சுகாதாரத்துறைக்கான சிறப்பு திட்டங்கள், காலத்தின் கட்டாயம். Self-reliance, ஒரே இந்தியா, ஒரே ரேஷன் கார்டு, MSME redefined, e-vidhya என நான்கு நாட்கள் தொடர்ந்த நிதியமைச்சரின் பேச்சில் நிறைய நல்ல விஷயங்கள். சில சொதப்பல்களும் உண்டு, குறிப்பாக தனியார்மயமாக்கல் + மஞ்சள் கடிதாசி நடைமுறைகள். கொரானா ஊரடங்கில் நிதித்துறை சுறுசுறுப்பாகவே இயங்கியிருப்பது தெரிகிறது. ஆனாலும், எதிர்பார்ப்புகள் எகிறியிருந்ததால் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த முடியவில்லை.
நிதியமைச்சரின் அறிவிப்பெல்லாம் reform, not relief! கரீப் கல்யாண் யோஜ்னா திட்டத்தின் வழியாக 20 கோடி பேருக்கு 500 ரூபாய் கொடுத்தது பற்றி நிதியமைச்சர் குறிப்பிடுகிறார். எடப்பாடி அரசு கூட, 2 கோடி மக்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறது. இதெல்லாம் பழைய கதையாகிவிட்டது. அடுத்த கட்டமாக எவ்வளவு தரப்போகிறீர்கள்? கையில் காசு இருக்கும்போது கிடைக்கும் தன்னம்பிக்கையை வார்த்தையில் விவரிக்க முடியாது!