சுயபுராணம்


ஜெ. ராம்கி என்னும் புனைப்பெயரில் எழுதி வரும் ஜெ. ராமகிருஷ்ணன், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் & வரலாற்று ஆர்வலர். மயிலாடுதுறையைச் சேர்ந்த ராம்கி, சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் திட்ட மேலாண்மை நிபுணராக பணியாற்றுகிறார்.  ரஜினி, மு.க, ஜெயலலிதா, மன்மோகன் சிங், தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட சமூக ஆளுமைகள் குறித்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். 

நரசிம்மராவ், ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் குறித்து ஆங்கிலத்தில் வெளியான புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இது தவிர சிறுவர்களுக்கான அறிவியல் கதைகள், வரலாறு, தொழில்நுட்பம் குறித்த ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழக அரசின் 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதையும் பெற்றிருக்கிறார். 

1995ல் வாசக எழுத்தாளராக தமிழ் அச்சு ஊடகங்களில் எழுத ஆரம்பித்தவர், கலை, வரலாறு, அரசியல், தொழில்நுட்பம் குறித்து அச்சு ஊடகங்களிலும் இணைய வெளியிலும் ஏராளமான பங்களிப்புகளை செய்திருக்கிறார். இவரது படைப்புகள் தமிழின் முன்னணி நாளேடுகள், பத்திரிக்கைளில் இடம் பெற்றுள்ளன. அச்சு ஊடகங்கள் மட்டுமல்லாது தற்போது காட்சி ஊடகங்களிலும் அன்றாட அரசியல், வரலாறு, தொழில்நுட்பம் குறித்து தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார்.

2012 தொடங்கி தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை & வராஹமிஹிரா அறிவியல் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளராகவும் இந்திய கலை, வரலாறு, பண்பாடு, அன்றாட அறிவியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். 

கைவண்ணங்கள்



















எழுதிய கட்டுரைகள்








புத்தக விமர்சனங்கள்


விளம்பரம்

புத்தகங்களை இணையத்தின் வாங்க... டயல் பார் புக்ஸ்  NHM - Dial for Books

அமேஸான் இணைய தளத்தில் வாங்க... https://www.amazon.in/J.-Ramki/e/B077XYY2YN


தமிழ் விக்கி - https://tinyurl.com/yck992xp
விக்கிபீடியா - https://tinyurl.com/dvj5b2vc
வாட்ஸ்அப் சேனல் -  https://tinyurl.com/4kfkjpr3
வலைப்பதிவு - http://rajniramki.blogspot.com