Wednesday, January 25, 2006

இடைவேளை

Image hosting by Photobucket

'உனக்கு எப்பொழுது தேவையோ, அப்பொழுதுதான் நான் வருவேன்; நீ கூப்பிடும் பொழுதெல்லாம் இல்லை!' - மகா அவதார் பாபாஜி

Tuesday, January 24, 2006

செயல் புயலோடு சில மணி நேரம்

பார்த்திபன் சொன்னது போல் அரவிந்தசாமியைத்தான் ஞாபகப்படுத்துகிறார் 'செயல் புயல்' தயாநிதி மாறன். (டைட்டில் உபயம் வைரமுத்து!) ஏவிஎம் நிறுவனருக்கு தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியில் தாத்தாவுக்கு இணையான மரியாதை பேரனுக்கும். கலைஞரோடு வந்திருந்த உடன்பிறப்புகளால் அரங்கம் நிறைந்திருந்தது. அந்த சாயங்கால நேரத்திலும் காக்கைகள் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. காரைக்குடி வட்டார மொழியில் வந்த ஏவிஎம் நிறுவனர் பற்றிய கிளிப்பிங்ஸ் நிறைய பேருக்கு புரியவில்லை. ஏவிஎம் சென்னைக்கு வந்த காலத்தில் ஆரம்பித்து கவனமாக 1979 வருஷத்தோடு கதையை நிறுத்திவிட்டார்கள். (தப்பிச்சுட்டாங்கப்பா!)

பாரதி ராஜா ஆப்சென்ட்டானது வருத்தமாக இருந்தது. தயாநிதி மாறன் சினிமாவுக்கு நடிக்க வந்துவிட்டால் நிறைய பேர் சினிமாவில் இருக்க முடியாது என்ற பார்த்திபன், கலைஞரை வாழ்த்த தமிழில் வார்த்தை இல்லாததால் இந்தியிலிருந்து கடன் வாங்கினார். பாராசக்தியை ஜெர்மனியில் டப் பண்ணினால் கார்ல் மார்க்ஸ் கதை வசனம் எழுதியதாக நினைத்துக் கொள்வார்களாம்; சீனாவுக்கு அனுப்பினால் மாசேதுங் எழுதியதாக நினைத்துக் கொள்வார்களாம். ஏன் ரஷ்ய மொழியில் டப் பண்ணினால் கதை வசனம் எழுதியது லெனின்தான் என்று அடித்து சொல்வார்களாம். சத்யராஜ் சொன்னதை சத்தியமாக நான் திரிக்கவில்லை.

Image hosting by Photobucket

'கவியரசு' கவிப்பேரரசு வைரமுத்து (டைட்டில் உபயம் விழா அழைப்பிதழ்!) அவசரமாக பேசிவிட்டு சென்றார். மனோராமா லேட்டாக வந்து பேசியதில் புதிதாக ஒன்றுமில்லை. பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் வாலி. 'ஜீன் மாதம் தெரியும்; என் ஜோதிடம் புரியும்' என்று கவிதை பாடி முடித்துக்கொண்டார். பார்க்கலாம்!

தமிழ் சினிமாவின் பிதாமகர்களில் வாசனையும் ஏவிஎம்மையும் பெருமைப்படுத்தியாகி விட்டது. இனி எல்.வி.பிரசாத்தையும் சந்தமாமாக்காரரையும் கெளரவிக்கவேண்டும் என்ற பாலசந்தரின் கோரிக்கைக்கு 'நோ பிராப்ளம்' என்று தலையாட்டினார் தயாநிதிமாறன். ஏவிஎம் கிளிப்பிங்ஸை கவனமாக பார்த்தவர்களுக்கு பேச்சில் புதிதாய் எதுவுமில்லை. கிளிப்பிங்ஸில் சொன்ன விஷயத்தையே ரிபீட் செய்தவர்கள் லிஸ்ட்டில் கலைஞரும் உண்டு. வழக்கம்போல் கூட்டத்தினரை கொஞ்சமாவது கலகலப்பாக்கியது விவேக்தான். பத்து நிமிஷம் போரடிக்காமல் பேசிவிட்டு கடைசியாக உதிர்த்த டயலாக்கில் அரங்கம் நிஜமாகவே அதிர்ந்தது.

'யாருக்காவது நாம லெட்டர் போட்டா பதில் லெட்டர் வரும்னு எதிர்பார்ப்போம். பதில் வரலேன்னா இன்னொரு தடவை லெட்டர் எழுதிப்பார்ப்போம்.. அதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லேன்னா மேற்கொண்டு லெட்டர் எழுதவே மனசு வராது. ஆனா, இங்க ஒருத்தர் அம்பது வருஷமாக 'உடன் பிறப்பே'ன்னு ஆரம்பிச்சு லெட்டர் எழுதிட்டே இருக்காரு.....'

Tuesday, January 17, 2006

ஓரங்கட்டேய் - 7

'ஏண்டா அம்பி...கோயிஞ்சாமி... உனக்கேண்டா அவா பொல்லாப்பு... சித்த சும்மா இருக்க மாட்டியோ? ராகு காலத்துல பொறந்தவனே!'

'வாங்க மாமா வாங்க... எதுவா இருந்தாலும் மெதுவா பேசுங்கோ... 'அவா' பேச்சு எனக்கு ஆப்பு வெச்சுடும். ஏற்கனவே 'பிராமண கைகூலி'ன்னு சொல்லி பெருமைப்படுத்தியிருக்காங்க. இப்போ 'அடிவருடி'ன்னு சொல்லி அழ வெச்சுடாதீங்க!

'சரிடா அம்பி... டோண்ட் வொர்ரி....'

'ஐயோ... இதுல இங்கிலீஷ் வேறேயா... செத்தேன் நான்!'

'அதில்லைடா அம்பி...ஒரு சந்தேகம். மொதல்ல தங்கர்பச்சான், குஷ்பு, அப்புறம் சுகாசினி இப்போ குட்டி ரேவதி... வரிசையா ஒரே விவகாரமா இருக்குதேடா...'

Image hosted by Photobucket.com

'ஆமா. நீயே ஏன்னு கண்டுபிடிச்சு சொல்லிட வேண்டியதுதானே... எல்லாத்துக்கும் பொதுவா ஒரு காரணம் இருந்தே ஆகணுமா? ஏன் மாமா மண்டையை போட்டு உடைச்சுக்கிறீர்? '

'இல்லேடா அம்பி... எல்லாமே திட்டம் போட்ட மாதிரியே இல்லை? அவாளுக்கு என்னதான் வேணுமாம்?'

'பப்ளிசிட்டிதான். மாமா...நீர் டிடெக்டிவ் ஏஜென்ஸியிலே உட்கார வேண்டிய ஆளு. ஒரே கும்பல்தான் ரூம் போட்டு தண்ணியடிச்சு எப்படியெல்லாம் பிரச்னை பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொண்ணா பண்றதா கதையை எடுத்து வுடு... கேட்கத்தான் நிறைய ஆளுங்க இருக்காங்களே!'

'என்னதான் சொன்னாலும் 'ஸார்' மேட்டர்லதானே உமக்கு சர்ரன்னு கோவம் வந்துச்சு?'

'ஸார்' மேட்டரெல்லாம் ஏற்கனவே சப்புன்னு ஆனதுதானே... அது எதுக்கு இப்போ?'

'இதுல என்ன தப்பு இருக்குங்குறேன். யார் யாருக்கு மரியாதை குடுக்கணும்னு ஒரு விவஸ்தை இருக்கோல்லியோ...'

'கரெக்டுதான் மாமா. அறிவாலயம் அப்புறம் தைலாபுரம் பக்கம் போய் 'ஐயா' போடாம பேசிப்பார்த்துட்டு பத்திரமா திரும்பி வாங்கோ... அப்புறமா பதில் சொல்றேன்'

'என்ன மிரட்டறேளா? அவா ஒண்ணும் கோச்சுக்க மாட்டாள்... என் ஓட்டு அவாளுக்கு வேணுமோல்லியோ!'

'ஓஹோ...அப்படி வர்றீரா? அப்போ செக்ரட்டரியேட் பக்கம் போய் சிஎம் பேரைச்சொல்லி கூப்பிட்டு பாருமய்யா!'

'நன்னா கூப்பிடுவேன். அவா பெரிசா என்னத்தை பண்ணிடுவா? '

'என்ன பண்ணிடுவாளா? நீர் என்ன சங்கரச்சாரியா? பேர் சொல்லி கூப்பிட்டு பிரசாதம் குடுக்க... 'மேடம்' போடாம வெறும் பேரை மட்டும் சொல்லி பாருமய்யா.... பல்லை பேத்து மாமிக்கு பார்சல்ல அனுப்பிடுச்சுவா!'

'கோயிஞ்சாமி...நீ நிறைய பேச ஆரம்பிச்சுட்டே... உன்னோட சேர்த்து என்னையும் கவனிச்சுடப்போறா... ஆளை வுடுடா அம்பி!'

பொல்லாத சொல்!

மூன்றாந்தர அரசியல் கூட்டத்திற்குள் மாட்டிக்கொண்டது போல் இருந்தது. உள்ளே நுழைந்தபோது அறுபது எழுபது பேர் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். யாரோ ஒரு பெண்மணி உடைந்த தமிழில் பெண்ணுரிமை பற்றி பெருமை பேசிக்கொண்டிருந்தார். அடுத்தடுத்து மராத்தான் ரேஸ் போல மாறி மாறி பலரும் மைக் பிடித்து 'பயலுங்கோ...', 'பொறுக்கிப்பசங்க' என்று டீஜென்டான வார்த்தைகளில் திட்டி தீர்க்க ஆரம்பித்த பின்னர்தான் இலக்கிய கூட்டத்திற்கு வந்திருப்பதே உறுதியானது. சண்டைக்கோழி விவாகரத்திற்குத்தான் நாகரீகமாய் எளக்கியவாதிகள் கண்டனங்களை தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். வருபவர்களை குட்டி ரேவதியே முன் வந்து வரவேற்று மேடையில் உட்கார வைத்தார்.

Image hosted by Photobucket.com

வெறும் எஸ்.ராமகிருஷ்ணனை மட்டும் திட்டிக்கொண்டிருந்தால் எடுபடாது என்று நினைத்தார்களோ என்னவோ சினிமாவுக்கு எதிராய் சிக்கியிருக்கிறது விவகாரம். சினிமாவில் பெண் படைப்பாளிகளின் மீதான வன்முறையாக உருவெடுத்திருக்கிறது. மைக் பிடித்த மாதர் சங்கத் தலைவிகளின் பேச்சை பார்த்தால் கூடியே சீக்கிரமே சினிமாவில் பெண்களை சித்தரிப்பதற்கு எதிராக மாறக்கூடும். 'ஒரு பயலும் பஞ்ச் டயலாக் பேசக்கூடாது'ன்னு பணிவாய் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இலக்கிய வட்டாரத்தில் சினிமாக்காரங்களுக்கு மரியாதை ஒரு அவுன்ஸ் கூடியிருக்கிறது. சினிமாக்காரனுங்களாக ஆகியிருக்கிறார்கள்!

Image hosted by Photobucket.com

ரேவதி (குட்டி ரேவதி அல்ல!) கொடுத்த பீடிகைக்கு பின்னர் மைக்கை பிடித்தது 'வெளிநடப்பு புகழ்' பிரபஞ்சன். எஸ்.ராவின் எழுத்தை 'டவுண்லோடு' எழுத்து என்று பிரபஞ்சன் அடித்த கிண்டலுக்கு பயங்கர ரெஸ்பான்ஸ். மஞ்சள் கலர் சேலையில் பின்வரிசையில் உட்கார்ந்திருந்த அந்த குண்டு பெண்மணி குலுங்கி குலுங்கி சிரித்தார். பாதிக்கப்பட்டவராக இருக்கலாம்! குஷியான பிரபஞ்சனும் குட்டி ரேவதியை மறந்துபோய் எஸ்.ராவின் எழுத்தை விமர்சித்துக்கொண்டே போனார். பாதிக்கப்பட்ட பெண் கவிஞர்களுக்கு இப்போதைக்கு பிரபஞ்சன்தான் பிதாமகன். நிகழ்ச்சி நிரலில் வரும் மாற்றங்களெல்லாம் பிரபஞ்சனின் ஆலோசனை படிதான்.

Image hosted by Photobucket.com

வழக்கம்போல் டீஜெண்டாய் எஸ்.ராவை சாடிவிட்டு உயிர்மை பக்கம் வந்து 'கவிஞர்' மனுஷ்யபுத்திரன் என்று சொல்லி கிண்டலடித்தார் கவிஞர் இன்குலாப். எஸ்.ராமகிருஷ்ணனோடு சம்பந்தப்பட்ட எல்லா சினிமா பிரபலங்களும் இன்குலாபின் அர்ச்சனையிலிருந்து தப்பவில்லை. (உதாரணத்திற்கு... 'எஸ்.ரா, யாரை ஸார்னு சொல்றாரு தெரியுமா?'). பெண்களின் உரிமையை காப்பாற்ற களமிறங்கியிருப்பதாக துப்பட்டாவோடு வந்த ஒரு மாதர் சங்கத்தலைவி எஸ்.ராமகிருஷ்ணன், லிங்குசாமி குடும்பத்து பெண்களை முடிந்தவரை அசிங்கப்படுத்திவிட்டுதான் ஓய்ந்தார்.

Image hosted by Photobucket.com

அடுத்து பேச வந்தது மாலதி மைத்ரி. அரங்கமே அப்படியொரு அமைதியில். தலை உருண்டுவிடும் என்று பல பேர் பயந்திருக்கலாம்! மனுஷ்யபுத்திரனைப் போல் அல்லாமல் தான் இருபது வருஷமாக எழுதிக்கொண்டிருப்பதாக சந்தடிசாக்கில் ஒரு பில்ட் அப். சு.ராவிலிருந்து கி.ராவரை ஒரு லிஸ்ட்டை சொல்லி அவர்கள் போல எஸ். ராவின் எழுத்துக்கு ஒரு format கிடையாது என்றார். இங்கேயும் இன்னொரு பில்ட் அப். லிஸ்ட்டில் சு.ரா, ஜெயகாந்தனுக்கு அடுத்தபடியாக மூன்றாவது ஆளாக சீக்கிரமாகவே வந்தவர் ரமேஷ்-பிரேம்! பாவம் ஜெயமோகன், கி.ராவெல்லாம் கடைசியில்தான். பெண் கவிஞர்களை பற்றி போகிற போக்கில் விண் டிவியில் சினிமாவுக்கு பாட்டெழுதும் சினேகன் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மாலதி பேச்சில் சுவராசிய சங்கதிகள் ஜாஸ்தி. உயிர்மை அரங்கில் எஸ். ராவின் அடியாட்கள் பெண் கவிஞர்களை தாக்க வந்தார்களாம். அப்படி தாக்கியிருந்தால் இந்நேரம் ஆண் இலக்கியவாதிகளெல்லாம் தலையில் துண்டுதான் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றார். பக்கத்திலிருந்து அவரதுகோஷ்டியினர் அது துண்டு இல்லை துப்பட்டா என்று திருத்த... எல்லோரும் சிரித்தார்கள் எதுவும் புரியாமல்!

Image hosted by Photobucket.com

பின் வரிசையிலிருந்து ஆர்வத்தோடு முன்வரிசைக்கு வந்து மேடையேறிய அரசுவின் பேச்சில் ஆரம்பமே காரம்தான். சினிமாக்காரர்களால் ரொம்பவே பாதிக்கப்பட்ட ஆசாமி போல தெரிந்தார். இந்தப் போராட்டம் பெரிய அளவில் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்று ஆசைப்படுவதாக சொன்னார். அரசு, எழுத்தாளர் மட்டுமல்ல ஆராய்ச்சியாளரும் கூட. சமஸ்கிருதம் பற்றி மனிதர் நிறைய ஆராய்ந்து ஏழுதியிருக்கிறாராம். ஒரு சேஞ்சுக்கு தமிழ் முரசுவில் செய்தி வெளியிட்டவர்கள் பற்றி மேடையில் ஆராய்ந்து சொன்னார். தமிழ் முரசில் அந்த ரிப்போர்ட்டிங்கை செய்தது சில பார்ப்பணர்களாம். சுகிர்தராணி ஒரு தலித் என்பதால் அவரை மையப்படுத்தியிருக்கிறார்களாம். பாவம், சுகிர்தராணி! கொஞ்சமாய் நெளிய ஆரம்பித்தார். அரசுவும் தனது ஆராய்ச்சி முடிவுகளை தொடர்ந்தார். உயிர்மையில் எழுதுபவர்களும் தமிழ் முரசுவில் எழுதுபவர்களும் அடிக்கடி தனி கச்சேரியாக தண்ணீர் கச்சேரி செய்வதுண்டாம். இதையும் மேடையில் சொன்னதும் அடிக்கடி குப்புற விழுந்து கிடக்கும் பழக்கமுள்ள அந்த எழுத்தாள பிரபலம் நிறையவே நெளிந்தார்.

Image hosted by Photobucket.com

எஸ். ரா துப்பட்டாவை பற்றி எழுதியதுற்கு சுஜாதா மாதிரி அடல்ட்ஸ் ஒன்லி எழுதப்போயிருக்கலாம் என்கிற ரீதியில் கூட்டத்தில் பேசியவர்களெல்லாம் நிறைய தத்துவங்கள் பேசினார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ பாலபாரதி, கொஞ்சம் வித்தியாசமாய் சண்டைக்கோழி படத்தின் திரைக்கதையை சாடி தேவர்மகனை நியாயப்படுத்தினார். 'இப்பக்கூட சென்ஸார் போர்டில் புகார் செய்யலாம்' என்று ஐடியா கொடுத்தவர் முன்னாள் மசாலா பட எடிட்டர் லெனின். லெனின் பேசிய பின்னர்தான் பெண் படைப்பாளிகளுக்கு இந்த ஐடியாவே தெரிய வந்திருப்பது தெரிந்தது. அடுத்தடுத்து நாற்பது பேர் மேடையேறி எஸ். ராமகிருஷ்ணனை ஆற அமர விளாசுவதற்கு முண்டிக்கொண்டு முன்வரிசைக்கு வந்தார்கள்.

'சரியோ தவறோ பிரச்னையை பெரிதுபடுத்தாமல் சம்பந்தப்பட்டவர்களே நேரடியாக சந்தித்து பிரச்னைக்கு ஒரு சுமூகமான முடிவை கொண்டு வரவேண்டுமே தவிர இப்படி பொதுவிடங்களில் பிரச்னையை பேசி மேலும் பெரிதாக்குவது எனக்கு என்னவோ நல்ல விஷயமாக தோன்றவில்லை' என்று சொல்லிவிட்டு கனமான கைதட்டலுக்கு நடுவே விடுவிடுவென்று மேடையிலிருந்து இறங்கி தனியாக நடந்து சென்ற அந்த பெயர் தெரியாத பெண் எழுத்தாளரின் குரலில் இருந்த நியாயம் மனசாட்சியை உறுத்திக்கொண்டேயிருந்தததால் வேறு வழியின்றி நானும் வெளிநடப்பு செய்ய வேண்டியிருந்தது.

Friday, January 13, 2006

சொல்லாத சொல்

Image hosted by Photobucket.com

'அவாளெல்லாம் அரிவாளோடு கிளம்பிட்டாளாம்! நினைச்சாலே பயமா இருக்குது!'

Image hosted by Photobucket.com

'நெஜமாவே சீரியல்ல குட்டி குட்டியா என்ன வேணா எழுதலாம்! யாரும் தூக்கமாட்டாங்க!'

Image hosted by Photobucket.com

'சந்தேகமா இருந்தா கேட்டுப்பாருங்க...அவன் விகடன் நல்லா போவுதா இல்லையான்னு!'

Image hosted by Photobucket.com

'விஷயத்தை கேள்விப்பட்டதும் நெஜமாவே என்னாலேயே நம்ப முடியலை!'

Image hosted by Photobucket.com

'தூர்தர்ஷன் மன்மதராசான்னு கலாய்க்கிறானுங்க... சிரிச்சுக்கிட்டு கம்முன்னு இருந்துடுவோம்!'

Image hosted by Photobucket.com

'தப்பா கேட்கலையே... தசாவதாரத்துக்கு விமர்சனம் எழுதியாச்சுன்னுதானே கேட்டோம்!'

Image hosted by Photobucket.com

'புதுசா மேல்கைண்டை மார்க்கெட்டிங்க பண்றாங்களாமே! என்னமோ நடக்குது!'

Image hosted by Photobucket.com

'வன்னிய புராணம், பிராமண புராணத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பை தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் செட்டியார், நாயுடு, முதலியார், தேவர், யாதவர், தேசிகர், இசைவேளாளர், செளராஷ்டிர புராணங்களும் கிடைக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.'

Monday, January 09, 2006

சண்டைக்கோழி

Image hosted by Photobucket.com

'குட்டி ரேவதி ரொம்ப நல்லவ'ன்னு படத்துக்கு டைட்டில் வைக்கிற வரைக்கும் விடமாட்டோம்!

Image hosted by Photobucket.com

அடுத்த பயோகிரா·பி குட்டி ரேவதியா, ராமகிருஷ்ணனா கேட்டா என்னான்னு சொல்றது!

Image hosted by Photobucket.com

இப்பதான் தமிழ் முரசு நெஜமாவே நச்சுன்னு இருக்குது!

Image hosted by Photobucket.com

கெட்டி மேளத்துல குட்டி ரேவதின்னு கேரக்டர் இருக்கான்னு கேட்டு கலாய்க்கிறானுங்கோ!

Image hosted by Photobucket.com

குட்டி ரேவதி கவிதை எங்க இருக்குன்னு நீங்கதான் கண்டு பிடிச்சுக்கணும். நம்மால முடியாதுப்பா சாமி!

Image hosted by Photobucket.com

'வந்தியத்தேவன் ரொம்ப நல்லவ'ன்னு சொல்லி தப்பிச்சுடலாமா?

Image hosted by Photobucket.com

சண்டைக்கோழி திரைக்கதை வசனம் புத்தகமா கிடைக்குமா?

Image hosted by Photobucket.com

தமிழ் முரசு, மங்களூர்லே கிடைக்காது... பெங்களூர்லேயாவது கிடைக்குமா?

Image hosted by Photobucket.com

தமிழ் முரசு மாதிரியே பின்பக்க அட்டையில கவர்ச்சிபடம் போட்டிருக்காங்களாம்!

Image hosted by Photobucket.com

குட்டி ராம்கின்னு பேரு வெச்சுக்கவான்னு கேட்குறானே... குசும்புதானே?

Thursday, January 05, 2006

ஆளும் அரிதாரம்

கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் மட்டுமல்லாமல் இலங்கைக்கும் சென்று வந்து அனுபவங்களை தொகுத்து வழங்கியது நண்பர் ஜெகதீசனால் எந்நாளும் மறக்கமுடியாது. பிபிசியின் சென்னை பிரிவில் பணியாற்றும் பத்திரிக்கையாளர் ஜெகதீசன் அவரே சொல்வது போல அரிதாரங்களின் தாக்கங்களை சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால் முழுவதுமாக அவரால் சொல்ல முடியவில்லை. தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே சென்னையில் அவரை சந்திக்க முடிந்தபோது ரசிகர் மன்றங்களின் முழு பரிமாணத்தையும் அவர் புரிந்து வைத்திருப்பது தெரிந்தது. நிறைய கேள்விகள், நிறைய பதில்கள். என்னிடம் அவர் பகிர்ந்து கொண்ட சோகக்கதைகளில் பாதி கூட தொடரில் வரவில்லை என்பது தனிக்கதை. சரி விஷயத்திற்கு வருவோம். எந்தவொரு ரசிகரும் மீடியாவில் செய்தியாகவேண்டும் என்பதற்காகவே பல கேலிக்கூத்துகளை அரங்கேற்றுகிறார்கள். போஸ்டர் முதல் பாலாபிஷேகம் வரை நடக்கும் கூத்துகளுக்கு இதுதான் காரணம். ஆளும் அரிதாரம் சொல்லும் செய்தியும் இதுதான். மீடியா எதையும் செய்தியாக்க தயாராக இருக்கிறது. பரபரப்புக்கு பேர் போன ஒரு ஆங்கில நாளிதழின் சென்னை பிரிவு பத்திரிக்கையாளர் மூன்று மாதங்களுக்கு என்னை தொடர்பு கொண்டார்.

'மதுரையில யாரோ ரசிகர் சந்திரமுகி படத்தை தொடர்ந்து பார்த்தாராமே... அவரை பேட்டி எடுக்கணும்... காண்டக்ட் நம்பர் உங்க சைட்டுல கிடைக்குமா?'

'எங்ககிட்ட அதெல்லாம் கிடையாது ஸார்... எதுக்கு அது மாதிரியான ஆசாமிங்களை பத்தி எழுதி பெரிய ஆளாக்கி விடறீங்க? அதுக்கு எழுதாமலே இருக்கலாமே!'

'என்ன பண்றது? அதைத்தான் எங்களால எழுத முடியும்... எனிவே தேங்க்யூ....வேற வழியில டிரை பண்ணிப்பார்க்குறேன்... '

கம்மிங் பேக் டு த பாயிண்ட். ஜெகதீசன் பகிர்ந்து கொண்ட இன்னொரு விஷயம் குஷ்பூவுக்கு கோயில் கட்டப்பட்ட செய்தியின் பின்னணி. இன்று வரை மீடியாவில் அதைப்பற்றி வந்த கிண்டல்கள்தான் அதிகம். கோயில் கட்டிய விபரம் தெரிந்ததுடன் உடனே கண்டித்து குஷ்பு அறிக்கை விட்டதாக காதோரம் ஒரு செய்தி. கோயில் விஷயத்தில் நடந்த உள்குத்து பற்றி விபரமாக இதுவரை பதிவு செய்திருப்பது நண்பர் ஜெகதீசனாக மட்டும்தான் இருக்கமுடியும். முஸ்லீம் மதத்தை சார்ந்த குஷ்புக்கு கிறிஸ்துவ இளைஞர்கள் இந்து முறைப்படி கட்டிய கோயிலுக்கு பின்னணி எப்படியாது மீடியாவில் செய்தியாக வேண்டும் என்பதுதான். 'நாலு பேர் சேர்ந்து ஆளுக்கு நாற்பது ரூபாய் போட்டு கட்டிய கோயிலுக்கு நல்ல பலன் இருந்தது. ரிப்போர்ட்டர்கள் வீடு தேடி வந்தார்கள்' என்று பிபிசியில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அந்த ரசிகர்.

BBC - ஆளும் அரிதாரம்

ரசிகர் மன்ற கலாசாரம் பற்றி கருத்து சொல்வதற்கெல்லாம் எனக்கு பெரிய தகுதியில்லை. ஆனாலும் ஜெகதீசன் நிகழ்ச்சியில் சொல்லாமல் என்னிடம் மட்டுமே சொன்ன ஒரே ஒரு விஷயத்தில் நானும் உடன்படுகிறேன்.

'நம் எல்லோருடைய கையிலும் ரத்தக்கறை இருப்பது நிஜம்தான்'