Tuesday, April 25, 2006

ஓரங்கட்டேய் - 10

Image hosting by Photobucket

வணக்கமுங்க. நான் கூட பக்கா கிராமத்துலர்ந்து வந்தவன்தான்... அதாவது சாலிக்கிராமம்!

இப்பல்லாம் எலெக்ஷன்ல நிக்காமலே கெலிச்ச சந்தோஷம் உங்க கிட்ட தெரியுது. அடிக்கடி வாய்விட்டு சிரிக்கிறீங்க! மனுஷன் சந்தோஷமா இருந்தாதான் நல்ல காரியமெல்லாம் செய்ய முடியும். ஏதோ நடத்துங்க... நாலு பேரு திரும்பி பார்க்கணும் அவ்ளோதான்!

எனக்கு நல்லா தெரியுமுங்க...உங்களுக்கு தண்ணி, சிகரெட்னு எந்த கெட்டப் பழக்கமும் இல்லவே இல்லேங்கிறது. அதை வெளிப்படையா சொன்னா உங்க இமேஜ் அப்படியே பூஸ்ட் ஆவுமே.. அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு இந்தப் பழக்கம் இல்லேங்கிறதனால உங்க தம்பிக்களும் அதே மாதிரி இருப்பாங்கல்ல?

அரசியல்னா அது கட்சி அரசியல்தான் உங்களுக்கு இருக்குற தெளிவு யாருக்குமேயில்லை. லஞ்சம் வாங்கிறதும் தப்பு கொடுக்கிறதும் தப்புன்னு டயலாக் பேசறது அசத்தலா இருக்கு. ரசிகர் மன்ற ஷோ நடத்தவும் போஸ்டர் அடிக்க, கட் அவுட் வைக்க நீங்க கொடுக்குற காசு எல்லாத்தையும் லஞ்ச கணக்குல கொண்டு வந்துடப் போறாங்க... கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!

சினிமாவுல மட்டுமல்லாம மன்ற கூட்டத்திலேயும் ஜாதிக் கட்சி தலைவர்களுக்கு பிரமாதமா பன்ச் வைக்கிறீங்க... அப்படியே கன்டினியூ பண்ணுங்க. தமிழ்நாட்டுல பொறந்து ஸ்ட்ராங்கான ஜாதி பேக்ரவுண்டோட இருக்கும் உங்களை எவனாவது எதிர்த்து பேசிட முடியுமா என்ன?

கலைஞரையும் மூப்பனாரையும் ரொம்ப பிடிக்கும்னு அப்பப்ப சொல்லிட்டு வந்ததுக்கு நல்ல நேரம் நெருங்கிடுச்சு. கலைஞரும் மூப்பனாரும் உருவாக்கின கூட்டணிக்கு அப்பவே ஆதரவு கொடுத்தேன்னு சொல்லி கூட்டணி வாரிசா ஆயிட்டீங்கன்னா சப்போர்ட்டுக்கு சப்போர்ட்டும் ஆச்சு...சரத்குமாரை காலி பண்ணின மாதிரியும் ஆச்சு!

விடுதலைப்புலி மேல உங்களுக்கொரு தனிப்பாசம் இருக்குதுங்கிறது தெரிஞ்ச விசயம்தான். ஆனா, வைகோ கிட்ட மட்டும் கொஞ்சம் தூரமா இருந்துடுங்க.ஒரு உறையில ரெண்டு வாள் இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க... நாயக்கர் ஓட்டை மொத்தமா அள்ளிட்டு வரணும்னா வைகோவை ஒரு விஷயமாவே நினைச்சு அரசியல் பண்ணாம இருக்கிறது நல்லது.

அப்படியே சிவப்பு மல்லி ஞாபகத்துல சிவப்பு சட்டை போட்டுக்கிட்டு கிராமத்து பக்கம் போய் வாய்ஸ் கொடுத்தா, சிவப்பு தோழர்களும் உங்களை சப்போர்ட் பண்ணுவாங்க. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போறதையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கோங்க. கடவுள் நம்பிக்கை இல்லைன்னு நீங்க சொல்லிட்டா கட்சிகளின் ஆதரவு கிடைக்கும். வீரமணி வேற வெள்ளை சட்டை போட்ட பெரியார்னு பாராட்டி பட்டம் கொடுக்க ரெடியா இருக்காரு!

அம்மாவை பத்தி அதிகமா எதுவும் பேசாம இருக்குறதுல இப்பவே உங்க அரசியல் சாணக்கியம் தெரிஞ்சுடுச்சு. நிச்சயமா நீங்கதான் அடுத்த கலைஞர்... அய்யய்யோ ரொம்ப நாள் எதிர்க்கட்சித் தலைவராவே இருப்பீங்கங்கிற அர்த்தத்துல சொல்லலை!

இத்தனை வருஷமா நாட்டாமை வேலை பார்த்துட்டு வந்தது இப்ப கை கொடுக்கலேன்னாலும் எதிர்காலத்துல கூட்டணியெல்லாம் சேரும்போது ரொம்ப உதவியா இருக்கும். அதனால நாட்டாமை வேலையை எக்காலத்துலேயும் வுட்டுடாதீங்க!

கடைசியா ஒரு விஷயம்...

படத்து ரிசல்ட் பத்தி கவலையே படாம இருக்குறது நல்ல விஷயம். யாரும் முந்திரி காட்டை தேட வேண்டிய அவசியமில்லை. படமே இல்லைன்னா தம்பிங்க வேற வேலை பார்க்க போயிடுவாங்க. மன்றத்து வேலையில மட்டுமே அவங்க கவனம் இருக்கணும்னா வருஷத்துக்கு குறைஞ்சது 3 படமாவது குடுத்தாகணும். கூடவே படம் ரீலிசுக்கு முன்னாடி திறந்த ஜீப்புல தெருமுனையுல நின்னு, படத்துல வர்ற டயலாக்கை எடுத்துட்டீங்கன்னா... நிச்சயம் நீங்க அடுத்த எம்.ஜி.ஆர்தான்!

எம்.ஜி.ஆருக்கு இருந்த ராமாவரம் தோட்டம் மாதிரி உங்ககிட்ட எதுவும் இருக்காது என்கிற நம்பிக்கையுடன்....ஒரு விசிலடிச்சான் குஞ்சு!

14 comments:

 1. //ரசிகர் மன்ற ஷோ நடத்தவும் போஸ்டர் அடிக்க, கட் அவுட் வைக்க நீங்க கொடுக்குற காசு எல்லாத்தையும் லஞ்ச கணக்குல கொண்டு வந்துடப் போறாங்க...
  //
  ஹி ஹி தலைவா எல்லா மன்றத்திலும் அப்படித்தான் நம்ம மன்றத்தையும் சேர்த்து தானப்பு சொல்றேன்..

  //சினிமாவுல மட்டுமல்லாம மன்ற கூட்டத்திலேயும் ஜாதிக் கட்சி தலைவர்களுக்கு பிரமாதமா பன்ச் வைக்கிறீங்க... அப்படியே கன்டினியூ பண்ணுங்க
  //
  //நாயக்கர் ஓட்டை மொத்தமா அள்ளிட்டு வரணும்னா
  //
  என்ன தல இப்படி கொயப்புறிங்க

  //படத்து ரிசல்ட் பத்தி கவலையே படாம இருக்குறது நல்ல விஷயம். யாரும் முந்திரி காட்டை தேட வேண்டிய அவசியமில்லை
  //
  பின்ன நாங்கெல்லாம் சொந்த படமா இருந்தா தானே கவலைப்படுவோம் வாய்ஸ் கொடுப்போம், பார்க்க வேண்டிய நேரத்தில பார்ப்போம்னு மெசேஸ் சவுண்டுலாம் கொடுப்போம், அடுத்தவன் பணத்துல எடுக்குற படம் எப்பிடி போன நம்ம எளவுக்கென்ன...
  என்ன தல நாஞ்சொல்றது சரிதானே...

  ReplyDelete
 2. எங்க கேப்டன கலாய்க்கிறதுன்னா உனக்கு அல்வா சாப்பிடுறமாதி கீதே...

  ReplyDelete
 3. Dont underestimate our Captain,He is an electrifying personality. Herez the proof-http://youtube.com/watch?v=yMlGCzvDWIU.watch it and decide urself;)

  ReplyDelete
 4. Intha Pathivu yaarukaaga? Rajinikanthukkaa? Vijayakanthukka?
  :)

  .:dYNo:.

  ReplyDelete
 5. //நம்ம மன்றத்தையும் சேர்த்து தானப்பு சொல்றேன்..
  //

  ஹி..ஹி... உங்களுக்கு 'புடிச்ச ' மன்றத்துல இதெல்லாம் வழக்கமில்லீங்கோ... ஒருவேளை ராமதாசு அன்புமணி வகையறா நற்பணி மன்றத்துல இருக்கலாம்! அதிலேயும் நாம தப்பா சொல்றதுக்கு என்ன இருக்குதுங்குறேன்.. ஊசி போட்டு டாக்ஸ் கட்டி சம்பாதிச்சதுதானே? :-)

  //அடுத்தவன் பணத்துல எடுக்குற படம் எப்பிடி போன நம்ம எளவுக்கென்ன...

  மூச்ச முட்ட சுத்தி வளைச்சு சொல்றதுக்கு பதிலா சுருக்கமா தி.மு.க தொகுதியில மரம் வெட்டிங்க பிரச்சாரம் பண்ற மாதிரின்னு சொல்லிடவேண்டியதுதானே?! :-)

  என்ன தல நாஞ்சொல்றது சரிதானே?!

  ReplyDelete
 6. //மூச்ச முட்ட சுத்தி வளைச்சு சொல்றதுக்கு பதிலா சுருக்கமா தி.மு.க தொகுதியில மரம் வெட்டிங்க பிரச்சாரம் பண்ற மாதிரின்னு சொல்லிடவேண்டியதுதானே?! :-)//

  சப்பாஷு..சபாஷு...!!!

  ReplyDelete
 7. //ஹி..ஹி... உங்களுக்கு 'புடிச்ச ' மன்றத்துல இதெல்லாம் வழக்கமில்லீங்கோ...
  //
  வேணாம் தல நானும் மன்றத்தில இருந்தவன் தான் ஆக்டிவா இல்லனாலும் இன் அண்ட் அவுட் நல்லா தெரியும் என்ன நடக்குனு, மன்ற விவகாரங்கள் வைத்து எழுதியது இங்கே
  http://kuzhali.blogspot.com/2005/07/1.html
  பங்கு பிரிக்கறதுல அடிச்சிக்கிட்ட மேட்டர் வரிக்கும் நல்லா தெரியும்... டபக்குனு நிரூபினு சவால் வுட்டு இணையத்தில் எழுதறதை நிறுத்திடறன்னு சொல்லிபுடாதிக, ஏற்கனவே சூப்பு நட்சத்திரத்தில ஒங்க சவால் ஒன்னு பாக்கி கீது http://www.blogger.com/comment.g?blogID=13840596&postID=111976632982980854

  http://chinnavan.blogspot.com/2005/08/blog-post_05.html

  //அடுத்தவன் பணத்துல எடுக்குற படம் எப்பிடி போன நம்ம எளவுக்கென்ன...
  பாபா சொந்த கம்பெனி படம் தானே

  ReplyDelete
 8. //பங்கு பிரிக்கறதுல அடிச்சிக்கிட்ட மேட்டர் வரிக்கும் நல்லா தெரியும்... //

  பண சப்ளை இருந்த்தேயில்லை. உங்க பக்கத்து ஆளுங்களே இப்படித்தான்னு கூட சொல்லி நழுவிக்க மாட்டேன். :-)

  //டபக்குனு நிரூபினு சவால் வுட்டு இணையத்தில் எழுதறதை நிறுத்திடறன்னு சொல்லிபுடாதிக, ஏற்கனவே சூப்பு நட்சத்திரத்தில ஒங்க சவால் ஒன்னு பாக்கி கீது //

  நல்லாவே நாபகம் கீது. சவால்ல தோத்தா, இது தெரியாம எப்படிடா புஸ்தகம் எழுதுனேன்னு திட்டிட்டு போக மறந்துடாதீங்க! :-)

  நிரூபிச்சு காட்டறேன்னு தினமலர்ல தேடாதீங்க. அப்புறம் தினமலரை புடிச்சு தொங்கிறதா உங்க இமேஜ் டேமேஜ் ஆயிடும்! :-)

  ReplyDelete
 9. Intha post title "Orangutae" illa "Confusiona". Ennapa Solla vara???

  ReplyDelete
 10. //நிரூபிச்சு காட்டறேன்னு தினமலர்ல தேடாதீங்க. அப்புறம் தினமலரை புடிச்சு தொங்கிறதா உங்க இமேஜ் டேமேஜ் ஆயிடும்! :-)
  //

  தல அந்த பத்திரிக்கை பெயர் தினமலர் அல்ல, தினச்சுடர், சில ஆயிரம் பிரதிகள் மட்டுமே விற்கும் உள்ளூர் தமிழ்பத்திரிக்கை, பெங்களூரில் உள்ள தமிழக தமிழர்கள்(நம்மள மாதிரி பொழப்புக்கு போனவக) டைம்ஸ் ஆப் இன்டியா,டெக்கானோடு நிறுத்திகொள்வார்கள், என்னை மாதிரி ஒரு சிலர் மட்டுமே தினச்சுடர் படிப்பர்(பெரும்பாலும் நான் மெஸ்ஸில் ஓசியில் படித்துவிடுவேன்), 2000ம் ஆண்டு இறுதி அல்லது 2001ம் ஆண்டு தொடக்கத்தில் ரஜினிகாந்த் கன்னட சாலுவலியா சங்கத்திற்கு இரண்டு இலட்ச ரூபாய் நன்கொடை அளித்ததின் பற்று சீட்டு பதிவு தினச்சுடரில் வெளியானது, ம்... அப்போதே நான் அதை சேகரித்து வைத்திருந்தால் ரஜினி ராம்கியிடமிருந்து இணைய வாசகர்களுக்கு விடுதலை வாங்கித்தந்திருப்பேன் :-) இப்போதும் தினச்சுடர் அலுவலகத்தை தொடர்பு கொண்டால் கிடைக்கும் என நம்புகின்றேன், ரஜினி பற்றி பொஸ்தகம் எழுதியிருக்கிங்க தகவலுக்காக சொல்கின்றேன் தெரிஞ்சுக்குங்க, அந்த பத்திரிக்கை கிடைக்கும் போது உங்களுக்கு தான் முதல்ல அனுப்புவேன் தல

  ReplyDelete
 11. இந்த தேர்தல்ல ஒரு பத்தோ பதினைந்தோ சதவீதம் ஓட்டு , ஒன்றிரண்டு எம்மெல்லே ...நல்ல பர்பாமென்ஸ் இருந்தால் விஜயகாந்த வருவதில் தப்பேயில்லை.(அவர் என்ன தன் படம் ஓடறதுக்கா அரசியல் பேசுறாரு)

  மனைவி,மைத்துனர் ஆகியோரை அரசியலில் இருந்து ஒதுக்குவது நீண்டநாள் பலன் தரலாம்.

  ReplyDelete
 12. தினசுடர் மேட்டர்ல உங்களுக்கு என்ன ஆச்சர்யம் ராமகி?

  ReplyDelete
 13. //தினசுடர் மேட்டர்ல உங்களுக்கு என்ன ஆச்சர்யம் ராமகி?

  எனக்கு எதிலேயும் ஆச்சரியம் இல்லை! :-)

  ReplyDelete
 14. //எனக்கு எதிலேயும் ஆச்சரியம் இல்லை! :-) //

  ராசா....

  ReplyDelete