Friday, June 23, 2006

ரொம்ப தூரம்தான்!

பெருமாள் கோயில் புளிசாதம்
சோ கமெண்ட்
அஞ்சாங்கிளாஸ் சைக்கிள்
தலைவர் ரிங்டோன்
ஜனகனமண முன்னுரை
சந்திரபாபு டான்ஸ்
வாழைத்தண்டு கூட்டு
சாவித்திரி குளோஸப்
சின்னக்கடைத்தெரு பிள்ளையார்
நதியா டிரெஸ்
கிழிந்து போன சத்திய சோதனை
வைத்தா டீ ஸ்டால் ஸ்டூல்
ஜோதிகா முழிப்பு
ஸ்வர்கேட் ஷீரா
பாருக்குட்டி கிளைமாக்ஸ்
இளையராஜா சோகம்
புன்செய் கோயில் பிரகாரம்
தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட கல்கண்டு பால்
வைரமுத்து தத்துவம்
பரங்கிப்பேட்டை பாபாஜி கோயில்
கிருஷ்ணா பேலஸ் சைக்கிள் ஸ்டாண்ட்
எஸ்.பி.பி தலைவர் பாட்டு
கர்ஜத் வடா பாவ்
கோயிஞ்சாமி பன்ச்
சந்திரபாபு நாயுடு தாடி
பியர்லெஸ் தியேட்டர் கவுன்டர்
கருணாநிதி சுறுசுறுப்பு
பீச் ஸ்டேஷன் காபி
அப்பா ஆயில் மசாஜ்
அரசு கேள்வி பதில் கட்டிங்ஸ்
பாட்டி பஜ்ஜி
வைஷ¤ வெட்கம்
காவி கலர் சட்டை
உப பாண்டவம்
அம்மா வாக்கிங்
தாடண்டர் நகர் கடைசித்தெரு
இரண்டாங்கிளாஸ் நோட்டு
பெரிய வாத்தியார் அடி
இந்தி கிளாஸ் கீதா சிரிப்பு
பிரவுண் கலர் பேண்ட்
உருத்திராட்ச கொட்டை
.
.
.

பின்கதைச்சுருக்கம்



'நமக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம்?'

'என்னுடையது என்று உங்களுக்கு பிடித்த எதையெல்லாம் சொல்லுகிறீர்களோ, அதையெல்லாம் ஒன்று விடாமல் ஒரு லிஸ்ட்டில் எழுதுங்கள். என்னுடைய பேனா, என்னுடைய சட்டை, என்னுடைய நகை, என்னுடைய அழகு என்று இப்படி லிஸ்ட் போடுங்கள். லிஸ்ட் எவ்வளவு நீளத்துக்கு வருகிறதோ அந்த தூரம்தான் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தூரம். பெரிதாக இருந்தால் ரொம்ப தூரம்; சின்னதாக இருந்தால் கொஞ்சம் தூரம். அவ்வளவுதான்!'

- சுவாமி சச்சிதானந்தாஜி, பிப்ரவரி 7, 1976, குமுதம்