பத்தாண்டுகளாக ஏர் இந்தியாவில் பயணித்து வரும் 45 லட்சம் பயணிகளின் டேட்டாவை சுருட்டியிருக்கிறார்கள். Biggest data breach reported in India!
கொரானாவை எதிர்கொள்ளும் திட்டங்கள் பற்றிய மாநில அரசுகளின் விளம்பரங்கள் பிஸினெஸ் சேனல்களில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. சத்தீஸ்கர், டெல்லி, உ.பி, குஜராத், அஸ்ஸாம் மாநிலங்களை அடிக்கடி பார்க்கமுடிகிறது. தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆர்வமில்லையோ?
மே 30 அன்றுதான் கொரானா தொற்று தமிழகத்தில் உச்சம் தொடும் என்கிறார், ராதாகிருஷ்ணன். அப்போ, ஊரடங்கு தொடருமா?! இதுதான் ஊரடங்கு என்றால் இதைத் தொடர்வதில் எந்த பலனும் இல்லை!
வாழ்வாதாரம் - 3 வருஷம் புழக்கத்தில் இருந்த வார்த்தை,3 வாரத்தில் மறக்கடிக்கப்பட்டது. #புதிய தமிழகம்!
தினமும் 1300 குழந்தைகளுக்கு தொற்று உறுதியாகிறது. இதில் பெற்றோர்கள் மூலமாக வந்தவைதான் அதிகம் :-(
34000+; 300+ சாவு- தொடர்ந்து நான்காவது நாள். இந்திய அளவில் தமிழகம் முதலிடம், திராவிட மாடலுக்கு தலைகுனிவு!
ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட திமுகவும் அதிமுகவும் தலா ஒரு கோடி நிவாரண நிதி தந்திருக்கிறதாம். ஆக, face value, ஒத்தை ரூபாய்க்கும் குறைவு?!
15000 MT ஆக்சிஜனை 14 மாநிலங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறது, ஓடிசா. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!
வெளி நாட்டுக்கு ஏன் தடுப்பூசி கொடுத்தீங்க? வெளி மாநிலத்துக்கு ஏன் ஆக்சிஜன் கொடுத்தீங்க? இதெல்லாம் டம்ளர் பாதை, தனிமைப்படுத்தும் பாதை!