Sunday, December 01, 2024

வேட்டையன்


'எதற்கெடுத்தாலும் போராட்டம்' என்று மக்கள் உணர்ச்சி வசப்படுவதுதான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம்.  என்கவுண்டர், ஆசிரியை கொலை, நாட் அகாடமி எல்லாமே பேசுபொருளாவதன் பின்னணி அதுதான்

நாட் அகாடமி என்பது கோச்சிங் என்னும் பெயரில் பணத்தை சுரண்டி கொழிக்கும் நிறுவனத்தின் குறியீடு. க்யூமேத் முதல் பைஜீஸ் வரை ஏகப்பட்டவை உண்டு. நீட் தேர்வுகளை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல நீட்டை ஆதரிப்பவர்களும் கோச்சிங் செண்டர்களை எதிர்ப்பதுதான் நியாயம்

சங்கிகளின் திடீர் வெறுப்புக்கு மெக்காலே மட்டும் காரணமல்ல.  பாவம், இன்னொரு முறை ஏமாந்து போயிருக்கிறார்கள்! ஷங்கர், ரஞ்சித்தை விட அடர்த்தியான விஷயங்களை ஒரே படத்தில் கையாண்ட விதத்தில் ஞானவேல் கவனம் பெறுகிறார். வாழ்த்துகள்!

'மிஸ்டர் பப்ளிக் பிராசிக்யூட்டர்... வக்கீலாக ஆஜராகியிருக்கிறேன். இதோ வக்காலத்து'  என்று படிக்காதவனில் நடிகர் திலகம் செய்த கேரக்டரை படம் முழுவதும் செய்கிறார், அமிதாப். மனித உரிமைகள் பேசும் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, எப்படியெல்லாம் விசாரணை செய்ய முடியும், எந்தளவுக்கு காவல்துறைக்கு ஒத்தழைப்பு தரமுடியும் என்று பாடமெடுத்திருக்கிறார்கள். வழக்கமான சட்டங்களால் வளைக்கமுடியாத குற்றவாளியை எப்படி புதிய பொருளாதார குற்றச் சட்டங்களின் கீழ் வளைத்து 30 ஆண்டுகள் உள்ளே தள்ள முடியும் என்பதையும் விளக்குகிறார்கள்.

முதல் காட்சி முதல் கடைசிக் காட்சி வரை வரும் அமிதாப் காரெக்டர்தான் திரைக்கதையின் முதுகெலும்பு. கிளைமாக்ஸில் பப்ளிக் பிராசிக்யூட்டர் பணம் வாங்கிக்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராகாதபோது, ஏன் பெயில் தரக்கூடாது என்று ஒரிரு வரிகளில் புரிய வைக்கிறார். மனித உரிமைகள் பேசுபவர்களெல்லாம் அம்பேத்கர், மாவோ, மார்க்ஸ் படங்களை வைத்துக்கொண்டு சீன் காட்டும்போது வீடு முழுவதும் காந்தி படத்தை மாட்டி வைத்திருக்கிறார். ஹார்ட்டீன் விட அது போதாது? #vettaiyan

இறுக்கமான ஒரு பெண் போலீஸ் அதிகாரியே எமோஷனலாகி, ரௌடியை எட்டி உதைத்து 'கொலை செஞ்சே சரி, ஏண்டா ரேப் பண்ணினே?'  என்று கேட்பதன் பின்னணிதான் படத்தின் ஹைலைட்.  இதுதான் என்கவுண்டர், நுழைவுத்தேர்வு குளறுபடிகளைத் தாண்டிய முக்கியமான சமூக பிரச்னை. Rape has always been emotional & pervasive!  #vettaiyan

Economic Offences Wing, Buds Act இதெல்லாம் மெயின் ஸ்ட்டீரிம் கமர்ஷியல் படத்தில் சொல்லமுடியுமா?  வெற்றிகரமாக செய்து காட்டியிருக்கிறார்கள்.  பொருளாதார குற்றப்பிரிவு பெண் ஐஜிதான், போன வருஷம் ஆருத்ரா மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். அவரும் தோற்றத்தில் ரோகிணியை நினைவுபடுத்துவார் #vettaiyan

போவதும் ஒரு உயிர்தானே... என்று துஷாராவிடம் பேசும் காட்சியிலேயே ரஜினி என்கவுன்டரை முழுமையாக ஆதரிப்பவரில்லை என்பது உறுதியாகிவிடுகிறது. Justice hurried is justice buried என்பதுதான் படத்தின் ஆதாரமே ஒழிய, என்கவுன்டர் அல்ல! #vettaiyan

Sunday, January 14, 2024

பின் தொடர...

என்னுடைய தமிழ் விக்கி பக்கம் - https://tinyurl.com/yck992xp

என்னுடைய விக்கிபீடியா பக்கம் - https://tinyurl.com/dvj5b2vc

என்னுடைய வாட்ஸ்அப் சேனல்https://tinyurl.com/4kfkjpr3

என்னுடைய வலைப்பதிவு பக்கம் - http://rajniramki.blogspot.com

என்னுடைய பேஸ்புக் பக்கம்https://www.facebook.com/WriterRamkij

என்னுடைய டிவிட்டர் பக்கம்https://twitter.com/ramkij

என்னுடைய பேஸ்புக் பதிவுகள் - https://www.facebook.com/ramkij/