Friday, September 11, 2020

இன்றைய செய்தியில்...

இன்றைய செய்தி, இணையத்தளத்தில் நடப்பு அரசியல் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறேன். ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம். கருத்துகளை தெரிவிக்கலாம்.  அனைத்து கட்டுரைகளையும் ஒரே இடத்தில் படிக்க....

https://indrayaseithi.com/author/rajini-ramki/





Monday, May 18, 2020

நிதியமைச்சரின் 4 நாள் அறிவிப்புகள்

சுகாதாரத்துறைக்கான சிறப்பு திட்டங்கள், காலத்தின் கட்டாயம். Self-reliance, ஒரே இந்தியா, ஒரே ரேஷன் கார்டு, MSME redefined, e-vidhya என நான்கு நாட்கள் தொடர்ந்த நிதியமைச்சரின் பேச்சில் நிறைய நல்ல விஷயங்கள். சில சொதப்பல்களும் உண்டு, குறிப்பாக தனியார்மயமாக்கல் + மஞ்சள் கடிதாசி நடைமுறைகள். கொரானா ஊரடங்கில் நிதித்துறை சுறுசுறுப்பாகவே இயங்கியிருப்பது தெரிகிறது. ஆனாலும், எதிர்பார்ப்புகள் எகிறியிருந்ததால் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த முடியவில்லை.

நிதியமைச்சரின் அறிவிப்பெல்லாம் reform, not relief! கரீப் கல்யாண் யோஜ்னா திட்டத்தின் வழியாக 20 கோடி பேருக்கு 500 ரூபாய் கொடுத்தது பற்றி நிதியமைச்சர் குறிப்பிடுகிறார். எடப்பாடி அரசு கூட, 2 கோடி மக்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறது. இதெல்லாம் பழைய கதையாகிவிட்டது. அடுத்த கட்டமாக எவ்வளவு தரப்போகிறீர்கள்? கையில்  காசு இருக்கும்போது கிடைக்கும் தன்னம்பிக்கையை வார்த்தையில் விவரிக்க முடியாது!

Sunday, January 19, 2020

துக்ளக் & முரசொலி


முரசொலி ஆபிஸில் துக்ளக் அச்சடிக்கப்பட்டது என்னும் அரும்பெரும் தகவல் எட்டாவது முறையாக வாட்ஸ் அப்பில் வந்து சேர்ந்தது. இதை யாரும் மறுக்கவில்லை. ரஜினி பேசிய context வேறு. அரசியலில் எதிரிகளை நாம்தான் வளர்த்துவிடுகிறோம். எதிர்ப்புதான் பலம், எதிர்வினை செய்வதன் மூலமாக எதிர்ப்பாளர்களை வளர்த்து விடுகிறோம். இதுதான் செய்தி.
1977 முதல் 1987 வரை கலைஞரை விட கடுமையாக எம்ஜிஆரை விமர்சித்த ஒரே பத்திரிக்கை துக்ளக். எம்ஜிஆரிடமிருந்து கடைசிவரை நோ ரியாக்ஷ்ன். 1971க்கு பின்னர் சுதாரித்துக் கொண்ட கலைஞரும் துக்ளக்கை நேரடியாக எதிர்த்ததில்லை. 1988ல் விமர்சித்து 1996ல் துக்ளக்கை புகழ்ந்தபோதும், 1999ல் புகழ்ந்து, 2004ல் விமர்சித்தபோதும், சோவை கைபர் கணவாய் வழி வந்த பார்ப்பனர் என்று இடித்துரைத்தாலும் பெரிய அளவில் கலைஞரிடமிருந்து எதிர்வினை வந்ததில்லை.
தன்னுடைய அரசியலும் அப்படித்தான் இருக்கும் என்பதைத்தான் ரஜினியும் குறிப்பிட்டிருக்கிறார். ரஜினியிடமிருந்து இப்படியொரு கருத்து வருவது இது முதல் முறையுமல்ல. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது என்று ரஜினி தந்த அறிக்கையில் இருந்த இன்னொரு வாசகம், என்னோடு மோதி, தேவையில்லாமல் என்னை பெரிய ஆளாக்கிவிடாதீர்கள்!
'40 காசு வித்த துக்ளக்கை அன்னிக்கு ரெண்டு ரூபாய், இரண்டரை ரூபாய் பிளாக்கில் வித்தாங்க' -
இதைத்தான் 'பத்து ரூபா விலைன்னு சொன்னா, அதை ஐம்பது ரூபாய், அறுபது ரூபாய் வித்தாங்க'ன்னு மில்லினிய குழந்தைகளுக்கும் புரியும்படி ரஜினி பேசினார்னு முரசொலி வாசகரிடம் விளக்கினேன்.
'அப்போ, பிளாக்குல வித்தாங்கன்னு தப்பா சொன்னதா நியூஸ் பேப்பர் விற்பனையாளர் சங்கத்தை வெச்சு கேஸ் போட வைக்கமுடியுமா?' என்றார். இவங்களையெல்லாம் நம்பியா விடுதலை, தீக்கதிரெல்லாம் விக்குது?!
துக்ளக்கில் வாசகர் கடிதம் எழுதலாம்; கேள்விகள் கேட்கலாம். நன்றாக இருந்தால் பிரசுரமாகும். மிகவும் நன்றாக இருந்தால் 50 ரூபாய் மணியார்டர் வரும். வாரமலர் அந்துமணி, இதயம் பேசுகிறது மணியன், கல்கண்டு லேனா தமிழ்வாணன், தராசு ஷ்யாம் கூட தருவார்கள். முரசொலியில் கிடையவே கிடையாது!
அன்றைய தினம் சேலத்தில் பெரியார் இல்லவே இல்லை என்று நிரூபிக்கலாம். கொ. மணியால் முடியும். ஆனால் கி. வீரமணி கோபித்துக் கொள்வார்.
துக்ளக் மட்டுமல்ல இன்னும் பல பத்திரிக்கைகள் செய்தியை அட்டைப் படமாக்கினார்கள். எல்லாவற்றையும் யார் கைக்கும் கிடைக்காமல் பார்த்துக்கொண்டோம் என்று உடன்பிறப்புகள் நிரூபிக்கலாம். ஸ்டாலின் கோபித்துக்கொள்ள மாட்டார்!
நீங்களுமா கோபால்? சீமானை விட சிக்கனமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் காங்கிரஸ்தான் நிமிர்ந்து பார்க்குதுன்னா... நக்கீரனுமா?!
பைதபை, பேஸ்புக்கில் வந்த விஷயம் இதுதான்.
//இன்று புத்தகக் கண்காட்சியில் நக்கீரன் கோபாலிடம் பேசிக் கொண்டிந்தேன்.காலையில் ரஜினியுடன் அவர் தொலைபேசியில் பேசிய போது, பதட்டப்பட்டாராம்!
‘’கோபால், திமுகவினர் படிக்கும் பத்திரிக்கையை குறிப்பிட்டுவிட்டு அதிமுகவினர் பத்திரிகையை சொல்லாமல் விட்டுவிட்டேன் என விமர்சனம் வருகிறது...என்று வருத்தப்பட்டாராம்.
’’அது பரவாயில்லை சார் அதிமுக என்றால், நீங்கள் ’நமது எம்ஜிஆரை’ சொல்வீர்களா? அல்லது ’ நமது அம்மா’வை சொல்வீர்களா? அதிமுக இரண்டு பிரிவாய் அல்லவா உள்ளது...’’ என்ற போது,’’அப்படினால் சொல்லாமல் விட்டதே நல்லதாகப் போச்சு இல்ல... நிம்மதி ’’ என்றாராம்!//
அதுல ஒரு முரசொலி வாசகர் கேட்குறார்,1971ல் ரஜினிக்கு தமிழே தெரியாதே.. பின்னே எப்படி துக்ளக் படிச்சாராம்? #அதெப்படி வட்டத்துக்குள் வந்து கரெக்டா உட்கார்ந்துடறாங்க? பெரிய ஆளுங்கப்பா!முத்தமிழ் அறிஞர், புரட்சித் தலைவர், தைரியலட்சுமி... மூவரும் தென்படும் ஓரருவம் இது. இரட்டை இலையும் உதயசூரியனும் இணைந்து எட்டு விரலாக நின்றாலும், கட்டை விரலோடு தனியாக களமிறங்க.. நாங்க ரெடி!துக்ளக் சோவின் வளர்ச்சியில் பக்த்வச்சலம், கலைஞர், இந்திரா காந்தியின் பங்கு... well done @rajinikanth 
எதிர்ப்புதான் நம்முடைய பலம்; எதிர்க்கப்படுவதுதான் நமக்கு கிடைத்த வரம்!