Thursday, April 20, 2006

ஓரங்கட்டேய் - 9

Image hosting by Photobucket

1. விஷம் குடிச்சுட்டு தூக்கு மாட்டிக்கப் போன உங்க கட்சி வேட்பாளர் மேல காரை ஏத்துனது அ.தி.மு.காரங்கதானே?

2. வினிதா கூட நீங்க நடிச்ச சின்ன ஜமீன் படத்துக்கு அப்புறம் மதுரை ஆதீனம் வேற படம் ஏதாவது பார்த்தாரா?

3. குற்றாலம் மீட்டிங்கில் நடராசன் கூட ஸ்டோரி டிஸ்கஷனாமே? என்ன படம்? யார் ஹீரோயின்?

4. மூப்பனார் மாதிரி பேசுவீங்களாமே... ஹி..ஹி... உங்க பேச்சுக்கும் சன் டிவியில சப்டைட்டில் போடுவாங்களா?

5. பம்பரம் மாதிரி நீங்க தக்காளி உருட்டி விளையாடுனதை பத்தி சமூக பிரக்ஞையோடு கேட்டா என்ன சொல்லுவீங்க?

6. தமிழ்நாட்டுல 3 கோடி பேர் தேவர்னு சொல்லியிருக்கீங்களாமே... நாயுடு, முதலியார், நாடார், நாயக்கர் இவங்கெல்லாம் ஒரு பத்து பத்து பேர் இருப்பாங்களா?

7. சினிமாவுல கூட பன்ச் டயலாக் பேசாம நடிச்சுட்டீங்களே.. நிஜத்துல அதுவும் தயாநிதி மாறன் மாதிரி பேசறது கஷ்டமாயில்லே?

8. தேவர் காலடி மண்ணேய்ய்ய்யய்யய்ய்ய்ய்ய்ய்ய...ன்னு சிவாஜி மாதிரி இழுத்து பேசத்தெரியுமா?

9. 'நிக்கட்டுமா, போகட்டுமா'ன்னு கேட்டுக்கிட்டே இன்னும் போயஸ்கார்டனுக்கு பக்கத்திலேயே நிற்கிறீங்களாமே? ஆண்டிப்பட்டி (போஸ்டர்) லிஸ்ட்டுல உங்க பேரு இருக்குமா?

15 comments:

 1. இந்தத் தேர்தலின் காமெடியன் கார்த்திக்தானே... (இவர் வில்லனாக நடிப்பதாக (திரைப்படத்தில்) பேச்சு அடிபட்டதே; அந்தப் படம் எப்போ ரிலீஸாகும்?)

  ReplyDelete
 2. காமெடியன் அவார்ட்டுக்கு நான் ஆமையை ச்சீ நாட்டாமை நடிகர் சரத்குமாரை ஆதரிக்கிறேன்... அதே நேரத்தில் லேட்டா என்டிரி கொடுத்தாலும் நம்மை விலா நோக சிரிக்க வைப்பதில் எந்த குறையை வைக்கப் போவதில்லை என்ற காரணத்தினால் குரு மு.க. வின் அன்பு சிஷ்யன் விஜய டி ராஜேந்தரையும் நான் ஆதரிக்கிறேன்... ஆங் மறந்துட்டேனே பர்ஸ்ட் என்ட்ரி கொடுத்து மேடைக்கு மேடை ஊடு கட்டும் அண்ணன் ரிவலுஷன் புயலாரையும் மறக்க முடியுமா? மொத்ததில் இந்த தேர்தலில் 'ஓ' போடு...

  ReplyDelete
 3. ஊட்டி :""இங்கு தேர்தல் நடக்கிறதா, போர் நடக்கிறதா? என்று தெரியவில்லை,'' என பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் நடிகர் கார்த்திக் வருத்தம் தெரிவித்தார்.

  பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் ஊட்டி தொகுதியில் போட்டியிடும் ஆனந்தகுமார், நேற்று பகல் 1.25 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் மாநில தலைவர் நடிகர் கார்த்திக்கும் வந்திருந்தார்.

  அப்போது, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கார்த்திக் கூறியதாவது:

  பார்வர்டு பிளாக் கட்சியின், மதுரை திருமங்கலம் வேட்பாளர் செந்தில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தை போன் மூலமாக அறிந்தேன். இது வருந்தத்தக்க செய்தி. உண்மையான காரணம் குறித்த தகவல் இனியும் வரவில்லை. இதற்கு அரசியல் பின்னணி காரணமாக இருந்தால், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்.

  ஆண்டிபட்டியில் போட்டியிடுவதாக இருந்த பொன்முருகனின் குடும்பத்தினரை சிலர் மிரட்டியுள்ளனர். இதை அவரது அம்மா என்னிடம் போனில் தெரிவித்தார். இதனால் அவர், அங்கு நிற்பதில்லை. அவருக்கு பதிலாக யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து முடிவெடுப்போம். இச்சம்பவங்களுக்கு போலீஸ் துறை, தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய அறிவுறுத்தியுள்ளேன்.

  எந்த அரசியல் தலைவருக்கும் நாங்கள் எதிரியல்ல. ஆனாலும், எங்கள் கட்சிக்கு மட்டும் ஏன் இவ்வாறான மிரட்டல்கள் வருகின்றன என்பது புரியவில்லை. மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். இதற்கு சரியான பதிலை, வரும் தேர்தலில் மக்கள் அளிப்பர். இறைவன், எங்கள் இயக்கம், மக்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். இதற்கான நியாயம் நிச்சயம் கிடைக்கும். இங்கு தேர்தல் நடக்கிறதா, போர் நடக்கிறதா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை.இவ்வாறு கார்த்திக் கூறினார்.

  ReplyDelete
 4. பம்பரம் மாதிரி நீங்க தக்காளி உருட்டி விளையாடுனதை பத்தி சமூக பிரக்ஞையோடு கேட்டா என்ன சொல்லுவீங்க?

  ரஜினி ராம்கி இதைப் போல் ரஜினியிடமும் கேட்க முடியும்.பாட்ஷா படத்தில் நக்மா காட்டாத கவர்ச்சியா இல்லை ரஜினி போடாத கெட்ட ஆட்டமா. கார்த்திக் ரஜினி போல் போலி ஆன்மிகம்
  பேசுவதில்லை, பாபா பாபா என்று பிலிம் காட்டுவதில்லை.

  ReplyDelete
 5. //இதைப் போல் ரஜினியிடமும் கேட்க முடியும்.

  கண்டிப்பா.. நான் கேட்ருக்கேன்!

  BTB, கார்த்திக்கை இப்படி கம்பேர் பண்ணாதீங்க! தென் மாவட்டமே பத்தி எரியும்!

  ReplyDelete
 6. //கண்டிப்பா.. நான் கேட்ருக்கேன்!//

  ராம்கி:

  அதுக்கு என்ன சொன்னார் ரஜினி? வேஷம் போட்டது படத்துக்கு மட்டுமுன்னு சொல்லியிருப்பாரே?

  (பிகு: மேலே இருக்கிற அனானி நான் இல்லை)

  ReplyDelete
 7. //அதுக்கு என்ன சொன்னார் ரஜினி?

  அது வெட்டி மேட்டரு. விட்டுறுங்க!

  தக்காளி உருட்டருதுல நான் ஜாதியெல்லாம் பார்க்க மாட்டேன்னு நடிகர் கார்த்திக் சொல்லுவாரு; ஜாதி காட்சி த்லைவர் கார்த்திக் சொல்லுவாரா? இதுதான் மேட்டரு. அதுக்குள்ள வேற எங்கேயோ... :-)

  ReplyDelete
 8. கார்த்திக்கை இவ்ளோ சீரியஸா எடுத்துகிட்டு கேள்விகள் வேற...

  ம்..கேப்டனை நாலு வார்த்தை கேளுங்க தல

  ReplyDelete
 9. //கேப்டனை நாலு வார்த்தை கேளுங்க தல

  அதான்.. நம்ம தல குழலி கேட்டுட்டாரே! :-)

  நாமளும் கேட்டா மணிகண்டன் கோச்சுக்குவாரு! :-)

  ReplyDelete
 10. Kalakeeteenga, Nandri vendogolay poorthy senchadhuku...

  ReplyDelete
 11. நர்ஸி,தேர்தல் முடியறதுக்குள்ள நான் ஆஸ்பிட்டல்ல படுக்கணும்னு நீங்க முடிவு செஞ்சப்புறம்... நான் என்னத்த சொல்றது? :-)

  ReplyDelete
 12. ரியாத் நகர மையத்தில் அமைந்துள்ள பத்தாஹ்வில் என் கம்பெனி
  பஸ்ஸிற்காகக் காத்திருக்கும் போது,
  தமிழ்நாட்டு சங்கதிகள் குறித்து இரண்டு தமிழர் அளவளாவிக்கொண்டிருந்ததை
  எதேச்சையாகக் கேட்க நேர்ந்தது.

  “பத்திரிகைக்காரங்கள மொதல்ல ஒதைக்கணும். வரவர ஒரு செய்தியையும் நம்ப முடியறதில்ல. ஆளுக்காள் இஷ்டம்போல நியூஸ் தரான்” ரியாலை இழக்காமல் ஓசியில்
  செய்திவாசிக்கும் ஒருவர் அங்கலாய்த்தார்.

  தினமலர், அதிமுகவிற்கும், தினகரன் திமுகவிற்கும் ஆதரவான செய்திகள்
  வெளியிடுவதைத்தான் சொல்கிறாரோ என நினைத்தேன்.

  வாஸ்தவம்தான், கார்த்திக்கைப் பற்றி
  செய்தி வராத நாளே இல்லை
  (http://www.dinakaran.com/epaper/2006/Apr/20/6.htmL).ஆனால், ஒன்றுக்கு ஒன்று புறம்பான செய்திகளையே
  கார்த்திக்கிற்கு எதிராக வெளியிட்டவண்ணம் உள்ளன
  இந்தப் பத்திரிகை உலகம் - ஆதங்கப்பட்டார் ஒருவர். அதைத் தொடர்ந்து அந்த நண்பர்களுக்குள் ஒரு
  சீரியஸ் விவாதமே நடந்தது.

  “மனதில் என்ன படுகிறதோ, அதை
  அப்படியே வெள்ளந்தியாய்
  பேசுபவர்தான் கார்த்திக். சில சமயத்தில அவர் சொன்னதைத் திரித்தும், சில சமயத்துல அவர் சொல்லாததச் சொன்ன மாதிரியும்
  போடுராங்களே, இது பத்திரிகை தர்மமா?”

  “இப்ப என்ன சொல்ல வர்ற?”

  “கார்த்திக், அதிமுகவை எதிர்ப்பதாக ஒரு போதும் சொன்னதில்லை”

  “என்னைய்யா...ஜெவை நேரடியா எதிர்த்து ஆண்டிப்பட்டியில
  போட்டியிடப்போறதா முதலில் சொன்னாரு. அப்புறம் இல்லைன்னாரு. இப்ப என்னடான்னா,
  ஆண்டிப்பட்டியில...”

  “ஜெவை நேரடியா எதிர்க்கறதாத்தானே
  சொன்னாரரு. ஆண்டிப்பட்டியில
  போட்டியிடப்போவதாகச் சொல்லலியே”

  “ஜெவை நேரடியா எதிர்ப்பதுன்னா என்னய்யா? ஆண்டிப்பட்டில போட்டியிடப் போறார்ன்னுதானே...”

  “ஜெ-யின்னுதானே சொன்னாரு. ஜெ-யின்னா ஜெயலலிதான்னு ஏன்
  அர்த்தம் பண்ணிக்குற? அவர்
  ஜெ-யின்னு சொன்னது
  ஜெயந்திரரை!”


  “ஜெயந்திரரா? அவரு மேல கார்த்திக்குக் என்ன அப்படிக் கோபம்”

  “அப்படி கேளு. அகில இந்தியக்கட்சியின் மாநிலத் தலைவராப்
  பொரறுப்பேத்த ஒடனே, நேராப்போயி, நாத்திகரான கலீங்கரப் பாத்துருக்காரு கார்த்திக். தமிழ்நாட்ல
  உள்ள தேசியக் கச்சிகளோட
  வழக்கப்படி மொதல்ல சங்கராச்சாரியாரைத்தானே பார்க்கனுமின்னு ஜெயந்திரரு சில
  தென்மாவட்டக்காரங்ககிட்ட போட்டுக் குடுத்துட்டாரு. அதனால கடுப்பாயிட்டாரு கார்த்திக். எதுவா
  இருந்தாலும் என்னோட நேரடியாச்
  சொல்லியிருக்கலாமே. நானே
  வந்திருப்பேனே. எதுக்குக் கச்சிக்காரங்ககிட்ட எல்லாம் சொல்றாரு? நான் அவரு மாதிரி கிடையாது,
  நேரடியாவே ஜெயந்திரரை
  எதிர்ப்பேன். அப்படின்னாரு“

  “அடப்பாவிகளா. அதைத்தான்
  பத்திரிகையில்ல திரிச்சு எழுதிப்புட்டாங்களா?”

  அவர்கள், கார்த்திக் பற்றிய பேச்சை
  தொடர்ந்துகொண்டிருக்க...அதற்குள்
  என் பஸ் வர, நான் நகரவேண்டியதாயிற்று.

  வெங்கடேஷ் வரதராஜன்,
  ரியாத்

  ReplyDelete
 13. Venkatesh Varadharajan,

  Kalakiteenga! :-) why don't u post it in ur blog?

  ReplyDelete
 14. Please visit this

  http://www.aaraamthinai.com/arasiyal/states/2006/apr21state.asp

  Till today i was not aware of this...

  ReplyDelete
 15. //அது வெட்டி மேட்டரு. விட்டுறுங்க!//

  Come on Ramki, enlighten us with what he said.

  //அதுக்குள்ள வேற எங்கேயோ... :-)//

  thala, podhu ariva valara vida maateengalee :-(

  ReplyDelete