Thursday, December 13, 2018

பேச்சுக்கச்சேரி2018

#பேச்சுக்கச்சேரி2018 : சோழவளநாடு கலையுடைத்து - சோழர்களுடன் இருநாட்கள்... டிசம்பர் 15 & 16 @ தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை





பேச்சுக் கச்சேரி 2018 - சோழவள நாடு கலையுடைத்து



இசைத்திருவிழாவோடு நம்முடைய கலாச்சாரத்தையும் கொண்டாடுவோம்! பாரம்பரியத்தை போற்றுவோம்!

மார்கழி மாதம், சென்னையின் இசைத் திருவிழா காலம். உலகெங்கிலும் உள்ள இசைக் கலைஞர்களும் ரசிகர்களும சென்னைக்கு வந்திருந்து இசை, நாட்டிய, கலாச்சார திருவிழாவில் பங்கேற்பதுண்டு. அதே போன்று வரலாறு, கலை, இலக்கியம், கட்டிக்கலை உள்ளிட்ட இந்திய பாராம்பரிய அம்சங்களையும் மையப்படுததி தொடர் உரைகளை நிகழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்ததன் காரணமாக 2011ல் பேச்சுக் கச்சேரி அரங்கேறியது. கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு டிசம்பம் மாதமும நடத்தி வருகிறோம்.

இந்த ஆண்டு எதிர்வரும் டிசம்பர் 15 (சனிக்கிழமை) & டிசம்பர் 16 (ஞாயிற்றுக்கிழமை) இருநாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கிறது. சோழவள நாடு கலையுடைத்து என்னும் தலைப்பில் சோழர்களின் கலை, கட்டடம், இலக்கியப் பங்களிப்புகளை மையப்படுத்தி தமிழின் முக்கியமான வரலாற்று ஆய்வாளர்களும், கலை, பண்பாட்டு ஆர்வலர்களும் பேச இருக்கிறார்கள். இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம். காந்தி மண்டபம் சாலை. கோட்டூர்புரம், சென்னை, தமிழ்நாடு 600025

முதல் நாள் நிகழ்வை முனைவர் இரா. நாகசாமி துவக்கி வைத்து, செம்பியர்சீர் போற்றுமின் புலவீர்காள் என்னும் தலைப்பில் பேச இருக்கிறார். அவரைத் தொடர்ந்து பொன்னியின் புதல்வர் என்னும் தலைப்பில் திரு. ரங்கரத்னம் கோபும், கங்கை கொண்ட சோழன் என்னும் தலைப்பில் திருமதி. சித்ரா மாதவனும் பேச இருக்கிறார்கள். பிற்பகலில் செந்தமிழ் போற்றுதும் என்னும் தலைப்பில் முனைவர் எஸ். பாலுசாமியும், திருமகள் போல தமிழ் பெருங்செல்வி என்னும் தலைப்பில் கல்வெட்டியல் நிபுணர் திரு. எஸ் ராமச்சந்திரனும் பேச இருக்கிறார்கள்.

இரண்டாம் நாள் நிகழ்வு முனைவர் குடவாயில் எம். பாலசுப்ரமணியமின் உரையோடு தொடங்குகிறது.முப்பெரும் திருக்கற்றளி என்னும் தலைப்பில் பேச இருக்கிறார். அவரைத் தொடர்ந்து எழில் செப்பும் திருமேனி என்னும் தலைப்பில் திரு. விஜய்குமாரும், சிற்பக் குறட்பாக்கள் என்னும் தலைப்பில் பேராசிரியர் பி. சிவராமகிருஷ்ணனும் உரையாற்றுகிறார்கள்.

பிற்பகல் நிகழ்வாக திரு. விஸ்வதநாதனின் சீர்மிக சித்திரச்சோலை என்னும் உரையும், பேச்சுக்கச்சேரியின் இறுதி நிகழ்வாக பேராசிரியர் மதுசூதனனின் உரையும் இடம்பெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்ப் பாராம்பரிய அறக்கட்டளையும் & தமிழ் இணையக் கல்விக் கழகமும் இணைந்து செய்திருக்கின்றன. அனுமதி இலவசம். அனைவரும் பங்கேற்கலாம். முன்பதிவு தேவையில்லை.


பேச்சுக்கச்சேரியின் ஒட்டுமொத்த நிகழ்வுகளும் இணையத்திலும் நேரலையாக காணக்ககிடைக்கும். https://goo.gl/m75t3p மேலதிக விபரங்களுக்கு htttps://www.facebook.com/TamilHeritageTrust/