை மாவட்டத்தில் இப்போது நிலைமை பரவாயில்லை. சிதம்பரத்தை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தின் நிலைமைதான் மோசம். கடலூரையும் சிதம்பரத்தையும் இணைக்கும் பாதையில் உள்ள ஆலப்பாக்கத்தில் ரோடு இருக்கும் தடயமே தெரியவில்லை. மேடான பகுதிகளான கிள்ளை, பரங்கிப்பேட்டை போன்றவை வெள்ள ஆபத்திலிருந்து தப்பித்திருக்கின்றன. சிதம்பரத்தை நாலாபுறமும் தண்ணீர் சூழ்ந்து தெப்பக்குளத்தை ஞாபகப்படுத்துகின்றன. நிஜமாகவே உணவு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

Image hosted by Photobucket.com

நிகழ்ந்திருப்பது சுனாமியை விட மோசமான சம்பவம். சுனாமி வந்த அரை மணிநேரத்திற்குள்ளாகவே மீட்பு படை களமிறங்க முடிந்தது. இரண்டாவது நாளே இயல்பு வாழ்க்கையும் திரும்பியது. இப்போதோ நான்கு நாட்களாகியும் பல கிராமங்களை நெருங்கவே முடியவில்லை. உயிர் பலிகள் அதிகமாக இல்லை என்பது ஆறுதலான விஷயம். ஞாயிற்றுக்கிழமை இரவு கிடைத்த தகவலின்படி மீட்பு நடவடிக்கைகள் சிதம்பரம், கடலூர் பகுதிகளில் முடிந்துவிட்டன. எல்லா மக்களுக்கும் உணவு, தங்க இடம் கொடுப்பதற்கான நடவடிக்கைகள்தான் நடந்துகொண்டிருக்கின்றன. நாளை முதல் நாகை, தஞ்சை, விழுப்புரம் பகுதிகளிலிருந்து உணவுப் பொட்டலங்களை ஹெலிகாப்டர் மூலம் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏதோ எல்லாம் விளையாட்டாக நடந்து முடிந்தது போலத்தான் இருக்கிறது. வியாழன் இரவு மழை பெய்ய ஆரம்பித்தவுடனேயே சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று நாகை மற்றும் கடலூர் பகுதி கலெக்டர்கள் கெஞ்சித்தான் மக்களை வெளியேற்ற வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் விபரீதம் புரியாமல் வெளியேற மறுத்த மக்கள் தற்போது திகைத்து நிற்கிறார்கள். திருச்சி - விழுப்புரம், கும்பகோணம் - விக்ரவாண்டி, சீர்காழி - கடலூர் பாதைகள் என மூன்று பாதைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிப்பது கடந்த நூறு வருஷங்களில் நடந்திராத விஷயம்.

Image hosted by Photobucket.com

வழக்கம் போல் மீடியா யுத்தம் தொடர்கிறது. மிரண்டு நிற்கும் மக்களின் முகத்தை காட்டி எரிகள், குளங்கள் நிறைந்துவிட்டதால் மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பதாக ஜெயா டிவி படம் காட்டுகிறது. சன் டிவியோ பிஸ்கெட் விலை முப்பது ரூபாய் என்று பீதியை கிளப்புகிறது. தேர்தல் பயத்தில் மினி விசிட் வந்த திராவிட கட்சித்தலைவர்களை பார்க்க யாருக்கும் ஆர்வமில்லை. ஜாதி கட்சித்தலைவர்களால் மட்டுமே மக்களை எளிதாக அணுக முடியும் என்று விதாண்டவாதம் பேசிய நண்பரை காணவில்லை. நடிகர்கள் கூடிய சீக்கிரம் பெருந்தொகையை முதலமைச்சர் நலநிதிக்கு கொடுப்பார்கள். ஆனால் இயல்பு நிலை திரும்ப நிச்சயம் மாதக்கணக்கில் நாளாகும். வெள்ளிக்கிழமை வரை வெள்ள நீர் ஒழுங்காக கடலில் சென்று சேர்ந்துகொண்டிருந்தாலும் சனிக்கிழமை அன்று மட்டும் கடல் மிரண்டுபிடித்தாக சொல்கிறார்கள். சுனாமி வந்தது, பருவமழை ஆரம்பித்தது, செப்டம்பர் மாதம் முதல் தடவையாக கொள்ளிடத்தில் பயமுறுத்தியது, வெள்ளநீரை உள்வாங்கிக்கொள்ளாமல் கடல் மிரண்டு பிடித்தது எல்லாமே அந்த மாஜிக் 26 ஆம் தேதிதான். இப்போது பிரச்னை சாப்பாடு மட்டுமல்ல; பீதியும்தான்.

Thursday, November 24, 2005

வேண்டாம் கமல்!

ஆஸ்திரேலிய புல்வெளியில் சிவாஜி நடை போடும் குறுந்தாடி கமலை விடாப்பிடியாக தொடர்ந்து கொண்டே சிம்ரன் பாடும் பாட்டுதான் எனக்கு இன்றைக்கு சுப்ரபாதம். பெரும்பாலும் எல்லா நாட்களிலும் கே டிவியின் முகத்தில்தான் கண்விழிக்க வேண்டியிருக்கும். விடிந்தும் விடியாத நேரத்திலேயே ரொமாண்டிக் பாட்டுதான் ரூம்மேட்டின் பேவரைட். அலுத்துக்கொண்டே எழுந்தபோதுதான் செல்பேசி சிணுங்கியது. பெங்களூரிலிருந்து அந்த குறுந்தகவல் (நன்றி - நக்கீரன் கோபால்!) வரவில்லையென்றால் ரிமோட்டுக்கும் வேலை இருந்திருக்காது. 'வணக்கம் தமிழக'த்தில் நம்ம கமலக்கண்ணன்!


Image hosted by Photobucket.com

கமலக்கண்ணன் கொஞ்ச மாதங்களாகத்தான் பழக்கம். அறிமுகப்படுத்தி வைத்தது நம்ம பேட்டை வாத்தியார்தான். (அய்யாவுக்கு உடம்பு சரியில்லை. மஞ்சள் காமாலை! வீட்டில் ஒரு மாதமாய் மோட்டுவளை ஆராய்ச்சிதான்!) பொன்னியன் செல்வன் குழும யாத்திரைகளுக்கு கமல்தான் கேப்டன். ஒல்லிக்குச்சி உடம்புக்காரன் என்று சொன்னால் சத்தியமாக அது பொய்தான். மேட்டுப்பாளையத்தில் பிறந்து பெங்களூரில் பொழைப்பை பார்த்துக் கொண்டிருந்தாலும் தஞ்சாவூர் பக்கம்தான் அடிக்கடி தலைவைத்து படுக்கிறார். சோழ, பல்லவ காலத்து கோயில் அமைப்புகளையும் அதிலிருக்கும் உள்குத்தையும் அவசரம் காட்டாமல் டாப் டூ பாட்டம் அலசுவதில் ஆர்வமுண்டு. எப்போதும் கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருப்பவர். போரடித்தால் பொன்னியின் செல்வனை படிப்பார். வரலாற்றை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் அந்த நால்வர் அணியில் ஒருவர். ஆதித்த கரிகாலன்தான் புனைப்பெயர். நந்தினி உண்டா இல்லையா என்பது பரம ரகசியம். காரணம், ஆசாமிக்கு கால்கட்டு போட்டு ரொம்ப நாளாகுது!

இரண்டு மாதத்திற்கு முன்னர்தான் மூன்றாம் யாத்திரைக்கு போயிருந்தோம். பொன்னியின் செல்வன் உறுப்பினர்களோடு பேசிக்கொண்டே வருவதற்காகவே பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து தஞ்சாவூர் போக எங்களோடு இணைந்து கொண்டார். பேச்சில் சோழர், கல்கி வாடை ஜாஸ்தி. இந்த சின்ன வயதிலேயே ஹிஸ்டரி ஸ்காலர் ஆகியிருப்பதில் எனக்கு மட்டுமல்ல வரலாற்று துறையில் இருப்பவர்களுக்கே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. வரலாறு தவிர ஜப்பானிய மொழியில் ஆர்வமுண்டு. தமிழ்நாட்டின் கலாசாரத்தை ஒத்த ஒசாகாவில் (அதே இடம்தானுங்கோ!) செட்டிலாவதுதான் லட்சியமாம். இங்கே புல் முளைத்து, புதரில் சிக்கி கலாசார பொக்கிஷங்களெல்லாம் கவனிப்பாரின்றி கிடக்கும்போது அதையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டு ஓசாகா போகவேண்டும் என்று அவர் நினைத்தால்...'வேண்டாம் கமல்...அது உங்களால் முடியவே முடியாது'ன்னுதான் சொல்லத் தோன்றுகிறது.

Tuesday, November 22, 2005

துடைப்பக்கட்டை

Image hosted by Photobucket.com

சென்னை: துடைப்பக்கட்டை என்பது தமிழ் கலாசாரத்தின் ஒரு அடையாளம் என்று தமிழ் கலாசார பாதுகாப்பு காவலர் திருமாவளவன் தெரிவித்தார்.

நேற்று கூடிய தமிழ் கலாசார அறிஞர்களின் கூட்டத்தில் குஷ்பு, சுஹாசினி போன்ற நடிகைகளின் முறைகெட்ட செயலை கண்டிக்க கூடிய கூட்டத்தில் திருமாவளவன் இச்செய்தியை தெரிவித்தார். துடைப்பக்கட்டை காட்டி எதிர்ப்பு கூட்டம் நடத்துவது என்பது தமிழ் கலாசாரத்தின் அருமை பெருமைகளை விளக்கும் ஒரு அம்சமாக கொள்ளலாம் என்றும் கூறினார். அப்படிப்பட்ட எதிர்ப்பு கூட்டத்தை நடத்தியது விடுதலைச் சிறுத்தைகளோ அல்லது பாமகவோ அல்ல என்பதையும் உறுதிபட தெரிவித்தார். மேலும் சுஹாசினியின் கருத்தை கருணாநிதிக்கு கொம்பு முளைத்திருக்கிறதா என்று கேட்டதாகவும் பொருள் கொள்ளலாம் என்றும் கூறினார்.


இதைத்தொடர்ந்து பேசிய தி.மு.க எம்பி சரத்குமார், சுஹாசினி தன்னுடைய பிரச்னையை கோர்ட்டில் சந்தித்துக்கொள்வதாக கூறி தன்னை எஸ்எம்எஸ்ஸில் மிரட்டியதாக வருத்தப்பட்டு பேசினார். அதற்கு முன்னதாக எஸ்எம்எஸ்ஸை தமிழில் எப்படி சொல்வது என்பது பற்றிய சுவையான விவாதங்கள் நடந்தன. பின்னர் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி, சுஹாசினி தன்னுடைய கருத்தை பெங்களூரில் சொல்லியிருந்தால் பிரச்னை வந்திருக்காது என்று கருத்து தெரிவித்தார். கூட்டத்தில் பேசிய கரு. பழனியப்பன் சாலமன் ருஷ்டி என்றொரு எழுத்தாளர் இருப்பதாக ஒரு கூடுதல் தகவலையும் பகிர்ந்துகொண்டார். ஒரு முழு நீள நகைச்சுவை நிகழ்ச்சியை சன் நியூஸ் சானல் ஏற்பாடு செய்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, November 19, 2005

ஓரங்கட்டேய் - 6

Image hosted by Photobucket.com

'தங்க மகனை சொன்னாலும் பரவாயில்லே... நம்ம மன்னனை பத்தி தப்பா சொல்லிட்டாங்கப்பா...'

'இன்னாபா பெருசு மாதிரி புலம்புறே... என்னாச்சு இப்போ?'

'ஆட்டம் போட்ட அம்மாவை வூட்ல உட்கார வெச்சுட்டு... கம்பெனி கீயை யாரு கையில குடுக்கிறாரு தெரியுமா?'

'எதைச் சொல்றே.... கிளைமாக்ஸை சொல்றியா? ஆமா...யாரு கையில?'

'குஷ்பு கையில...'

'குஷ்பூவா.....அய்யய்யோ.....பாருங்க தம்பீ... பீதிய கிளப்புறானுங்கோ'

Thursday, November 17, 2005

ஓரங்கட்டேய் - 5

சிறுத்தையை முறத்தால் விரட்டி அடித்த...
தமிழச்சிகளின் ஆவேசம்

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

அழுகிய முட்டை, தக்காளி அடிக்க செல்லடா!
கலாசாரத்தை வாழ வைக்க கல்கடுக்க நில்லடா!
தமிழா... தமிழா நாளை உன் நாளே...
தமிழா... தமிழா நாளும் உன் நாளே!

Saturday, November 12, 2005

ஓரங்கட்டேய் - 4

Image hosted by Photobucket.com

பரமக்குடி பச்சை தமிழச்சி. எங்கேயும் ஓடுன்னு சொல்ல முடியாது!

கவர்ச்சி காட்டாத நடிகை. மீக்கு தெலுகு தெலிதுகாதா?

அறிவுஜீவிகளுக்கு நெருங்கிய உறவு. லா பாயிண்ட் குடும்பம்!

கலைப்பட அனுபவம் ஜாஸ்தி. ஹாலிவுட் ரேஞ்சுக்கு சிந்தனைக்கு உத்திரவாதம்.

நிறைய பேசி தெளிவா குழப்பும் திறமை உண்டு. ஆழ்வார்ப்பேட்டை வாசனை இன்னும் போகவில்லை.

அடிக்கடி சிரிப்பார். அழுதால் நல்லா இருக்காது என்பதால் நிச்சயம் ஜகா வாங்கமாட்டார்!

இமேஜ் டேமேஜாயிடும்னு பயந்து குஷ்பு ஆட்டத்தை எட்ட நின்னு பார்த்த கணவான்களே! உங்களுக்காக இதோ ஒரு ஸ்பெஷல் ஆட்டம். வாங்கப்பா... வாங்க.. வந்து ஆடுங்க!

Friday, November 04, 2005

கொள்ளிடத்தில் தீபாவளி

கலெக்டர் ராதாகிருஷ்ணனுக்கு சர்க்கரை போடாத டீதான் இஷ்டம். சூடாக இருக்கவேண்டும். சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் எல்லோருக்கும் டீ வந்தாகணும். 'வேணவே வேணாம்' என்றால் மட்டுமே விடுவார். கொள்ளிடத்துக்கு ரவுண்ட் அப் போய் ஒரு மூணு மணி நேரம் பக்கத்தில் நின்று கலெக்டரை பார்த்து தெரிந்து கொண்ட விஷயங்கள் சிலது. கலெக்டரின் காஸ்ட்யூம் மட்டும்தான் ராமராஜன் ஸ்டைல்; ஆக்ஷனெல்லாம் விஜயகாந்துதான்! அடிக்கடி தலையை சிலுப்பி மோட்டுவளையை பார்த்து யோசித்துக்கொண்டே இருக்கிறார். முதலைமேடு என்னாச்சு, அனுமந்தபுரம் என்னாச்சு... ஏதாவது மெசேஜ் வந்திருக்கா? அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான்.

Image hosted by Photobucket.com

ஆள் அரவமற்று அழுது வடியும் அந்த பஞ்சாயத்து ஆபிஸ் இப்போது பரபரப்பாய் இருக்கிறது. கக்கூஸில் டியூப் லைட், வாசலில் ஜெனரேட்டர், ஹாலில் டிவி, மேஜையில் ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர், நக்கீரன் வகையறாக்கள். கொள்ளிடம் பஞ்சாயத்து ஆபிசுக்கு ஒரு கல்யாணக்களை சே... ஒரு கருமாதி களை வந்திருக்கிறது. இந்த வருஷம் கலெக்டருக்கு தீபாவளி கொள்ளிடத்தில்தான். பத்துமணிக்கு சித்தமல்லிக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு மதியம் நாகப்பட்டினத்தில் சாப்பாடு. மதியம் மூணு மணிக்கு வேளாங்கண்ணியில் ஒரு விசிட். திரும்பவும் சாயந்திரம் ஆறரைக்கு கொள்ளிடம் திரும்பிவிடுகிறார். காலையில் பத்தடி, பதினோரு மணிக்கு பதிமூணு; சாயந்திரம் பதினேழு. திரும்பவும் ராத்திரி பதினோரு அடி என தண்ணீர் ஷேர் மார்க்கெட்டாய் கொள்ளிடத்தில் விளையாடுகிறது. அரசு எந்திரம் பரபரப்பாய்த்தான் இருக்கிறது. கல்யாண மண்டபம், ஸ்கூல் எந்நேரம் மக்களுக்காக திறந்திருக்கிறது. ஒரு பக்கம் பெரிய பெரிய பானைகளில் சமையல் வேலைகள் பிஸி. ஆம்புலன்ஸ், ·பயர் என்ஜின் எல்லாம் ரெடி. ஊர் பரபரப்பு எதுவுமில்லாமல் அமைதியாக இருக்கிறது. மிஸ்டர் பொதுஜனம் கொள்ளிடம் கடைத்தெருவில் தீபாவளி ஷாப்பிங்கில் பிஸி.

'செவ்வாய் கிழமை ராத்திரியில் ஆரம்பிச்சது, இன்னிக்கு ஞாயித்துக்கிழமை ஆவுது... ராத்திரி பகல் பாராம வேலை நடந்துட்டிருக்கு...ராத்திரி இரண்டரை மணிக்கு ரவுண்ட்ஸ்க்கு போறாரு. நம்மளை டிஸ்டர்ப் பண்றதில்லை. கிட்டதட்ட ஒரு குட்டி கலெக்டரேட்டே இங்கேதான் போயிட்டிருக்கு' ஒரு பியூனின் புலம்பல் புராணம்.

'இப்படி மாஞ்சு மாஞ்சு வேலை செஞ்சாலும் சன் நியூஸ்ல போட்டு தாளிக்கிறாங்களே... ஜெயா டிவியிலாவது கொஞ்சம் விவரமா எடுத்து சொல்லலாம் இல்லியா...'

'அட நீங்க வேற... கலெக்டருக்கு மவுசு ஜாஸ்தியாயிடுமே... கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பாங்க'

தேவுடா, தேவுடா எங்க கலெக்டரை கொஞ்சம் காப்பாத்துடா!

Wednesday, October 26, 2005

தூக்கமும் கண்களை தழுவட்டுமே!

Image hosted by Photobucket.com

'அரசாங்கம் சரியா நடவடிக்கை எடுக்கலீங்க. மொதல்ல நிபந்தனை எதுவும் இல்லாம கடன் கொடுக்கணும், அப்புறம் யூரியா, டிஏபியெல்லாம் கிடைக்க மாட்டேங்குது. ஒரு ஏக்கர் பயிருக்கு ஆயிரம் ரூபா கொடுக்கிறா சேலம் மாவட்டத்துல அறிவிச்சுருக்காங்களாம்...அது பத்தாது. ஏத்திக்கொடுக்கணும். ஒரு வாரமாக மழை பெய்ஞ்சதால யாருக்கும் வேலை உத்திரவாதம் இல்லை. அதனால நஷ்ட ஈடா பணம் கொடுக்கணும். வீடெல்லாம் மழையால இடிஞ்சு போய் கிடக்குது. அதை சரிப்படுத்தறதுக்கு அரசாங்கம்தான் பணம் கொடுக்கணும். மழை பெய்ஞ்சு ஆடு, மாடு,
கோழியெல்லாம் சீக்கா கிடக்குது. அதுக்கு ஏதாவது நிவாரணம் கொடுக்கணும்....'

சன் நியூஸ் சேனலில் ஏதோ ஒரு விவசாயிகள் சங்கத்தலைவர் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் சைதாப்பேட்டையின் நனைந்து
போன ஒரு பிளாட்பாரத்தில் இருக்க இடமில்லாமல் ஒடுங்கி படுத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஜீவன்.

Image hosted by Photobucket.com

Monday, October 24, 2005

ஓரங்கட்டேய் - 3

Image hosted by Photobucket.com

Courtesy : Vikatan

'இப்பிடி உட்காரட்டுமா? ஓகேவா பாருங்க...'

'ஒகே. மேல ஏதாவது கட் பனியன் போட்டுக்கலாமே!'

'நோ..நோ...தமிழ்நாட்டுல ஆம்பிளைங்களால சட்டை போடாம உட்காரமுடியும். ஆனா, பொம்பளைங்களால முடியுமான்னு முகத்துல அறையற மாதிரி ஒரு கேள்வியை தமிழ் சமூகத்துல பதிவு பண்றதா இருக்கேன்'

'அப்படியா? பண்ணுங்க..பண்ணுங்க...நீங்க எது வேணும்னாலும் பண்ணலாம். அப்டியே கொஞ்சம் காமிராவை பாருங்க'

'நோ..நோ.. காமிராவை பார்த்து போஸ் குடுத்தா சினிமாக்காரன் மாதிரி இருக்கும். வேணாம்... நான் இப்புடியே கேஷ¥வலா இருக்குற மாதிரியே இருக்கட்டும்'

'சரி. ஷாட்டுக்கு போயிடலாமா?'

'இருங்க...அப்புடியே பின்நவீனத்துவம் பத்தி ஏதாவது புக்கை படிச்சிட்டு இருக்கிற மாதிரி இருந்தா நல்லா இருக்கும். ஏதாவது இருக்குமா?'

'இல்லையே ஸார்.. என்கிட்டே ஒரு இங்கிலீஷ் நாவல்தான் இருக்குது?'

'பரவாயில்லை... எவனுக்கு புரியப்போவது... அதை அப்படியே முன்னாடி விரிச்சு வெச்சுடுங்க.... கரெக்டா போகஸ் ஆவுதான்னும் பார்த்துடுங்க...'

'எல்லாம் ஓகே. கரெக்டா இருக்குது. ஷாட் ரெடி'

'எடுத்துட்டு காட்டுங்க... சரியா வரலைன்னா இன்னொரு ஷாட் எடுத்துடலாம். ஒண்ணும் அவசரமேயில்லை... பட்...ஸ்டில் நல்லா வரணும்'

Monday, October 17, 2005

ஓரங்கட்டேய் - 2

Image hosted by Photobucket.com


"தமிள் பண்பாடு, கலாசாரம் பத்தி அம்மாவும் கருத்து சொல்லியிருக்காங்க பார்த்தியா?"

"அம்மாவுமா? ஆஹா... ஊரு ஒண்ணு கூடிடுச்சுப்பா..!"

Thursday, October 13, 2005

ஓரங்கட்டேய் - 1

Image hosted by Photobucket.com


"இன்னாபா நம்ம பழத்தை மட்டும் காணோம்..."

"அட, மாம்பழ சீசஸனெல்லாம் முடிஞ்சுடுச்சுப்பா!"

Friday, October 07, 2005

டோட்டல் டேமேஜ்

இந்தியா டுடே இதழில் குஷ்புவின் பேட்டியில் ஒரு இடத்தில் கூட தமிழ்ப் பெண்கள் என்கிற சொற்றொடரே கிடையாது. 'என்னைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உடல் பற்றியது மட்டுமல்ல; அதில் மனதும் சம்பந்தப்பட்டிருக்கிறது' என்று சொன்ன குஷ்புவின் நேர்மை பாராட்டப்பட வேண்டியதே தவிர கண்டிக்கப்படவேண்டியது அல்ல. அவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தை நடத்திய, ஏற்பாடு செய்த, தூண்டிய ஒரு அரசியல் தலை கூட இதே நேர்மையோடு தங்கள் காதல், திருமண வாழ்க்கையைப் பற்றி பேசமாட்டார்கள்.

குஷ்புவின் கருத்துக்கு எதிர்ப்பு என்கிற பெயரில் நடந்திருக்கும் அராஜகங்களில் தமிழ்நாட்டு அரசியல் ஆம்பளை சிங்கங்கள் பலரும் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கருணாநிதியின் 'தமிழ் முரசு' பேரக்குடும்பம் முதல், 'இங்கிலீஷ் தாத்தா' ராமதாஸ், 'எல்லோரும் விபசாரி' புகழ் தங்கர் பச்சான், 'ஜக்கி பக்தர்' திருமாவளவன், 'நடிகர் சங்க' கேப்டன் விஜயகாந்த், த.மு.முக என பலரும் தங்கள் ஆம்பளைத்திமிரை வெவ்வெறு விதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

குஷ்புவின் பேட்டிக்கு பல தரப்பிலிருந்து கண்டனம் எழுந்துள்ளது என்று 23.9.2005 இதழில் முதல் பக்கத்தில் தன் பொய்யை தொடங்கிய தமிழ் முரசு தொடர்ந்து 'தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா? என்று தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வந்தது. எந்த சன் டிவிக்கு ஆங்கிலப் பெயர் இருப்பதை நியாயப்படுத்தி அறிக்கை கொடுக்குமளவுக்கு பேரப்பாசம் கருணாநிதிக்கு பொங்கி வருகிறதோ, அதே சன் டிவி குழுமம்தான் தமிழ் முரசு ஏட்டை தமிழர்களுக்கு¡க 'டக்கராக' நடத்திக் காட்டிக்கொண்டிருக்கிறது.

Image hosted by Photobucket.com

தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும் தன் பேரக்குழந்தைகளை டெல்லியில் ஆங்கிலப்பள்ளியில் சேர்த்துவிட்டு இங்கே 'டமில்' பாதுகாப்பு இயக்கம் நடத்தும் மருத்துவர் மாலடிமைடியின் குடும்பக்கட்சியின் மகளிர் அணிதான் குஷ்புவுக்கு எதிராக தமிழ்ப் பெண்களின் கற்பை பாதுகாக்க வழக்குகள் போட்டுக்கொண்டிருக்கிறது.

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கார் மூவருமாக ஓருருவில் அவதரித்த ஜக்கி வாசுதேவரிடம் யோக நிஷ்டை பயின்ற திருமாவளவனுக்கு, திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த ஆதிக்க சாதிக்காரர்கள் வீடு நோக்கியோ மேலவளவு முருகேசனைக் கொன்றவர்கள் வீடு நோக்கியோ கழுதை ஊர்வலம் நடத்த தோன்றவில்லை. ஜக்கி வாசுதேவின் சீடர்களில் குஷ்புவும் உண்டு என்பது திருமாவுக்கு தெரியாதா? குஷ்புவின் கருத்தை விட புரட்சிகரமான கருத்துகளை அதே இதழில் சொல்லியிருக்கும் சுகிர்தராணியை எதிர்த்து துடைப்ப ஊர்வலம் நடத்தாது ஏன்?

உழைத்த தொழிலாளி தினசரி பேட்டா கேட்டதை ஆதரித்த நடிகையை, காசுக்காக வேலை செய்யும் விபசாரியுடன் ஒப்பிட்ட 'தமிழ் சினிமாவின் ஓரே அறிவு ஜீவி' தங்கர்பச்சான், ஒரு ஆண் வேண்டுமானால் எப்படியும் வாழ முடியும் ஆனால் ஒரு பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை தன் திரைப்படங்களில் பதிவு செய்து காட்டியிருப்பதாக குமுதம் ரிப்போர்ட்டரில் கருத்து சொன்ன தங்கர்பச்சான், அப்பேர்ப்பட்ட எனக்கு நேர்ந்த அவமானம்தான் இப்போது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் நேர்ந்துவிட்டது என்கிறார். கி.ராஜநாராயணன் தொகுத்து தள்ளிய கிராமிய பாலியல் கதைகள் எந்தப் பண்பாட்டிலிருந்து வந்தவையாம்?

தமிழ்ப் பெண்களின் கற்பு பக்கம் நிற்கப்போகிறாரா அல்லது அதை கொச்சைப்படுத்திய சக நடிகர் பக்கம் நிற்பாரா என்கிற தர்மசங்கடத்தை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உண்டாக்க நினைத்ததை உணர்ந்தததால்தான் விஜய்காந்த் நடிகர் சங்கத்தலைவர் என்கிற முறையில் குஷ்பு சார்பாக எடுக்க வேண்டிய நிலையை எடுக்காமல் நழுவிவிட்டார்.

குஷ்பு ஒரு முஸ்லீம் பெண்ணானாலும் அவரை நாங்கள் முஸ்லீமாகவே கருதவில்லை என்று அறிக்கை வெளியிட்டது முஸ்லீம் முன்னேற்றக்கழகம். பாலியல் பிரச்னைகளில் குஷ்புவுக்கு நிகராக கருத்து தெரிவிக்கும் படைப்புகளை எழுதும் தமிழ்நாட்டு சல்மாவை த.மு.மு.க ஏன் இன்னும் முஸ்லீம் அல்ல என்று அறிவிக்கவில்லை?

தமிழ் ஆணுக்கு இவர்கள் வைக்கும் ரோல் மாடல் கோவலன். மனைவிக்கு வைக்கும் ரோல் மாடல் கண்ணகி. ஆனால் இவர்களுக்கு மாதவியும் வேண்டும். மாதவிகள் கோவலனின் கற்பை கேள்விக்குள்ளாக்கினால் இவர்களால் தாங்க முடியாது. கண்ணகியே நெடுஞ்செழியனிடம் நீதி கேட்பதற்கு முன்னால் கோவலனிடம் நீதி கேட்டிருந்தால் கோவலன் அவளிடம் என்ன சொல்லியிருப்பான்?

'தமிழ் நாட்டை விட்டு ஓடு'

நன்றி - தீம்தரிகிட அக்டோபர் 2005.

மும்பையிலிருந்து ஞாநி கொடுத்திருக்கும் வாய்ஸை படிச்சா வடிவேலு டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது. 'ஏய்.. வேணாம்...மம்மி பாவம்... நோ..நோ.. டாடி பாவம்.... ஏய்....வேணாம்...சொல்லிட்டேன்...சிஸ்டரை வம்புக்கிழுக்காதே... நோ..நோ... தாத்தா பாவம்.. பிரதர் ரொம்ப பாவம்... ஐயோ...அடிப்பாவி, என் குடும்பத்தை நடுத்தெருவுக்கு இழுத்து இமேஜை டேமேஜ் பண்ணிட்டாளே....'

Wednesday, October 05, 2005

கலக்கி

குடும்பத்துடன் களிக்க... கல்கி! கல்கியோட லோகோ மாறியிருக்குது. குடும்பத்துடன் கண்டுகளிக்க.. டூரிங் தியேட்டர் நோட்டீஸ் ஞாபகத்துக்கு வருது. விகடன், குமுதம் மீட்டரோட கல்கியும் போட்டி போடுது. மீட்டர்னா வேற என்ன, சினிமா மேட்டர்தான். வழக்கம் போல வட்டமேஜைக்கு வர்றவங்க லிஸ்ட் இன்னும் மாறலை. சிதம்பரம் ஸ்ரீவித்யா காளிதாஸ், திருப்பரங்குன்றம் சுப்ரமணியன், சேலம் சியாமளா ஈஸ்வரன், திருவண்ணாமலை சண்முகம், தஞ்சை வளர்மதி... ஹை.. நம்ம டீம் இன்னும் அப்படியேதான் இருக்குது. இந்த வாரம் பாட்டு வாத்தியாருங்களை பத்தின துணுக்கு ஸ்பெஷல். தமிழ் சினிமாவில் பெரிய புரட்சி நடக்குப்போவது. பின்னே, இன்னொரு 'கல்யாணந்தான் கட்டிக்கிட்டு' பாட்டை எழுதமாட்டேன்னு சினேகன் சொல்லியிருக்கிறாராம்! ஆளாளுக்கு விடற பீட்டர்தான் கல்கியின் இந்தவாரத்து மேட்டர்! சாம்பிளுக்கு கொஞ்சம். கல்கியோட கொஞ்சம் கலக்கி....

"நான் சொன்ன கதையில் இம்ப்ரஸ் ஆன உலக அழகி ஐஸ்வர்யாராய், இன்றுவரைக்கும் அதுபற்றி விசாரித்து வருகிறார்."
- பிரவீண்காந்த்

எதுக்கு தேடிட்டிருக்கார்.. எதை தேடிட்டிருக்காரு... அதெல்லாம் ரகசியம். எத்தனை நாளைக்கு ஐஸ்வர்யா ராய் உலக அழகிங்கற விஷயம் தெரியமாத்தான் எல்லோரும் தேடிட்டிருக்காங்க.

"நியூ படத்தை தடை செய்யறதை பார்த்தா, எங்களை மாதிரியானவர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதை தடுக்கறாங்களோன்னு சந்தேகமா இருக்கு."
- சிம்பு

'ஆடறா..சக்கை... ஆடறா.. சக்கை... மாயவரத்து திமிர் ஆரம்பத்துல ஆட்டம் போடத்தான் வைக்கும்.. போகப்போக அடங்கிடும். அதான் பார்க்குறோம்ல...' கமெண்ட் உதவி : நாகர்கோவில் ரூம்மேட்

"குஷ்பு, உருது பேசும் முஸ்லீம் பெண். சிறுபான்மை இனத்தை சேர்ந்தவராக இருப்பதால் இந்துத்வா சக்திகளும், தமிழ் தேசியவாதிகளும் அவரைப் பழிவாங்குகிறார்கள் என்பதே உண்மை."
- கவிஞர் சல்மா

கவிஞருங்க வாயிலேர்ந்து கவித தவிர வேறு எதுவும் வரக்கூடாதுன்னு அம்மா கிட்ட சொல்லி ஒரு ஆர்டர் வாங்கணும். வைரமுத்து சினிமா பாட்டையெல்லாம் குறைச்சுக்கிட்டு இலக்கியம் படைக்கப்போறாராம். சல்மா மாதிரியான கவிதாயினிகளும் கொஞ்சம் நல்ல கழுத.. ஸாரி.. கவித எழுத ஆரம்பிக்கலாமே!

"தன் கருத்தை சொல்வதற்கு குஷ்புவுக்கு உரிமை உள்ளது. ஆனால் அவர் கருத்துக்கு மதிப்பு கொடுக்க நான் விரும்பவில்லை."
- வழக்கறிஞர் அருள்மொழி.

பவுடர் பசங்க என்ன சொன்னாலும் அத யாரும் கண்டுக்கக்கூடாதுன்னு முந்திக்கிட்டு நாமளே சவுண்டு விட்டுடறதுதான் அறிவு ஜீவித்தனம். பெரியார் இப்ப இருந்தா குஷ்பு பத்தி ஸாரி...குஷ்புவோட ஸ்டேட்மெண்ட் பத்தி என்ன கமெண்ட் அடிச்சிருப்பாரு? நல்லா யோசிங்கப்பா!

"இந்தப் பிரச்னையில் ஆண்கள் பதில் சொல்லவே கூடாது"

- தொல். திருமாவளவன்.

சொல்லலாமா.. வேணாமா... எதை சொன்னாலும் உனக்கு.......சரி, சரி....மனசுல எதுவும் வெச்சுக்க வேணாம். சொல்ல வந்ததை சொல்லிடலாம். நோ கமெண்ட்ஸ்!

Image hosted by Photobucket.com

"நவ்யா நாயரு அட்டகாசம் பண்ணியிருக்காங்க. ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மாவா நடிச்சதே பெரிய விஷயம். அதுல சூப்பரா ஆக்ட் கொடுத்துருக்கிறது இன்னும் தூளு. மத்த ஹீரோயினுங்க இவங்ககிட்ட கத்துக்க வேண்டிய விஷயம் நிறையவே கீது. 'தேனு...தேனு'ன்னு பொண்டாட்டிகிட்ட தங்கரு உருகறப்போ படம் பார்க்க விடலைங்களுக்கே 'ச்சே... சீக்கிரம் கண்ணாலம் பண்ணிக்கணும்'னு தோணும்."
- சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, விமர்சனம்.

ஹைய்யா.. ஒரு ஸ்டில்லை எடுத்துவுடுப்பா.. தலை தப்பிக்க வெச்ச அந்த மேக்கப் வுமனுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிடுங்க.. தங்கர்!

"இமயமலையின் அமைதியான பிரம்மாண்டம் எனக்குள்ளே அடக்கத்தையும் மன அமைதியையும் ஏற்படுத்துகிறது. அங்கே கார் ஓட்டுவது சவாலான விஷயம்."
- ரேவதி

ஹி...ஹி....அம்மிணி, உங்களுக்கும் நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்! யாராவது நெசமாவே ஓட்ட போறாங்க!

Sunday, October 02, 2005

மனிதன்

ஆண்டவனின் படைப்பிலேயே அபூர்வமான படைப்பு மனிதன்தான் என்று ஆச்சர்யப்படுகிற அறிஞர்கள் போலவே காந்திஜியும் மனிதன், மற்ற படைப்புகளிலிருந்து ரொம்ப வித்தியாசமான தனிப்பிறவி என்கிறார். உடலமைப்பு, உணவுமுறை, உறக்கம் மற்றும் உடல் சார்ந்த வேலைகளையெல்லாம் பார்க்கும்போது மனிதனும் விலங்குகளை போலவே நடந்துகொண்டாலும் ஒழுக்க நெறிமுறையான தார்மீக தளத்தில் அவ்வப்போது தன்னை வைத்துக்கொள்வதுதான் மனிதனை விலங்குகளிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. ஆறாவது அறிவுதான் மனிதனை மற்றவைகளிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மனிதனின் பூர்வாசிரமம் குரங்குதான் என்கிறது விஞ்ஞானம். மிருகத்தனம் என்பது மனிதனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விலக ஆரம்பத்திருக்கிறது. மனிதரில் இத்தனை குணங்களா என்று நம்மை ஆச்சரியப்படுத்தவதற்கு காரணம் மிருகத்தனம் சிலரிடம் அதிகமாகவும் சிலரிடம் குறைவாகவும் இருப்பதுதான் காரணம். அது முற்றிலுமாக விலகியிருக்கும்போது மனிதன் தன்னை படைத்த ஆண்டவனின் வசமே வந்துவிடுவான். அதற்கு காந்திஜி சொல்லும் வழிமுறை மனிதனுக்குள்ளேயே புதைந்து கிடக்கும் தெய்வீக சக்தி புரிந்துகொள்ள முயற்சிப்பது.

'மனிதன் என்பவன் வெறும் அறிவாற்றலோ, விலங்குகளையொத்த உடலமைப்போ, இதயம் அல்லது ஆன்மாவோ மட்டும் அல்ல. இவை அனைத்தும் ஒத்திசைவாக ஒருங்கிணைந்தவனே முழுமையான மனிதன்' (ஹரிஜன், 8.5.1937)

மனிதனின் நடவடிக்கைளுக்கும் அவனது ஆன்மாவின் குரலுக்கும் சம்பந்தமிருக்கவேண்டும். அப்போதுதான் அவனால் ஒரு முழுமையான மனிதனாக நடந்து கொள்ள முயற்சிக்க முடியும். மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசங்களை சொல்லவேண்டுமென்றால் பகுத்தறிவு, புலனடக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கெட்டதை செய்யும் மனிதனுக்கு கூட எது நல்லது எது கெட்டது என்பது நன்றாகவே தெரிந்தபின்தான் அந்த செயலை செய்கிறான். பகுத்தறிவு மனிதனை பண்படுத்துவது உண்மைதான். ஆனால், அதுவே எல்லா மனிதனுக்கும் இருக்கவேண்டுமென்கிற கட்டாயமில்லை. ஆனால், புலனடக்கம் என்கிற விஷயம் ஒன்றில்லாவிட்டால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வித்தியாசம் பார்க்க முடியாது. மனிதனுக்கு என்றைக்கு பகுத்தறிவும் புலனடக்கமும் முழுமையாக கிடைக்கிறதோ அன்றுதான் மனிதனிடமிருந்து முரட்டுத்தனம் முற்றிலுமாக விலகிச்செல்கிறது.

'மனிதன் என்றால் மிருகத்தனத்தையும் முரட்டுத்தனத்தையும் விட்டொழிப்பதே என்பதை முழுமையாக உணரும்போதுதான் மனிதத்தன்மையே முழுமை பெறுகிறது' (ஹரிஜன், 8.10.1938)

மனிதனுக்கு பகுத்தறிவை கொடுத்ததால் வந்த வினை, ஆண்டவனின் படைப்பிலேயே அதிகமாக உணர்ச்சிவசப்படுபவன் மனிதனாகிவிட்டான். விலங்குகளை விட ஆபத்தானவன் மனிதன் என்பது உண்மைதான். மனிதனின் உணர்ச்சிகள் சில சுய கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது மனிதனும் மிருகமாகிறான். என்னதான் சொன்னாலும் பகுத்தறிவுதான் மனிதனை உயர்நிலைக்கு உயர்த்துகிறது என்கிறார் காந்திஜி.

'முன்னேற்றம் என்பது மனிதனுக்கு மட்டுமே உரிய விஷயம். பகுத்தறிவை பெற்றிருக்கும் மனிதனுக்கு உண்பதும் உறங்குவதும் மட்டுமே வாழ்க்கையில்லை. மனிதன் தனது பகுத்தறிவை பயன்படுத்தி கடவுளை வழிபட ஆரம்பித்தான். கடவுளை புரிந்து கொள்ள முயற்சி செய்தான். அதை புரிந்து கொள்வதே மனித வாழ்க்கையின் லட்சியமானது. ஆனால் விலங்குகளுக்கோ கடவுளை ஆராதிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லை' (யங் இந்தியா, 24.6.1926)

யானை, பூனை, நாய், குரங்கு எல்லாமே சினிமாவில் சாமி கூம்பிடுவதுகூட மனிதனின் பகுத்தறிவால் வந்த ஐடியாதானே! பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பகுத்தறிவின் உந்துதல்தானே! உண்மையில் இது மாதிரியான ஜந்துகளுக்கு அடுத்த வேளை ஆகாரம்தான் ஆண்டவன். அதை தேடுவதில்தான் மும்முரமாக இருக்குமே தவிர ஆண்டவனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்காது!

உணவு, உடையெல்லாம் கிடைத்தபின்னரும் சாந்தி கொள்ளாமல் எதையாவது தேடி அலைகிறான். சரி, மனிதன் ஒருவனே தன்னைப் படைத்தவனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறான் என்று சொல்லிவிடலாமா? இல்லை. அப்படியொரு ஆராய்ச்சியில் இறங்குமாறு ஆண்டவனால் படைக்கப்பட்டவனே மனிதன் என்கிறார் காந்திஜி.

'இறைவனின் படைப்பில் மனிதன் ஒருவனே தன்னை படைப்பித்த ஆண்டவனை அறிவதன் பொருட்டு உருப்பெற்றவன். நாளுக்கு நாள் தன்னை வளப்படுத்திக்கொண்டு உடைமைகளை சேர்த்துக்கொள்வது மனித வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல. தன்னை படைத்த ஆண்டவனை நோக்கி நாளுக்கு நாள் ஆத்மார்த்தமாக நெருங்கி வருவதே மனித ஜென்மத்தின் முக்கியமான பணி' (யங் இந்தியா, 27.10.1927)

Coutesy : www.tamiloviam.com - காந்தீய விழுமியங்கள்

Thursday, September 29, 2005

அமானுஷ்யம்

Image hosted by Photobucket.com

பூம்புகார் - மேலையூர் மெயின் ரோடிலிருந்து குறுக்காக புகுந்து செம்பொன்னார் கோயில் நோக்கி போகும் சாலையிலிருந்து விலகி காவிரியாற்றின் கரையில் ஆலமரத்தினடியில் கொஞ்சம் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் கண்ணில் பட்ட சிலை. தலையை கொடுத்த தேவி யாரென்று தெரியவில்லை. யார், எதற்காக இதை இங்கே கொண்டு வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆடு, மாடு கூட சீந்த ஆளில்லாத இடத்தில், உச்சி வெய்யில் நேரத்தில் திடீரென்று பிரத்யட்சமானது போன்ற பிரமைக்கு காரணம் தெரியவில்லை. இப்போதெல்லாம் அடிக்கடி ஆழ் மனதில் ·பிளாஷ் ஆகும் காட்சிகளில் இதுவும் ஒன்று.

Sunday, September 18, 2005

விகடனுக்கு ஒரு ஓ!

அரசியல் அரிச்சுவடி படிக்கும் கேப்டனை மறைந்து நின்று திகிலோடு பார்க்கும் பெரியார் வழிவந்த பெரிசுகள். வைகோ, ராமதாஸ், திருமாவளவன், இளங்கோவன் வகையறாக்கள் மட்டும் மிஸ்ஸிங். முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருப்பது கார்ட்டூனில் வரவில்லையோ என்னவோ?! (ஆரம்பிச்சுட்டான்யா... நாயை குளிப்பாட்டி நடு வூட்ல வெச்சாலும்... புது மொழி ஏதாவது சொல்லாம்....அரசியல் வேணாம்னு சொன்னாலும் அடங்காத ராம்கி மாதிரி....ஹி..ஹி.. கரெக்டா கிருபா?) சரி, மேட்டருக்கு வருவோம். ரொம்ப நாளாவே 'வாசகர் கடிதம்' எழுதாம கை துறுதுறுன்னு இருக்குதா... அதான் களத்துல இறங்கியாச்சு!

கோடம்பாக்கம் இருக்கிறவரைக்கும் விகடனார் நம்பர் ஓன்னை தராளாமா தக்க வெச்சுக்கலாம். ஆ.வியில் சினிமா மேட்டர் தவிர வேற என்ன இருக்குதுன்னு கேட்டா பதில் சொல்றதுக்கு செளகர்யமா இருக்கும். நடிப்பு தம்பிகளை பத்தி ராஜாவும், செல்வராகவனும் உருகறாங்க. படத்துல மட்டுமல்ல பேட்டியிலும் குடும்ப 'படம்' தான். கல்யாணம் ஆவறதுக்கு முந்தி வரை மாமா ஒண்ணுமே தெரியாத ஆளா இருந்ததா கேப்டனோடு மச்சான் சொல்லியிருக்காரு. கல்யாணத்துக்கு அப்புறம் சரத்குமார் எப்படியிருக்காரோன்னு யாரும் கவலைப்படவேண்டாம்! செஞ்சரி அடிக்க வந்துட்டாரே!

விஜய், அஜீத்துக்கு ஹாய் சொல்றதும் பதிலுக்கு அஜீத் ஹலோ சொல்றதும் பத்திரிக்கையுலகத்து வட்டாரத்துல... இது மேட்டரு! 'தப்பா நெனைச்சுக்காதீங்க'ங்கிற ஒரு வார்த்தையை வெச்சுக்கிட்டு சும்மா புகுந்து விளையாடியிருப்பவர் பாக்கியம் ராமசாமி. எதுக்கெடுத்தாலும் ஆராயக்கூடாது... அனுபவிக்கணும். கமல் சொன்னது சரிதான். வாழைப்பழத்தை மட்டும் ஏன் கழுவாமல் சாப்பிடுகிறோம் என்கிற அதி புத்திசாலித்தனமான கேள்விக்கெல்லாம் மதன் மாங்கு மாங்கென்று பதில் சொல்லியே ஆகணுமா? உங்க டச்சிங் குறையுதே மதன் ஸார்?!

நீச்சல் போட்டியில் நாலு தங்கப்பதக்கத்தை கடத்திக்கொண்டு வந்த சிவரஞ்சனியை பாராட்டுவதில் தப்பில்லை. அதற்காக டூ பீஸ் உடையில் நாலு ஸ்டில்லையா போடவேண்டும்?! இதில் சிவரஞ்சனியை ஹோம்லி டால்பின் என்று வர்ணித்ததுதான் இந்தவாரத்து மெகா ஜோக்! வார்த்தையை மடிச்சு, மடிச்சு போட்டா கவிதைங்கிறதை வாலி கெட்டியா பிடிச்சுக்கிட்டாரு. கிருஷ்ண விஜயமெல்லாம் புக்கா வரும்போது படிச்சுக்கலாம்!

எங்க காதலுக்கு வில்லன்களே ரசிகர்கள்தான்னு உண்மையை (அட, அங்கேயும் அப்படித்தானா?) சொன்ன மலையாளத்து மீசை மாதவன் பேட்டி படு சிம்பிள். மூணு வருஷமா கேரளத்தை கலக்கிக் கொண்டிருப்பவரை இப்போதான் இங்கே கண்டுகொண்டிருக்கிறார்கள். இந்த வயதிலும் என்னமா இருக்காருன்னு வியக்க வைத்த நம்பியார், தகுதியுள்ள எவரையும் வரவேற்க மக்கள் தயங்கியதில்லை என்ற நடுநிலையான தலையங்கம் என சில உருப்படியான விஷயங்கள், திருஷ்டிப்பொட்டு மாதிரி!

ஒரு காலத்துல ஆ.வி ஜோக்குன்னா ஆர்வமா எட்டிப் பார்க்குறவங்களுக்கு ஒரு அவசர செய்தி. இந்த வாரத்து ஆ.வியிலிருந்து சுடச்சுட ஒரு ஜோக்.

'சாட்டிங் மூலமா ஏமாத்த பணம் பறிக்கலாம்னு பார்த்தா அவன் கில்லாடியா இருக்கானே... '

'எப்படிச் சொல்றே?'

'என் படம்னு ஜோதிகா படத்தை அனுப்பினா அவன் சூர்யா படத்தை அனுப்புறான்'

குலுங்கி குலுங்கி சிரித்த மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். கீழ்ப்பாக்கம் போக வேன் ரெடி!

சினிமா மேட்டரையும், கடி ஜோக்குகளையும் மேய்ந்துவிட்டு ஓவென்று அழத் தயாராக இருந்தவனை சமாதானப்படுத்த ஒரு ஜில் மேட்டர். மாயவரம் ஆர்.எஸ் கிருஷ்ணா & கோவின் ஒரிஜினல் தென்னமரக்குடி எண்ணெய்தான் போயஸ்கார்டனுக்கு சப்ளை ஆகுதாம். புல்லரிக்க வைத்த விகடனாருக்கு ஒரு ஓ! (ஆப்சென்ட் ஆனதுக்கு தேங்க்ஸ் ஞாநியாரே!)

Saturday, September 10, 2005

மூன்றாம் யாத்திரை

வாரம் ஒரு தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கு ரொம்பவே பரிச்சயமான விஷயம்தான். பில்டப் ஸீன்ஸ்! டைட்டில் முடிந்ததும் யாராவது ஒரு ஒப்புக்கு சப்பாணி காரெக்டர் ஓடி வந்து ஹீரோவின் அருமை பெருமைகளை டயலாக்காக எடுத்துவிடும். ஹீரோக்களை மோல்டு செய்யும் இந்த பில்ட் அப்புகளால் ஏ சென்டர் வொயிட் காலர் சாமிகள் நெளிய ரம்பித்தாலும் சி சென்டர்களில் விசில் பறக்கும். கல்லூரி வாழ்க்கையில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை உருட்டும் வரை இதுபோன்ற பில்ட் அப்புகளுக்கு பேடன்ட் வாங்கியிருப்பது தமிழ் சினிமாக்காரர்கள் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன். ஷேக்ஸ்பியர் காலம் என்ன சோழர்கள் காலத்திலேயே நம்மூரில் பில்ட் அப்புகளுக்கு பஞ்சமில்லை என்பதை தெரிந்து கொள்ள 2005 செப்டம்பர் மூன்றாம் தேதி வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

Image hosted by Photobucket.com

ஏகப்பட்ட தடவை போயிருந்தும் பெரிய கோயிலில் என் கண்களுக்கு தட்டுப்படாத பிரமிக்க வைத்த விஷயம் அது. பெரிய யானையை பாதி முழுங்கிய நிலையிலிருக்கும் ஒரு ராட்சத பாம்பை காலில் போட்டு மிதித்தபடி, சுட்டுவிரலை நீட்டி மிரட்டும் அந்த ராட்சத சிவ கணங்களின் இன்னொரு கரங்கள் சொல்லும் செய்தி, 'உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரிய' அந்த பெருவுடையாரின் பெருமையைத்தான்.

Image hosted by Photobucket.com

சிலிர்த்தெழுந்த சிவபெருமான் தனது விஸ்வரூபத்தை காட்ட, அஞ்சி நடுங்கி அலறியடித்தபடியே பூத கணங்கள் ஓடும் அந்த சிற்பத்தின் உயரம் இரண்டு செங்கல் கூட இருக்காது. மெளஸ் பேட் சைஸ் கல்லில் நிஜமாகவே கைவண்ணத்தை காட்டியிருக்கிறார்கள். அரை அடி சிற்பத்திற்கும் அரை டஜன் உருவங்கள். அவை காட்டும் முகபாவங்கள் பற்றி முப்பது பக்கமாவது எழுதி தள்ளிவிடலாம். எங்க ஊரு வள்ளலார் கோயிலில் பாதி கூட இருக்காத அந்த புள்ள மங்கை கோயிலில் புதைந்திருக்கும் விஷயங்கள் ஜாஸ்தி. துர்க்கையம்மன் சந்நிதிக்கு கீழ் இருக்கும் அந்த குப்பைகளை ஒதுக்கி தள்ளிவிட்டு குனிந்து உட்கார்ந்தபடியே பார்த்தால் கண்ணில் பளிச்சிடுகிறது அந்த சிற்பம். இதுவும் ஒரு பில்ட் அப்தான். குதிரை மீது அமர்ந்தபடியே யாரோ ஒரு வீரன் பின்னால் தொடரும் அந்த முரட்டு யானையை நோக்கி அங்குசத்தை எறியும் காட்சி. மொத்த காட்சியையும் கையளவே இருக்கும் கல்லில் செதுக்கி தள்ளியிருக்கிறார்கள்.

Image hosted by Photobucket.com

பாடல் பெற்ற ஸ்தலங்களை பட்டியிலிடும் ஒரு வங்கி அதிகாரி, ஹிண்டு படிப்பது போல கல்வெட்டை படிக்கும் ஒரு லேடி புரொபஷனல், சரித்திர நாவல்களை கரைத்து குடித்துவிட்டு தமிழ் இலக்கியத்தில் அதன் இடத்தை பற்றி காரசாரமாக விவாதிக்கும் இளைய தலைமுறையினர். கனகாம்பரம் போல் ன்மீகம், வரலாறு, இலக்கியம் என அற்புதமாக தொடுக்கப்பட்டு அரை செஞ்சுரி காலமாய் சமூகத்தின் சாமானியர்களும் விவாதிக்கும் விஷயமாக மாறியிருக்கும் அந்த சரித்திர நாவல்தான் இவர்களையெல்லாம் ஓரிடத்தில் சேர்த்திருக்கிறது. பொன்னியின் செல்வன்! வந்தியத்தேவனையும், குந்தவையையும் மறக்க முடியாமல் பொன்னியின் செல்வனுக்கு பின்னர் சரித்திர நாவல் பக்கமே திரும்பிப்பார்க்காத என்னைப் போன்ற சாமிகள் நாட்டில் நிறைய பேர் என்பதை வரலாறு டாட் காம் ஏற்பாடு செய்திருந்த அந்த மூன்றாம் யாத்திரையில் தெரிய வந்தது. முதன்முதலாக பொன்னியின் செல்வன் தொடரை கல்கியில் ரம்பிக்கும்போது கல்கி கொடுத்த பில்ட் அப் கையில் மாட்டியது. இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் என்றெல்லாம் சோழ அரசர்களின் பெயர்கள் ஏற்படுத்தியிருக்கும் குழப்பத்தை தீர்ப்பதும், பிறந்த வீடும் புகுந்த வீடும் சோழநாடாகவே இருக்கவேண்டும் என்று நினைத்த குந்தவை, வந்தியத்தேவன் என்னும் சாமானியனை கைப்பிடித்த கதையை விளக்குவதுமே கல்கியின் நோக்கமாக இருந்திருக்கிறது. அந்த ஒரிஜினல் தொகுப்பை உச்சிமோர்ந்த பொ. செ வாசகர்கள் மத்தியில் சுவராசியமான விவாதங்களுக்கும் பஞ்சமில்லை. பொன்னியின் செல்வனில் பிடித்தமான பெண் கதாபத்திரம் பற்றி சீரியஸாக ரம்பித்த விவாதம், சிறந்த ஜொள்ளு பார்ட்டியாக வந்தியத்தேவனையும் அடிக்கடி மயங்கி விழுந்து ஓவராக ஸீன் காட்டிய அம்மிணியாக வானதியையும் தேர்ந்தெடுத்துவிட்டுதான் ஓய்ந்துபோனது. வீராணம் ஏரிக்கரையில் விறுவிறுப்பாக தொடங்கிய யாத்திரை பொன்னி நதிக்கரையின் வழியாக நகர்ந்து திரும்பவும் கூவம் நதிக்கரையை அடைந்தபோது மனதில் தோன்றியது இதுதான். பொன்னியின் செல்வனை மிஞ்சும் ஒரு சரித்திர நாவல் தமிழில் இனி சாத்தியமா?

Thursday, September 01, 2005

தமிழும் நானும்

தொண்ணூற்று இரண்டை விட்டு கீழே இறங்காத தமிழ்தான் கணக்கில் எப்போதும் வாங்கும் அறுபத்து மூன்றை மறைத்து பிராக்ராஸ் ரிப்போர்ட்டை பாஸ் வைக்கும் ஆபத்பாந்தவன். சின்ன வயசில் தமிழை விட நல்ல மொழி உலகத்தில் எங்கேயும் இருக்காது என்கிற எண்ணம்தான் எப்போதும். அது காலேஜ் காம்பவுண்டு வரும் வரை இருந்தது என்று சொல்வதை விட மாத்யூ தரகன் 'ஷேக்ஸ்பியர்' எடுத்து அசத்துவது வரை இருந்தது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். கையெழுத்து கொஞ்சம் கோணல் மாணலாக இருந்தாலும் இலக்கணப்பிழை கொஞ்சம் கம்மியாகவே இருக்கும். சந்திப்பிழையை இலக்கணப்பிழை லிஸ்ட்டில் நீங்கள் சேர்த்துக்கொண்டால் மேற்சொன்ன வாக்கியத்தை நிச்சயம் நான் வாபஸ் வாங்கிக்கொள்வேன். சந்திப்பிழையை சகித்துக்கொள்ள முடியாமல் வலுக்கட்டாயமாக புன்னகையை வரவழைத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்த கிழக்கு பதிப்பகத்தின் அந்த சப் எடிட்டர் முகத்தை மறக்கமுடியுமா?!

எழுத்துதான் அப்படியென்றால் பேச்சு 'ழ'கர சுத்தமாக நல்லாவே வரும். நண்பர்கள் வட்டாரத்தில் அது ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம். அதுவும் சென்னைக்கு வந்த புதிதில் அதுவே பேரதிசயம். 1989 ஆம் வருஷம் என்று ஞாபகம். ஏதோ ஒரு ஸ்கூல் விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் அன்பழகன் ஒரு தத்துவார்த்தத்தை அள்ளிவிட்டு போனார். 'எட்டாம் கிளாஸ் படிக்கிறவனுக்கு நாலு வார்த்தை தமிழ்ல எழுத தெரிஞ்சுருக்கணும்; பிளஸ் டூ படிக்கிற பையனுக்கு நாலு வார்த்தை இங்கிலீஷில் எழுத தெரிஞ்சிருக்கணும்' ஆஹா... நாம ரொம்பவே ஓவராத்தான் வளர்ந்துட்டிருக்கோங்கிற நினைப்புதான் வந்தது. நல்லவேளை, காலேஜ் படிக்கிறப்போ அன்பழகன் அமைச்சரா இல்லை!

Image hosted by Photobucket.com

போன வாரம் மேஜை டிராயரை குடைஞ்சு பழைய ·பைலை பிரிச்சு பார்க்கும்போது கையில் மாட்டின விஷயம்தான் இது. மூணாங்கிளாஸ் நோட்டு புத்தகத்திலிருந்து கிழித்து எடுத்த சில பக்கங்கள். எல்லா பக்கத்திலேயும் பெயர், தேதி, தமிழ் மாதம், ஆங்கில மாதம் என விலாவாரியான தகவல்கள். கொஞ்சம் நம்பர், கொஞ்சம் கிறுக்கல்கள், ஏகப்பட்ட இடைவெளி விட்டு தமிழ் ரைம்ஸ். விழுப்புரத்திலிருந்து மாயவரம் வழியா தஞ்சாவூர் போகிற மாதிரியான வார்த்தைகள். ஆங்காங்கே அள்ளித் தெளித்த மாதிரி பென்சில் பூக்கள். ஓரே பக்கத்தில் கணக்கு, தமிழ், வரலாறு என சகலமும். முரசு, இகலப்பையை கண்டுபிடித்தவர்களுக்கு கோடி நன்றி. 'அன்னிக்கு பார்த்த மாதிரியே இன்னிக்கும் இருக்கேடா ராம்கி'ன்னு யாராவது சொல்லித்தொலைச்சு அது அந்த சப் எடிட்டர் காதுலேயும் விழந்துட்டா....

Tuesday, August 23, 2005

பொல்லா வினையே...

எண்பதுகளின் கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களை மறக்க முடியாது. ஒரு கையில் பூக்கூடையும் இன்னொரு கையால் எனது கரத்தையும் இழுத்துப்பிடித்தவாறே முன்னே நடப்பாள். தருமபுர மடத்துக்கு வடக்கே முழுங்காலை தொட்டுக்கொண்டு ஓடும் காவிரியில் முதலில் என்னை குளிப்பாட்டி கரையில் உட்கார வைத்துவிட்டு கழுத்தளவு தண்ணீரில் கால் கடுக்க காத்திருப்பாள். வழக்கம்போல் லேட்டாக வந்து தீர்த்தம் கொடுத்த சாமி சீக்கிரமாக திரும்பிப் போவதற்குள் மூங்கில் பாலத்தின் மேலேறி ஈரத்துணியை இழுத்துப்பிடித்தவாறே கருங்குயில்நாதன் பேட்டை நோக்கி நடக்கும் பாட்டியின் உள்ளங்கையிலிருந்த அதே ஜில்லிப்பு, காவிரிக்கரையோரம் அவளின் கடைசிப் பயணத்திலும் இருந்தது.

Image hosted by Photobucket.com

'பாட்டி' என்று யாரும் விளித்தாலும் என் பாட்டிக்கு பிடிக்காது. பாட்டி என்று இப்போது நான் எழுதுவது கூட இரண்டு விஷயங்கள் உறுதியாக தெரியும் என்பதால்தான். ஒன்று, பாட்டிக்கு எழுதப் படிக்க தெரியாது. இரண்டாவது அப்படியே பாட்டி என்று எழுதியிருந்தாலும் திரும்பி வந்து கோபித்துக்கொள்ள முடியாத இடத்திற்கு போய்விட்டவள் அவள். நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு அவள் 'அம்மா'தான். உண்மையில் ஒரிஜினல் அம்மாவை விட ஒரு ஸ்தானம் மேல். குடும்பத்தை துரத்திய வறுமை காரணமாக பதினாலு வயதில் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு பத்தே வருஷத்தில் அந்த வாழ்க்கையையும் பறிகொடுத்துவிட்டு ஒரே பெண்ணை படிக்க வைத்து டீச்சராக்கியதையெல்லாம் பாட்டி எப்போதே மறந்துவிட்டிருந்தாள். பாட்டியை பொறுத்தவரை கடந்த முப்பது வருஷங்களில் நடந்து நிகழ்வுகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தாள். சினிமா, டி.வியை விட மூன்று பேரப்பிள்ளைகளையும் சுற்றி சுற்றி வந்து பார்த்துக்கொள்வதுதான் அவளின் பொழுதுபோக்கு. ஐந்து மணி அடித்ததும் தெருவை வெறித்தபடி வாசலில் காத்துக்கிடப்பாள். எல்லோரும் வந்து சேர எட்டு மணி ஆனாலும் இருக்கும் இடத்தைவிட்டு நகரவேமாட்டாள்.

Image hosted by Photobucket.com

பாட்டிக்கும் பேரனுக்கும் பிடித்தமான பிள்ளையார் கோயில் அது. தருமபுர மடத்தில் ஞானசம்பந்தம் பிரஸ் நடத்திக்கொண்டிருந்த தனது கணவர் எப்போதும் உட்கார்ந்திருக்கும் அந்த பிள்ளையார் கோயில் வாசலை ஐம்பது வருஷமானாலும் பாட்டியால் மறக்க முடியவில்லை. தருமபுரம் வரும்போதெல்லாம் பிள்ளையாருக்கு விசேஷ கவனிப்பு உண்டு. அளவுக்கதிகமான அக்கறையும் அன்பும், எரிச்சலை கொண்டு வரும் என்பதை பாட்டி உணரவேயில்லை. அதற்கான எந்தவொரு வாய்ப்பையும் யாரும் ஏற்படுத்திக்கொடுக்கவேயில்லை. காவிரிப்பூம்பட்டினத்தில் பாட்டியின் கடைசி அஸ்தியை கரைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் நடக்கும்போது அந்த குற்றவுணர்ச்சிதான் வதைத்தது. உடம்பு சரியில்லாத நாட்களில் பத்து நிமிடத்திற்கொரு முறை நெற்றியை தொட்டுபார்த்தவாறே பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும் பாட்டியின் கடைசிக்காலங்களில் ஒரு பத்து மணி நேரம் கூட பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ளமுடியவில்லையா என்கிற மனசாட்சியின் குரலை எதிர்கொள்ளும் திரணி எனக்கில்லை. ஆனால், பாட்டி இதையெல்லாம் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டாள். அந்த கருப்பு ஞாயிற்றுக்கிழமையின் இருட்டு வேளையில் எந்த டாக்டரையும் தொந்தரவு செய்யாமலேயே காசி தண்ணீரை ஒரு மடக்கு குடித்துவிட்டு, சொந்த பந்தங்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும்போதே விழியோரம் ஒரு துளி கண்ணீரையும் மூக்கோரமாய் ஒரு துளி ரத்தத்தையும் சிந்திவிட்டு நிரந்தரமாக தூங்கிப்போனாள்.

Image hosted by Photobucket.com

'ஸார், சைஸ் ரொம்ப கம்மியா இருக்கே.. Resoultion பத்தலை. பெரிய சைஸ் படமா பிரிண்ட் எடுக்க முடியாதே...' கலர் லேப்காரன் சொன்ன வார்த்தைகளின் கூர்மை, ஆணியை விட நெஞ்சை அதிகமாகவே பதம் பார்த்தன. எத்தனையோ படங்களை எங்கேங்கோ போய் எடுத்து வந்திருந்தாலும் வீட்டுக்குள்ளேயே இருந்த பாட்டியை குளோஸப்பில் எடுக்க மறந்தது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய மடத்தனம். இத்தனைக்கும் பாட்டிக்கு காமிராவை கண்டால் அலர்ஜி என்றெல்லாம் சொல்வதற்கில்லை. நாகரீகமாக உடுத்தி, நெற்றியில் விபூதி இட்டு, கழுத்தில் இரட்டை வட செயின் சகிதம் எப்போதும் பளிச்சென்றுதான் இருப்பாள். எப்போதும் பிள்ளையார் பைத்தியமாக இருந்த பேரனோடு தான் எடுத்துக்கொண்ட போட்டோதான் பாட்டிக்கு பிடித்தமான போட்டோ. பிள்ளையார் இருந்தால்தான் போஸ் கொடுப்பேன் என்று அழுது அடம்பிடித்த பேரனை சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிலேயே இருந்த போட்டோவை கழட்டி பேரனிடம் கொடுத்துவிட்டு ஒரு கையில் பேத்தியையும் இன்னொரு கையில் போட்டோவையும் நழுவ விடாமல் பத்திரமாக பிடித்துக்கொண்டு பேரப்பிள்ளைகளே என்னுடைய உலகம் என்று முப்பது வருஷமாய் மனதுக்குள் தீர்மானம் செய்து வைத்திருந்த பாட்டிதான் எனக்கு மகளாக பிறக்கவேண்டும். ராட்டிகளும் சவுக்கு கட்டைகளும் ஆக்கிரமிப்பதற்குள் பாட்டியின் சிதைந்து போன கால் கட்டைவிரல் நகத்தை வருடியவாறு நான் சமர்ப்பித்த அந்த அப்ளிகேஷனை ஆண்டவன்தான் பரிசீலிக்கவேண்டும்.

Friday, July 22, 2005

லகலகலக - Risk Analysis

சந்திரமுகி - தென்னிந்திய சினிமாவிலேயே அதிகபட்ச வசூலை வாரிக்குவித்த வெற்றிப்படம்

மைனஸ் பாயிண்ட்ஸ்

சொதப்பலான திரைக்கதை
முகஞ்சுளிக்க வைக்கும் வசனம்
தேவையற்ற சண்டைக்காட்சி
படு சாதாரண காட்சியமைப்புகள்
சம்பந்தமில்லாத கேரக்டர்கள்
நடிகர்களின் டிராமடிக் நடிப்பு
அரதப்பழசான காமிரா கோணங்கள்
நம்பவே முடியாத கதை
எரிச்சலூட்டும் ஸ்பிளிட் பெர்ஸானலிட்டி ஜிகிடி
இரைச்சலான பின்னணி இசை
அலுப்பூட்டும் செட்
எங்கேயோ கேட்ட பாடல்கள்

பிளஸ் பாயிண்ட்

Image hosted by Photobucket.com

எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் தமிழணங்கே...
உன் சீரிளமை திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே!

Tuesday, July 19, 2005

திருப்பங்கள்

Image hosted by Photobucket.com

திருப்பங்கள் எப்போதும் நமக்கு சுவராசியம்தான். எல்லா திசைகளையும் எப்போதும் உற்றுநோக்க வைப்பது திருப்பங்கள்தான். எதிர்பாராத விஷயங்களை அறிமுகப்படுத்தி வைப்பவையும் திருப்பங்கள்தான். சில சமயம் எதிர்பாராத திசைகளை நோக்கி நம்மை பயணிக்க வைப்பதும் திருப்பங்கள்தான்.

Image hosted by Photobucket.com

திருப்பங்களே இல்லாத சீரான பாதையில் கவனிக்க எதுவுமில்லை. மாறாக நம் கவனத்தை திசை திருப்பி விபத்துகளை விளைவிக்கும் ஆபத்துகள் உண்டு. அடிக்கடி வரும் திருப்பங்கள் நம் கவனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவை. வேகத்தை மறக்கடித்து விவேகத்தை நினைக்க வைக்கும் விஷயஞானிகள்.

Image hosted by Photobucket.com

போகவேண்டிய தூரம் அதிகமில்லை என்பதே ஒவ்வொரு திருப்பங்களும் சொல்லும் செய்தி. பல திருப்பங்கள் நம்மை யூகிக்க விடுவதில்லை. ஒவ்வொரு திரும்பங்களுக்கு பின்னரும் செல்லும் பாதையின் உயரம் கூடுவது பிரமையில்லை, உண்மை. கடந்து போன திருப்பங்களை திரும்பிப் பார்க்க கண்கள் திரும்புவதில்லை. திரும்பினாலும் தெரிவதில்லை, வாழ்க்கையை போல!

Wednesday, July 13, 2005

உட்லண்ட்ஸ் சந்திப்புகள்

வலைப்பதிவாளர்களின் சந்திப்பு இப்போதெல்லாம் அடிக்கடி உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் நடக்கிறது. பி.கே.சிவகுமார்தான் இதை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து சுஜாதா, காசி. சமீபத்திய காசியுடனான சந்திப்பு பற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்று நிறைய சென்னை நண்பர்கள் வருத்தப்பட்டிருந்தார்கள். பிரகாஷ்ஜி கவனிக்க! தற்போது 'தமிழோவியம்' கணேஷ் சென்னைக்கு வந்திருக்கிறார். இன்னொரு பிரபல வலைப்பதிவாளரும் சென்னை வர இருப்பதாக ஒரு தகவல். அடுத்த முறையாவது சாம்பாரில் மூழ்கடித்த வடைக்கு பதிலாக வேறு டிஷ் கிடைக்குமா? பிரகாஷ்ஜி இதையும் சேர்த்தே கவனிக்க! நான் ரொம்ப சமத்து. கூட்டத்தில் கலந்து கொண்டாலும் வாத, விவாதங்களில் கலந்து கொள்வதில்லை. காமிராவை கையிலெடுத்து சுத்திச் சுத்தி வந்து சுட்டுத்தள்ளியதில் கிடைத்த ஸ்டில்கள்...

Image hosted by Photobucket.com
சுரேஷ் கண்ணன் , பிரசன்னா, பிரகாஷ், ராஜ்குமார், பிகேசிவக்குமார்

Image hosted by Photobucket.com
இரா.முருகன், பத்ரி

Image hosted by Photobucket.com
சுரேஷ் கண்ணன், பிரசன்னா

Image hosted by Photobucket.com
சுஜாதா

Image hosted by Photobucket.com
ராஜ்குமார், பிரகாஷ், கிருபா ஷங்கர், பிரதீப், தேசிகன்

Image hosted by Photobucket.com
பிரகாஷ், ஷங்கர், ப்ரதீப், தேசிகன்,

Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com
அருள்செல்வன், .இராம.கி, மதுமிதா, உஷா, காசி, சந்திரன்

Image hosted by Photobucket.com
நாராயண், பத்ரி, மாலன், பிரகாஷ், செல்வராஜ், சுரேஷ் கண்ணன்
Image hosted by Photobucket.com
வெங்கடேஷ், கல்யாண் ( சாகரன் ), நாராயண், பத்ரி
Image hosted by Photobucket.com
வெங்கடேஷ், கல்யாண், நாராயண்
Image hosted by Photobucket.com
வெங்கடேஷ், கல்யாண் ( சாகரன் ), நாராயண், பத்ரி

Image hosted by Photobucket.com
நாராயண், பத்ரி, மாலன், பிரகாஷ், செல்வராஜ்