Monday, December 20, 2004

பெரியாரும் தமிழிசையும்

"தமிழன் தான் நுகரும் இசையை, ‘தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதைத் தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு’ என்கின்றான். அதை யார்தான் ஆகட்டும், ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூறவேண்டும் என்று கேட்கிறேன். அதிலும் தமிழன் இப்படிக் கேட்பதை - தமிழனால் தமிழனல்லாதவன் என்று கருதப்பட்டவன், ஏன் மறுக்க வேண்டும்? இது மிக மிக அதிகமானதும், தமிழனால் மிக மிக வருந்தத்தக்கதுமாகும்.

தமிழன் - தமிழ் மக்கள், தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பணம் கொடுப்பவன் , தனக்குத் தமிழ்ப்பாட்டுப் பாடப்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறான்; பாட்டுக்கேட்பவன் தமிழில் பாட்டுப் பாடவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாதார் அதை மறுக்கவே, குறைகூறவோ குற்றம் சொல்லவோ எப்படி உரிமையுடையவர்கள் என்று கேட்கிறேன்.

‘தமிழரென்றும், தமிழரல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக்கூடாது’ என்பதா கத் தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்களே, ‘தமிழில் பாடவேண்டும் என்பது பொது நலத்துக்குக் கேடு, கலைக்குக் கேடு, கலைநலத்துக்குக் கேடு’ என்று சொல்லவந்தால் - இவர்கள் உண்மையில் தமிழர்- தமிழரல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்பவர்களாக, அல்லது நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யும்படியான மாதிரியில் வளரச் செய்பவர்களா என்று கேட்கிறேன். அன்றியும், இப்படிப்பட்ட இவர்கள் தங்களைத் தமிழர்களென்று சொல்லிக்கொள்ளக்கூடுமா? தமிழில் பாடினால் இசை கெட்டுப்போகும் என்றால், மேற்கூறிய தமிழர் அல்லாத தோழர்களைவிட இராஜா சர்.அண்ணாமலை செட்டியார், சர்.சண்முகம் செட்டியார் போன்றவர்கள் குறைந்த அளவு கலை அறிவோ பொது அறிவோ உடையவர்கள் என்பது இவர்கள் எண்ணமா என்று கேட்கிறேன்.

காது, கண், மனம் ஆகியவை எல்லா விஷயங்களுக்கும் எல்லோருக்கும் ஒன்றுபோல் இருக்க முடியாது என்பது அறிஞர் ஒப்பமுடிந்த விஷயமாகும்.
‘தமிழில் பாடு!’ என்றால், சிலர் - அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே , ‘தமிழ் இசை இயக்கம்’ வகுப்புத் துவேஷத்தையும் உண்டு பண்ணக்கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆக வேண்டியதாய் விட்டது.


அறிஞர்களே! நமக்குப் பாட்டுக் கேட்கக்கூடத் தெரியாது என்றும், நம் மொழியானது பாட்டு இசைக்கக்கூடப் பயன் படாது என்றும் சொன்னால், இந்த இழிமொழி - நம் உயிரைப் போயல்லவா கவ்வுகிறதாயிருக்கிறது என்று மிக்க வேத னையோடு கூறுகிறேன். தமிழ்த் துரோகத்தால் வாழவேண்டியவ னும், வள்ளுவர் சொன்னதுபோல் - ‘குலத்திலே அய்யப்பட வேண்டி யவனுமான தமிழ் மகன்களுக்கு, இது எப்படி இருந்தாலும் அவர்களது வாழ்வும் நம் எதிரிகளின் புகழுமே அவர்களுக்கு அணியாகவும் அலங்காரமாகவும் முக்கிய இலட்சியமாகவும் இருக்கும்.

தமிழிசை முயற்சி அல்லது கிளர்ச்சி என்றால் என்ன? தமிழ்நாட்டில் தமிழர்கள் இடையில் இசைத் தொழில் வாழ்க்கை நடத்தவோ அல்லது பொருள் திரட்ட ஒரு வியாபார முறையாகவோ கொண்டுள்ள இசைத் தொழிலாளி அல்லது இசை வியாபாரியை இந்த நாட்டானும் பொருள் கொடுப்பவனும் இசையை அனுபவிப்பவனுமானவன், ‘இசை என் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணம் இருக்கவேண்டும்’ என்று சொல்லி விரும்புவதேயாகும். இதில் எவ்வித விவாதமோ, வெறுப்போ ஏற்படச் சிறிதும் இட மில்லை. இந்த முயற்சியும், கிளர்ச்சியும், இத்தனை நாள் பொறுத்து ஏற்பட்டதேன் என்பது தான் அதிசயிக்கத்தக்கதாகும். அன்றியும் எங்களுக்கு இப்படிப்பட்ட இசைச் சரக்குதான் இருக்கவேண்டும் என்று, கொள்வோரும் நுகர்வோரும் கேட்டால் அதைத் தர்க்கித்து ‘நீ இதைத்தான் கொள்ள வேண் டும்’ என்று சொல்லுவது இசைப் பிழைப்பாரின் ஆதிக்கத்தையும், இசை வியாபாரியின் ஆதிக்கத் தையும்-கொள்வோரின் இழிதன்மையையும், வலிவற்ற, மானமற்ற தன்மையையும் காட்டும் அறிகுறியாகும்"

பெரியார். நன்றி - உண்மை மாத இதழ்

விடை தெரியாத சில கேள்விகள் :-

பெரியார், தமிழிசையை ஆதரிக்க காரணம் தமிழ்ப்பற்றா? பிராமண எதிர்ப்பா?

தமிழ் பற்றி பேசும்போதெல்லாம் வெங்காயத்தை கூப்பிட்ட பெரியாருக்கு தமிழ்ப்பற்று உண்மையிலேயே உண்டா, இல்லையா?

தமிழிசையை வளர்க்கவேண்டுமென்றால் முதலில் கர்நாடக இசையின் ஆதிக்கத்தை ஒழித்தாகவேண்டுமா?

14 comments:

 1. ŢʠŢÊ «Á÷ì¸Çõ À¼õ À¡òÐðÎ, Å¢Êﺡ «ƒ¢òÐìÌ «ì¸¡ „¡Ä¢É¢ ¦º¡øÈ¡ôÀÄýÛ, §¸.Å¢.¬÷ ´Õ ¾Ãõ ¦º¡ýÉ¡÷. ¦¸¡ïº ¿¡Ç¡ ÌØì¸û, ŨÄôÀ¾¢×¸û Àì¸õ ±øÄ¡õ ¿£í¸ ÅÃĢ¡? þÕì¸ðÎõ. þó¾ô ¦Àâ¡÷ §Áð¼¨Ãô ¦À¡Úò¾Å¨ÃìÌõ, ±ÉìÌ ºðÎýÛ ÒâïºÐ ´ñ§½ ´ñϾ¡ý. ®.¦Å.á, ¿¢¨È ¦º¡øÄ¢ þÕ측÷. ±øÄ¡ò¨¾ô Àò¾¢Ôõ «À¢ôáÂõ ¦º¡øÄ¢ þÕ측÷. §ÅÏí¸ÈÅí¸, «Å÷ ¦º¡ýɨ¾, ±ó¾î ºó¾÷ôÀòÐìÌô ¦À¡Õò¾§Á¡ «ó¾ Ũ¸Â¢§Ä ÀÂý ÀÎò¾¢ì¸È¡í¸. ¸¡ðÎÁ¢Ã¡ñÊ À¡¨„ýÛ ¦º¡ýɨ¾, ÐìÇì ¯À§Â¡¸ô ÀÎò¾¢ìÌÐýÉ¡, À¢Ã¡Á½ ±¾¢÷ô¨À, Ţξ¨ÄÔõ ¯ñ¨ÁÔõ ÀÂýÀÎò¾¢ìÌÐ. emancipation ±øÄ¡õ , ´Õò¾Õ¨¼Â §À¡¾¨É¢§ÄóÐõ, §ÀîÍì¸Ç¢§Ä÷óÐõ ÅÕõÛ ¿¡ý ¿õÀȾ¢ø¨Ä. «Ð ¦ºö¨¸Â¢É¡ø ÅÕÅÐ. ±øÄ¡Õõ ¯ôÒ ±Îí¸ýÛ ¦º¡øøÄ¢ðÎ, ¬º¢ÃÁòÐ§Ä ¯ì¸¡óÐ ¦ÃŠð ±ÎòÐ츢𼡠þÕó¾¡÷ ? ¨¸Â¢§Ä ¾Ê§Â¡¼, ¦Á¡¾ ¬Ç¡ ´Õ ¾¡ò¾¡ §À¡É¡Ã¢ø¨Ä¡? «Å¨Ãô §À¡Ä hands-on ¬ð¸û ¾¡ý §ÅÏõ. «Å¨Ãô §À¡ö ÀÊí¸ º¡Á¢. þýÛõ ¾¡Ê측èç ÒÊîÍ ¦¾¡í¸¢ðÎ þÕ측¾£í¸

  ReplyDelete
 2. அன்புள்ள ரஜினிராம்கி,

  எதோ எனக்கு இப்போது தோன்றுகின்ற பதிலை தருகிறேன். முதலில் எதற்கு இந்த கேள்விகள், பெரியார் சொன்னவற்றிற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்க வேண்டும். அவர் சொன்ன விஷயங்கள் குறித்தல்லவா விமர்சனபூர்வமாய் கேள்வி எழுப்பவேண்டும். அதுதானே இய்ல்பு. அதை விட்டு இப்படி வேறு கேள்வி எழுவதன் உளவியல் குறித்து முதலில் யோசித்து கொள்ளவேண்டும். அவர் என்ன நோக்கதிற்காக சொல்லியிருப்பார் என்பது குறித்து, அவர் கருத்தின் பொருத்தப்பாட்டை யோசித்தபின்புதானே கேட்கமுடியும். அது கிடக்கட்டும், என் பதிலுக்க வருகிறேன்.

  1. /பெரியார், தமிழிசையை ஆதரிக்க காரணம் தமிழ்ப்பற்றா? பிராமண எதிர்ப்பா?/
  அடுத்து நீங்கள் ரஜினி படங்களை தெலுங்கில் பார்காமல், தமிழில் பார்பது குறித்து என்ன காரணம் என்று யோசியுங்கள். பெரியார் தனக்கு மிகவும் நெருங்கிய மொழிமீது இயற்கையாய் இருக்ககூடிய பற்றைவிட அதிகமாய் எதையும் வைத்து மேலே உள்ள எதையும் சொல்லவில்லை.

  பெரியார், பலமுறை சொன்னதுப்போல்,அவருக்கு 'சமுதாய பற்று'தான் முக்கியமே ஒழிய மற்றது அல்ல. அவரது ஆரம்ப காலகட்ட பிரச்சாரங்களில், தமிழ் குறித்து பேசியிருந்தாலும், நீங்கள் சொல்வது போல், அதன் அடிப்படை பார்பன ஆதிக்க எதிர்புதான். அதை பிராமண எதிர்பு என்று மொட்டையாக கூற உங்களுக்கு காரணம் பல இருக்கலாம். காலம் காலமாய் தழைத்து வந்த தமிழிசை, சில நூற்றாண்டுகளாய், தமிழ் இசைக்கு உகந்ததல்ல என்று ஒரு உளவியலை சமுதாயத்தில் ஏற்றியும், அது குறித்து கேள்வி எழுப்ப ஒரு நாதிகூட இல்லாத அளவிற்கு (இன்றுகூட எந்த அளவிற்கு என்றால், தமிழ் வானொலியில் 90% ஆதிக்கமும், தமிழ் தலைநகரில் பிரம்மாண்டமாய் நிகழும், டிசம்பர் சீசனில் 99.99% ஆதிக்கமும், ஒரு பக்கத்து மாநில மொழி ஆதிக்கம் செய்வது குறித்து இயற்கையாய் எழும் கேள்விகளுக்கு புண்ணாக்கு காரணமா, புளியங்கா காரணமா, என்று ரஜினி ராம்கி கேள்வி எழுப்பும் அளவிற்கு) இருக்கும் நிலைக்கு காரணமாய் பெரியார் நினைத்த பார்பனிய எதிர்புதான் அவரது பல நடவடிக்கைகளின் அடிப்படை. பெரியார் எல்லா அடிப்படைவாதத்தையும் எதிர்த்ததுபோல மொழி அடிப்படைவாதத்தையும் எதிர்த்தார்.அதை வைத்து அவரை தமிழ் எதிரி என்று சொல்லும் தமிழ்தேசிய அடிப்படைவாதிகளிடம் நேர்மை இருக்கலாம். மற்றவர்கள் அப்படி போடும் வாதங்களில் கபடம் மட்டுமே உள்ளது.

  2./தமிழ் பற்றி பேசும்போதெல்லாம் வெங்காயத்தை கூப்பிட்ட பெரியாருக்கு தமிழ்ப்பற்று உண்மையிலேயே உண்டா, இல்லையா?/

  தமிழ் பற்றி பேசும்போது ஒரு முறைகூட அவர் வெங்காயத்தை கூப்பிட்டது கிடையாது. ஆரம்ப காலங்களில் தமிழின் தொன்மை, அதன் வழி கல்வியின் முக்கியத்துவம், இதை பற்றியெல்லாம் வண்டி வண்டியாய் பேசியுள்ளார். குறள் குறித்து (நேர்மறையாய்) அவர் எழுதிய கட்டுரைகள் கணக்கில் அடங்காது. பிற்காலத்தில் திமுகவும், இன்னபிற தமிழ் பற்றாளர்களும் தமிழ் பற்றை அடிப்படைவாதமாய் (அதுவும் காமராஜருக்கு எதிராய்) மாற்றியபோதுதான் தமிழை காட்டுமிராண்டி காலத்து மொழி என்று கூறினார். புராதனம் என்பதையே ஒரு பெருமையாய் (அதாவது முதல் குரங்கு தமிழ் குரங்கு என்று பெருமை கொள்வதுபோல்) கற்பித்து கொண்டிருந்த போது, புராதனம் என்பது நவீனத்திற்கு முந்தயது,அதிபுராதனம் காட்டுமிராண்டிதனம் அன்றி வேறில்லை என்பதை நினைவூட்டும் வகையில் சொன்னார்.

  3./தமிழிசையை வளர்க்கவேண்டுமென்றால் முதலில் கர்நாடக இசையின் ஆதிக்கத்தை ஒழித்தாகவேண்டுமா?/

  ஒரு சிக்கலான பிரச்சனை குறித்து இப்படி மொட்டையான கேள்விகள் எழுப்பினால் அபத்தமான பதில்களை தவிர வேறு எதையும் வந்தடைய முடியாது. கர்நாடக இசை என்று பரிமாணம் அடைந்துள்ள ஒன்று நடைமுறையில் தமிழை இழிவாக கற்பிக்கின்றதா, தமிழிசைக்கு எதிராக இருக்கின்றாதா என்று கேட்டால், சந்தேகமில்லாமல் ஆமாம் என்றுதான் சொல்லமுடியும். இதற்காக் அதை அழிக்க வேண்டுமா என்றால், அப்படித்தான் பலர் தட்டையாய் எடுத்துகொள்ளகூடும். இதற்கு உண்மையில் நேரடியான பதில் இல்லை. சில அபிஷ்டுக்கள் கர்நாடக இசையை காப்பாற்றுகிறேன் என்று மேற்கண்ட உண்மையை மறைக்க அல்லது திரிக்க முயலுகின்றனர். அவர்களது கபடத்தனத்தை மட்டும் வைத்து, ஏகப்பட்ட வளங்களை உடைய, பரிமாண வளர்சி அடைந்துள்ள, கர்நாடக இசையை முழுவதும் நிராகரிப்பது அபத்தம் என்றே நான் நினைக்கிறேன். பிரச்சனையை எப்படி அணுகுவது என்பது சிக்கலான விஷயம். இளயராஜா ஒரு வழி தந்தார். அது குறித்தும் பிற விஷயங்கள் குறித்து என் கருத்தை என் தளத்தில் பிறகு எழுதுகிறேன்

  யாருக்கேனும் உதவகூடும் என்று இதை எழுதியுள்ளேன். மீதி ரோஸ்திரையில்.

  ReplyDelete
 3. சென்ற கமெண்டை எழுதியது நாந்தான்.
  /«Å¨Ãô §À¡ö ÀÊí¸ º¡Á¢. þýÛõ ¾¡Ê측èç ÒÊîÍ ¦¾¡í¸¢ðÎ þÕ측¾£í¸/

  இகாரபிரகாஸம் என்ன அற்புதமான கருத்துக்கள். பெரியார் எதிர்மறையாகவது பலகாலம் பேசப்படுவார். தாத்தா ட்ரேட் மார்க் லெவலை தாண்டுவது கஷ்டம்.

  ReplyDelete
 4. Prakash :-

  விடிய விடிய அமர்க்களம் படம் பாத்துட்டு, விடிஞ்சா அஜித்துக்கு அக்கா ஷாலினி சொல்றாப்பலன்னு, கே.வி.ஆர் ஒரு தரம் சொன்னார். கொஞ்ச நாளா குழுக்கள், வலைப்பதிவுகள் பக்கம் எல்லாம் நீங்க வரலியா? இருக்கட்டும். இந்தப் பெரியார் மேட்டரைப் பொறுத்தவரைக்கும், எனக்கு சட்டுன்னு புரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான். ஈ.வெ.ரா, நிறைய சொல்லி இருக்கார். எல்லாத்தைப் பத்தியும் அபிப்ராயம் சொல்லி இருக்கார். வேணுங்கறவங்க, அவர் சொன்னதை, எந்தச் சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமோ அந்த வகையிலே பயன் படுத்திக்கறாங்க. காட்டுமிராண்டி பாஷைன்னு சொன்னதை, துக்ளக் உபயோகப் படுத்திக்குதுன்னா, பிராமண எதிர்ப்பை, விடுதலையும் உண்மையும் பயன்படுத்திக்குது. emancipation எல்லாம் , ஒருத்தருடைய போதனையிலேந்தும், பேச்சுக்களிலேர்ந்தும் வரும்னு நான் நம்பறதில்லை. அது செய்கையினால் வருவது. எல்லாரும் உப்பு எடுங்கன்னு சொல்ல்லிட்டு, ஆசிரமத்துலே உக்காந்து ரெஸ்ட் எடுத்துக்கிட்டா இருந்தார் ? கையிலே தடியோட, மொத ஆளா ஒரு தாத்தா போனாரில்லையா? அவரைப் போல hands-on ஆட்கள் தான் வேணும். அவரைப் போய் படிங்க சாமி. இன்னும் தாடிக்காரரையே புடிச்சு தொங்கிட்டு இருக்காதீங்க

  ReplyDelete
 5. நன்றி பிரகாஷ், ரோஸா வஸந்த்.

  இது பெரியார் பற்றிய எனது விமர்சனமல்ல. தமிழிசை பற்றிய அவரது கருத்துக்களும் எனது கேள்விகளும் மட்டும்தான். பெரியார் பற்றிய கேள்விகளுக்கு ரஜினியை இழுத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றெல்லாம் சின்ன குழந்தை மாதிரி சொல்லமாட்டேன். அதெல்லாம் அரசியல்ல சகஜம்!

  சரி விஷயத்திற்கு வருவோம். பெரியாரும், திராவிட இயக்க தலைவர்கள் போலவே சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசிவந்தவர் என்கிற விஷயம், பெரியார் பற்றி நான் வைத்திருந்த இமேஜீக்கு கொஞ்சம் பின்னடைவுதான்.
  மொழிப்பற்றையெல்லாம் வெங்காயம் என்று அவர் விமர்சித்ததாகவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எத்தனையோ நல்ல விஷயங்களை செய்திருந்தாலும் பெரியார் செய்ததிலேயே பெரிய விஷயமா நான் நினைத்தது மொழி வெறியை அவர் துணிச்சலாக விமர்சித்ததுதான். அப்படியெல்லாம் பெரியார் விமர்சிக்கவில்லை என்று யாராவது நிரூபித்தால் மிகுந்த ஏமாற்றத்துக்குரியவனாகிவிடுவேன்.

  எனது கேள்வியின் மையப்பொருளே, கடவுள் நம்பிக்கையில்லாத ஒரு நாத்திகவாதி, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழிசையை தெருவெங்கும் பரப்புவதில் மட்டும் தீவிரமாக இருக்க நேரிட்டது பற்றியது.

  தமிழ்ப் பற்று, நாத்திகவாதம் என்று எல்லாவற்றையும் சமரசம் செய்துகொண்டு ஒரு பொதுப்படையான விஷயத்துக்காக பெரியார் பொங்கியெழுந்தது எதற்காக என்பதற்கான பதிலில்தான் எல்லா கேள்விகளுக்குமான விடை இருக்கிறது.

  ReplyDelete
 6. put latest photos pf superstar rajni.

  ReplyDelete
 7. "‘தமிழில் பாடு!’ என்றால், சிலர் - அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே , ‘தமிழ் இசை இயக்கம்’ வகுப்புத் துவேஷத்தையும் உண்டு பண்ணக்கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆக வேண்டியதாய் விட்டது"

  ஒரு சிறு குழந்தைக்கும் புரியும் அவர் பார்ப்பனரைத்தான் கூறியிருக்கிறார் என்று. இவர் கண்களுக்குக் கல்கி அவர்களோ சதாசிவம் அவர்களோ தென்படாமல் போனது விந்தைதான். ஆனால் ஒன்று. அவர்களுக்கு இவருடைய அரை வேக்காட்டுத்தனமானச் சான்றிதழ்கள் எல்லாம் தேவையில்லை.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 8. "‘தமிழில் பாடு!’ என்றால், சிலர் - அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே , ‘தமிழ் இசை இயக்கம்’ வகுப்புத் துவேஷத்தையும் உண்டு பண்ணக்கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆக வேண்டியதாய் விட்டது"

  ஒரு சிறு குழந்தைக்கும் புரியும் அவர் பார்ப்பனரைத்தான் கூறியிருக்கிறார் என்று. இவர் கண்களுக்குக் கல்கி அவர்களோ சதாசிவம் அவர்களோ தென்படாமல் போனது விந்தைதான். ஆனால் ஒன்று. அவர்களுக்கு இவருடைய அரை வேக்காட்டுத்தனமானச் சான்றிதழ்கள் எல்லாம் தேவையில்லை.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்
  பி.கு. தவறுதல்லக அனானிமஸுக்கானப் பெட்டிக் குறியை முந்தையப் பின்னூட்டத்தில் நீக்க மறந்தேன். மன்னிக்கவும்

  ReplyDelete
 9. M. Kumaran-ல "சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே" பாட்டு கேட்டீங்களா? எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு. மேற்கத்திய beat, நம்ப ஊரு ராகம் (தமிழிசை/கர்னாடக இசை). ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 10. போன கமெண்ட் நான்தான் போட்டேன். அப்பாடி, ஒரு பதிவுக்கு ஒரு டஜன் கமண்ட் இதையும் சேர்த்தா. த்ருப்தியா ராம்கி? ;-)

  க்ருபா

  ReplyDelete
 11. வா..ராசா..வா... சென்னை செந்தமிழோட Phpயை¨யும் மறந்துடாதப்பா! சிக்கலாயிடும்!

  ReplyDelete
 12. டோண்டுமாமா, எதற்காக அப்படி தென்படவேண்டும்? ஏன் அவர் சொல்வதை அரைவேக்காட்டுதனம் என்று சொல்லும் நீங்கள் கண்ணில்படக்கூடாது?

  ReplyDelete
 13. ஏதுவாய் எங்கும் ஏஎஸ்பி இருக்க
  போராட்டம் பிடிவாதம் பிஹெச்பி ஏன் ஏன்!

  க்ருபா

  ReplyDelete