Saturday, April 29, 2006

கொடுத்து வைத்தவர்கள்

ஜனவரி 6. இரவு பத்தரை மணி. சர்ரென்று வந்து நிற்கும் வெவ்வேறு கார்களிலிருந்து கிட்டதட்ட மாறுவேஷத்தில் இறங்கி விறுவிறுவென்று வி.ஐ.பி லாபியில் புகுந்து நடையை கட்டுகிறார்கள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் இன்னொரு கோஷ்டி வந்து ஜோதியில் ஐக்கியமாகிறது. மலேஷியன் பிளைட் எம்ஹெச் 181 இவர்களை சுமந்தபடி கோலாம்பூர் நோக்கி பறக்கிறது. கோலாம்பூரில் இறங்கியதும் ஏர்போர்ட்டில் எதிர்கொண்டு அழைக்கும் தமிழ் பேசும் சில போராளிகளுடன் ஒரு கிளிக்!

Photobucket - Video and Image Hosting

போட்டோவில் சிக்கியவர்கள் ராமதாசு, திருமாவளவன், கோ.க. மணி! கோலாம்பூரில் தடபுடலாக வரவேற்பு கொடுத்தது விடுதலைப்புலிகளாம். என்ன காரணத்தினாலோ திடீரென்று மீட்டிங் ரத்தாகி பாங்காக் பறக்கிறார்கள். ஒரே நாள் மீட்டிங்தான். அடுத்த நாளே மீனம்பாக்கத்தில் வந்து இறங்கி பொங்கல் கொண்டாட ஊருக்கு விரைகிறார்கள். தமிழ் மீடியா இந்த திடீர் விசிட் பற்றி மூன்று மாதமாக மூச்சுவிடவில்லை. எழுத நினைத்த ஒரு ரிப்போர்ட்டருக்கு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மேலிடத்திலிருந்தே அன்புக்கட்டளை! ஏசியன் டிரிபியூன் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினர்கள் தட்சிணை வாங்குவதாக கிழித்துப்போட்டிருக்கிறது. போதாக்குறைக்கு ஆண்டன் பாலசிங்கத்தையும் கொஞ்சம் அசிங்கப்படுத்தியிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை என்பதுதான் வேடிக்கை!

தெருச்சண்டை ரேஞ்சுக்கு கழக வாரிசுகள் கத்திக்கொண்டிருக்கும் வேளையில் உள்கூட்டணி போட்டு கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் இருவர். ராமதாசு திருமாவளவன் பற்றி பேசுவதில்லை; திருமாவளவன் ராமதாசு பற்றி பேசுவதில்லை. அரசியல் நாகரிகம் புல்லரிக்க வைக்கிறது. விடுதலைப்புலிகளோடு தொடர்பு என்று சொல்லி கருணாநிதியை ஒரங்கட்டி வைத்தார்கள். பின்னர் வை.கோ வந்து வசமாக மாட்டிக்கொண்டார். காங்கிரஸ் கட்சி தனக்கும் இது சம்பந்தமே இல்லை என்கிற ரேஞ்சிலேயே இன்னும் பேசி வருகிறது. நிஜமாகவே புலிகளுடம் இன்னமும் தொடர்பு வைத்திருப்பவர்களை பற்றிப் பேச்சே இல்லை. திருமாவளவன், பிரபாகரனை சந்தித்ததாகவே சொல்லப்படுகிறது. இலங்கைத்தமிழர்களுக்கும் பேராளிக்குழுக்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்று திருவாய் மலர்ந்தருளிய அம்மாதான் தமிழ்நாட்டை புலிகளிடமிருந்து காப்பாற்றினார் என்று பஜனை செய்கிறது இன்னொரு கோஷ்டி. இலங்கைப்பிரச்னை காவிரி பிரச்னை மாதிரி. உணர்ச்சிப்பூர்வமாக பேச மட்டுமே உதவும். எலெக்ஷன் நேரத்தில் வேலைக்கு ஆகாது.

Photobucket - Video and Image Hosting

போன வருஷம் பிரஸ்ஸெல்ஸில் தமிழகத்திற்கும் பிரபாகரன்தான் தலைவர் என்று சொன்ன அதே திருமாவளவன்தான் இன்றைக்கு புரட்சித்தலைவி புகழ் பாடிக்கொண்டிருக்கிறார். இது எலெக்ஷன் வரைக்கும்தான். எலெக்ஷன் முடிந்ததும் தம்பிக்கு திரும்பவும் வவுனியா காடு ஞாபகத்துக்கு வரும். திருமாவளவன் பேசியதை ஸ்ரீகாந்த் மீனாட்சி விவரமாக எழுதியிருந்தார். தமிழ்நாட்டில் ஒரே ஒரு பத்திரிக்கை மட்டும் இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. திருமாவளவனிடம் இன்னொரு பத்திரிக்கை நிருபர் இது பற்றி கேள்வி கேட்டாராம். அதற்கு அவர் சொன்ன பதில். 'அங்கே பேசியதை பத்தியெல்லாம் இங்கே எதுக்கு எழுதி பிரச்னையை கிளப்புகிறார்கள்'. நியாயமான கேள்விதான்!

19 comments:

 1. மயிலாடுதுறை - சென்னை (திண்டிவனம் வழி) தடத்தில் ஏதோ ஒரு குக்டவுனில் கண்ட தெருவோர ரசிகர் மன்ற பலகை வாசகம் ::

  தலித்துகளின் பிரபாகரன் திருமா *** மன்றம்

  ReplyDelete
 2. சுட்டி சரியாக் கொடுங்க (ஏஷியன் ட்ரிப்யூன்): Tamil Nadu Leaders in Bangkok for a close-door meeting with LTTE

  ReplyDelete
 3. mm romba menaketu puthai kuzhila irunthu onna kandu pudichu potu irukinga ...aana padika than all illa ... ithuve nadikai pathi pota 100 pinnootam varum lol

  ReplyDelete
 4. //எழுத நினைத்த ஒரு ரிப்போர்ட்டருக்கு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மேலிடத்திலிருந்தே அன்புக்கட்டளை
  //
  ஹா நெசமாவா? என்ன தல இது உதாரில்லையே.... பத்திரிக்கை உலகில் அதுவும் பத்திரிக்கை மேலிடத்திலிருந்து இராமதாசு, தொல்.திருமாவுக்கு ஆதரவா? என்ன தல நெசம் தான் பேசுறிங்களா? எந்த பத்திரிக்கைங்க, தினமலர்னு சொல்லிடாதிங்க நான் மயக்கம் போட்டு விழுந்துவிடுவேன்....

  சட்டசபையிலேயே புலித்தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டுமென தீர்மானம் கொண்டுவந்த போது அதை எதிர்த்து கருப்பு சட்டை அணிந்து ஈழத்தமிழர்,புலி ஆதரவை காண்பித்தது பாமக, மேலும் திருமாவின் ஆதரவு அறிந்ததே...

  இந்த சுட்டி வேலை செய்யவில்லை, கொஞ்சம் சரிதானா என்று சொல்லுங்களேன்
  http//www.asiantribune.com/show_news.php?id=16692

  //சம்பந்தப்பட்டவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை என்பதுதான் வேடிக்கை!
  //
  அடேங்கப்பா தினமணி, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ரேஞ்சுக்கு போயிட்டிங்க தல.... :-)

  //தெருச்சண்டை ரேஞ்சுக்கு கழக வாரிசுகள் கத்திக்கொண்டிருக்கும் வேளையில் உள்கூட்டணி போட்டு கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் இருவர். ராமதாசு திருமாவளவன் பற்றி பேசுவதில்லை; திருமாவளவன் ராமதாசு பற்றி பேசுவதில்லை. அரசியல் நாகரிகம் புல்லரிக்க வைக்கிறது
  //
  என்ன தல ஏதோ புகைச்சல்ல பேசுற மாதிரி தெரியுதே, கருகிற வாசனை இங்க அடிக்குது....

  ReplyDelete
 5. வைகோவில் ஆரம்பித்து இப்போது தமிழ்பாதுகாப்பு இயக்கம் வரை விடுதலைப்புலிகளிடம் காசு வாங்கி அரசியல் நடத்துகிறார்கள் என்ற புரளி என்று நிற்குமோ.... காசு கொடுக்கும் அளவில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்களா? அவர்களிடம் காசு வாங்கி அரசியல் செய்யும் நிலையில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் உள்ளதா.... அதற்கான தேவையென்ன என்பதை சற்று சிந்தித்தால் விஷமம் புரியலாம்.....

  ReplyDelete
 6. என்ன செய்வது, கொடுத்து வைத்தவர்கள்...............

  ReplyDelete
 7. நச்சுன்னு சொன்னாலும் நாலு வாத்த
  நல்லா சொன்னீக,இந்த ராமதாஸூ திருமா நெடுமாறன்,‍கொள்கை குன்று
  தன்மானசிங்கம்‍ வைகோ, இவங்க
  எல்லாருக்கும் சந்தாப்பன்தன் அரசியல்,இறுல ரெண்டு பேரு கள்ளத் தோணில வந்தாங்கா எங்க ஊருக்கு பலிகல்ல வண்டில ஏறிருந்று குரங்கு
  கனக்கா முழச்சுட்டு இருந்தாங்க, பிரபாகரன் பத்தியோ அந்த கும்பல் பத்தியோ இவங்களுக்கு ஒரு மண்ணும்
  தெரியாறு,அந்த கும்பல் கொடுக்கிற
  பொட்டிய வாங்கிட்டு தமிழ் நாட்டுல
  இருந்று தமிழ் தமிழ் என்று ‍ஊைடுறறு

  ReplyDelete
 8. //கோலாம்பூரில் தடபுடலாக வரவேற்பு கொடுத்தது விடுதலைப்புலிகளாம். //

  இது சாத்தியமா? கோலாலம்பூரில் இந்தியாவை விடவும் மோசமான நிலை என்பது உங்களுக்குத் தெரியாதா?

  திருமா, பிரபாகரனைச் சந்தித்ததை இப்போதுதான் ஏதோ புதுசாக் கேள்விப்பட்டது போல எழுதுகிறீர்களே? அதைத் திருமாவே பகிரங்கமாக எப்போதோ சொல்லிவிட்டாரே?

  திருமாவும் ராமதாசும் பரஸ்பரம் தாக்கிப் பேசாதது உங்களுக்கு வயித்தெரிச்சலாக இருக்கிறது போலவே உங்கள் எழுத்திலிருந்து தெரிகிறது.

  ReplyDelete
 9. //என்ன தல ஏதோ புகைச்சல்ல பேசுற மாதிரி தெரியுதே,

  //திருமாவும் ராமதாசும் பரஸ்பரம் தாக்கிப் பேசாதது உங்களுக்கு வயித்தெரிச்சலாக இருக்கிறது


  இது சீரியஸ் போஸ்ட். நோ ஜோக் ப்ளீஸ்!

  ReplyDelete
 10. Try to grow up man.is LTTE active in malaysia.The media is against
  PMK,DPI.Will they leave an opportunity like this.PMK can make money in India and does not need LTTE's financial support.
  Perhaps seeing films starring Rajini Kanth has affected your
  mental sanity.

  ReplyDelete
 11. ராம்கி,
  சுவாரசியமான பதிவு !

  "நாரதர் கலகம் நன்மையில் முடியுமா ?" ;-)

  என்றென்றும் அன்புடன்
  பாலா

  ReplyDelete
 12. ராம்கி
  இந்த பதவின் உள்நோக்கம் என்ன?
  அரசியல் சூழ்நிலை காரணமாக திருமாவும் இராமதாசும்
  சேர்ந்து தேர்தலில் வேலை செய்ய முடியவில்லை.
  தேர்தலுக்கு பிறகு தமிழ்பாதுகாப்பு இயக்கம் மூலமாக
  அவர்கள் மீண்டும் சேர்ந்து வேலை செய்ய நிறைய தளங்கள்
  உள்ளன. அதுமட்டும் அல்லாமல் வெளிநாட்டில் உள்ள ஈழதமிழ்ர்கள்
  மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலர் அவர்களை கூப்பிட்டு விழா
  நடத்துகிறார்கள், இதில் எங்கே வந்தது "புலிகள்" என்று புரியவில்லை?

  நன்றி
  மயிலாடுதுறை சிவா...

  ReplyDelete
 13. குழலி அண்ணாச்சி பிரபாகரன்கிட்ட
  இன்னக்கி தமிழ் நாட்டுலஒருஅரசியல்கட்சிகிட்ட இல்லாத
  பணம் இருக்கு, சுமார அறுபதாயரம்
  கோடி, வடக்கு கிழக்கு சோதனை‍ சாவடி என்கிறபோல கப்பம் சேகரிக்ற
  பணம் சுமார ஒருநாளைக்கு முன்று கோடி, வெளிநாடுகள்ல சுனாமி நிதி சுமார 25 மில்லியனுக்கு மேல,அதவிட வெளிநாட்டு தமிழ் வியாபாரநிலயங்கள் எல்லாம் கட்டாயம் இவனுகளுக்கு கப்பம் கொடுத்தே ஆகனும் இல்லன்ன ஊல எவனும் நிம்மதிய இருக்கமுடியாதே, தமிழ்நாட்டு அரசியில்வாதிகள தாஜ பண்னுணாதான்
  ராசிவ் காந்தியகொன்னத கறையமறக்கபண்ணனுமே அதற்கு இந்த அரசியல் வாதிகள்தான் லாயக்கு.

  ReplyDelete
 14. Asian Tribune
  He! he! he!! OH YES!! good souce of vitamins

  ReplyDelete
 15. Hi Guys,

  It is attrociuous and horrible, that traitors like ramadoss and thiruma support and encourage LTTE.

  People who support these group forget that, they are no different than pakistan based mujahadeen's support for so called kashmiri freedom fighters.

  It is really interesting that, both the PMK and Mujahadeen language are very similar. It is only matter of time, before western countries start taking this coward hiding in jungle bit seriously and smoke him our of there like rats.

  Prabhakaran's bravado is intact as long as morons like Ramadoss support him. In some sense, both these idiots are like hot balloon waiting to be burst.

  Vignesh

  ReplyDelete
 16. I wonder why they would take that kind of risk, having known about the fate Vaiko met with, that too when elections are nearing!

  It could mean either they were really after a "big-fish" or they were really stupid!

  ReplyDelete
 17. //இலங்கைப்பிரச்னை காவிரி பிரச்னை மாதிரி. உணர்ச்சிப்பூர்வமாக பேச மட்டுமே உதவும்// Really a sad status. Srilankan Tamils have all rights to live peacefully as others do in this world.

  We wish " They will have it ASAP"

  ReplyDelete
 18. முகமூடி: ரசிகர் மன்றம் ஆரம்பிப்பதில் திருமா தம்பிக்கு உடன்பாடு உண்டோ?

  பாபா : நன்றி. புலின்னாலே கொஞ்சம் கிலி. அதான்!

  வொவல்: நம்ம வேலையை நாம் செய்வோம்ங்கிற பாலிசிதான்!

  குழலி : உதாரில்லை. சம்பந்தப்பட்ட் நபர் நாந்தான்!

  சுரேஷ்: தேர்தலுக்கு அப்புறம்தாம் வெளிப்படையா பேசுவாங்க. அதுவரைக்கும் மூச்தான்!

  ReplyDelete
 19. பாலாஜி : ஸார்.. நான் நாரதரா? சோ இல்லையா?!

  சிவா : புலி விஷயத்தில் எல்லோருமே வேஷம் போடுகிறார்கள். ஜெயா உட்பட. அதைதான் சொல்ல வந்தேன்.

  விக்னேஷ்: புலிகளுக்கு பைசா வரும் விஷயம் பற்றி என்டிடிவி அலசியிருக்கிறது.

  சுரேஷ் & சிவபாலன்: நம்ம நினைப்பும் அதே.

  ReplyDelete