Monday, May 30, 2005

சோனியா - நோ சைலன்ஸ் ப்ளீஸ்!

எந்தவித எதிர்ப்புமில்லாமல் எதிர்பார்த்த மாதிரியே மூன்றாவது முறையாக தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் டெல்லி அம்மா. கட்சிக்காரர்களுக்கு சந்தோஷமான விஷயம். பிரதமருக்கும் சோனியாவுக்கும் ஏகப்பட்ட பிரச்னை என்றெல்லாம் மீடியா கதறினாலும் பெரிய அளவில் புகை ஏதும் வராமலிருப்பதே பெரிய சாதனைதான். ஆனால், இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு கட்சியின் தலைவி இப்படி அநியாயத்திற்கு எல்லா விஷயத்திலும் வாய்மூடி நிற்பதுதான் நெருடலான விஷயம்.

பீகாரில் தேர்தலே வேண்டாம் என்று சொன்னதையெல்லாம் காதில் வாங்காமல் அவசரப்பட்டு தேர்தலை நடத்தி, நாலு மாதம் இழுத்தடித்து ஒரு வழியாக சட்டசபையை கலைத்த நேரத்தில் சோனியா வாய்திறக்கவேயில்லை. லால்லுதான் பேசுகிறார்; பேசிக்கொண்டே இருக்கிறார்.

இருள்நீக்கி சுப்ரமணியனை சிறையலடித்த விவகாரத்தை தமிழ்நாட்டு கட்சிகளெல்லாம் அவரவர்களுக்கு சாதகமாக திசை திருப்ப டெல்லி அம்மாவிடமிருந்து வந்தது ஒரு கமெண்ட். நோ கமெண்ட்ஸாம்!

நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு விசாவை மறுத்தபோது பிரதமரின் மனசாட்சி முந்திக்கொண்டு பேசியது. சோனியாவிடமிருந்து ரியாக்ஷனே வரவில்லை.

அரசியலுக்கு வந்த நாள் முதல் ராகுல், சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் முலாயம்சிங்கை பிடிபிடியென்று பிடிக்கிறார். ஆண்டனியோ என்றெல்லாம் சொல்லி அலற வைத்த நம்மூர் அம்மாவை பத்தி சோனியாவோ அல்லது சோனியாவின் வாரிசுகளோ கண்டுகொள்வதேயில்லை.

பத்துவருடத்திற்கும் மேலாக பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த கருணாகரன், ஒரு வழியாக தனியாக கட்சி ஆரம்பித்து காங்கிரஸ்காரர்களை சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்க ஆரம்பித்தும் சோனியாவிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இதுவரை இல்லை. கருணாகரனும் அவரது மகனும் இன்னும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களாகத்தான் இருக்கிறார்கள்.

சிலர் பேசாமலிருப்பது நல்லது; சிலர் பேசியே ஆகவேண்டியிருக்கிறது. சோனியா இரண்டாவது ரகம். நாட்டின் மிகப்பெரிய கட்சியை நிர்வகிப்பவர் அரசியல் பிரச்னைகளுக்கு தன்னுடைய கருத்தை சொல்லாமலிருப்பதும் மீடியா அதையெல்லாம் கண்டுகொள்ளாமலிருப்பதும் ????????

Image hosted by Photobucket.com

கொசுறு. பத்தடிக்கு ஒரு கட் அவுட், கொடி, தோரணம் என்று மூன்று கி.மீ தூரத்திற்கு கிழக்கு கடற்கரைச் சாலையே அல்லோகலப்பட்டிருந்தது. பெண்ணினத்து போராளியே, காஞ்சித் தலைவியே என்றெல்லாம் ஜெயந்தி நடராஜனை விளிக்கும் பேனர்கள். தமிழ் நாட்டின் ஒரு ராஜ்ய சபா எம்பி தன்னுடைய மயிலாப்பூர் வீட்டிலிருந்து கிளம்பி அடையாறு, திருவான்மியூர் வழியாக இ.சி.ஆர் ரோட்டுக்கு வருவதற்கே லட்சக்கணக்கில் செலவாகியிருக்கிறது. ஜெயந்தி நடராஜன் கட்சி ஆபிஸ்க்கு வருவதே மீடியாவில் செய்தியாகிவிடுகிறது. அவ்வப்போது என்டிடிவி, ஸ்டார் நியூஸ் பக்கம் போனால் அம்மாவை கருத்து கந்தசாமியாக பார்க்கலாம். ம்.. என்னவோ திட்டமிருக்கு! அரசியலில் எல்லோரையும் அரள வைப்பது அம்மாக்கள்தானே!

Thursday, May 19, 2005

மாயவரம் மேம்பாலம்.

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் மார்க்கமாக செல்லும் மக்களுக்கு ரொம்பவே பழக்கப்பட்ட இடம்தான். மாயவரத்துக்கு பழைய தஞ்சை மாவட்டமான ஒருங்கிணைந்த தஞ்சை, நாகை, திருவாரூர் சுத்துவட்டார பகுதிகளில் இப்படியொரு பாலம் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். ஏறக்குறைய 300 மீட்டர் நீளமுள்ள இப்பாலம் கொள்ளிடத்திலும், திருச்சியிலும் உள்ளதுபோல் காவிரி ஆற்றங்கரையில் கட்டப்பட்டது அல்ல. மயிலாடுதுறை ஜங்ஷனை ஒட்டிய இடத்தில் ரயில்வே தண்டவாளங்களை கடப்பதற்காக கட்டப்பட்ட மெகா பாலம்.

Image hosted by Photobucket.com

இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த மாணவமணி சாரங்கபாணியின் பெயரால் அழைக்கப்படும் இந்த மேம்பாலத்திற்கு வயது சரியாக முப்பது. எழுபதுகளின் ஆரம்பத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட பாலம் கட்டுமாண வேலைகள், ஐந்தாண்டுகளுக்கு தொடர்ந்திருக்கிறது. 5.2.1975 அன்று தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞரால் பொதுமக்களின் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. இரண்டு வருஷங்களுக்கு முன்னர்தான் பாலத்திலிருந்த சில விரிசல்கள் காரணமாக நான்கு மாதம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டபின்பு சுமைதாங்கி வேலையை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Image hosted by Photobucket.com

அப்போது ஏழாங்கிளாஸ் படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். மேம்பாலத்தின் உச்சியிலிருந்து சைக்கிளை மிதிக்காமல் உருட்டிக்கொண்டே ஓட்டிவந்தால் காவேரி நகர் பஸ் ஸ்டாப் வரை போய்விட முடியுமா என்பதை பரீட்சித்துப் பார்க்க ஆசை. ரோட்டோரமாய் நின்று கொண்டிருக்கும் லாரி சரக்கு போர்ட்டர்கள் எதிர்பார்த்த மாதிரியே எதிரே வந்த லாரிக்காரன் மீது சைக்கிளை மோதியதால் வாழ்க்கையில் புதிதாய் இரண்டு விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

1. எசகுபிசகாய் எங்கேயாவது மாட்டிக்கிட்டா எப்படியாவது எஸ்கேப் ஆயிடணும்!

2. ஸ்கூல் கிரா·ப்ட் வாத்தியாரை விட ஜாஸ்தியான கெட்ட வார்த்தைகள் தெரிஞ்சவங்க உலகத்துல உண்டு!

Friday, May 13, 2005

பாதை சொல்லும் கீதை

கல்லூரி நாட்களில் ஒரு திறமையான ஆங்கில புரொபசரின் உபயத்தால் மனதில் உட்கார்ந்து கொண்ட கவிதை. ஆன்மீகம், தத்துவம், தன்னம்பிக்கைன்னு எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிச்ச இந்த கவிதைதான் ரொம்ப காலத்திற்கு பிரிண்டட் காகிதமாய் என் டேபிளில் இருந்தது. வாழ்க்கையில் எல்லா பிரச்னைகளுக்கும் இரண்டே தீர்வுகள்தான். எதை எடுப்பது, எதை விடுவது என்கிற தேர்வுதான் நமக்கு நிஜமான சோதனை. வருஷக்கணக்காய் உட்கார்ந்து யோசித்தாலும் நிமிஷ நேரத்தில் எடுக்கும் முடிவுகளே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பது உண்மையோ உண்மை.


Image hosted by Photobucket.com

Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth; 5

Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same, 10

And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back. 15

I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—

I took the one less traveled by,
And that has made all the difference.


பிரமாதமான தமிழ் மொழிபெயர்ப்பை தேடிக்கொண்டே இருக்கிறேன். யார் கண்ணிலாவது சிக்கினால் மறக்காமல் எனக்கு தட்டி விடுங்கள். உருப்படியான பரிசு கட்டாயம் உண்டு. சுஜாதா மாதிரி, எழுதின புத்தகத்தையே பரிசாக அனுப்பி வைக்கமாட்டேன். பயம் வேண்டாம்!