Tuesday, January 17, 2006

ஓரங்கட்டேய் - 7

'ஏண்டா அம்பி...கோயிஞ்சாமி... உனக்கேண்டா அவா பொல்லாப்பு... சித்த சும்மா இருக்க மாட்டியோ? ராகு காலத்துல பொறந்தவனே!'

'வாங்க மாமா வாங்க... எதுவா இருந்தாலும் மெதுவா பேசுங்கோ... 'அவா' பேச்சு எனக்கு ஆப்பு வெச்சுடும். ஏற்கனவே 'பிராமண கைகூலி'ன்னு சொல்லி பெருமைப்படுத்தியிருக்காங்க. இப்போ 'அடிவருடி'ன்னு சொல்லி அழ வெச்சுடாதீங்க!

'சரிடா அம்பி... டோண்ட் வொர்ரி....'

'ஐயோ... இதுல இங்கிலீஷ் வேறேயா... செத்தேன் நான்!'

'அதில்லைடா அம்பி...ஒரு சந்தேகம். மொதல்ல தங்கர்பச்சான், குஷ்பு, அப்புறம் சுகாசினி இப்போ குட்டி ரேவதி... வரிசையா ஒரே விவகாரமா இருக்குதேடா...'

Image hosted by Photobucket.com

'ஆமா. நீயே ஏன்னு கண்டுபிடிச்சு சொல்லிட வேண்டியதுதானே... எல்லாத்துக்கும் பொதுவா ஒரு காரணம் இருந்தே ஆகணுமா? ஏன் மாமா மண்டையை போட்டு உடைச்சுக்கிறீர்? '

'இல்லேடா அம்பி... எல்லாமே திட்டம் போட்ட மாதிரியே இல்லை? அவாளுக்கு என்னதான் வேணுமாம்?'

'பப்ளிசிட்டிதான். மாமா...நீர் டிடெக்டிவ் ஏஜென்ஸியிலே உட்கார வேண்டிய ஆளு. ஒரே கும்பல்தான் ரூம் போட்டு தண்ணியடிச்சு எப்படியெல்லாம் பிரச்னை பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொண்ணா பண்றதா கதையை எடுத்து வுடு... கேட்கத்தான் நிறைய ஆளுங்க இருக்காங்களே!'

'என்னதான் சொன்னாலும் 'ஸார்' மேட்டர்லதானே உமக்கு சர்ரன்னு கோவம் வந்துச்சு?'

'ஸார்' மேட்டரெல்லாம் ஏற்கனவே சப்புன்னு ஆனதுதானே... அது எதுக்கு இப்போ?'

'இதுல என்ன தப்பு இருக்குங்குறேன். யார் யாருக்கு மரியாதை குடுக்கணும்னு ஒரு விவஸ்தை இருக்கோல்லியோ...'

'கரெக்டுதான் மாமா. அறிவாலயம் அப்புறம் தைலாபுரம் பக்கம் போய் 'ஐயா' போடாம பேசிப்பார்த்துட்டு பத்திரமா திரும்பி வாங்கோ... அப்புறமா பதில் சொல்றேன்'

'என்ன மிரட்டறேளா? அவா ஒண்ணும் கோச்சுக்க மாட்டாள்... என் ஓட்டு அவாளுக்கு வேணுமோல்லியோ!'

'ஓஹோ...அப்படி வர்றீரா? அப்போ செக்ரட்டரியேட் பக்கம் போய் சிஎம் பேரைச்சொல்லி கூப்பிட்டு பாருமய்யா!'

'நன்னா கூப்பிடுவேன். அவா பெரிசா என்னத்தை பண்ணிடுவா? '

'என்ன பண்ணிடுவாளா? நீர் என்ன சங்கரச்சாரியா? பேர் சொல்லி கூப்பிட்டு பிரசாதம் குடுக்க... 'மேடம்' போடாம வெறும் பேரை மட்டும் சொல்லி பாருமய்யா.... பல்லை பேத்து மாமிக்கு பார்சல்ல அனுப்பிடுச்சுவா!'

'கோயிஞ்சாமி...நீ நிறைய பேச ஆரம்பிச்சுட்டே... உன்னோட சேர்த்து என்னையும் கவனிச்சுடப்போறா... ஆளை வுடுடா அம்பி!'