Sunday, December 02, 2018

2PointO கிறுக்கல்கள்

படவெளியீட்டுக்கு முன்னர் : 

எமிக்கு சோபியா கேரக்டர். குட்டி ரஜினி கேரக்டர் ரிப்பீட் ஆடியன்ஸ்க்கு உத்திரவாதம். மல்டி ஸ்டார் படம். எடுபடும். அக்சய் கேரக்டர் உறுத்தலாம்

படம் பார்க்கும்போது : 

இடைவேளை. பாதி கிணறு என்றாலும் ஹை ஜம்ப்! செல்போன் கையில் எடுக்கவே தயங்கும் முகங்கள்... மகிழ்ச்சி! Great tribute to Salim Ali #2.0

2.0 படம் பார்க்க செல்பவர்கள் முன்னதாக எந்திரனை ஒரு முறை பார்க்கவும். பறவையியல் நிபுணர் சலீம் அலி பற்றியும் படித்துவிட்டு செல்லவும். இரண்டையும் செய்யாமல் போனால் பக்கத்தில் இருப்பவரை படுத்தாதீர்கள்!

படம் பார்த்தபின்னர் : 

பக்‌ஷி, தன்னுடைய பிளாஷ்பேக்கை சிட்டியிடம்தான் சொல்லவேண்டும் - இந்த முடிவுதான் திரைக்கதைக்கு கிளாஸிக்கல் அந்தஸ்தை பெற்றுத் தருகிறது. 3.0 தொடக்கத்துக்கு இதுவொரு ஆரம்பப் புள்ளியாக இருக்கும்! #2point0

செத்துப் போனது சிட்டுக் குருவிகள் மட்டுமல்ல. மஞ்சள் கிளி, வால் காக்கை, சின்ன மாம்பழ குருவி, தையல் சிட்டு, தவிட்டு புறா, குதிரை மலை கோட்டான், வண்ணாத்தி குருவி, நீர் காக்கை, தண்ணி புள்ளு, நத்தை கொத்தி, புள்ளி புறா, சாவல் குருவி, மரம் துளைச்சி, பாம்பு கொத்தி, தச்சன் குருவி, மஞ்சள் கொண்டை குருவி... இதெல்லாம் சென்னை பசங்க! #2PointO

2014 அக்டோபர். லிங்கா படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றபோது இடைவிடாமல் எட்டு மணி நேர தலைவர் தரிசனம் கிடைத்தது. 2.0 படத்துக்கான ஆரம்ப கட்ட ஸ்கிரிப்ட் பணிகள் ஆரம்பமாகிவிட்டதை கண்டு கொண்டேன். சென்னைக்குத் திரும்பியதும் உறுதியானது.

2015 ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக முழு ஸ்கிரிப்டும் தயாராகிவிட்டது. பின்னணியில் இடம்பெறும் சின்னச் சின்ன வசனங்கள் உள்பட அனைத்தும் தயார். ஆறு மாதங்கள் கழித்தே படத்திற்கான முதல் காட்சி படமாகியது. போன மாதம் நித்யானந்தா வீடியோவில் இடம்பெறும் Its me உள்ளிட்ட வசனங்கள் வரை படத்தில் ஏகப்பட்ட எள்ளல்கள்.

இரண்டரை வருட காலமாக சின்னச் சின்ன முனகல் வசனங்களைக் கூட மெருகேற்றியிருக்கிறார்கள். ஆடியோ தெளிவில்லாத ஏவிஎம் ராஜேஸ்வரியில் கூட வசனங்களுக்கு பலமான கைதட்டல்கள். இதற்கு மேல் சொல்வதற்கு எதுவுமில்லை! #ஜெயமோகன் #2PointO ஜெயமோகன்

மாஸ் ஆடியன்ஸ்க்கு சொல்லித் தருவது ஒரு கலை. டிரிக்கர் செய்தால் போதும்! புத்திசாலி ரசிகன் தேடித் தேடி கற்றுக் கொள்வான். நேரடியாக லெக்சர் அடித்தால் ஓடிவிடுவார்கள். ரோடு தேவையில்லை, இரண்டு கோடு காட்டினால் போதும். ஸ்ரீராகவேந்திர புராணம் முதல் ரோபாடிக்ஸ் வரை அப்படித்தான்.



பாபா ரிலீஸுக்கு முன்னர் பரங்கிப்பேட்டை பயணக் கட்டுரை, சந்திரமுகியின்போது டிஐடி, சிவாஜி சமயத்தில் கருப்பு பணம் பற்றி கட்டுரை. எந்திரன் வந்தபோது ரொபாடிக்ஸ் பற்றி தொடர் எழுதினேன். லிங்கா சமயத்தில் முல்லை பெரியாறு, காலா வந்தபோது புனே - தாராவி அனுபவங்கள். இம்முறை ஏகப்பட்டது இருக்கிறது. எதிலிருந்து எழுத ஆரம்பிக்கலாம்?! #2PointO

#2.0 ஸ்பெஷல். குட்டி டப்பாவில் சால்ட் கேரமல் பாப்கார்ன். ரூ.200 என்றார்கள். வேண்டாவெறுப்பாக வாங்கினேன். நல்ல டேஸ்ட்! காலியானதும் வரவேற்பறையில் வைத்தாகிவிட்டது. PVR போனால் வாங்கத் தவறாதீர்கள்! #2PointO

கடைமடை டெல்டாவில் முந்தாநாள் இரவு தொடங்கிய மழை. மாயவரத்தில் நேற்று மதியம் வரை நல்ல மழை. அதையும் தாண்டி... #2PointO

மொக்கை கேள்விகள். 30 வருஷங்கள் பத்திரிக்கையாளராக இருந்தும் நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு. ஆனாலும் முன்தயாரிப்பு எதுவுமின்றி ஜல்லியடிக்கிறார்கள். வழக்கம்போல அசாதாரண பதில்களில் அசத்துகிறார் சூப்பர் ஸ்டார். Acting is entertaining to me. It is not like a profession. If I treat it like a profession, then work becomes a burden. Now it is like a game, it is relaxing. That's probably where I get my energy from, from that thought.👉👉 👉https://tinyurl.com/y8f6rpjn

கும்பகோணத்துக்காரர் என்றாலும் மாயவரம் ரயில்வே மேம்பாலத்து நினைவுகள் ஷங்கருக்கு இன்னும் மிச்சமிருக்கும். தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகள் இயக்குநராக இருப்பதே பெரிய விஷயம். உலக அளவில் கவனிக்கப்படும் முன்னணி இயக்குநராக இருப்பதெல்லாம்... ஷங்கர், தென்னிந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்பதில் சந்தேகமில்லை. குறைந்தபட்சம் இன்னொரு பத்தாண்டுகள் முன்னணியில் இருப்பார் என்பதால், விரிவாக எழுதுவதற்கு நிறையவே நேரமிருக்கிறது. பாராட்டுகள் ஷங்கர் ஸார்! #2PointO @shankarshanmugham

டாட்! சாதா புள்ளி அல்ல.பெரும் புள்ளி