Saturday, May 25, 2019

#ElectionResults2019

தென் சென்னை தொகுதியில் நோட்டா பட்டனை அழுத்தியவர் 16,838 பேர். அதில் நானும் ஒருவன்!

பாஜகவுக்கு குறைவான வாக்குகளைக் கொடுத்தது தமிழகமோ, கேரளமோ அல்ல. ஆந்திரா!

சபரிமலை சர்ச்சை பற்றி கருத்து சொல்லாமல் கம்மென்று இருந்த காரணத்தால்தான் காங்கிரஸ் கட்சிக்கு 19 இடம் ஐயப்பனால் அருளப்பட்டது. silence is the language of God @ God's own country! #எண்டே கேரளம்

தமிழ் நாட்டில் பாஜக பெற்றது 3.66% என்றாலும் உண்மையில் 1% மட்டுமே இருக்க முடியும். ஆனால் சர்வ நிச்சயமாக நோட்டாவை விட கூடுதலாக பெற்றிருக்கிறது. Way to Go!

மூன்றாவது இடத்தில் வந்தவன், இரண்டாமிடத்தில் வந்தவனை மிரட்டி, கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்தற்கு எதிராக கன்னடத்து மக்கள் பொங்கியதுதான், கர்நாடகாவில் ஜாதி, மத, இன கணக்குகளையெல்லாம் மீறி பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. #KarnatakaResults2019

பஞ்சாப், திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தேன். ஏகப்பட்ட ஆச்சர்யங்களைக் கொடுத்திருக்கிறது. 1984ன் நினைவுகள் முற்றிலுமாக விலகிவிட்டன. காங்கிரஸ் கட்சியின் சித்து செய்த கண்மூடித்தனமான பாகிஸ்தான் ஆதரவு பிரச்சாரம், பாஜகவுக்குத்தான் சாதகமாகியிருக்கிறது.

டெல்லியில் தோற்றாலும் பஞ்சாபில் ஒரு இடத்தில் ஆம் ஆத்மி ஜெயித்திருக்கிறது. டெல்லி எதிர்ப்போடு வளர்ச்சி, மாற்றம், தனித்துவ அடையாளங்களையும் பஞ்சாபிகள் கவனமாக முன்வைத்திருக்கிறார்கள். எமர்ஜென்ஸி காலத்தில் மட்டுமல்ல இப்போதும் பஞ்சாபிடமிருந்து தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது #electionresults2019

சட்டமன்றத்திற்கு பட்நாயக்கும், நாடாளுமன்றத்திற்கு மோடிக்கும் ஓடிசா வாக்களிக்கும்; காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த ம.பி விவசாயிகள் இம்முறை பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்; உ.பியில் யாதவ்-மாயாவதி கூட்டணிக்கு அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவு இருக்கும்; கேரளா, இம்முறை கம்யூனிஸ்டுகளை கைவிட்டுவிடும்; மேற்கு வங்கத்தில் மம்தா, 2014 ஜெயலலிதா போல் வெற்றி பெறுவார். இதெல்லாம்தான் 2019ன் மிகப்பெரிய myths

நாளை மறுநாள் ஸ்டாலின் ஆட்சி வரும் என்பதை விட அடுத்த பிரதமர் மாயாவதி, துணை பிரதமர் கனிமொழி என்பதுதான் பெரும் பீதியூட்டக்கூடியதாக இருக்கிறது!