Wednesday, September 22, 2004

ஆட்கள் வேலை செய்கிறார்கள்!மறக்க முடியாத நான்குவழி பாதைகளின் சந்திப்பு அது. எங்க ஊர்ப்பக்கம் 'முக்கூட்டு'ன்னு சொல்வோம். வீட்டுக்கு போகிற வழியில் இருப்பதால் முச்சந்தியையும் அதில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரையும் எப்போதும் என்னால் தவிர்க்கமுடியாது. ஊருக்கு வரும்போதெல்லாம் இரண்டு வி.ஐ.பிக்கள் பிள்ளையார் கோயிலுக்கு வராமல் போவதில்லை. ஒருத்தர் விஜய டி.ராஜேந்தர். இன்னொருத்தர் ஹி...ஹி.. நான்தான்! இருபது வருஷத்துக்கு முந்தி சைக்கிளில் வந்த அப்பா மீது லாரி மோதி, கட்டைவிரலில் அடிப்பட்டதிலிருந்து நிறைய ஆக்ஸிடென்டகளை இந்த முக்கூட்டில் பார்த்திருக்கிறேன். இப்பவும் அப்பாவின் கட்டைவிரலை ஆட்டிக்காட்டும்போது பிரபுதேவாவின் டான்ஸ் ஞாபகத்துக்கு வரும். ஒரு பக்கம் மயிலாடுதுறை முனிசிபாலிட்டி, இன்னொரு பக்கம் தாலுகா ஆபிஸ், இன்னொரு பக்கம் மயிலாடுதுறை ஜெயில் என வித்தியாசமான காம்பினேஷனும் இந்த முக்கூட்டில் உண்டு. காலேஜ் போக பஸ் வர காத்திருக்கும்போதெல்லாம் ரோட்டை நன்றாக கவனித்திருக்கிறேன். நிறையபேர் காரிலிருந்தபடியே காரைக்கால் போக வழி கேட்பார்கள். இரண்டு வழியிலும் போகலாம் என்பதால் கொஞ்ச நேரம் முழித்துக்கொண்டு நிற்பேன். பெரிய அளவுக்கு டிராபிக்கெல்லாம் இருக்காது. ஆனாலும், மக்கள் ஏதோ பிள்ளையார் கோயிலையே சுத்தி சுத்தி வருவது மாதிரி இருக்கும். என்னைக் கேட்டால் மயிலாடுதுறையின் இதயமான பகுதி இதுதான்னு சொல்வேன். ஆனால், இப்போது பாதாள சாக்கடைக்காக பாதையையே பிரித்து போட்டிருக்கிறார்கள். ஆறு மாசமாக ஆட்கள் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். எப்படியும் திரும்பவும் பார்முக்கு வர ஒரு வருஷம் ஆயிடும்!முக்கூட்டில் எனக்கு புடிச்ச முக்கியமான விஷயம். ஒரு பக்கம் பிள்ளையார் கோயில், இன்னொரு பக்கம் தர்கா. இரண்டுக்குமிடையே ஒரு ரோடு. ரோட்டை காவல் காத்துக்கொண்டிருப்பது மாதிரி கையில் தடியோடு காந்தியின் சிலை!

8 comments:

 1. இந்த ப்கொடொவை நம்ப முடியல. நாங 20 வருஷம் மயவரதுல இருன்தொம். என்னொட படிப்பு எல்லம் இஙெ தான். எலெமென்டர்ய் ச்சோல், நடிஒனல் கிக்க் ச்சோல் , ஆVC Cஒல்லெகெ.
  னான் தினமும் இந்த ரொஅட் வழிய நடன்து பொஇருக்கென். அல்மொச்ட் fஒர் 15 யெஅர்ச்.

  ReplyDelete
 2. இ cஒஉல்ட் நொட் பெலிஎவெ திச் ப்கொடொ. இட் லோக்ச் ரெஅல்ல்ய் பட்.

  ReplyDelete
 3. ம் எங்காவது பொதுவான தங்கிலீசில் எப்படி எழுதுவது என ஒரு அட்டவணை கொடுக்கப்படல் வேண்டும்
  அல்லாவிட்டால் கணனியில் புதிதாக எழுதுபவர்களுக்கு குழப்பமே

  -suratha-

  ReplyDelete
 4. அனுப்புதல்: வாசன்

  நண்பர் ஜெ.ராம்கி

  இப்படி பழக்கமான,பார்த்து பல வருடங்களாகிவிட்ட இடங்களை படத்தில் நீங்கள் போட்டால்,நான் ஏதாவது எழுதியே ஆகவேண்டும் ;) பொறுத்துக் கொள்ளுங்கள்...
  ஆங்கிலத்தில் சொல்கிற nostalgia வம்பு பண்ணுகிறது..
  ஏக்கத்தைத் தருகிறது..

  பலியாடு மாதரி மாப்பிள்ளை அழைப்பில் வந்து இந்த
  கோவில் முன்தான் கீழிறக்கப்பட்டேன்!!!

  மனைவியிடம் கோவில் படத்தை காண்பித்தேன்.மகிழ்ச்சி
  அவருக்கு.பக்கத்தில் ஆர்.பி.என் நகரில் அவருடைய பெற்றோர் உள்ளார்கள்..முடிந்தால்,உறவினர் பெயரில் அங்கொரு வீடு கட்ட
  நினைத்துள்ளேன்..

  மனைவியின் தந்தையை பார்த்து,மொபெட் ஐ ஓட்ட சொல்ல வேண்டும்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 5. நன்றி சுரதா ஸார், பத்ரியின் பக்கத்தை காப்பியடித்திருக்கிறேன். கூடவே ஆங்கிலத்திலோ அல்லது தமிங்கலீஷிலோ கொடுத்துவிடுகிறேன்.

  நன்றி வாசன் ஸார். இப்போது சரியாக இருக்கமென்று நினைக்கிறேன். மாப்பிள்ளை அழைப்பு களேபரமெல்லாம் இங்கேதானா? எந்த கல்யாண மண்டபம்? இப்போதெல்லாம் பட்டமங்கலத் தெருவில் கல்யாண மண்டபமாய் நிரம்பி வழிகிறது. இன்னும் நிறைய எக்ஸ்குளூசிவ் மயிலாடுதுறை மேட்டர் வர இருக்கிறது...! மத்த ஊர்க்காரங்க பல்லை கடிக்கிறாங்க பாருங்க..!

  ReplyDelete
 6. ரஜினி தமிழில் நடிப்பதற்குத் தடை ? :-))

  ----------http://www.deccanherald.com/deccanherald/sep242004/i8.asp

  On the proposed ban on Kannada artists in other language films, Mr Patil said that nobody can impose any kind of ban on an artiste.

  “If at all they do it, many of the top actors and actresses, including Rajnikanth and Aishwarya Rai, may have to stop acting in other language movies and have to confine themselves to Kannada,” he stated
  ----------

  Kumar V

  ReplyDelete
 7. அனுப்புதல்: வாசன்

  வலையில் பதிய வாய்ப்புகள்-நேரம் இல்லாமல்,மேலெழுந்தவாரியாக மேய்ந்த போது,பிறந்த ஊர் பக்கம் பற்றிய செய்தி பற்றி படித்துவிட்டு பதிலெழுதாமலிருக்க முடியவில்லை ;) ஆகவே என்னுடைய இந்த பதிலும்!
  பல்லைக் கடிக்கிறவர்கள் கடிக்கட்டும் ;)

  நெறைய எழுதுங்க மாயவரம் & சுற்றுபுறம் பற்றி.சுவராசியமாக இருக்கும்.

  வரலாற்று கதைகளில் சிறந்த மூவரான கல்கி,சாண்டில்யன் & ஜெகசிற்பியன் பற்றி எழுதலாம்.

  சாரங்கபாணி மேம்பாலம் பெயர் எப்படி வந்தது என்பதைப் பற்றி நீங்கள் சொல்லலாம்..

  வேறு எந்த ஊரிலும் இல்லாத "கறார்" துணிக்கடை பற்றி எழுதலாம்.கல்லாவில் உட்கார்ந்திருக்கும் வடகரை பாய்-ஐ பார்த்து பொடியனாய் நான் பயந்ததுண்டு..குறைத்து விலையை கேட்டால் துணி அளக்கும் கோலால் கையில் ஒன்று போட்டாலும் போடுவார் என்று..

  அப்புறம்,
  எமக்கு மூக்கணாங்கயிறு கட்டப்பட்டது அ.வ.கொ?( avc new) திருமண மண்டபத்தில்.

  ReplyDelete