Tuesday, April 11, 2006

ஜக'தைலா'பிரதாபன் - 1

ஒரு லெட்டர் பேட் ஜாதி சங்கம் கூட ஆரம்பிக்க துப்பில்லாம பம்மிட்டிருக்கும் பேக்வோர்ட் கிளாஸ் மக்களுக்கு இந்த மெகா தொடர் சமர்ப்பணம்!

பயணிகள் கவனிக்க! மெண்டல் ஸ்டேஷன் வரை செல்லும் 'சமூக நீதி' எக்ஸ்பிரஸ் நான்காம் பிளாட்பாரத்திலிருந்து புறப்பட தயராக இருக்கிறது.....

'அப்பாடா.. நம்ம சீட் கன்·பார்ம் ஆயிடுச்சு. கடைசி நேரத்துல செம டென்ஷன் பண்ணிட்டானுங்கப்பா'

'போனா போவதுண்ணா... அதான் கன்·பார்ம் ஆயிடுச்சே! இனிமே பிரச்னையே இல்லை'

விஷ்..விஷ்ஷ்ஷ்...

'ஏய்... ஒதுங்கு... ஒதுங்கேய்! அய்யா.. நீங்க வாங்கய்யா! ஏலேய்... ஏந்திரிடோய்... அப்பால போ!'

'ஏன்... நான் எதுக்கு போகணும்? என் சீட்டு கன்·பார்ம் சீட்டு'

'ஏலேய்! யாரைப் பார்த்து என்ன பேச்சு பேசுறே? அய்யா யாரும் தெரியும்லே.... திண்டிவனத்துல வந்து கேட்டுப்பாரு. ஊரே நடுங்கும். எழுந்திரிச்சு துண்டை இடுப்புல கட்டிட்டு போவியா. சும்மா சவுண்டு வுட்டுகிட்டு...'

'ஏய்... மரியாதையா பேசு. நானா வம்புக்கு வந்தேன்?'

'அய்யா.. டாக்டர் அய்யா... பாருங்கய்யா! இந்த பயலுங்க மரியாதையில்லாம பேசுறானுங்க. இவனுங்களை சரிக்கு சமம் நம்ம கூட உட்கார வெச்சதே தப்பு. நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க. வெட்டிப் போட்டுடறேன்!'

'த்தே... சும்மாயிரு! இதென்ன மரமா? வெட்டிப்போடறதுக்கு! முட்டாப்பயலே... நாம என்னிக்கு மரத்தை வெட்டி தண்டவாளத்துல போட்டுருக்கோம்? ரயில்வே போலிஸ் லாடம் கட்டிடுவானுங்க! இதுக்குத்தான்...இதுக்குத்தான் நாம மட்டும் போறதுக்குன்னே தனி கோச் கேட்குறேன்... ஒரு பய நான் சொல்றதை கேட்க மாட்டேங்கிறானுங்க..'

'இதெல்லாம் ரொம்ப ஓவர். தனி கோச்சா? யாரு... டாக்டர்? பார்த்தா டாக்டர் மாதிரியே தெரியலியே! பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்குத. இந்த கோச்சுல 31 சீட்டுதான் இருந்துச்சு.. இப்பவாது பரவாயில்ல... 50 இருக்குது.. இருக்கிறதை அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போவியா..'

'டாக்டரு அய்யா.. இவன் ரொம்ப பேசறான்.. நீங்க மட்டும் தடுக்கலேன்னா...'

'என்னலேய்... ரொம்ப மிரட்டிறீங்க? டெல்லிக்கு ரிப்போர்ட் பண்ணிடுவேன்.நேத்து டூட்டி பார்த்த டி.டி.ஆர் காசு இருக்கிறவனுக்கு ரிசர்வேஸனே கிடையாதுன்னு சொல்லிட்டாரு. ரொம்ப கஷ்டப்பட்டுதான் 31 சீட்டை 50 ஆக்கிட்டு வந்திருக்கோம். எதுக்கு டென்ஷன்? நாமெல்லாம் ஒரே மாதிரிதானே. ஒண்ணா உட்கார்ந்து அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்.

'அதெல்லாம் முடியாது... எங்க ஆளுங்களுக்கு மட்டும் 20 சீட்டு வேணும்.. நீங்கெல்லாம் எந்திரிச்சு வெளியே போங்க...

'நல்ல கதைதான். எங்கேப்பா இருக்காரு டி.டி.ஆர்?'

'ஏலேய்.. என்ன பஞ்சாயத்தா? யார்ரா அந்த டி.டி.ஆர்?'

'அய்யா.. அந்த டி.டி.ஆர் போயிட்டாரு.. புது டி.டி.ஆர் வந்திருக்காராம்'

'எங்க இருக்காரு ராசா... ஆழ்வார்பேட்டையா? கோபாலபுரமா?

9 comments:

 1. கடைசி நேரத்துல இது என்ன கலாட்டா? இது வேற நடக்குதா?

  (இதன் நகல்:
  http://commentsofshibi.blogspot.com/2006/04/06-2006.html)

  ReplyDelete
 2. மரங்களை வெட்டி, 'பங்க்' குமார், காடுவெட்டி குரு போன்ற தேசிய தலைவர்கள் வளர்ந்ததற்கும்,
  ஐய்யாவுக்கு சவுக்கடி கிடைத்தாலும் பரவாயில்லை, என்று மக்கள் விருப்பத்துக்காக அன்புமணியை இந்த நாட்டுக்கு அர்ப்பணித்ததற்க்கும்
  பின்னால் உள்ள ஒரு சமூகத்தின் நூற்றாண்டுக்கோபத்தை புரிந்துகொள்ளாது பாயும் இந்த ஊடக வன்முறையை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
  (ஸ்ஸ்ஸ்..... இப்பயே கண்ண கட்டுதே... சோடா எங்கப்பா?)

  -இ.ப.செ.

  ReplyDelete
 3. அடி வாங்காம போகப்போறதில்ல.

  மு.க பத்தி புக் எழுதின கொசுப்பா இப்படி ஒரு பதிவு.

  ReplyDelete
 4. அறிவுப்பசி அண்ணாசாமி :: திண்டிவனம் ராமமூர்த்திய பத்தி என்னவோ சொல்றீங்கன்னு தெரியுது.. ஆனா டாக்டர்னு சொல்றீங்களே, எப்ப அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க? (அப்படீன்னு கேட்டு முதுகுல டின்னு கட்டிக்காம எஸ்கேப் ஆயிக்கலாம்... தேர்தல் நேரம்)

  ReplyDelete
 5. "Rasini" Ramki,

  This is a ridiculous posting.

  You guys dont have the guts to face him directly in the elections & defeat him.

  Anyway atleast feel happy about the opportunity to post such things.

  It is not a surprise. What else we can expect from the visil adichan kunjugals.

  ReplyDelete
 6. ஏனுங்க ராம்கி அங்கே எல்லாம் விசில் அடிக்க கூடாதா? விசில் அடிக்க தெரியாதா? இல்ல விசில் அடிக்க முடியாதா?

  செயிச்சாக் கொண்டாடுறதும்.. தோத்தாப் பந்தாடுறதும் புதுசா என்ன?

  ReplyDelete
 7. ராம்கி,

  சமூக நீதியை கிண்டல் அடிக்கிறீர்களா? இல்லை ராமதாஸை கிண்டல் அடிக்கிறீர்களா?இல்லை இரண்டையும் கிண்டல் அடிக்கிறீர்களா? அல்லது இதை அடிப்பது போல் அதை அடிக்கிறீர்களா? அல்லது அதை அடிப்பது போல் இதை அடிக்கிறீர்களா?

  ஹி....ஹி.... (நடத்துங்கள் சுவாமி)

  (ஒரு சில ஒன்டே மேட்ச் முதல் பதினைந்து ஓவரிலேயே முடிந்துவிடும்.அப்புறமும் அதை நடத்தி 50 ஓவரும் வீசறாங்க இல்லையா.அது தான் ஞாபகம் வருது.இங்கேயும் அதுதான் ஞாபகம் வருது)

  ReplyDelete
 8. இதையும் படியுங்கள்

  Never send incorrect stuff to the PM!

  \\And the genesis of this letter can be traced to a recent conference on 'Health for All,' where Manmohan Singh was delivering a speech. Unfortunately, it was a matter of embarrassment as the figures that the prime minister reeled out at the conference were wrong. And the data for the speech had come from the health ministry.\\

  http://in.rediff.com/money/2006/apr/12letter.htm

  பிரதமருக்கே இந்த நிலமைனா, பொது மக்களுக்கு?

  ReplyDelete