Monday, October 18, 2004

மவுண்ட் ரோட்டில் ஒரு மழைக்காலம்!

இப்போதைக்கு என்னோட பேராசை, பெரிய லட்சியம், குறிக்கோள் எல்லாமே நடுஹாலில் நாலு தடவை அங்கப்பிரதட்சணம் செய்றதுதான். ஒருக்களித்து படுத்து ஒரு மாசமாகப்போகிறது. கையை பதினாறு வயதினிலே சப்பாணி ஸ்டைலில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதுதான் பத்துநாள் வரைக்கும் பழக்கமாக இருந்தது. போன மாதம் ஒரு சுபயோக தினத்தில், எமகண்ட நேரத்தில், ஆபீஸ் போகும் அவசரத்தில் ஜீட் விட்ட ரூம்மேட்டை மெனக்கெட்டு செல்லடித்து வரவழைத்து டூவீலரில் ஏறிக்கொண்டு மழையின் புண்ணியத்தால் வழுவழுன்னு இருந்த மவுண்ட் ரோட்டில் சடாரென்ற பிரேக்கினால் பேலன்ஸ் தடுமாறி இரண்டடி தூரம் சறுக்கியபடியே பயணித்து பின்னர் குப்புற விழுந்து ரோட்டுக்கு ரத்த தானம் பண்ணியது ஏதோ நேற்று நடந்தது போலத்தான் இருக்கிறது. அவசரமாய் பிரேக் அடிக்க காரணமாக இருந்து இப்படியொரு சம்பவம் நடந்தைப்பற்றி தெரிந்து கொள்ளாமலே வேகமாய் முன்னால் போய்விட்ட அந்த ஸ்கூட்டர்காரனை விடுங்கள். தலைக்குப்புற விழுந்தும் சொற்ப காயங்களோடு தப்பித்துக்கொண்ட ரூம்மேட்டும், சின்ன கீறல் கூட விழு¡த டூவீலரும் ஆச்சர்யங்கள் என்றால் கைத்தாங்கலாய் அழைத்துப்போய் தண்ணீர் கொடுத்த அந்த கடைக்காரர்தான் சென்னை மழையைவிட ஆச்சர்யமான அதிசயம்.

அடிபட்ட அதிர்ச்சியில் கண்ணை மூடிக்கொண்டு ரோட்டை கிராஸ் பண்ணியதால் யாரோ உதிர்த்த சென்னையில் பிரபல கெட்ட வார்த்தையை உதாசீனப்படுத்திவிட்டு கிழிந்த சட்டையை கழட்டி பார்த்தபின்புதான் தெரிந்தது, ஓமக்குச்சி மாதிரியிருந்த புஜம், சரத்குமார் சைஸ¥க்கு கும்மென்று வந்திருந்தது. இடது கையின் உதவியோடுதான் வலதுகையை தூக்கமுடியும் என்கிற நிலைமையை பார்ததும் இனி முள்ளும் மலரும் காளியின் கதிதான் என்கிற முடிவுக்கே வந்துவிட்டேன். போக் ரோடு, மலர் ஆஸ்பிடல், மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு என பல இடங்களில் குடிகொண்டிருக்கும் ஆர்த்தோக்களுக்கு மொய் வைத்து ஒரு வழியாக 'இழந்த சொர்க்கம்' மீண்டுவருகிறது. மாவுக்கட்டு, வெந்நீர் ஒத்தடம், எலெக்ட்ரிக் ஷாக் என்று தொடர் தாக்குதலில் வலதுகை புஜம், ஓமக்குச்சியைவிட மோசமான நிலைக்கு வந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் ·புல் ·பார்முக்கு வந்துடலாம்னுதான் தோணுது. செம்மொழிக்கு பாடுபட்ட கலைஞர், தங்கத்தாரகை முதல்வர், வைகோ வேணாம்னு சொல்லும் உயிர்மை தலையங்கம், புத்தகக்கடையை பலசரக்கு கடையாக்கிய குங்குமம்னு எழுதறதுக்கு மேட்டர் இருந்தும் எழுத முடியாம மனசு ஹீட்டா இருக்குது. இதோ, பொதுவாழ்க்கைக்கு திரும்பவும் வந்துட்டே இருக்கேன்!

14 comments:

 1. Sorry to know about the accident. Glad nothing serious. Get Well soon. My best wishes for the same. Regards, PK Sivakumar

  ReplyDelete
 2. அட, அதுவா விஷயம். நான் கூட யாரோ பெரியவங்களோட ஆளுக தான் அடிச்சிப்போட்டுட்டாங்கன்னு அல்ல நினச்சேன்.:-))

  சீக்கிரம் எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்ப வாழ்த்துக்கள்!
  -காசி

  ReplyDelete
 3. பரிபூரணமாக குணமடைந்து விட்டதா? சுஜாதாவின் சிகிச்சைகள் மாதிரி விவரமாக கொடுத்தால் 'தேறிவிட்டதாக' அறிந்து கொள்வோம் :-)
  -பாலா சுப்ரா

  ReplyDelete
 4. நெஞ்சம் பதறுகிறது. தலை கிறுகிறுக்கிறது. கை கால்கள் வெட வெட வென்று ஆடுகின்றன. புறநானூற்றுப் புலி, அகநாநூற்று மயில், என் தம்பி ராமகிருஷணன் கை எலும்புகள் உடைந்தது கேட்டு. மாற்றார் புகழுக்கு சாமரம் வீசுபவராயினும், நூறாண்டு கேட்டுப் புளித்துப்போன வார்த்தையை சமீப காலங்களில் கரும்பரின் பின்னூட்டத்தில் உபயோகித்து சிந்து பாடியிருந்தாலும், சீரங்கம் தந்த சிங்கம் இப்படி நம் அண்ணா சாலையில் விழுந்து அடிபடுவதைப் பார்த்து அண்ணாவின் ஆவியே கண்ணீர் சிந்தும்.
  தம்பி...வா...எங்களை எள்ளி நகையாடவாவது திரும்பி வா...

  ( ஹி..ஹி..சும்மா...தமாசு...உடம்ப பாத்துகங்க ராம்கி. ...)

  ReplyDelete
 5. சீக்கிரமா குணமாகி வர வாழ்த்துக்கள் (உண்மையை சொல்லுங்க சார்...யாரோட 'ஆட்டோ' வந்திச்சு?!)

  ReplyDelete
 6. இன்னா ராம்கி.... தெரியாத பூட்சே... இப்ப எப்ப்டி கீது? மருந்து மாத்திரை ஒயுங்கா சாப்பிடு..கூடவே தில்லுமுல்லு படத்தை நாளைக்கு ரெண்டு தபா வீசிடிலே பாரு... பூண்டு ரசம் குட்ச மேரி ஒடம்பு சும்மா கல கலன்னு ஆயிடும்.. /பிரகாஷ்

  ReplyDelete
 7. ஹெல்மெட் போட்டுக்கினு வுயுந்தியோ? போடாம வுயுந்தியோ தெர்யாது.
  ஆனா, இனிமே மவனே நீ தலைக்கவசம் இல்லாமே வண்டி மேல குந்தினியோ!
  பேட்டா, கால ஒட்சிடுவேன்.

  ReplyDelete
 8. உடல் நலம் பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. வல(துகை)ப்பா
  --------------
  ஜாவா நிரலெழுதி ஜம்மென்று நின்றனை
  சாவாக் குரலெழுப்பச் சோதனையா? -வாவா
  வலக்கையே வாராய் வலையுலவ, சைதைத்
  திலகமிட்டு உன்னுலகம் காட்டு

  க்ருபா

  ReplyDelete
 10. ராம்கி விரைவில்
  செம்மொழிக்கு பாடுபட்ட கலைஞர், தங்கத்தாரகை முதல்வர்,
  வைகோ வேணாம்னு சொல்லும் உயிர்மை தலையங்கம், புத்தகக்கடையை பலசரக்கு கடையாக்கிய குங்குமம்னு
  எதிர்பார்க்கிறோம்.

  அடுத்த ஆட்டோ வரதுக்குள்ள எழுதிடுப்பா.

  ReplyDelete
 11. இவ்வளவு சுலபமா தமிழில் தட்டச்சு அடிப்பது?

  ReplyDelete
 12. ஓ! :(
  சீக்கிரமே குணமடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. குரங்கு கையில் பூமாலை போல் குரங்கு கையில் வெப் சைட்...தூள் கிளப்பிவிட்டீர்கள்...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. குரங்கு கையில் பூமாலை போல் குரங்கு கையில் வெப் சைட்...தூள் கிளப்பிவிட்டீர்கள்...சொர்க்கத்திற்கு மீண்டு வந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...Gayathri, T.Nagar, Chennai.

  ReplyDelete