Sunday, August 06, 2006

நிலைக்கண்ணாடி

ஜன்னலுக்கு வெளியே சோடியம் லைட்டுகளின் மஞ்சள் வெளிச்சத்தில் நேரம் போனது தெரியவில்லை. சிஸ்டம் நேரத்தை 2:30 AM காட்டியது. கிழக்கு பதிப்பகத்தின் எடிட்டோரியல் அறை. 'கடைசியா ஒரு தடவை படிச்சு முடிச்சுடு... மார்னிங் பிரிண்டுக்கு அனுப்பிச்சாகணும்'. படுக்கப்போகும்போது பாரா சொல்லிவிட்டு போனது ஞாபகத்துக்கு வந்தது. வேகமாக ஸ்க்ரோல் பாரை நகர்த்த ஆரம்பித்தேன். 'ஐயோ... ஸார்...சேப்டர் டைட்டில் போடவேயில்லையே!'

பத்ரி கெட்அப்பில் கால்மேல் கால்போட்டு கண்மூடி தரையில் கிடந்த பாரா நிமிர்ந்து உட்கார்ந்தார். உதவிக்கு வந்தது எடிட்டோரியல் பட்டாளம்.

'தேவுடா... தேவுடா.. டைட்டில் ஒண்ணு சொல்லுடா!'

'ஒரு சேஞ்சுக்கு மத்த கிழக்கு புத்தகங்களோட டைட்டிலையே சாப்டர் டைட்டிலா வெச்சுட்டா என்ன ஸார்?'

'கோயிஞ்சாமி... நல்ல ஐடியாடா! ராம்கி, ஒவ்வொரு சாப்டர்லேயும் வர்ற விஷயத்தை அப்படியே படிச்சுட்டே வா... நாம டைட்டில் சொல்லிட்டே வரலாம்.'

படிக்கப் படிக்க, டைட்டில்ஸ் பறந்து வந்தது. மிஸ்டர் தன்னம்பிக்கை, நாடகமல்ல வாழ்க்கை, காலம் உங்கள் காலடியில், வேதபுரத்து வியாபாரிகள், நிலமெல்லாம் ரத்தம், ஆளப்பிறந்தவர் நீங்கள், அழிவிலிருந்து வாழ்வுக்கு, டமால் டுமீல், மார்க்கெட்டிங் மாயாஜாலம்...

'ஸார்... இதுல கல்லக்குடி ஆர்ப்பாட்டம். எதுக்காக, எப்படி நடந்ததுன்னு சொல்றோம்... இதனால் திமுகவுக்கு கிடைச்ச லாபம், அரசியல் மாற்றங்கள் பற்றி ஒரு சின்ன அலசல்'

Photobucket - Video and Image Hosting

ஏதோதோ டைட்டிலுக்கு பின்னர் கடைசியாக முடிவானது. 'சப்தமா? சகாப்தமா?'

'அத்தியாயத் தலைப்புகள் அனைத்தும் கிழக்கு பதிப்பகத்தின் வேறு சில நூல்களின் தலைப்புகளாக அமைந்துவிட்டது தற்செயல் அல்ல'. கடைசியாய் மறக்காமல் வந்த அந்த அடிக்குறிப்புக்கு இன்ஸ்டண்ட் வரவேற்பு. அந்த நடுநிசி நேரத்தில் மு.க புத்தகத்துக்கு கிடைத்த முதல் கைதட்டல்!

கடந்த ஒரு மாதத்தில் புத்தகத்திற்கு கிடைத்த வரவேற்பும் விமர்சனங்களும் எதிர்பாராதது என்றுதான் சொல்லவேண்டும். வலைப்பூக்களில் தமிழினி முத்துவும், அலுவலக சகா லக்ஷமணனும் ஒரே மூச்சில் புத்தகத்தை படித்துவிட்டு விமர்சனம் எழுதியிருந்தார்கள். காரைக்குடி கவிஞர் வழக்கம்போல் தொலைபேசியில் நிறை குறைகளை அலசினார். அலுங்காமல் குலுங்காமல் ஒரு மெயில் தட்டிவிட்டதும் புத்தகங்களை அனுப்ப ஏற்பாடு செய்து கொடுத்த எனிஇண்டியன் ஹரன்பிரசன்னாவுக்கும் நன்றி சொல்லியாகவேண்டும்.

எலெக்ஷனுக்கு பின்னர் அரசியல் நிலைமைகள் மாறிவிட்டதால் புத்தகம் வெளிவருவதற்குள் நகவெட்டிக்கு வேலையில்லாமல் போய்விட்டது. நெய்வேலி புத்தக கண்காட்சிக்கு எடுத்துப்போகும்போது கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலேயே பத்து புத்தகம் விற்றுத்தீர்ந்துவிட்டதாக கிழக்கு சேல்ஸ் நண்பர்கள் சேதி சொன்னார்கள். 'நல்ல பேக்கேஜ். நிச்சயம் சூப்பர் ஹிட்டா வரும்'. பத்ரியின் வாக்கு ஒருவழியாக பலித்துவிட்டது.

கருணாநிதி பற்றி புத்தகம் எழுதியிருப்பதை வீட்டிலேயே ஆச்சரியமாகத்தான் பார்க்கிறார்கள். ஏதோ எழுதறானேன்னு பார்த்தா இப்போ அரசியல் பண்றானோன்னு சந்தேகப்பட்டிருப்பார்கள். எல்லோரும் அரசாங்கத்துக்கு ஊழியம் பார்க்கும் பரம்பரை. எலெக்ஷன் நேரத்தில் பூத் அதிகாரியாகவே இருந்து பழக்கப்பட்டுப்போனவர்கள். வீட்டில் அரசியல் பேசுவது யாருக்கும் பிடிக்காது. அதுவும் பாட்டிக்கு கருணாநிதியை பிடிக்கவே பிடிக்காது. அவளைப் பொறுத்தவரை பிடித்தவர்கள் லிஸ்ட் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினியோடு முடிந்துவிடும். நல்லத்துக்குடி செல்லியம்மன் கோவிலைத் தாண்டி எல்லேராமின் பெருமாள் கோயில் வழியாக எலெக்ஷன் பூத்துக்கு அழைத்துப்போய் வண்டியிலிருந்து இறக்கிவிடும்போதுதான் காதோரமாய் வந்து கிசுகிசுவென்று கேட்பாள். 'யாருக்குடா தம்பி ஓட்டு போடறது?'

பாட்டி என்னை விட்டுப்போய் இன்றோடு ஒரு வருஷமாகிறது. பேரன், பத்திரிக்கைகளுக்கு எழுதிக்கொண்டிருப்பதில் பாட்டிக்கு நிறைய பெருமை. ஒரு வேளை தாத்தாவின் ஞாபகம் வந்திருக்கலாம். என் நிலைக்கண்ணாடியில் தாத்தாவின் முகம்! ஐம்பதுகளில் தருமபுர ஆதீனத்தில் வெறும் கணக்குப்பிள்ளையாக இருந்த தாத்தாவிடம் மல்லுக்கட்டி சந்நிதானத்துடன் பேசச்சொல்லி அச்சாபீஸ் வேலை பார்க்கச்சொன்னவள் பாட்டிதான். நான்கே மாதத்தில் தாத்தா ஒரு அச்சகத்துக்கு நிறுவனர் ஆனார். பின்னாளில் சைவ சித்தாந்த நூல்களை அச்சிடுவதில் மும்முரமாக இருந்த தருமபுரம் ஞானசம்பந்தர் பிரஸ் உருவான கதை இதுதான். இவ்வளவுக்கும் பாட்டிக்கு எழுதப் படிக்க தெரியாது...கடைசிவரைக்கும்!

நேற்றைய நினைவுகள் - நாளைய எதிர்பார்ப்புகள்

22 comments:

 1. திரு.ரஜினி ராம்கி,

  உங்களுடைய படைப்பான "மு.க" விற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  இந்த உங்களுடைய புத்தகம் " இ-பதிப்பாக" கிடைக்கிறதா?

  நன்றி.

  ReplyDelete
 2. //Romba touchingana irunthatu Mayavarathare. Padichu midikkumbothu manasu romba ganamaiduchu. Ungaloda ovvoru padaippilaum, oovvoru valarchiyilum unga pattioda athama ungalai aasirvathikkum. Romba pasam vechavangaloda aathma eppovaum thunaiya koodave irukkum.

  Namakkal Shibi.
  //

  நேற்றைய நினைவுகளில் என் பின்னூட்டம். இப்போதும் அதையே சொல்கிறேன்.

  உங்களோட ஒவ்வொரு படைப்புலயும், ஒவ்வொரு வளர்ச்சியிலயும் உங்க பாட்டியோட ஆத்மா ஆசிர்வதிக்கும்.

  ரொம்ப பாசம் வெச்சவங்களோட ஆத்மா எப்பவும் துணையா கூடவே
  இருக்கும்.
  -----------------------------------
  நான் இன்னும் படிக்கவில்லை. படித்தவுடன் தனிப்பதிவாக எழுதுகிறேன்.

  ReplyDelete
 3. பொத்தகம் எழுதியதற்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு செல்ல நினைத்தேன்.

  * உளம் நிறை நல்வாழ்த்துகள் *

  ஆயினும்,

  நீங்கள் ஆங்கிலத்தைக் கலந்து பண்ணித்தமிழில் வலைப்பதிந்திருப்பது அருவெருப்பாக, மரவட்டையை மிதித்தது போல் உள்ளது. பண்ணித்தமிழில் எழுதும் தொற்றுநோய் உங்களை விரைவில் விட்டகலட்டும்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்...

  அடுத்து ஜெ. குறித்து ஒரு புத்தகம் எழுதப் போவதாக 'பட்சி' சொல்லிச்சே?!

  ReplyDelete
 5. புத்தகம் பெருவெற்றி அடைய வாழ்த்துக்கள் ராம்கி. படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 6. ஜெ.ராம்கி என்று பெயர் போட்டிருக்கிறீர்களா? என்னிடம் எத்தனை பெயரில் தான் எழுதுகிறாய் என்று ஓரிரு விசாரணை வந்தது.. நூல் இன்னும் படிக்கவில்லை..(வாங்கினால் தானே படிப்பதற்கு..)விரைவில் படித்துவிட்டுப் பேசுகிறேன்.. வாழ்த்துக்கள் ராம்கி..

  ReplyDelete
 7. அன்பு ராம்கி,
  புத்தகம் வெளியானதற்குப் பாராட்டுக்கள். இன்னும் படிக்க வில்லை. மனைவியும் குழந்தைகளும் மயிலாடுதுறையில் தான் இருக்கிறார்கள். வரும் போது உங்கள் புத்தகமும் வாங்கி வரச் சொல்லணும்.

  படித்துவிட்டு இன்னும் எழுதுகிறேன்..இந்தப் புத்தகத்துக்குப் பின்னால் உள்ள உங்கள் கடின உழைப்பை உணர முடிகிறது.
  வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  அன்புடன்,
  சீமாச்சு...

  ReplyDelete
 8. வாழ்த்துகள் ராம்கி

  மயிலாடுதுறை சிவா...

  ReplyDelete
 9. ராம்கி,
  உங்கள் இரண்டு புத்தகங்களுக்கும் ஆர்டர் செய்திருக்கிறேன் .படித்துவிட்டு சொல்லுகிறேன்

  ReplyDelete
 10. சிவா, பத்ரியிடம் கேட்டு சொல்கிறேன்.

  சிபி, நன்றி.

  வாசன் ஸார், வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறேன். நன்றி.

  ReplyDelete
 11. மாயவரத்து அண்ணாச்சி, பட்சி சொல்ற பஞ்சு டயலாக்கையெல்லாம் பகிரங்கமா சொல்லக்கூடாது! :-)

  சிலந்தி வலையாரே!, வாழ்த்துக்கு நன்றி

  சீமாச்சு ஸார், அவசியம் கொடுத்து அனுப்புகிறேன். வாழ்த்துக்கு நன்றி

  ராம்கி ஸார், பாராட்டு வந்தா அனுப்பி வைங்க... ஆட்டோ வந்தா அங்கேயே வைங்க! :-)

  ReplyDelete
 12. சுவராஸ்யமான பதிவு..

  வாழ்த்துக்கள் ராம்கி...
  நீங்கள் மேன்மேலும் பல நல்ல புத்தகங்கள் எழுத வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ராம்கி.
  இன்னும் படிக்கவில்லை.
  இந்தியா வரும் போது தான் வாங்க வேண்டும். இடையில் யாரும் வந்தால் அறுசுவை பாபு அண்ணன் மூலம் வாங்க முயல்கிறேன்.

  ReplyDelete
 14. மனமார்ந்த வாழ்த்துகள் ராம்கி
  இன்னும் படிக்கவில்லை
  சென்னைக்கு வந்து படிக்கிறேன்

  என்னது புத்தகத்தோடு மட்டுமா?

  இல்லைன்னா அரசியல்ல ஏதும் குதிக்கப்போறீங்களா?????????????

  ReplyDelete
 15. வாழ்த்துகள் ராம்கி,

  சென்னையில் எங்கு கிடைக்கும்?? மதுரையில் கிடைக்ககூடிய சாத்தியகூறுகள் எதுவும் உண்டா??

  படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 16. Your Netraya nenaivugal is really a good post and your grand ma's blessings be there on you always, for sure.

  Our almighty, makes sure to create one such person in all our life, like your Grand Ma.

  Looking forward for your grand success in the world of Modern Tamil Literature.

  ReplyDelete
 17. வாழ்த்துகள் ராம்கி

  ReplyDelete
 18. மனதின் ஓசை, நன்றி. அதென்ன வசந்த மாளிகை பிடிக்கும்னு போட்டுருக்கீங்க.. ரொம்ப அனுபவமோ? :-)

  நாகை சிவா, அவசரமேயில்லை. பொறுமையாக ஆனால் கட்டாயம் படித்துவிட்டு சொல்லுங்கள். பாபு அறுசுவையில் பிஸியாக இருக்கிறாரோ? வலைப்பூ பக்கமே காணலையே?

  மதுமிதா மேடம். தொலைபேசி வாழ்த்துக்கும் நன்றி. அரசியல்ல குதிக்கிறதா? ராஜபாளையத்துக்கே உரிய ஸ்பெஷலை நினைச்சுப்பார்த்தேன். ஐயோ.. என் பேண்ட் முக்கியம்! :-)

  தலை, எல்லா தமிழ் புத்தக கடைகளிலும் கிடைக்கும். மதுரையிலும் கிடைக்கும். அதுசரி, அமீரகத்திலிருந்து எப்போது மதுரைக்கு வந்தீர்கள்? சொல்லவேயில்லையே?

  சுரேஷ்ஜி, வாங்க.. வாங்க... முதல் புத்தகத்தை படிச்சுட்டு கருத்து சொல்லாம ஜூட் விட்டது போல் இந்த தடவை முடியாது காம்ரேட்!

  பாபா, லஷ்மன், நன்றி. நவீன தமிழ் இலக்கியம்னா.. அரசியல்தானே? :-)

  ReplyDelete
 19. பாராட்டுகள். அடுத்த புத்தகமும் வெற்றியடைய வாழ்த்துகள்

  ReplyDelete
 20. ராம்கி,
  தனிமடலில் சொன்னது போல ..மு.க புத்தகத்தை மிகவும் ரசித்துப் படித்தேன் .வித்தியாசமான பார்வையில் எளிதான நடையில் இருந்தது .விரிவான விமர்சனம் எழுத முயல்கிறேன்.

  ReplyDelete
 21. ஆமாம் அண்ணாத்த பாபு அண்ணன் பயங்கர பிஸி....
  :)

  ReplyDelete