Saturday, January 22, 2005

கூக்குரல்


'பீகாரை மாற்றுகிற வல்லமை தேர்தலுக்கு கிடையாது. ஜனநாயகம் என்கிற பெயரில் வளர்ந்தவிட்ட வக்கிரங்களை எல்லாம் பீகாரில் ஒழித்துக்கட்ட, பல 'உரிமை'களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிற நெருக்கடி நிலை பிரகடனம் தேவை. தேர்தல் மூலம் பீகாரில் மாற்றம் ஏற்படுத்திவிடலாம் என்று நினைப்பது- கான்ஸரை குணப்படுத்த, அஜீரண மாத்திரை சாப்பிடுவது போலத்தான்'

- சோ, துக்ளக் தலையங்கம்

'பெரியாரிஸ்ட்டுகள் வர்க்க பிரச்சினைகளில் அக்கறை காட்டாதது போல, இடதுசாரிகள் சாதியத்திலும் பகுத்தறிவிலும் அக்கறை காட்டவில்லை'

- ஞாநி, தீம்தரிகிட சங்கரபுராணம்

'இருபது வருட யுத்தம் அறுபதாயிரம் உயிர்களை பலிவாங்கியது; இருபது நிமிஷ சுனாமி தாக்குதலோ முப்பதாயிரம் உயிர்களை பலிவாங்கியிருக்கிறது. நம்மால் அடுத்தவருக்கு ஏற்படுத்தும் பாதிப்பை விட இயற்கையால் அதிகமான பாதிப்பை நொடிப்பொழுதில் ஏற்படுத்த முடிந்திருக்கிறது'

- இலங்கை அதிபரின் செய்தி தொடர்பாளர்

'லஞ்சம் வாங்கி சொத்துக் குவிப்பது வீணானது. அதை அனுபவப் பூர்வமாக நீங்கள் உணர வேண்டும். லஞ்சம் வாங்குவோர் பலருடைய குடும்பத்தை பார்த்துவிட்டேன். அவர்களுடைய வாழ்க்கையில் சத்தியமாக சந்தோஷம் இல்லை'

- லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.ஜி.பி பெரியசாமி
'ஒகே, ஓகே.. அதெல்லாம் இருக்கட்டும்... புத்தக கண்காட்சிக்கு போனியே.... என்னவெல்லாம் வாங்குனே'

'அட, இதானே வேண்டாங்கிறது, இப்படியெல்லாம் திடீர்னு கேட்டா என்னத்தை சொல்றது'

'பாதி நாள் புத்தக கண்காட்சியில இருந்தியே, அதான் நிறையா வாங்குனியோன்னு நினைச்சு தப்பா கேட்டுட்டேன்'

'ம்.. வாங்குனேன்.. மாலனோட சொல்லாத சொல், இரா.முருகனோட சைக்கிள்முனி, சுதாங்கனோட சுட்டாச்சு சுட்டாச்சு...'

'ப்பூ.. அவ்ளோதானா...'

'என்ன இப்படி கேட்டுட்ட... கையெழுத்துப் பிரதியா வாங்கியிருக்கேன். அதான்.. அவங்கவங்க கையெழுத்து போட்டு...'

'சரி, சரி...அப்புறம் என்னத்தை வாங்குனே...'

'வாஸ்ந்தியோட இந்தியா டுடே கட்டுரைங்க... ஒரு இங்கிலீபுஷ் டிக்ஸனரி அப்புறம் பத்ரி சொல்லியிருந்த தமிழ்நடைக் கையேடு, அப்புறம் ஒரு காந்தி புஸ்தகம்'

'அவ்ளோதானா...'

'இன்னும் நிறைய வாங்கணும்னு நினைச்சேன். எஸ். ராமகிருஷ்ணன் புஸ்தகம் கொஞ்சம், ஹரியண்ணாவோட அனுமன், முத்துராமனோட சதுரங்க சிப்பாய்கள்...'

'ஏன்... வாங்கலையா...'

'ஆட்டோகிரா·ப்போடதான் வாங்கணும்னு நினைச்சேன். ஹரியண்ணா ஆளையே காணோம். முத்துராமன், அசோகமித்திரன் கூட பிஸியா இருந்தாரு. எஸ். ராமகிருஷ்ணன் புஸ்தகம் வாங்கலாம்னா ஆபீஸ்ல லோன் போட்டுத்தான் வாங்கணும் போலிருக்கு!'

'அப்புறம்...'

'கிருபாஷங்கரு ஐஸ்கிரீம், ·பேண்டா, மசால்தோசை, பேல் பூரி வாங்கி கொடுத்தான். பத்ரியை நாலு கடைக்கு அழைச்சுட்டு போய் புக் வாங்க வெச்சு அவரு பர்ஸை காலி பண்ணேன்...'

'அப்புறம்...'

'என்ன அப்புறம் அப்புறம்னு நச நசன்னு கேட்டு தொல்லை பண்றே... இவ்ளோ கேட்குறியே...நீ என்னதான் வாங்கிட்டு வந்தே...'

'ஹி...ஹி... அதான் நீ வாங்கியிருக்கியே...அப்புறம் நான் எதுக்கு....'

4 comments:

 1. //பீகாரில் ஒழித்துக்கட்ட, பல 'உரிமை'களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிற நெருக்கடி நிலை பிரகடனம் தேவை.//

  பொன் எழுத்துக்களால் பொறிக்கவேண்டும்.

  ReplyDelete
 2. எழுதியது நான். அனானிமஸ் என்பதில் சொல்ல வந்ததின் அர்த்தமே மாறிவிடும் போல் இருக்கிறது. ஏதோ எமெர்ஜென்ஸியை 'எதிர்த்த' சோவின் நினைவஞ்சலியாய் இடப்பட்டது.

  ReplyDelete
 3. வணக்கமுங்கோ, நம்மகிட்ட, எஸ்.ராவோட (சே, என்ன மொழியா இது, ராவோட ன்னு அடிச்சவிடனே, தோஸ்து ஒருத்தன் போன்ல, ராவா வேணாம் மாமே, தண்ணி ஊத்தியடின்னு, அட்வைஸ் வேற)கையெழுத்துப் பிரதி "உலக சினிமா"கீது, படிச்சு முடிச்சுட்டு தந்துர்றேன். நான் வாங்கினது, என்னோட, blog-la கீது, படிச்சுப்பார்த்துட்டு, சொல்லுங்க எது வேணுமினு!!

  ReplyDelete
 4. நரேன்,

  //'ஹி...ஹி... அதான் நீ வாங்கியிருக்கியே...அப்புறம் நான் எதுக்கு....' //

  //கையெழுத்துப் பிரதி "உலக சினிமா"கீது, படிச்சு முடிச்சுட்டு தந்துர்றேன். //


  உறுத்தலான விஷயம்தான். ஆனா, 'உலக சினிமா'வுக்கு முன்னாடி ஓகேதான்!

  ReplyDelete