



அந்த அடர்ந்த கருவேலஞ்செடி காடு, சுனாமி தாக்குதலில் இறந்தவர்களின் சடலங்கள் சிக்கிக்கிடந்ததை ஞாபகப்படுத்துகிறது. இன்னமும் வாணகிரியின் பொது கழிப்பிடம் இந்த முட்புதர்கள்தான். வாணகிரியின் பெரிய மீனவ குடியிருப்புப் பகுதியான வாணகிரி குப்பத்தில் 72 குடியிருப்புகளுக்கான கட்டிடம் இப்போதுதான் வளர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள் இன்னும் தற்காலிக குடியிருப்புகளின்தான் வாசம். குடியிருப்புகளை ஒட்டி பளிச்சென்று புதிதான இருக்கும் கட்டிடங்களில் லைப்ரரியும், சமூகக்கூடங்களும் உண்டு.மண் மூடியிருக்கும் தார்ச்சாலை தெருவின் அகலத்தை பெரிதாக்கி காட்ட, சுனாமி நேரத்தில் அலங்கோலமாக கிடந்த அந்த சின்னத் தெரு வெறிச்சென்று இருப்பது வெளிப்படையாக தெரிகிறது....
தொடர்ந்து படிக்க... திசைகள்