Saturday, March 05, 2005

தேவுடா... தேவுடா!டாப் 1

சக்தியெல்லாம் ஒன்று
சேர்ந்தாலே ...
சொர்க்கம் வரும் இந்த
மண் மேலே

உன்னைப் பற்றி யாரு
என்ன சொன்னால் என்ன
இந்தக் காதில் வாங்கி அதை
அந்தக் காதில் தள்ளு!

மேகம் மிதித்தாலும்
காகம் பறந்தாலும்
ஆகாயம்தான் அழுக்காக
ஆகாதுன்னு சொல்லு...

நன்றி - வாலி


டாப் 2

ஆறு மனமே ஆறு இங்கே
அனைத்தும் அறிந்தது யாரு
அறிவைத் திறந்து பாரு - அதில்
இல்லாததை சேரு

நன்றி - பா.விஜய்


டாப் 3

ஏத்தி விட்டத மறந்தாக்கா - அந்த
நன்றி என்னும் வார்த்தைக்கொரு
அர்த்தமில்லை
காத்திலிருந்து தலையாட்டி - நீ
நூலுக்குத்தான் நன்றி சொல்லு

பாஞ்சி பாயுற பட்டம் - இது
பட்டைய கெளப்புற பட்டம்
இது சூப்பர்ஸ்டாரு பட்டம்

நன்றி - நா. முத்துக்குமார்


டாப் 4

உன்னால் நானழகு
என்னால் நீயழகு
நம்மால் யாவும் அழகே

நன்றி - யுகபாரதி

டாப் 5

உள்ளம் தெம்பாக வை
எண்ணம் உயர்வாக வை
வாழும் காலமெல்லாம்
மண்ணில் மரியாதை வை

கண் இமைக்கும் நொடியில்..
அட எதுவும் நடக்கும்
இது எனக்கு தெரியும்
நாளை
இது உனக்கும் புரியும்

நன்றி - கபிலன்

30 comments:

 1. nan innum paata ketkala..Aana varigal namma super star ku romba porutham.Nicchiyam ithu mega audio sales il NO 1.

  ReplyDelete
 2. SONGS ARE SUPERB.

  SURE IT WILL BE MEGA AUDIO HIT OF THE YEAR AND FOREVER

  ReplyDelete
 3. இந்த படமாவது யார் காலிலும் விழாமல் அதன் தரத்தால் ஓடினால் நன்று .

  ReplyDelete
 4. எல்லா பாடலும் பிரமாதம்! நீண்ட நாள் காத்திருந்தது வீண் போகவில்லை.அசத்திவிட்டார் வித்யாசாகர்.

  ReplyDelete
 5. hii ramki,
  hv u given review for lyrics or music

  ReplyDelete
 6. hii ramki,
  hv u given review for lyrics or music

  ReplyDelete
 7. Not yet. I'll write detailly later. It seems that the audio started attracting the fans.

  ReplyDelete
 8. அல்லொ ராம்கி,உங்க தலைவர் பாட்டுல ரொம்ப தெலுங்கு கலந்திருக்கு..மூச்சுக்கு 300 தரம் தமிழ் என்று சொல்லும் உங்க தலைவர் ,மீண்டும் தமிழனை முட்டாள் ஆக்கி விட்டார்....

  ReplyDelete
 9. அல்லொ ராம்கி,உங்க தலைவர் பாட்டுல ரொம்ப தெலுங்கு கலந்திருக்கு..மூச்சுக்கு 300 தரம் தமிழ் என்று சொல்லும் உங்க தலைவர் ,மீண்டும் தமிழனை முட்டாள் ஆக்கி விட்டார்....

  ReplyDelete
 10. naalu oorukku poi naalu varthai pesa kathukittathaan nammala polaikka mudiyum. illatii kundu sattiyela kuthrai ottathaan layakkunnu baba dialogue eduthu vidunga

  ReplyDelete
 11. தாஸு காலுல விழுந்து படம் ஓட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.சரிப்பா பாட்சா,வீரா,முத்து,அன்னாமலை,படையப்பா,அருனாசலம்... இந்த படம் யார் காலுல விழுந்து ஓடினது என சொல்ல முடியுமா. என்னப்பா பண்ணுவ நீ.பாட்டு ஊத்திக்குமுனு நினைச்ச.அது நீ ஊத்திக்கிட்டு படுக்குற அளவுக்கு HIT ஆகிடுச்சு. ஏமாந்து போய்ட்டியா ராசா.சரி படமாவது ஊத்திக்குமுனு நம்பிக்கையோட காலத்த ஓட்டு. ஆனா அதுவும் நடக்காது
  R.Raja

  ReplyDelete
 12. பாடல்கள் அறிமுகத்துக்கு குறுந்தகடு குடுத்ததுக்கு நன்றி. கூடிய விரைவில் காசு கொடுத்து வாங்கிடறேன்.

  இப்படிக்கு,
  (ஜப்பானியர்களைத் தமிழ் கற்கவைத்த) ரஜினிக்கு ரசிகன்,
  க்ருபா

  ReplyDelete
 13. வாலியின் பாடலை போட வேண்டும் என்று நினைத்தேன்... நன்றி!
  -பாலாஜி

  ReplyDelete
 14. பாட்சா,வீரா,முத்து,அன்னாமலை,படையப்பா,அருனாசலம் படங்களைப் போல் யார் காலிலும் விழாமல் சந்திரமுகி ஓட வாழ்த்துகிறேன் .

  பி.கு : உங்கள் லிஸ்டில் பாபா இல்லை.. கவனிக்கவும் ;)

  ReplyDelete
 15. Anonymous,

  தமிழ் தமிழ் என ஏமாற்றுவது ரஜினிகாந்த் இல்லையென நினைக்கிறேன் ..அது வேறு காந்த்.

  ReplyDelete
 16. பாபா வசூலில் சாதனை. பிற நடிகர்களின் வெற்றி படங்களின் சாதனையை முறியடித்தது. ஆனால் படையப்பாவின் சாதனையை முறியடிக்கவில்லை அதனால் தான் பாபா லிஸ்ட்டில் இல்லை.
  R.Raja

  ReplyDelete
 17. தமிழ் தமிழ் என்று குதிப்பது வேறொரு காந்த் என்றாலும் இந்த தலீவர் 'ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு பெற்று உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுக்கப்போவதாகக்' கூறியது நினைவுக்கு வந்து தொலைக்கிறது..

  ReplyDelete
 18. இங்க தலுங்கு கீருத்தனைகள் வதது போல தலுங்கில் தமிழ் பாடல்கள் இரக்கிறது தமிழ், தலுங் நல்ரல உறவை வளர்க்கும் ரஜினி ஜே.

  ReplyDelete
 19. ராகவேந்திரா மண்டபத்த தமிழருக்கு தான் எழுதி கொடுத்தாரு. தொழில் எங்க வேணாலும் பண்ணலாம்.ரஜினி மருமகனே தமிழன் தானே.அப்புறம் என்னப்பா.ரஜினிக்கு ஓட்டு தமிழ்நாட்டுல தான். போறபோக்க பார்த்தா சொந்த ஊருக்கு கூட போக விட மாட்டிங்க போலருக்கு.
  R.Raja

  ReplyDelete
 20. ஆமாமாம், தனுஷுக்கு , சத்யநாரயனாவுக்கு எழுதி கொடுத்தால் தமிழனுக்கு என்பீர்கள் .
  அவர் சொத்தை அவர் என்ன வேணாலும் செய்யலாம். தமிழர்க்கு என ஏமாத்தாமல் இருந்தால் சரி .

  ReplyDelete
 21. Ayya Dasu, Ungalukku enna Rajini mela avlooooo kaduppu?. Eppovum, Yar kalleyum edhukkAgavum vizhAda ore aAl Namma Thalaivar. MGR kitteye, ninnukittu salvai porthinavaru :) gnabagam irukka, NehruStatidum function to felicitate MGR?...

  Comments, if objective and unbiased, will add color -- else they look very childish!

  Regards,
  -Suresh

  ReplyDelete
 22. நாயகி சந்த்ரமுகி மேல் தெலுங்கு நாட்டியப் பெண் ஒருத்தியின் ஆவி பிடிப்பதால், தான் அந்த தெலுங்குப் பெண் என சந்த்ரமுகி கற்பனை செய்து கொண்டு பாடுவதாக அமையும் பாடல்கள் தெலுங்கில் இருக்கிறது.

  தெலுங்கு release-ல் தமிழ் நாட்டியப் பெண் ஒருத்தியின் ஆவி பிடிப்பதால், தான் அந்த தமிழ் பெண் என சந்த்ரமுகி கற்பனை செய்து கொண்டு பாடுவதாக அமையும் பாடல்கள்
  தமிழில் இருக்கிறது.

  - மலையாள 'மணிச்சித்ரதாழ்' -ல் நாயகி மேல் தமிழ் நாட்டியப் பெண் ஒருத்தியின் ஆவி பிடிப்பதால், தான் அந்த தமிழ் பெண் என சந்த்ரமுகி கற்பனை செய்து கொண்டு பாடுவதாக அமையும் பாடல்கள் தமிழில் இருக்கிறது.

  ReplyDelete
 23. என்னவோ போங்கள் .. தெலுங்கு பாடலினால், தமிழ் காக்க ராமதாஸுக்கு நல்ல ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார்கள் .. இப்போதெல்லாம் படங்கள் interest ஆக இருக்கோ இல்லையோ , படங்களை ஒட்டிய அரசியல் ரொம்ப interesting . ;)

  ReplyDelete
 24. அன்பர்களே தமிழ் படத்தில் தெலுங்கு வருவது மாபெரும் குற்றமோ??????கதைப் படி "ஜோதிகா" நாட்டிய நங்கை ஜதி தெலுங்கில் தானே போடுவார்கள்????அறியாதவர்களா நீங்கள்???சரி தமிழ் படத்தில் தெலுங்கு வருவது மாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாபெரும் குற்றமென்றே கொள்வோம்..."உன்னால் முடிஉம் தம்பி" "சிந்து பைரவி" எல்லாவற்றிலும் தெலுங்கு இருக்கத்தானே செய்தது???அப்புறம் டிசம்பர் சீசனில் தெலுங்கு பாடல்தானே ஒலிக்கிறது எல்ல சபாக்களிலும்???சரிப்பா எல்லாம் தப்பு...ஆமா தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கு??இந்தியாவில் எந்த மொழியும் எவ்விடத்திலும் பேச உரிமையுள்ளதே>>>>குறை கூறுவது எளித்து நண்பர்களே தவறு ஒன்றும் இல்லை!!சிந்தித்து பாருங்கள் எதை பேசும் முன்னர் ஒரு நிமிடம்...

  ReplyDelete
 25. Chandramuki...meendum Baba!

  (sun tv comment)

  ReplyDelete
 26. "அகர்ந்தவில்ல நகர்ந்த பீசு", அப்படின்னா என்னங்க?
  இதுல, "அக்கறையா கேட்டா அர்த்தம் நூறுடா" அப்படின்னு பில்டப்பு வேற!!

  ReplyDelete
 27. நான் கூட எதும் பேச வேண்டாம், பேசினா பிரச்சினையாயிடும்னு பின்னூட்டம் குடுக்காம மவுனமா இருந்தேன் ஆனா தாங்கமுடியலை, ரொம்ப்பத்தான் இது உங்களுக்கு
  அடா அடா யாருப்பா அந்த ராஜா,
  //ராகவேந்திரா மண்டபத்த தமிழருக்கு தான் எழுதி கொடுத்தாரு. //
  அவர் எப்போ எழுதி குடுத்தாரு யோசிச்சி பாருங்க, அந்த மண்டம் நிலத்து மேல ஒருவர் வழக்கு போட்டார் அது அவருடையது என்று, நிலத்தில் ஏகப்பட்ட வில்லங்கம், உடணே தமிழர் பாசம் பொத்துக்கிச்சி,
  அதும் ட்ரஸ்டுக்கு எழுதி வைத்தார், அந்த ட்ரஸ்டு உறுப்பினர்கள் யாரு? எல்லாம் குடும்ப உறுப்பினர்கள்,சொந்தகாரர்கள் தானே.
  //'ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு பெற்று உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுக்கப்போவதாகக்' கூறியது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.. //
  //தொழில் எங்க வேணாலும் பண்ணலாம்.//
  சரியா சொன்னீங்க போங்க தொழில் எங்க வேண்டுமென்றாலும் செய்யலாம், ஆனால் தமிழ் நாட்டில் சம்பாதித்த பணத்தை ஹோட்டல்,கல்லூரி,இன்னும் பல முதலீட்டை பெங்களூரிலும் கர்நாடகாவிலுல் தான் செய்வார். அதையும் சேர்த்து சொல்லுங்களேன்.

  ஏன்யா கடுப்பை கிளப்புறிங்க

  ரஜினி மருமகனே தமிழன் தானே.அப்புறம் என்னப்பா.ரஜினிக்கு ஓட்டு தமிழ்நாட்டுல தான். போறபோக்க பார்த்தா சொந்த ஊருக்கு கூட போக விட மாட்டிங்க போலருக்கு.
  R.Raja//

  ReplyDelete
 28. //தொழில் எங்க வேண்டுமென்றாலும் செய்யலாம், ஆனால் தமிழ் நாட்டில் சம்பாதித்த பணத்தை ஹோட்டல்,கல்லூரி,இன்னும் பல முதலீட்டை பெங்களூரிலும் கர்நாடகாவிலுல் தான் செய்வார். அதையும் சேர்த்து சொல்லுங்களேன்.//

  ஓகோ... இப்பதான் மாட்டெர் விளங்குது..! வேலை விஷயமாக வெளிநாட்டில் வசிக்கும் அத்தனை தமிழர்களும் அந்தந்த நாருகளில் மட்டும் தான் சொத்துகளை வாங்கி குவித்துக் கொண்டு இருக்கிறர்கள்.. அடப்போங்கய்யா.. நீங்களும்.. உங்க நியாயமும்!

  மொதல்ல உங்களோட முதுகை பாருங்க.. அப்புறமா அடுதவங்களை குத்தம் சொல்லலாம்..!

  ReplyDelete
 29. அஞ்சுக்குள்ள நால வெயி, ஆழம் பார்த்துக் கால வெய்யி - இதுக்கு என்ன அர்த்தம்?

  வாலிக்குப் புதுசா யோசிக்கத் தெரியலை. புதுசா வர்றவங்க பழசா யோசிக்கிறாங்க. எப்படியோ போய்த் தொலைங்க!

  --ஹரன்பிரசன்னா

  ReplyDelete
 30. //ஓகோ... இப்பதான் மாட்டெர் விளங்குது..! வேலை விஷயமாக வெளிநாட்டில் வசிக்கும் அத்தனை தமிழர்களும் அந்தந்த நாருகளில் மட்டும் தான் சொத்துகளை வாங்கி குவித்துக் கொண்டு இருக்கிறர்கள்.. அடப்போங்கய்யா.. நீங்களும்.. உங்க நியாயமும்!//

  முதுகு ஒடிய கணணி முன்பு அமர்ந்து வேலைசெய்தும்(நாந்தேன்பா அது...) மற்றும் சொந்த உழைப்பில் சம்பாதிப்பவனுக்கும் அவன் முதலீட்டை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.
  பிழைக்க வந்தேறி, வந்தேறிய நாட்டிடமும் சமூகத்திடம் உமக்காகவே வாழ்கிறேன்,உழைக்கின்றேன் என படம் காட்டி, சுரண்டிவிட்டு முதலீட்டை சொந்த ஊருக்கு திருப்புவர்களைத்தான் விமர்சிக்கின்றோம்.

  முரளி,அர்ஜீன்,பிரகாஷ்ராஜுவை விமர்சிக்கின்றோமா? இல்லையே, வந்தார்கள்,நடித்தார்கள் எங்குவேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளட்டும், திரைப்படம் தவிர்த்து எங்கேயாவது தமிழர்களை காக்க வந்த கடவுள் மாதிரி பேசியிருக்கின்றார்களா? இல்லையே

  //ராகவேந்திரா மண்டபத்த தமிழருக்கு தான் எழுதி கொடுத்தாரு//

  இதில் இந்த மாதிரி எழுதி தமிழனை பிச்சைக்காரன் அளவுக்கு இறக்கிவிட்டார்கள். இதுல என்ன கடுப்புனா தமிழன்னு சொல்லும்போது அதுல நானும் கீரனே, என்னையும் சேர்த்து இல்ல பிச்சக்காரணாக்கிட்டாரு ராஜா

  ம்ம்ம்ம்ம்ம்ம்...... எனக்கே அலுத்துடுச்சி பா இந்த மாதிரி எழுதி எழுதி.

  ReplyDelete