
கல்பாக்கம் அணுமின் நிலைய உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு க¨யோர மாவட்டங்களில் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது.

தனுஷ்கோடியும் அதனைச் சுற்றியுள்ள சிறு தீவுகளும் தகவல் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த போதுமான விபரங்கள் இல்லை.
கடற்கரையோர மாவட்டங்களில் ஜெயலலிதா, மணிசங்கர் அய்யர் சுற்றுப்பயணம். சிவராஜ் பாட்டீல், அத்வானி சென்னை வருகை.

அந்தமான் நிகோபர் உள்ளிட்ட தீவுகளின் தகவல்தொடர்பு தொடர்ந்து துண்டிப்பு. இலங்கையில் 6000 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்.
நாகப்பட்டினம், வேளாங்கண்ணி பகுதியிலிருந்த மீனவர் குப்பங்கள் அடையாளம் தெரியாத வகையில் சிதைவு.
காரைக்கால் கடற்கரையோர பகுதிகளில் மீட்புநடவடிக்கைகளுக்கு ஆளில்லை. மீனவர் அமைப்புகளும், ரசிகர்மன்றங்களும் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.
புதிதாக கட்டப்பட்டிருக்கும் நாகை மேம்பாலம் சேதம். வாகனங்கள் ஊருக்குள் நுழைய முடியாத நிலை.
கன்னியாகுமரியில் சாமி கும்பிட வந்த ஐயப்ப பக்தர்கள் 12 பேரை காணவில்லை.

சென்னையையும் பாண்டிச்சேரியையும் இணைக்கும் கடற்கரையோர சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
நாகை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 1000 பேர். அதில் பாதிப் பேர் வேளாங்கண்ணியை சேர்ந்தவர்கள்.
தரங்கம்பாடி கோட்டைக்கு அருகிலிருக்கும் குட்டையிலிருந்து 15 உடல்கள் மீட்பு. கரையோரத்திலிருந்த கல்லறைகள் சேதம்.

அரசு மீட்பு நடவடிக்கைகளில் மந்தம். நாகை அரசு மருத்துவமனையில் 150 அடையாளம் காணப்படாத உடல்கள் அடுக்கி வைப்பு. மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, அடையாளம் காணப்பட்ட உடல்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.