Tuesday, November 22, 2005

துடைப்பக்கட்டை

Image hosted by Photobucket.com

சென்னை: துடைப்பக்கட்டை என்பது தமிழ் கலாசாரத்தின் ஒரு அடையாளம் என்று தமிழ் கலாசார பாதுகாப்பு காவலர் திருமாவளவன் தெரிவித்தார்.

நேற்று கூடிய தமிழ் கலாசார அறிஞர்களின் கூட்டத்தில் குஷ்பு, சுஹாசினி போன்ற நடிகைகளின் முறைகெட்ட செயலை கண்டிக்க கூடிய கூட்டத்தில் திருமாவளவன் இச்செய்தியை தெரிவித்தார். துடைப்பக்கட்டை காட்டி எதிர்ப்பு கூட்டம் நடத்துவது என்பது தமிழ் கலாசாரத்தின் அருமை பெருமைகளை விளக்கும் ஒரு அம்சமாக கொள்ளலாம் என்றும் கூறினார். அப்படிப்பட்ட எதிர்ப்பு கூட்டத்தை நடத்தியது விடுதலைச் சிறுத்தைகளோ அல்லது பாமகவோ அல்ல என்பதையும் உறுதிபட தெரிவித்தார். மேலும் சுஹாசினியின் கருத்தை கருணாநிதிக்கு கொம்பு முளைத்திருக்கிறதா என்று கேட்டதாகவும் பொருள் கொள்ளலாம் என்றும் கூறினார்.


இதைத்தொடர்ந்து பேசிய தி.மு.க எம்பி சரத்குமார், சுஹாசினி தன்னுடைய பிரச்னையை கோர்ட்டில் சந்தித்துக்கொள்வதாக கூறி தன்னை எஸ்எம்எஸ்ஸில் மிரட்டியதாக வருத்தப்பட்டு பேசினார். அதற்கு முன்னதாக எஸ்எம்எஸ்ஸை தமிழில் எப்படி சொல்வது என்பது பற்றிய சுவையான விவாதங்கள் நடந்தன. பின்னர் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி, சுஹாசினி தன்னுடைய கருத்தை பெங்களூரில் சொல்லியிருந்தால் பிரச்னை வந்திருக்காது என்று கருத்து தெரிவித்தார். கூட்டத்தில் பேசிய கரு. பழனியப்பன் சாலமன் ருஷ்டி என்றொரு எழுத்தாளர் இருப்பதாக ஒரு கூடுதல் தகவலையும் பகிர்ந்துகொண்டார். ஒரு முழு நீள நகைச்சுவை நிகழ்ச்சியை சன் நியூஸ் சானல் ஏற்பாடு செய்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

12 comments:

 1. ungkaLLukku TIME sariyillai pOla irukku ;-)

  So, Asking for TROUBLE from "you know who" :)

  ReplyDelete
 2. ராம்கி,

  இப்ப இங்கேயும் 'துடைப்பக்கட்டை'
  கடைகளில் கிடைக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

  ReplyDelete
 3. தங்க சிம்மாசனம்தான் இல்லையென்றாலும் அட்லீஸ்ட் ஒரு குஷன் நாற்காலிக்கு கூட ஏற்பாடு செய்யாமல் தமிழ் பண்பாட்டை கேவலப்படுத்திய ராம்கிக்கு எதிராக வேறது அதேதான் ஏந்தி போராட பொதுஜனமே புறப்படு... லட்சியத்துக்கு போராடும்போது எந்த கொடியை ஏந்த வேண்டும் என்று உனக்கு தெரியாதா?

  ***

  துளசி... உங்க ஊருல நடிகைங்க யாரும் கருத்து சொல்றதில்லையா?? கடைகளில் கிடைக்கிதுன்னு சொல்றீங்களே... இங்க பயங்கர டிமாண்டு... நோ ஸ்டாக்.

  ReplyDelete
 4. சுனாமியின் போது தொண்டூழியம் செய்த ராம்கியும், இது போன்ற விடயங்களை பதிவு செய்வதும் ஒரே நபர்தானா.. ;(


  வாசன்

  ReplyDelete
 5. வாசன்...
  எனக்கிருக்கும் கவலையும் அதுதான்!

  ராம்கி மீது மட்டுமல்ல... பாலா, முகமூடி, குழலி, உஷா... என்று பலர் மேல் எனக்கு பயங்கர கோபம். அவங்ளுக்குத்தான் வேலை இல்லேன்னா... நமக்குமா!? அவங்க இருக்கும் தளம் எப்போதும் செய்தியில் வந்துகொண்டிருக்கவேண்டும் அதற்காக என்னென்னவோ கோமாளித்தனம் செய்கின்றார்கள். அதற்கேன் வரிந்துகட்டிக்கொண்டு பதிவுகள், பின்னூட்டங்கள், மீண்டு பதில் பதிவுகள், பின்னூட்டங்கள்...

  இது உங்கள்மேலும், வலைப்பதிவுகள் என்ற ஊடகத்தின் மீதும் உள்ள ஈடுபாட்டால் எழுதியது. மற்றப்படி யாரையும் குறைகூற அல்ல.

  (இதற்கு யாராவது, நீ சுத்தமா... நீ என்ன எழுதி கிழிச்சுட்ட என்று பதில் எழுத துடித்தால்... உங்களுக்கு என்னுடைய அட்வான்ஸ் நன்றி).

  ReplyDelete
 6. துடைப்பக்கட்டை என்பது தமிழ் கலாசாரத்தின் ஒரு அடையாளம் என்று கூறியதற்காக ஒரு வழக்கு போடலாம்னு இருக்கேன்பா.

  இப்ப்டி பேசுறாறே அவருக்கு மரியாதைனு சொல்லி துடைப்பக்கட்டை மாலை போட்டுற போறங்கப்பா?

  அப்புறம் சூப்பர் காமெடி எது தெரியுமா,
  சன் டீவி --------- சன் நியூஸ்
  ஜெயா டீவி --------- சட்டசபையில் இன்று.

  மேல சொன்னதல்லாம் 1/2 அல்லது 1 மனி நேர காமெடி தான்.
  சிறுத்தை,மரம் கோஷ்டி காமெடி தான் டாப்புங்கோ.

  ReplyDelete
 7. அன்பு,

  //அதற்கேன் வரிந்துகட்டிக்கொண்டு பதிவுகள், பின்னூட்டங்கள், மீண்டு பதில் பதிவுகள், பின்னூட்டங்கள்...
  //
  உங்கள் உண்மையான ஆதங்கத்தை (அல்லது கோபத்தை!) புரிந்து கொள்கிறேன். ஏதோ நகைச்சுவையாக ஒரு
  பின்னூட்டமிட்டேன். எதையும் உசுப்பி விடவில்லை! மற்றபடி, இந்த விவகாரத்தில் என் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காக ஒரே
  ஒரு பதிவெழுதினேன். அவ்வளவே. இந்த விளக்கம், தங்கள் அக்கறையை புரிந்து கொள்ள முடிவதால்.

  //இது உங்கள்மேலும், வலைப்பதிவுகள் என்ற ஊடகத்தின் மீதும் உள்ள ஈடுபாட்டால் எழுதியது. மற்றப்படி யாரையும் குறைகூற
  அல்ல.
  //
  என் நன்றிகள்.

  என்றென்றும் அன்புடன்
  பாலா

  ReplyDelete
 8. //கரு. பழனியப்பன்//

  அவர் பெயர் பழ.கருப்பையா ,
  கரு.பழனியப்பன் அல்ல (எப்பவுமே சினிமா நெனப்புதான் :-))

  விளக்கமாத்துக்கு பிளாஸ்டிக் சேராம் -புதுமொழி :-)

  என்றும் அன்பகலா
  :-)

  ReplyDelete
 9. பாலாஜி, வாசன், அன்பு, வெறும் சர்ச்சையை கிளப்புவதற்காக இதை நான் பதிவு செய்யவில்லை. நான் நினைத்த மாதிரியே யாரும் சம்பந்தப்பட் நிகழ்ச்சியை பார்த்தற்போல் தெரியவில்லை. இரண்டு நாட்கள் தலைகாட்டாமல் தமிழ்மணத்தின் "டிரெண்டு" தெரியாமல் பதிவு செய்தது தவறுதான். இனிமேலாவது சர்ச்சை வராத சப்ஜெக்டாக எடுத்துக்கொள்கிறேன். இப்போதைக்கு இங்கே வாங்குவது வழக்கம்போல் ஜகா!

  துளசியக்கா, மெய்யாலுமே பெரிய விஷயம்தான். புனேவில் இருந்த காலத்தில் துடைப்பக்கட்டை கேட்டால் பிளாஸ்டிக் கைப்பிடி வைத்த அந்த ஹைடெக் துடைப்பக்கட்டைதான் வரும். ரொம்ப கஷ்டப்பட்டு ரஸ்தாபேட்டையை ஒரு நாள் புரட்டிப்போட்டதில் கிடைத்த அந்த 'வெளக்குமாறை' வாங்கி உச்சி மோர்ந்தபோது..... மறக்க முடியாத அனுபவமுங்கோ!

  முகமூடியாரே, பேட்டை ரூமில் பெரிசா எதுவுமில்லை! என்னமோ போங்க.. என்னன்னவோ நடக்குது!

  ராசா, வா ராசா வா... என்னை ஒரு வழி பண்ணிடலாம்னு முடிவே பண்ணிட்டியா?! :-)

  அன்பகலா, டங்கு ஸ்லிப்பு! நீங்க என்ன புதுமொழி வேணும்னாலும் சொல்லிக்கலாம்... பெங்களூர்ல இல்ல இருக்கீங்க! :-)

  ReplyDelete
 10. //ராம்கி மீது மட்டுமல்ல... பாலா, முகமூடி, குழலி, உஷா... என்று பலர் மேல் எனக்கு பயங்கர கோபம். அவங்ளுக்குத்தான் வேலை இல்லேன்னா... நமக்குமா!? அவங்க இருக்கும் தளம் எப்போதும் செய்தியில் வந்துகொண்டிருக்கவேண்டும் அதற்காக என்னென்னவோ கோமாளித்தனம் செய்கின்றார்கள்//
  அட தெய்வமே :-(

  ReplyDelete
 11. ராம்கி,

  நம்ம வீட்டுத் துடைப்பக்கட்டைக்கு இன்னும் ஸ்பெஷல் மரியாதை இருக்கு. கிறைஸ்ட்சர்ச்சின்
  'முதல் துடைப்பம்'என்ற (மாலை) மரியாதையோடு ஃபிஜித் தீவுலே இருந்து நண்பர் மூலம்
  ஃப்ளைட்டுலே வந்துச்சு:-)

  அது அப்ப.

  இப்ப என்னன்னா, நிறையச் சீனர்கள் வந்தபிறகு தாய்லாந்துலே இருந்து வருது இந்தத் தென்னந்துடைப்பமும்,
  நீங்க சொல்ற ஹைடெக் பர்மாத் துடைப்பமும்.

  இண்ட்டீரியர் டெக்கரேஷனிலே இப்ப இதுக்கு முதலிடம். தென்னந்துடைப்பக்குச்சிகளுக்கு வர்ணம் அடிச்சு,
  அதுக்கு மேட்ச்சான கலர் ப்ளாஸ்டிக் மணிகளை ஒவ்வொரு குச்சியிலும் கோர்த்து, ஒரு பெரிய ஃப்ளவர்வாஸ்லே
  வச்சுடறாங்க.

  அட! 'துடைப்பக்கட்டைக்கு முத்துமணி'

  மரவண்டு,

  உங்க புதுமொழி தூள்!

  ReplyDelete
 12. Ramki, how was the programme? was it good compare to ndtv programme?

  ReplyDelete