Tuesday, March 01, 2005

வெளிறிப்போன வெங்காயம்

ஆலுவும் லல்லுவும் இல்லாம பீகாரே கிடையாதுன்னு பீகாரிகள் பெருமையா சொல்லிக்கிற விஷயம். லல்லுவின் உருவத்திற்கும் பேச்சையும் பார்க்கும்போது உருளைக்கிழங்கோடு ஒப்பிடுவதில் தப்பில்லை. உருளைக்கிழங்கும் வெங்காயமும் இல்லாத வடஇந்திய சமயலறைகளே கிடையாது என்பது உண்மைதான். ஆனால் வெற்று மிரட்டல், ஆணவம், அதிகார போதை விஷயத்தில் லல்லு நம்ம அம்மாவோட பெரியண்ணன். அந்த வகையில் உருளைக்கிழங்கை விட உரிக்க உரிக்க ஒண்ணுமேயில்லாமல் போகும் வெங்காயத்தோடு லல்லுவை ஒப்பிடுவதுதான் சரி.

எண்பதுகளின் இறுதியில் ஆரம்பித்த லல்லுவின் தர்பார் இன்று முடிவுக்கு வரும் காலம் நெருங்கியிருக்கிறது என்று சொல்லலாமா வேண்டாமா என்கிற தயக்கம் மிச்சமிருக்கிறது. ஆனாலும் அரசியல் அரங்கில் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதே லல்லுவுக்கு பெரிய தோல்விதான். ஒரு பொம்மை முதல்வரால் பத்தாண்டுகாலமாக பீகார், இந்திய அரசியலின் அசிங்கமான முகத்துக்கு சொந்தமான இடமாகியிருக்கிறது. பீகாரை ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிநடத்திச்செல்வதாக லாந்தர் விளக்கை தூக்கிக்காட்டி வாய்ஜாலம் நடத்தியதை பீகாரிகள் சீரியஸாகவும் மற்றவர்கள் ஜோக்காகவும் எடுத்துக்கொண்டார்கள்.

பிரச்னை, பீகார் அரசியல்வாதிகளிடம் மட்டுமில்லை. அரசுத்தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் அதிகமாக வருவது பீகார் மாநிலத்திலிருந்துதான். அரசுப் பதவிகளுக்கான போட்டித்தேர்வுகளை சளைக்காமல் எழுதித்தள்ளும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் இடம். ஏறக்குறைய எல்லா மாநிலத்திலும் ஒரு பீகாரி உயர் பதவியிலிருப்பார். மலையாளிகளும் தமிழர்களும் வெளிநாடுகளுக்கு அதிகமாக புலம் பெயர்ந்தவர்கள் என்றால் இந்தியாவுக்குள்ளேயே அதிகமாக புலம் பெயர்ந்து வாழ்பவர்களாக பீகாரிகளை சொல்லலாம். பேச்சில் பீகாரிகளை யாராலும் வெல்ல முடியாது என்பது எனது கணிப்பு. வாய்ப்புக் கிடைத்தால் பேசிக்கொண்டே இருப்பார்கள். லல்லுவை சர்வ சாதாரணமாக கிண்டலடிப்பார்கள். பீகாரின் ஜாதி அரசியல், கிரைம் ஸ்டேட் என்றெல்லாம் பேசுவார்கள்; ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். படித்தவர்களெல்லாம் வேலை கிடைத்ததும் ஒதுங்கிப்போய் சுயநலமிகளாய் நடந்து கொள்கிறார்கள். பீகாரின் பெரிய பிரச்னையே இதுதான்.

எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி மதச்சார்பின்மை கோஷம் போட ஆரம்பித்திருக்கிறார் லல்லு. இல்லாத எதிரியை இருப்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு வெற்று சவடால்கள் விடுவதில் லல்லுவோடு யாரால் போட்டிபோட முடியும். கோத்ரா ரயிலில் நடந்தது விபத்து என்பதில் ஆரம்பித்து முஸ்லீம் பெண்களுக்கு தனி சலுகைகள் என்று லல்லு அடித்த கூத்து சொல்லி மாளாது. ராப்ரிதேவியை பெண்ணினத்தின் பிரதிநிதியாக அடையாளம் காட்டுவது கூட அவமான விஷயமென்பதை மகளிர் அமைப்புகளும் உணர்ந்து கொண்டு விட்டன. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு மாநில கட்சி தனியாக பிரிந்து நின்று தேர்தலை சந்திப்பதும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திரும்பவும் கூடி குலாவுவதும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது இந்த தேர்தலில்தான். ஆட்சி அதிகாரத்தை கொடுத்த காங்கிரஸோடு லல்லு முறுக்கிக்கொண்டார். அதற்காக மத்திய அரசிலிருந்து விலகியிருந்து காங்கிரஸை எதிர்ப்பார் என்று எதிர்பார்க்க முடியுமா? பீகாரின் வெங்காயம் இப்போதைக்கு வெளிறிப்போயிருக்கிறது.முரண்பாடான நிலையை மறைத்த காங்கிரஸிற்கு மரண அடி கிடைத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னரே இப்படிப்பட்ட இழுபறி வரும் என்றுதான் ஜனாதிபதி ஆட்சிக்கு பாஸ்வான் சிபாரிசு பண்ணினார். இந்த நிமிஷம் வரைக்கும் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார் பீகாரின் புது கிங் மேக்கர். பாஜகவின் ஆதரவோடு ஆட்சிக்கு வருவது பாஸ்வானின் அரசியல் வாழ்க்கைக்கு ஆகாது. இருண்டு கிடக்கும் பீகாரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த துணைநிற்பதுதான் புது கிங் மேக்கரின் வேலையாக இருக்கவேண்டும். இந்த பீகாரிக்காவது மனசாட்சி இருக்கிறதா என்பது இன்னும் நாலு நாளில் தெரிந்துவிடும்!

23 comments:

 1. க்ருபா Said...

  அகா... அரசியல் பத்தி எழுத ஆரம்பிச்சுட்டாங்ஞய்யா அரசியல் பத்தி எழுத ஆரம்பிச்சுட்டாங்ஞ. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அப்பறம் இதுதானே முதல் அரசியல் பதிவு? ரூமுக்கு எதிர்க்கவே ஆட்டோ ஸ்டான்ட் இருந்துமா இவ்வ்ளவு தைரியம்? ;-)

  ReplyDelete
 2. அண்ணாச்சி, பீகார் அரசியலுக்கும் இந்த பொண்ணு படத்துக்கும் என்ன சம்பந்தம்????

  ReplyDelete
 3. krupaa said

  அனானிமஸ், நெஜமாவே தெரியாதா நயன் தாராவை? சரி அதையாவது விடுங்க. "இந்தப் பொண்ணு" சந்திரமுகில நடிக்கறாங்க. சந்திரமுகில இந்த பதிவுக்குச் சொந்தக்காரரோரின் பெயரை முதல் பாதியாக வைத்திருக்கும் ஒருவரும் நடிக்கிறார். அந்த முதல் பாதிக்கு இந்த முதல் பாதி ரசிகர். அப்படீன்னா அந்த முதல் பாதி நடிக்கற படத்துல நடிக்கற பொண்ணோட படத்த இன்ந்தப் பாதி போடறதுல ஒரு சம்பந்தம் இருக்காதா என்னா...?

  ReplyDelete
 4. க்ருபா,

  நயன் தாராவை பத்தி தனியாவே ஒரு பக்கம் எழுதலாம். அப்படி இருக்க அரசியலுக்கு நடுவே சும்மா ஒரு துணுக்கு மாதிரி ஏன் போட்டாரு எங்க ஊர்க்காரர்ருன்னு தான் கொழம்பிட்டேன்
  - செந்தில்

  ReplyDelete
 5. தோ பாருடா.. சொல்ல வந்துட்டார். இவரோட தல சப்போர்ட் பண்ணிணா லாலுவும் ஆலுவும் ஹீரோ தான்..

  ReplyDelete
 6. கிருபா, என்னை மன்னிச்சு வுட்டுடுபா!

  ஆக்சுவலா பாஸ்வான் படம்தான் போடலாம்னு இருந்தேன். ஒரு சேன்ஜ்க்கு பாஸ் மார்க் வாங்கியிருக்கும் நம்ம ஹீரோயின் படத்தை போட்டுட்டேன். ஹி...ஹி..!

  செந்தில், நம்மூரா? யாருப்பா... விவரமா சொல்லுங்கப்பா!

  ReplyDelete
 7. என்னப்பா நீயும் பத்திரிக்கை மாதிரி மேட்டருக்கு சம்பந்தம் இல்லாம படம் போட ஆரம்பிசிட்ட. அதுவும் நம்ம CM கதாநாயகி படம் போட்டுருக்க. அசத்துரப்பா.
  அப்புறம் லாலுவ பற்றிய ஆலசல் சுப்பர்.
  அவர அம்மாவுக்கு அண்ணன்னு சொல்லிட்டு எப்படிதான் உங்களால சென்னைல சுத்த முடியுதோ.
  அப்புறம் எப்ப லாலுவ எங்க தல சப்போர்ட் பண்ணுனாரு. அநியாயத்துக்கு வெக்கப்படாம அவுத்து வுடுறிங்களே தலைவா.

  ReplyDelete
 8. என்னப்பா நீயும் பத்திரிக்கை மாதிரி மேட்டருக்கு சம்பந்தம் இல்லாம படம் போட ஆரம்பிசிட்ட. அதுவும் நம்ம CM கதாநாயகி படம் போட்டுருக்க. அசத்துரப்பா.
  அப்புறம் லாலுவ பற்றிய ஆலசல் சுப்பர்.
  அவர அம்மாவுக்கு அண்ணன்னு சொல்லிட்டு எப்படிதான் உங்களால சென்னைல சுத்த முடியுதோ.
  அப்புறம் எப்ப லாலுவ எங்க தல சப்போர்ட் பண்ணுனாரு(Anonymous). அநியாயத்துக்கு வெக்கப்படாம அவுத்து வுடுறிங்களே தலைவா
  -----R.Raja

  ReplyDelete
 9. பீகாரில் படம் ரிலீஸானால்தான் உடனே காலில் விழவேண்டிவரும் . அவர்க்கென்ன இது புதுசா கர்நாடகத்தில் ஒருவரிடமும், தமிழ்நாட்டில் இருவரிடமும் விழுந்து பழகியிருக்கிறாரே

  ReplyDelete
 10. Dear Mr.Ramki,

  I wish to suggest onething.

  Try to change or increase your font size, because the message is not able to read in a proper manner

  Regards,

  R.Vijay

  ReplyDelete
 11. Dear Mr.Ramki,

  I wish to suggest onething.

  Try to change or increase your font size, because the message is not able to read in a proper manner

  Regards,

  R.Vijay
  getrvijay@rediffmail.com

  ReplyDelete
 12. தாஸு லூசுமாரி எப்படி வேன்டுமானலும் பேசலாம். யாரு யார் காலுல விழுந்தாங்கிறது எல்லாருக்கும் தெரியும்.சரிப்பா
  கர்நாடகத்தில் ஒருவரிடமும், தமிழ்நாட்டில் இருவரிடமும் விழுந்திருக்காருனு சொன்ன. பேர சொல்லுப்பா. தெரிஞ்சிக்க்கிறேன். அப்புறம் சோத்துக்கு கால்ல விழுவுற மாதிரி ஜெயிக்கிற கட்சியோட கூட்டனி வைக்க நாய் பொழப்பு பொழைக்கிறது நல்லாவா இருக்கு.

  ReplyDelete
 13. தாஸு கார்கில் நிதியிலருந்து,வெள்ள நிவாரன நிதி,சுனாமி நிதி வரை தன் சொந்த காச(கலை நிகழ்ச்கி நடத்தாமல்) குடுத்த ஒரே நடிகர் எங்க தலைவர் மட்டும் தான். மக்கள் பணத்த மக்களுக்கே கொடுத்த மாபெரும் தலைவர்.
  பாக்கெட்லருந்து கொடுத்து தான் பழக்கம்.பாக்கெட்ல போட்டுக்குற பழக்கம் எங்களுக்கு இல்லை. அப்புறம் என் குடும்பத்துலருந்து யாரும் பதவிக்கே வரமாட்டங்கணு சொல்லிட்டு மினிஸ்டர் பதவி கிடைச்சவுடனே மகன மினிஸ்டர் ஆக்குனாறே அவரு என்ன/எவள்ளவு நிதிப்பா கொடுத்துருக்காரு.

  RajaR

  ReplyDelete
 14. யப்பா சாமியோவ்.. எங்க போனாலும் துரத்துறீங்க... ஆளை வுடுங்கப்பா அரசியலே வேணாம்!

  ReplyDelete
 15. தாஸ்,
  முன்பு ஒரு முறை சம்பந்தமே இல்லாமல் என்னை கலைஞர் ஆதரவாளனாக நீங்களே நினைத்துக் கொண்டு கேள்வி கேட்டீர்களே .அதே போல உங்களை ராமதாஸ் ஆதரவாளராக ஒருத்தர் முடிவு பண்ணிட்டார் பாத்தீங்களா?

  ReplyDelete
 16. ராம்கி,
  பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் நல்லாவே ஆட்டிறீங்க.

  ReplyDelete
 17. //தாஸு கார்கில் நிதியிலருந்து,வெள்ள நிவாரன நிதி,சுனாமி நிதி வரை தன் சொந்த காச(கலை நிகழ்ச்கி நடத்தாமல்) குடுத்த ஒரே நடிகர் எங்க தலைவர் மட்டும் தான். மக்கள் பணத்த மக்களுக்கே கொடுத்த மாபெரும் தலைவர்.//

  நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

  ReplyDelete
 18. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 19. ஜோ,

  பிள்ளை, தொட்டில்.. நானா? ஐயோ.. வேண்டாம் சாமி! தாஸ் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அதனால நான் கமெண்ட் அடிக்க மாட்டேன்.... ராஜாவை புடிச்சுக்கோங்க....

  ReplyDelete
 20. ராம்கி,
  லல்லுவை பற்றி அரசியல் நையாண்டி செய்து பதிவை ஏற்றி விட்டு பின்னர் "ஆளை விடுங்க ..அரசியலே வேணாம் சாமி"-ன்னா என்ன அர்த்தம்?

  பெயருக்குள் 'ரஜினி'-யை வைத்துக் கொண்டு,அவரை விட்டுக்கொடுக்க முடியாமலும்,அதே நேரத்தில் உங்களுக்கு பரவலாக உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முடியாமலும் தவிப்பது போல தோன்றுகிறது. உண்மை தானே?

  ReplyDelete
 21. ஹி..ஹி.. 'தமிழனு'க்கு இருக்கும் சூடு, சொரணையெல்லாம் எனக்கு கிடையவே கிடையாது. நான் எப்பவும் 'ஜெ. ரஜினி ராம்கி' தான்! அதான் என்னோட பலமும் பலவீனமும். எனக்கு நல்ல பெயர் இருக்குதுன்னு நான் நினைச்சுக்குறது காமெடி மட்டுமல்ல செம டிராஜிடி!

  நான் சொன்ன 'அரசியல்', லல்லுவை பத்தி அல்ல. தாஸ் Vs ராஜா பத்தி சொன்னது!

  ReplyDelete
 22. ராம்கி,
  உங்களுக்கு நற்பெயர் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களோ இல்லையோ ,நற்பெயர் இருப்பது உண்மை தான். உதாரணத்திற்கு என்னிடம் உங்களுக்கு நற்பெயர் உண்டு ,பல காரணங்களுக்காக.

  ReplyDelete