Tuesday, May 30, 2006

மெரீனா பீச்சில்...

அதைப் பற்றி சொல்லாமலே இருந்திருக்கலாம். இப்போதுதான் உறைக்கிறது. எப்போதும் அவ்வளவு சீக்கிரம் வெளியே வராதது புதிதாக நெஞ்சுக்குழி வரை வந்து நெருடியதால் கேட்டுத் தொலைக்க நேர்ந்துவிட்டது. உச்சி வெய்யிலில் பட்டப்பகலில் பகிரங்கமாக நடப்பதை கண்டு கொள்ளாமலே கிளம்பியிருக்கலாம்! நம்ம சுழி என்றைக்கு சும்மா இருந்திருக்கிறது. 'இந்த லவ்வர்ஸ்க்கு வேற இடமே கிடையாதா... இங்கே வந்து அசிங்கம் பண்ணுதுங்க...' பளிச்சென்று முகத்திலடித்தாற்போல் ஒரு பதில் வரும் எதிர்பார்க்கவேயில்லை. 'உன்னால முடியலைங்கிறதுக்காக அடுத்தவங்களை ஏன் குறை சொல்றே?'

Photobucket - Video and Image Hosting

உடனே ஒரு பிகரை தேடிப்பிடித்தாகவேண்டும் என்று விபரீதமாய் முடிவெடுக்காத மனசாட்சியே நீ வாழ்க! என்னதான் நெத்தியடியாக சொன்னாலும் கூடவே வந்த நண்பனின் பதிலில் நியாயமிருக்கிறது. அடுத்தவர்களின் சுதந்திரத்தில் தலையிட நமக்கென்ன உரிமையிருக்கிறது? சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் என்ன மாமாமனா, மச்சானா? யாரோ எப்படியோ இருந்துவிட்டு போகட்டுமே என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல் வாய் மூடி இருந்திருக்கலாம். பேசுவதற்கு முன்னர் நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்த்துவிட்டே பேச வேண்டும் என்று சொன்ன அந்த ஒன்பதாம் கிளாஸ் (கேயார்) வாத்தியார் சொன்னதை எப்போதும் மறப்பதில்லை. அதனாலேயே பல நேரங்களில் எதைப்பற்றியும் பேச முடியாமலே போய்விடுகிறது. எப்படியாவது தப்பித்தவறி பேசினாலும் இதுமாதிரி சறுக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதும் இன்னொரு காரணம்.

குறைவாக பேசி நிறைய சாதிக்கும் பெரிய மனிதர்களை பார்த்தால் பொறாமையாகத்தான் இருக்கிறது. தலையில் இடியே வந்து விழுந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதற்கு அசாத்திய பொறுமை அவசியம். எந்த அர்த்தத்தில் சொன்னாலும் அனார்த்தமாகிவிடும் உயரத்திலிருக்கும் மனிதர்களுக்கு எதுவுமே அக்னிப்பரீட்சைதான். எந்தப் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வே இல்லை என்கிற நிலையில் இன்ஸ்டெண்ட் தீர்வு என்று சொன்னால் பிரச்னையைப்பற்றி பேசாமலிருப்பதுதான். சரி பேசாமலே இருந்துவிடலாம் என்றால் பக்கத்து வீட்டுக்காரர் பயமுறுத்துகிறார். முக்கியமாக அவர் சொல்லும் சைக்காலஜி. எப்போதும் பேசாமலிருந்தால் இன்·பீரியாரிட்டி காம்ப்ளக்ஸாக இருக்கும்; அல்லது சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸாக இருக்குமாம்! அட, இதுக்கு எதையாவது உளறி தள்ளிக்கிட்டே இருக்கலாம்!

Photobucket - Video and Image Hosting

ரொம்ப பிடிச்ச பன்ச் டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது. எது நடந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் வெச்சுக்காம அப்படியே அள்ளிவிட்டுக்கிட்டே போவது. பெர்னாட்ஷா சொன்னதை கொஞ்சம் புரட்டிப்போட்டு சொன்ன பன்ச் டயலாக்குதான்.

'இந்த உலகமே நாடகம். நாமெல்லோரும் நடிகர்கள். அலைகள் வந்து வந்து போகும். ஆனால் கடல் மட்டும் மாறாம அப்படியோ இருக்கும். நடிகர்கள் மாறிக்கிட்டே இருப்பாங்க. நாடகம் நடந்துகிட்டேயிருக்கும். ஆண்டவன் நமக்கு கொடுத்த பாத்திரங்களை அவனுக்கு பிடிச்ச மாதிரி செஞ்சாத்தான் நமக்கு அவன்கிட்ட இடம் கிடைக்கும்... நல்லா இருங்க!'

Thursday, May 25, 2006

அந்த மூன்று மணி நேரம்

மூன்று மாதமாய் திட்டமிட்டும் மூன்று மணி நேரத்தில் திணற வேண்டியிருந்தது. எந்த பக்கம் திரும்பினாலும் பழகிய முகங்கள். நின்று நிதானமாக பேசத்தான் நேரமேயில்லை. கடைசி நேரத்தில் முதல்வரின் திருக்குவளை விஜயத்தால் நமக்கும் சிக்கல். சதாபிஷேக ஓட்டலில் டிபனை முடித்துக்கொண்டு முதல்வர் திருவாரூர் கிளம்பும் வரை மாப்பிள்ளையும் இரட்டைப்பிள்ளையார் கோயில் வாசலில் காத்திருக்க வேண்டியிருந்தது. திரும்பி வரும்போதும் மணமக்களை ரோட்டோரமாய் காரில் காத்திருக்க வைத்தார் கலைஞர்.

நேரிலும், மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் வாழ்த்துச் சொல்லியவர்களுக்கு வேண்டுமானால் ஒற்றைவரியில் நன்றியை சொல்லிவிடலாம். சென்னையிலிருந்து இரண்டு லீவு போட்டு வந்து கல்யாண வேலைகளில் களமிறங்கியவர்களுக்கு வெறுமனே நன்றி சொல்வதில் இருக்கும் தர்மசங்கடத்தை வெளியே சொல்லமுடியாது. பரபரப்பு, டென்ஷனெல்லாம் இறங்கி நாலு மணி நேரத்தில் மண்டபத்தை காலி செய்துவிட்டு வெறுமையாய் தனிமையில் நடக்கும்போது மனதை அழுத்தும் பாரத்திற்கு என்ன பெயர் சொல்வதோ?

மறக்க முடியாத ஷாட்களை மட்டும் சொல்லி ஷார்ட்டா முடிச்சுக்குறேன்!

Photobucket - Video and Image Hosting

எலெக்ஷனுக்கு அப்புறமாய் ஒரு நிம்மதி கும்பிடு!


Photobucket - Video and Image Hosting

அவரு வர்றலையா? பையன் கல்யாணத்துக்கு வந்துடுவாரா?

Photobucket - Video and Image Hosting

தாலிகட்டும்போது பொண்ணுங்க தலைகுனியறதுக்கு எதுக்காம்?


Photobucket - Video and Image Hosting

சீக்கிரமா மாலையை மாத்துங்க... சி.எம் வர்றதுக்குள்ளே கிளம்பியாகணும்!


Photobucket - Video and Image Hosting

மாப்பிள்ளே... கடைசியா ஒரு சிரிப்பு சிரிச்சுக்கோங்கோ!

Photobucket - Video and Image Hosting

பார்த்து தேடுங்கோ.... பானையை உடைச்சுடாதீங்கோ...

Photobucket - Video and Image Hosting

மச்சானுக்கு ஒரு பவுன் மோதிரமும் தர்றேன்னு சொல்லியிருந்தா அம்மா ஜெயிச்சுருப்பாங்க!

Photobucket - Video and Image Hosting

அட...வேட்டி கட்டிக்கிட்டு நல்லா நடக்கத்தெரியுமா?

Photobucket - Video and Image Hosting

மொய் எழுதாம கம்பி நீட்டுறவங்களை கரெக்டா பிடிச்சு கொண்டாங்கடா...

Photobucket - Video and Image Hosting

தம்பியுடையான்... கரெக்டாத்தான் சொல்லியிருக்காங்க!

Photobucket - Video and Image Hosting

என்னதான் சிவாஜி மாதிரி போஸ் கொடுத்தாலும் திரும்பி பார்க்க மாட்டேங்கிறாரே!

Photobucket - Video and Image Hosting

கூட்டம் வந்துடும்னுதான் வர்றதை சீக்ரெட்டா வெச்சுக்க சொன்னேன்!

Photobucket - Video and Image Hosting

இட ஒதுக்கீடு இங்கெல்லாம் வேணாம்மா...சேர்ந்தே நில்லுங்க!


Photobucket - Video and Image Hosting

மாப்பிள்ளைக்கும் சந்திரமுகிக்கு அப்புறம் சிவாஜிதான் சினிமாவாம்!


Photobucket - Video and Image Hosting

போயஸ் கார்டன் ஸ்பெஷல் கிப்டை பத்திரமா எடுத்து வைங்கப்பா!

Friday, May 12, 2006

செய்திகள் வாசிப்பது...

'உங்கள் பொன்னான, மணியான, முத்தான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் எங்கள்....' டயலாக் இல்லை; தொங்கும் தோரணம், அலறும் ஆட்டோ எதுவுமேயில்லை. அமைதியான தேர்தலும் அதிகபட்ச வாக்குப்பதிவும் அதிசயம் என்றால் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகளிலும் நிறைய ஆச்சர்யம். 'செங்குட்டுவன் ஒன்றரை லட்சம் ஓட்டில் முன்னணியில் இருக்கிறார்' என்கிற ரேடியோ செய்தியை கேட்டே பழக்கப்பட்டவனுக்கு ஆயிரம் ஓட்டு, அம்பது ஓட்டு என்று வித்தியாசத்தை அடுக்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஓட்டுப்போடாத குற்றவுணர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் கருத்து சொல்லியே ஆகணும்னு நினைச்ச பிறகு ஆசை வெட்கமறியாது!

இந்த தேர்தலில் நிறைய ஹீரோக்கள். கருணாநிதியில் ஆரம்பித்து கலர் டி.வி வரை. ஜெயலலிதாவும் இந்த லிஸ்ட்டில் உண்டு. எட்டாயிரம் ஓட்டில் ஆரம்பித்து பதினாலு ஓட்டு வரை கஞ்சத்தனமாய் கைப்பற்றி கரை சேர்ந்திருக்கும் திராவிட பெரிசுகளை பார்க்கும்போது ஆண்டிப்பட்டியில் அம்மாவின் குவார்ட்டர் செஞ்சுரி பெரிய விஷயம். இந்த தேர்தலிலும் காமெடியன்களுக்கு பஞ்சமில்லை. அதற்காக கிண்டலடிக்க தேவையில்லை. காமெடியன்கள் என்று நாம் நினைக்கும் பலரும் வில்லன் வேஷத்தை மறைக்க காமெடி வேஷம் போட்டவர்கள்தான். தேர்தல் முடிவுகளால் அவர்களுக்கு பாதிப்பே இல்லை. அதையெல்லாம் அலசிப்பார்த்தால் கடைசியில் காமெடியன்கள் நாம்தான் என்கிற உண்மை உலகத்துக்கு தெரியவரும்.

Photobucket - Video and Image Hosting

வை.கோ நிச்சயமாய் ஜீரோ இல்லை; ஹீரோதான். வரப்போகும் மூன்று வருஷத்துக்குள் அதை நிரூபிப்பார். பத்து வருஷத்துக்கு முன்னர் தனியாக நின்று டெபாசிட்டை பறிகொடுத்த வை.கோவுக்கும் ராமதாசுக்கும் விஜயகாந்தின் வெற்றி எரிச்சலாகத்தான் இருக்கும். வன்னியர்களின் கோட்டையாக சொல்லப்படும் ஏரியாவிலேயே கால் வைத்து எட்டி உதைத்திருக்கும் விஜயகாந்தின் ஆம்பிளைத்தனத்தை ஆளாளுக்கு சிலாகிக்கிறார்கள்! அதை விட முக்கியமான ஒரு விஷயமிருக்கிறது. தன்னுடைய ஜாதியின் பெயரைச்சொல்லி ஓட்டுக்கேட்காமல் இருந்ததுதான். விருத்தாச்சலத்தில் விஜயகாந்தை விடாமல் துரத்திச் போய் கிண்டலடித்து ஜாதியின் பெயரைச்சொல்லி தெனாவட்டாக ஓட்டுக்கேட்ட பா.ம.கவுக்கு எதிராக மக்கள் பொங்கியெழுந்திருப்பது அந்த பதினெட்டாயிரம் வாக்குகளில் தெரிகிறது. ஜீன்ஸ், டீஷர்ட் போட்டு தமிழை பாதுகாத்த, சினிமா சான்ஸ் கிடைக்காத சில தமிழ் அறிஞர்களின் முகத்தில் கரி. நமக்கெதுக்கு இந்த வம்பு? விஜயகாந்தின் அசெம்ப்ளி எண்ட்ரி பத்தி மதன் போடப்போகும் கார்ட்டூனை கெஸ் பண்ண ஆரம்பிக்கலாம்!

விருத்தாச்சலவாசிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல சென்னைவாசிகள். தி.மு.க கோட்டையில் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக அலையே அடித்திருக்கிறது. ·பதர் சயீத் கூட ஜெயித்திருக்கிறார் என்பது முக்கியம். சென்னையில் அம்மா இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்பது ரொம்ப முக்கியம். சைதாப்பேட்டை எதிர்பார்த்ததுதான். சங்கத்து ஆளுங்களை காணாம முழிக்கும் கட்டத்துரையை விட காமெடியான விஷயம் இங்கே நடந்தது. கூட்டிக்கழித்து பார்த்தால் சென்னைவாசிகளின் அந்தர் பல்டிக்கு இரண்டே காரணம்தான் இருக்க முடியும். ஒன்று தயாநிதி மாறன். இன்னொன்று செட்டப் பாக்ஸ்!

கொஞ்சம் அடக்கி வாசிச்சுருக்கலாமோன்னு டெல்லி கணக்குப்பிள்ளை இந்நேரம் நினைக்க ஆரம்பிச்சுருப்பார். 'இரண்டு ரூபாய்க்கு அரிசி தரமுடியுமா? இலவசமாக கலர் டி.வி தரமுடியுமா என்று அவர்கள் கேட்கிறார்கள்.. நான் சொல்கிறேன்....அது சாத்தியம்' என்று நிதானமாக சர்ட்டிபிகேட் கொடுத்ததை யார் மறப்பார்கள்? கொஞ்ச நாளைக்கு டெல்லியிலிருந்து தமிழ்நாட்டை பார்க்கலாம். இல்லாட்டி இப்படியொரு பன்ச் டயலாக் விடலாம்! 'நான் சாத்தியம் என்றுதான் சொன்னேனே தவிர சத்தியம் என்று சொல்லவில்லை!'

திருமா திரும்பவும் வெறுமா ஆகியிருக்கிறார். விஜயகாந்தை நினைத்து பல்லை கடித்துக்கொண்டிருப்பார். தமிழ்நாட்டில் காயடிக்கப்படாத வயசுப்பசங்க கூட்டம் கம்மிதான். தியாகி அவார்டு இருந்தால் கார்த்திக்குக்கு ஸாரி மு. கார்த்திக் தேவருக்கு கொடுத்துவிடலாம்! தேவர் ஓட்டை பிரித்த இனக்கோடாரி என்கிற பட்டம் கிடைக்கலாம். பா.ம.க என்கிற பலூனுக்கு யாரும் பஞ்சர் பார்க்காமலேயே காத்து இறங்க ஆரம்பிச்சுட்டதை சொல்லத் தேவையில்லை. மெதுவா ஒரு ஜாதி சங்கத்தை ஆரம்பிச்சு அப்படியே கட்சியா மாத்தி ஆட்சியை புடிக்கிறோமோ இல்லையோ டெல்லியில மினிஸ்டர் ஆயிடலாம்னு நினைக்கிறவங்க இப்போதைக்கு பதுங்கிக்கிறது உத்தமம்! இதுதான் தேர்தல் 2006 சொல்லும் மெகா செய்தி!

Friday, May 05, 2006

வாளுக சனநாயகம்

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

கண்ணாமூச்சி ஆட்டம் நடக்குது
காணாமப் போச்சு நம் தேசம்...
மேடை போட்டு பேசும் தலைவரை
பாருங்க எல்லாம் பொய் வேஷம்.
ஆறு ஓடுற ஓட்டத்தைப் பார்...
அதுதானே சுதந்திரம்தான்.
வந்த சுதந்திரம் போனது எங்கே?
சட்டமும் பட்டமும் விக்குது இங்கே.
விக்கிறவன் வேலை எனக்கேண்டா?

Photobucket - Video and Image Hosting

40 நாள் லேட்டாக முட்டாளுங்க தினத்தை கொண்டாடப்போகும் தமிழனுக்கு வாழ்த்துக்கள்!

Wednesday, May 03, 2006

ஓரங்கட்டேய் - 11

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

நோ கமெண்ட்ஸ்!

அருள்வாக்கு

"பாட்டாளி மக்கள் கட்சியில் 1 எம்.எல்.ஏ.வாக இருந்த இந்த கட்சியில் இன்று 20 எம்.எல்.ஏக்கள் அதிகரித்து உள்ளனர். இப்போது 31 எம்.எல்.ஏ.வாக ஆகப்போகிறோம். மேலும் மத்தியில் 6 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த கட்சியில் சிறந்த சுகாதார அமைச்சராக அன்புமணி உலகளவில் பாராட்டப்பட்டு விருதும் வழங்கப்பட்டுள்ளது. நம் உணர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது.நடிப்பில் எவரும் சீண்டாமல் இருந்ததால் இன்று கட்சியை ஆரம்பித்த ஒருவரால் இந்த மண்ணை பற்றி என்ன தெரியும். இளைஞர்களை கெடுத்து கெட்ட சக்திகளை பரப்புபவர்களை நான் தேர்தலுக்கு பிறகு விடப்போவதில்லை"

- டாக்டர் ராமதாஸ்

Tuesday, May 02, 2006

புரட்சி தொகுதிகள்

அடிதடி, வெட்டு குத்து, கோஷ்டி தகராறு, தள்ளுமுள்ளு, ஆள்கடத்தல் என்றெல்லாம் விதவிதமாக வார்த்தையை போட்டு விவரிப்பதற்கு பதிலாக சிம்பிளாக 'புரட்சி'ன்னு சொன்னாலே போதும். நம்மூரில் நிறைய பேருக்கு புரிந்துவிடும். எந்த ரவுடி ஜெயிப்பான்னு மண்டையை குடையுற 'புரட்சி' தொகுதி நிலவரம் கொஞ்சம் பார்க்கலாம். வேட்பாளர் புரொ·பைல் பார்த்தால் 'எரியுற கொள்ளி' டயலாக்கை சொல்ல தோணும். வேணாம், சொல்லி சொல்லி போரடிச்சுப் போச்சு! எதை தொட்டாலும் இம்சைதாங்கிற நிலைமையில இருக்கும் இந்தப்பகுதி குடிமகன்களை காப்பாத்த ஆண்டவனை ஒரு தபா வேண்டிக்கோங்கோ!

Photobucket - Video and Image Hosting

பூம்புகார்: கற்புக்கரசி பிறந்து, கருணாநிதி கண்டுபிடிச்ச ஊராக இருந்தாலும் எப்போதும் இது எம்.ஜி.ஆர் தொகுதிதான். இப்போது சுனாமி அலையால் ஆளுங்கட்சி பக்கம் சுருண்டு கிடக்குது. எப்படியாவது பொண்ணை நிக்க வெச்சுடணும்னு நம்பிக்கையோட தொகுதிக்கு ரவுண்டு வந்த மருத்துவர் திகைச்சுப்போய் வேட்பாளரை மாத்திட்டாராம். பூம்புகார் தமிழனுக்கு சினிமா மயக்கம் போக சான்ஸ் இல்லாமல் போய்விட்டது! இன்னொரு சுனாமி வந்து, அப்போ அம்மாவே ஆட்சியில இருந்தா இன்னும் நிறைய கிடைக்குமேன்னு நினைக்கிற அளவுக்கு மக்கள் இங்கே இருக்காங்கிறது ஷாக்கான சங்கதி. ஆதரவு ஓட்டை பங்கு போடுவதில் ஆளுங்கட்சிக்குள்ளேயே அடிதடி. அ.தி.மு.கவின் அக்மார்க் ரவுடிகளெல்லாம் ஏனோ இங்கேதான் பிறந்திருக்கிறார்கள். இப்போ பிரச்னை, கிளைமாக்ஸ் நேரத்தில் களத்தில் இறங்கியிருக்கும் 'கட்டபொம்மன் பேரன்' மாயா வெங்கடேசன்தான்! மாயவரத்து சுற்று வட்டார பகுதியில் அடிக்கடி போஸ்டரில் போஸ் கொடுக்கும் இந்த இம்சை அரசனிடம் ஏகப்பட்ட காசு. ஆளுங்கட்சி ஒரு பக்கம்; மாயா தரும் சாயா ஒரு பக்கம். பா.ம.க பெரியசாமியை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

திருவிடைமருதூர்: கட்சி நிக்கலையேன்னு கட்டை விரலை கட் பண்ணிக்கிட்ட விஷயத்தை யாரு மறந்தாலும் கலைஞர் மறக்கமாட்டார். அம்மா கட்சி தொண்டன் மாதிரி ஏகத்துக்கும் விசுவாசமா இருக்கானேன்னு கலைஞர் நினைக்கவும் மாட்டார். சிட்டிங் எம்.எல்.ஏ ராமலிங்கம் கட்டை விரலையே விலைக்கு வாங்குமளவுக்கு வசதியான பார்ட்டி. இந்த டிராமாவை ஜெயா டிவி. மிஸ் பண்ணியதுதான் ஆச்சர்யம். கோ.சி.மணிக்கு அடங்காத இந்த காளை இப்போது சிலிர்த்து நிற்கிறது. 'யாருமே இல்லாத இடத்தில் எதுக்குடா டீ ஆத்துறேன்'னு விவேக் தேவர் வந்தால் பா.ம.கவை நிச்சயம் கமெண்ட் அடிப்பார். ஜாதி ஓட்டு இல்லாத இடத்தில் உடன்பிறப்புகள் அடித்துக்கொள்வதை வேடிக்கை பார்த்த பா.ம.கவின் மேலேயே இப்போது புதுக்குண்டு. பாமகவின் ஆலயமணி, விடுதலைப்புலிகளுக்கு டீசல் கடத்திய கேஸில் மாட்டிக்கொண்டு அலைபவருக்கு அடிக்கடி ஷாக் ட்ரிட்மெண்ட் கொடுப்பது அ.தி.மு.க அல்ல தி.மு.கதான்!

Photobucket - Video and Image Hosting

வேதாரண்யம் : அடித்து துரத்துதல் (மணி சங்கர் அய்யரை மட்டும்!) ஸ்பெஷலிஸ்ட், இன்னபிற சங்கதிகளை கடத்தும் ஸ்பெஷலிஸ்ட்ம் மோதுகிறார்கள். வேதாரண்யத்தின் நிரந்தர எம்.எல்.ஏவை அசைத்துப்பார்க்க சாம, பேத, தான தண்டத்தில் இறங்கியிருக்கிறார் அம்மாவின் தளபதி. இரண்டு தரப்பும் கட்சிக்காரர்களை காசினால் குளிப்பாட்டுகிறார்கள். கலைஞர் பிறந்த ஊரில் இரட்டை இலை கொடி பறக்கிறது. திருக்குவளை தப்பித்தவறி இந்த தொகுதியில்தான் வருகிறது. நாகப்பட்டினத்திலிருந்து ஒண்ட வந்திருக்கும் பிசாசை நம்புவதா அல்லது ஊர்ப்பிசாசையே நம்பித்தொலைவதா என்று மக்கள் குழப்பத்திலிருப்பதால் வேதாரண்யம் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டே கிடக்கும்!

பண்ருட்டி: கிழட்டு நரிக்கும் குட்டி நரிக்கும் கல்யாணமாம் என்று ஆள்காட்டி விரலை ஆட்டிக்காட்டாததுதான் குறை. பண்ருட்டியார் பெரிய ஆளு. கருணாநிதி கூடவே இருந்து எம்.ஜி.ஆர் கட்சிக்கு ஆள் பிடித்தவர். ராஜீவ் காந்தியையும் பிரபாகரனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு தப்பும் தவறுமாக டிரான்ஸ்லேட் பண்ணி நிறைய சாதித்தவர்! குட்டி நரியும் சாதாரண ஆளில்லை. ஆறு மாதம் அரெஸ்ட் வாரண்ட்டுக்கு டிமிக்கி கொடுத்து டெல்லியில் தலைமறைவாக இருந்துவிட்டு எலெக்ஷன் நேரத்தில்தான் ஊருக்கு வந்திருக்கிறார். சிப்காட்டில் ஸ்டிரைக் நடந்தால் வேல்முருகனுக்கு சந்தோஷம். கம்பெனியும் சரி அதில் வேலை பார்க்கிறவர்களும் சரி கட்டை பஞ்சாயத்துக்கு வீடு தேடி வருவார்கள். பிடிச்ச பாட்டு... ராஜா.. வசூல் ராஜா! கடலூருக்கு கலவர மாவட்டம் என்று நல்ல பெயர் வாங்கி தந்த நாலு பேரில் இவரும் ஒருத்தர்!

Monday, May 01, 2006

ரவுண்ட் அப் - குத்தாலம்

இதுவும் ஒரு அக்மார்க் அ.தி.மு.க தொகுதிதான். வடக்கே திருப்பனந்தாள்; தெற்கே சன்னாநல்லூர். தொகுதி போலவே எல்லா கட்சியிலும் இரண்டு துருவங்கள் உண்டு. சன்னாநல்லூர், ஸ்ரீவாஞ்சியம் பகுதியிலிருந்து வேட்பாளர்களை நிறுத்துவது இதுவே முதல் முறை. அ.தி.மு.க சார்பில் நிற்கும் வேட்பாளர் பரம சாது. சொந்த ஊரில் ஏகப்பட்ட செல்வாக்கு. நல்ல அனுபவசாலி. கட்சிக்கூட்டங்களில் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருந்தவரை கூப்பிட்டு சான்ஸ் கொடுத்திருக்கிறார்களாம்! வம்பு தும்புவுக்கு போகாதவர் என்பதால் சாது இமேஜ் கைகொடுக்கிறது. ஜாதி கணக்குகள் எப்போதும் தோற்றுப் போவதால் இங்கே ஜாதிக்கட்சிகளுக்கு வேலையில்லை.

Photobucket - Video and Image Hosting

திரும்பவும் தி.மு.க சார்பில் நிற்க ஆசைப்பட்டு கிடைக்காமல் தன்னுடைய மகனையே களத்தில் இறக்கியிருக்கிறார் கல்யாணம். இரண்டு முறை தேர்தலில் நின்று தோற்றுப்போனாலும் ஒரே ஒரு தடவை ஜெயித்ததால் கல்யாணத்தின் கூரை வீடு சொற்ப காலத்தில் பங்களாவான அதிசயம் நடந்தது. அவ்வப்போது கூட்டம் போட்டு தன் இருப்பை காட்டிக்கொண்டே இருந்ததற்கு கைமேல் பலன். மூன்று மாதத்திற்கு முன்னால் கட்சியில் சேர்ந்த கல்யாணத்தின் வாரிசு மேல் உடன்பிறப்புகளுக்கு ஏகப்பட்ட கோபம். இருந்தாலும் வேறு வழியில்லை. மூன்று மாதத்தில் இந்த பொடிசு அரசியலில் கடைத்தேறிவிட்டது.

கோஷ்டி பிரச்னையை சமாளிக்க கோ.சி மணிதான் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கிறார். கோ.சி. மணி மகனுக்கே சீட் கொடுக்க மறுத்த கலைஞர், கல்யாணத்தின் கோரிக்கைக்கு தலையாட்டியதுதான் கட்சிக்காரர்களின் மண்டையை குடையும் கேள்வி. பஞ்சாயத்து பண்ணுவதில் கோ.சி.மணி எக்ஸ்பர்ட். இருந்தாலும் குடும்ப அரசியலால் நிறைய பேருக்கு எரிச்சல். இப்போதைக்கு குத்தாலம் தொகுதியின் வெற்றி ஆசைமணியின் கையில்தான். அதிருப்தியிலிருக்கும் இந்த முன்னாள் எம்.எல்.ஏ, அ.தி.மு.கவின் பெரும் புள்ளி. எம்.ஜி.ஆர் காலத்து ஆள். ஆசைமணிக்கு அம்மா மேல் கோபம் வந்தால் அ.தி.மு.க இங்கே காலி!

ரவுண்ட் அப் - சீர்காழி

திருமாவளவனுக்கே இது நம்ப முடியாத விஷயம்தான். பலமான தனது கோட்டையை சக கூட்டணிக்கட்சிக்கு விட்டுக்கொடுத்த அம்மாவை நினைத்து சந்தோஷத்தில் விம்மினாலும் நிலைமை இங்கே தலைகீழ். ஆளில்லாமல் தடுமாறிய விடுதலைச்சிறுத்தைகள் பட்டுக்கோட்டைக்கு போய் உஞ்சை அரசனை பிடித்து வந்தார்கள். கொள்ளிடத்திலிருந்து பூம்புகார் வரை இஷ்டகோணலுக்கு இருக்கும் தொகுதியை ஒரு ரவுண்டு சுற்றி வருவதற்குள்ளேயே சிறுத்தைக்கு மூச்சு வாங்கிவிட்டதாம். சுனாமி நிவாரணப் பணிகளைத்தான் பிரச்சாரத்தில் ஹைலைட்டுகிறார்கள். சுனாமிக்கு ஆறுதல் சொல்ல வந்த திருமா, தலித் மக்களை அம்மா கண்டுக்கவே இல்லையென்று திருவாய் மலர்ந்தருளிய இடம் இதுதான் என்பதை சைடில் வைத்துக்கொள்ளவும்.

Photobucket - Video and Image Hosting

விஜயகாந்த் ரசிகர்களின் முனகல் சத்தம் கொள்ளிடம் வரைக்கும்தான். திருமுல்லைவாசல் போன்ற சுனாமி ஏரியாக்களில் இன்னும் அ.தி.முக ராஜாங்கம்தான். சீர்காழி டவுணில் நிலைமையோ வேறு. 'எங்க கண்ணு முன்னாலேயே மூட்டை மூட்டையா லாரியில ஏத்திக்கிட்டு போய் அந்த மீனவ குப்பத்துல கொண்டு போய் கொடுத்தாங்க. எங்களுக்கு ஒரு தம்பிடி அரிசி கூட கிடைக்கலை!' சுனாமியால் பாதிக்கப்பட்டது மீனவர்கள் என்றால் நிவாரண உதவி நமக்கும் கிடைக்கவில்லையே என்கிற எரிச்சலில் ஏகப்பட்ட பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொகுதியில் வன்னியர்கள் ஜாஸ்தி. பாட்டாளி மக்கள் தலித் தம்பியை கடைசி நேரத்தில் கைகொடுத்து காப்பாற்றிவிடுவார்கள் என்று நிஜமாகவே நம்புகிறார்கள்.

இந்தப் புரளியையெல்லாம் கண்டுகொள்ளாமல் உடன்பிறப்புகள் உற்சாகம் குறையாமல் ஒடியாடி வேலை செய்கிறார்கள். பன்னீர்செல்வம் தொகுதிக்கு நன்றாகவே தெரிந்த முகம். அமைப்பு ரீதியாகவும் தி.மு.க இங்கே படு ஸ்ட்ராங்க். கலர் டி.வி அறிவிப்பு வந்ததுமே தொண்டர்கள் ஒரு தடாலடி வேலையை செய்தார்கள். வீடு வீடாக போய் ரேஷன் கார்டு ஜெராக்ஸை சேகரிக்க ஆரம்பித்ததால் மக்களுக்கு கலர் டி.வி கனவு உச்சத்துக்கு போயிருக்கிறது. இன்றைய நிலையில் பா.ம.கவே உதவிக்கு வந்தாலும் இங்கே சிறுத்தைகளை காப்பாற்ற முடியாது!