Tuesday, December 28, 2004

ஒரு வேண்டுகோள்

மேலையூர், திருவங்காடு உள்ளிட்ட பூம்புகாருக்கும் தரங்கம்பாடிக்கும் இடைப்பட்ட கடற்கரையோர கிராமங்களில் உணவு, உடையின்றி மக்கள் தவிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை அன்பர்களிடமிருந்து பழைய துணிகளை சேகரித்துக்கொண்டு வியாழன் இரவு மயிலாடுதுறை செல்லலாம் என்றிருக்கிறேன்.

பழைய துணிகளை வைத்திருக்கும் அன்பர்கள் எனது சைதாப்பேட்டை இல்லத்தில் வந்து கொடுத்தால் செளகரியமாக இருக்கும். முடியாதவர்கள் என்னை செல்போனில் அழைத்தால் அவர்களது இடத்துக்கே வந்து வாங்கிக்கொள்கிறேன்.

வெளிநாட்டு அன்பர்கள் இங்கிருக்கும் உள்ளூர் அன்பர்களை தொடர்புகொண்டு இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கோர கேட்டுக்கொள்கிறேன். பழைய துணிகளை வியாழன் மாலைக்குள் எனக்கு கிடைக்கும்படி செய்யவும்.

எனது முகவரி

ராம்கி, புது எண் 100 பழைய எண் 50, நாகா மெடிக்கல்ஸ் மாடி, இரண்டாவது தளம், ஜோன்ஸ் ரோடு,
சைதாப்பேட்டை, சென்னை - 15.

எனது செல் நம்பர்
நிதியுதவி செய்ய விரும்பும் அன்பர்களுக்காக எனது ICICI வங்கி கணக்கு விபரங்களை கொடுத்துள்ளேன். டெபாசிட் செய்ததும் விபரங்களை தயவு செய்து எனக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கவும்

4 comments:

  1. நண்றி ராம்கி, கேட்டதும் போட்டுட்டீங்களே, பழைய துணி இப்போது எங்களை போலாலாரால் முடியாது. பண உதவி மட்டுமே செய்ய முடியும். உங்கள் ஆராக்கியத்திலும் கவனமாய் இருங்கள்
    உஷா

    ReplyDelete
  2. கண்கள் பனிக்கின்றன.நன்றி ராம்கி.நீங்கள் கொடுத்துள்ள தகவல்களை பயன்படுத்தி என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்.

    (சிறுபிள்ளைத்தனமாய் இருக்கலாம்,கேட்காமலிருக்க முடியவில்லை)

    திருவெண்காட்டிற்கு அருகே இலையமுதுகூடம் (சொந்த ஊர்)எனும் சிற்றூர் உள்ளது.அங்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி ஏதேனும் தெரிந்தால் முடிந்தபோது தெரியப்படுத்துங்கள்.நன்றி.

    வாசன்
    vaasus அட் ஜிமெயில் காம்

    ReplyDelete
  3. வாசன் ஸார்,

    மயிலாடுதுறையிலிருக்கும் எனது நண்பர்களை தொடர்பு கொண்டு இளையமதுக்குடம் பற்றி விசாரித்தேன். இளையமதுக்குடத்தில் கடலோரம் இருந்த மீனவர் குப்பங்கள் அடியோடு அழிந்துவிட்டன. பெரும்பாலான மீனவ குடும்பங்களை காணவில்லை. சடலங்களை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கிராமத்தின் மற்ற பகுதிகளுக்கு பாதிப்பில்லை. பீதியின் காரணமாக பெரும்பாலான பெண்கள், குழந்தைகள் சீர்காழி, பூம்புகார் போன்ற பகுதிகளில் தங்கியிருப்பதாக சொல்கிறார்கள். இவ்வார இறுதியில் நேரில் சென்று பார்த்து நிலைமையை விரிவாக எழுதுகிறேன்.

    ReplyDelete
  4. னல்ல இருக்கு. எனக்கு ரொம்ப புடிசிருக்கு.

    ReplyDelete