Friday, February 04, 2005

எழுத்தறிவிக்கும் இன்னொரு காவி

கேள்வி தப்பா இருந்தா பதிலும் தப்பாத்தான் இருக்கும். தப்பான கேள்விக்கு சரியான பதில் இருக்கவே முடியாது. ஒரு தப்பான கேள்விக்கு சரியான ஓரே பதில், கேள்வி தப்புன்னு சொல்றதுதான். தப்பான கேள்விக்கு மண்டையை உடைச்சு பதில் தேட நினைச்சா கிடைக்கிற பதில் சரியா இருக்கவே இருக்காது - கொஞ்சம் விசுத்தனமாக இருந்தாலும் கடவுள் பற்றிய விளக்கங்களெல்லாம் ரமண மகரிஷியின் மொழிகளுக்கு கோனார் நோட்ஸ் போட்டது போல கொஞ்சம் சுவராசியமாக இருக்கும். 'Where is God?' என்று கேட்பதை விட 'What is God?' என்று கேட்கணும்னு சொல்லி பகவான், சிருஷ்டி, ஜகத், வித்யா, என வார்த்தைகளை கோர்த்து ஆங்கிலத்தில் விளக்கிக்கொண்டே போவார். கொஞ்சம் டயர்டாகும் நேரத்தில் நிமர்ந்து உட்கார வைப்பதற்காக நடுநடுவே ஒரு ஜோக்.சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆஷ்ரமம், ரிஷிகேஷில் இருக்கிறது. வருஷாவருஷம் சென்னையில் நடக்கும் சொற்பொழிவின் கடைசிநாளான இன்று, எனக்கு பொறந்த நாள் என்பதால் ஆசி வாங்க கரெக்டான நேரத்துக்கு போய்விட்டேன். ஒரு வாரமாய் தினமும் இரண்டு மணி நேரம் வேதங்களின் மகிமை பற்றி அவர் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்க வந்த மெத்தப்படித்த கூட்டத்தால் காமராஜ் ஹால் நிரம்பி வழிகிறது. வயது வித்தியாசமின்றி தரையில் உட்கார்ந்தெல்லாம் பேச்சை கவனிக்கிறார்கள். 1999ஆம் வருஷம் புனேவில் கேட்டதற்கும் சென்னையில் கலைஞர் அரெஸ்ட் போது இதே காமராஜ் ஹாலில் கேட்டதற்கும் வித்தியாசம் காட்டாத அதே வியாக்யானங்களும் விவரிப்புகளும். இந்து மதம், கிறிஸ்து மதம் என்றெல்லாம் வித்தியாசம் காட்டாமல் மூட நம்பிக்கைகளை பற்றி விவரிக்கும்போது கொஞ்சம் எள்ளல்.ஓகே. அதெல்லாம் இருக்கட்டும். நான் எழுத வந்த விஷயமே வேறு. குன்றக்குடி அடிகளாருக்கும் அறிவியலுக்கும் உள்ள சம்பந்தம்தான் தயானந்த சரஸ்வதிக்கும் கல்விக்கும். ஆர்ஷ வித்யா குருகுலம் என்கிற பெயரில் வேதகாலத்து நெறிமுறைகளையும் வாழ்க்கை முறைகளையும் வலியுறுத்தும் கல்விக்கூடங்களை நாடு முழுவதும் இலவசமாக நடத்தி வருகிறார்.
இதன் தலைமையகம் கோயம்புத்தூர் பக்கத்தில் ஆனைகட்டி. 1997ஆம் வருஷம் 'தி ஆஷ்ரம்' ஸ்கூல் ஆண்டுவிழாவில் பேசும்வரை, சுவாமி தயானந்த சரஸ்வதியை வெறும் காவி கட்டினசாமியாராகத்தான் நினைத்திருந்தேன். வேதகால கல்விமுறையை இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும் சாத்தியமான விஷயம்; அதுவே இந்தியாவின் ஆன்மா மாதிரியான விஷயம் என்றெல்லாம் அவர் பேசும்போது கேட்க நன்றாகத்தான் இருந்தது.

மெக்காலேவின் கல்விமுறைக்கு குட்பை சொல்லிவிட்டு வேதகாலத்து கல்விமுறையை திரும்பவும் வரவேற்பதில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது பிஜேபி ஆட்சியிலேயே தெரிந்துவிட்டது. இந்துத்வா, காவி கடப்பாரை முத்திரை, குருகுல கல்வி முறைக்கு இருக்கும்வரை சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் ஆர்ஷ வித்யா குருகுலம் அசராமல்
காவிச் சாயத்தை பூசிக்கொள்ளாமல் தனது பணியை தொடர்கிறது. ஆனைகட்டியை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருவாரூர் பக்கத்தில் மஞ்சக்குடி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட குருகுலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். குருகுல கல்வியாக இருந்தாலும் நான்கு குழந்தைகளுக்கு ஒரு கம்ப்பூட்டர் என்கிற வீதத்தில் நவீன கல்விமுறைக்கு கொஞ்சமும் குறையாத தரம்.ஆர்ஷ வித்யா, கல்விப்பணியோடு நின்றுவிடாமல் சமூகப்பணியையும் செய்துவருகிறது. ஆனைகட்டியை சுற்றியிருக்கும் அறுபது குக்கிராமங்களை தத்தெடுத்து எல்லா கிராமங்களுக்கும் சாலைவசதி, பள்ளிக்கூடங்கள், மின்விளக்குகள், கழிப்பிட வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்து தந்திருக்கிறது. சுனாமி பாதிப்பின் போது நாகப்பட்டினம் பக்கத்திலிருக்கும் செறுதூர்
கிராமத்தை தத்தெடுத்து மீனவர்களுக்கு குடியிருப்புகளையும் படகுகளையும் ஏற்பாடு செய்து தந்திருப்பதுடன் சென்னை கோவளம் பக்கத்தில் ஒரு குக்கிராமத்தையும் தத்தெடுத்திருக்கிறது.கம்மிங் பேக் டு த பாயிண்ட். நாடு முழுவதும் இருக்கும் 614 மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு இடத்திலாவது ஆதரவற்ற குழந்தைகளுக்கான குருகுலத்தை ஆரம்பிப்பது என்கிற நோக்கத்துடன் பணிகளை ஆரம்பித்திருக்கிறார்கள். சென்னையில் வேளச்சேரி பக்கமும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலும் ஆர்ஷ வித்யா குருகுலங்கள் தொடங்கப்பட இருக்கின்றன. இதற்கென்று பதினோரு பேர் கொண்டு கமிட்டி அமைக்கப்பட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த பதினொரு பேர் கமிட்டியில் ஒரே ஒரு வி.வி.ஐ.பி. அது யாருன்னு சொல்லியே ஆகணுமா? 'எலி'யை பிடிச்சுட்டு அப்படியே வலது புறமா மேலேறி எட்டிப் பாருங்க... தாடியை தடவிட்டு சிவனேன்னு உட்கார்ந்திருப்பாரு!

20 comments:

 1. Happy Birthday, Ramki! I met Sri Dayananda Saraswati when he was here camping in his Pennsylvania ashram. He is definitely a very eloquent speaker, but some his very conservative statements made me squirm. Also he has a pre-occupation with stopping religious conversions and "saving" the Hindu religion. He was nice enough to invite me to have dinner with him, so I should not say anything too bad, I guess :-)

  ReplyDelete
 2. I have listened to his disciple (Swami) Paramarthananda's Bhagavadgita and Viveka sudamani audio recordings. He also insists on the same topics that you mentioned.

  Some of the teachings are really good , esp about What is God?

  Note : I am not a follower of any swamiji's :).To me Gandhiji is the real swamiji, who not only taught but lived by his teachings.

  ReplyDelete
 3. துக்ளக்கில் இவரது பதில்களைப்ப் படித்து வந்திருக்கிறேன். சாதியமைப்பைக் காப்பாற்ற அதை நவீன மொழியில், அவரவர் தமது கடமையைச் செய்யவேண்டும், கடமை பிறப்பிலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்றெல்லாம் ஜல்லியடித்திருந்தார். யாரோ அதை முன்வைத்து திண்ணையில் ஒரு கட்டுரைகூட எழுதியிருந்ததாக நினைவு.

  அப்புறம் இந்த வேதகால கல்வி என்ற பழைய கள்ளைப் படித்தஉடன் தான் தோன்றியது. வேதகாலம் என்ற வரையறுத்துச்சொல்ல முடியாத காலத்தொகுதியில் எந்தக் கால கல்வியை அடிப்படையாக கொள்கிறார்கள் இவர்கள்? அதிலும் அந்தக் காலப் பகுதியிலேயே கூட ஒன்றோடு ஒன்று முரண்பட்ட பல்வேறு தத்துவங்களின் அடிப்படையில் பள்ளிகளும் வாழ்க்கைமுறைகளும் இருந்தன. ஆனால் இந்த வேதகால கல்விமுறையாக இன்று பெரும்பாலான அமைப்புகளால் (pro hindu) சித்தரிக்கப்படுவது மெருகூட்டப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட சாதியக் கட்டுமானங்களை காப்பாற்றும், பிராமண மதிப்பீடுகளை தூக்கிப்பிடிக்கும் வழிகளைத்தான்.

  பாரதியின் ஒரு கூற்றுதான் நினவுக்கு வருகிறது, 'பழங்கால நாகரீமே சிறந்தது என்பவர்கள் எந்த நாகரீகத்தைக் குறிப்பிடுகிறார்கள், உடையில்லாமல் அலைந்த காலத்தையா, அல்லது வேலும் அம்பும் எடுத்துக்கொண்டு திரிந்தகாலத்தையா?' (இந்த பாரதியின் குறிப்பு நினைவில் இருந்து எழுதியதால் வார்த்தைக்கு வார்த்தை சரியானதல்ல, ஆனால் கருத்து இதனோடு ஒத்ததே)

  நன்றி.

  ReplyDelete
 4. அன்பின் ராம்கி,
  சுவாமி தயானந்தா தங்கமான மனிதர். ஒவ்வொரு ஜனவரி ஒண்ணாம் தேதியும் இங்கு பென்சில்வேனியாவில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு வருவார். புதுவருடத்தில் அவரைச் சந்தித்து அருளுரை கேட்டு ஆசீர்வாதம் பெறுவது என் வழக்கம். வருடமும் மிக நன்றாகப் போகும். இந்த வருடமும் அவரைச் சந்தித்தேன். ஆசி பெற்றேன்.
  உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!!!
  என்றென்றும் அன்புடன்,
  சீமாச்சு...
  அன்பின் தங்கமணிக்கு.. வாழ்க்கை என்பது ரொம்ப பெரிய விஷயம். எவ்வளவுக்கெவ்வளவு மனதைப் ப்ரந்து விரிய வைக்கிறீர்களோ அவ்வளவு உயர உயரப் பறக்கலாம்.. உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும் மேம்பட என் நல்வாழ்த்துகள்..
  என்றென்றும் அன்புடன்,
  சீமாச்சு..

  ReplyDelete
 5. நன்றி சீமாச்சு உங்கள் வாழ்த்துகளுக்கு!
  ஆனால் வாழ்க்கை என்பது பார்வை (அனுபவம்)சார்ந்தது, கருத்துக்கள் சார்ந்தது அல்ல நண்பரே! வேதகாலத்தில் வாழ்க்கை இனிமையாக இருந்தது என்று நம்புவதும், மகிழ்ச்சி அடைவதும் ஆட்சேபணைக்குரியதல்ல; ஆனால் வாழ்க்கை இங்கு, இந்தக் கணத்தில் இருப்பது, அதன் சகல குணாம்சங்களோடும், பரிமாணங்களோடும்.

  ராம்கி, பிறந்த நாள் வாழ்த்துகள்!மறந்துவிட்டேன் சொல்ல.

  ReplyDelete
 6. பொறந்த நாள் வாழ்த்துக்கள் தல. உங்க எதிர்வினையை காலச்சுவடுல படிச்சேன். நிறைய கேள்விகள் இருக்கு, சரி அத விடுங்க இப்ப!!

  ReplyDelete
 7. ஸ்ரீகாந்த்,

  நன்றி. மதமாற்றம் பற்றிய சுவாமிஜியின் கருத்துக்கள் விவாதத்திற்குரியதுதான். இந்து சமய மூடநம்பிக்கைகளையும் கிண்டலடிப்பது நிறைய சுவாமிஜிகள் செய்யாத விஷயம்.

  மெய்யப்பன்,

  நானும் சுவாமிஜியின் தீவிர சிஷ்யனில்லை. காந்திஜி சொல்வதைத்தான் இவரும் சொல்வது போல தெரிகிறது. என்ன... கதர் வாசத்துக்கு பதில் காவி வாசம்!

  தங்கமணி,

  சாதியமைப்பு பற்றி இவர் பேசி நான் கேட்டதில்லை. ஆனால் வேதகால கல்விமுறை பற்றி எனக்கு கொஞ்சம் நல்ல அபிப்பிராயம் இருக்கிறது. அதற்கும் சாதி கட்டுமானங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக சொல்லப்பட்டாலும் இன்றைய காலகட்டத்தில் அதே லாஜிக் ஒத்துவருமா என்பது சந்தேகம்தான்.

  சீமாச்சு,

  தயானந்தா என்னும் தனிமனிதரிடம் எனக்கு பழக்கமில்லை. அவரைப் பற்றியும் அவரது பென்சில்வேனியா ஆசிரமத்தை பற்றியும் சுவராசியமான விஷயங்கள் இருந்தால் மறக்காமல் எழுதுங்கள்.

  நரேன்,

  காலச்சுவடு எதிர்வினையா? அய்யோ, ஏன் ஞாபகப்படுத்துறீங்க?!

  துளசி, மதி அக்காக்களுக்கு தம்பியின் நன்றிகளும் வணக்கங்களும்.

  ReplyDelete
 8. Wish you a Very Happy Birthday Ramki.

  Many more returns of the day.

  Thanks
  Maruthiah

  ReplyDelete
 9. ஹலோ ரஜினி ஸார்,

  பிறந்த நாள் வாழ்துக்கள்.

  கேள்விக்கு ஏத்த மாதிரிதான் பதில் கிடைக்கும்னு நானே கூட ஒரு தடவை உங்களுக்கு பின்னூட்டத்திலே சொல்லியிருந்தேனே. ஞாபகம் இருக்கா?

  தங்கமணி சொன்ன விஷயத்த தயானந்த சரஸ்வதி துக்ளக்கில் பேசியிருந்தார். அதை திண்ணையில் ஜெயமோகன் 'தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன?" என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் வழக்கம் போல் தயானந்த சரஸ்வதியை பற்றி பேசாமல் தர்கத்தை திரித்து திராவிட இயக்கங்களை திட்டியிருந்தார்.

  ReplyDelete
 10. நன்றி ரோசாவசந்த், அது ஜெயமோகனா? மறந்துவிட்டேன்.

  ReplyDelete
 11. இது ஜெயமோகனின் கட்டுரையின் தொடக்கம்.

  "சமீபத்தில் ஒரு வார இதழில்[துக்ளக்] சுவாமி தயானந்த சரஸ்வதி வாசகர் கேள்விக்கு பதிலளித்தார்.


  கெ. அசோகன் பள்ளியாடி


  கேள்வி : யாவரும் வேதம் கற்றுக் கொள்வதும் பிறருக்கு கூறுவதும் ஆலய அர்ச்சகர் ஆவதும் குற்றம் என்று இதிகாசங்கள் கூறுகின்றனவா?


  பதில் : கடமையை செய்து மனதைப் பக்குவப்படுத்தி முழுமனிதனாக நாம் ஆகவேண்டும். இந்தப் பக்குவத்தினால்தான் மோக்ஷத்தை கொடுக்கக் கூடிய ஞானத்தை அடைய வேண்டும். கடமைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று தான் கூறப்பட்டிருக்கிறது. கடமையை மாற்றினால் ஒருவர் பக்குவத்தை அடைவார் என்று சொல்ல முடியாது. ஒருவர் கடமையைச் செய்து பக்குவத்தை அடைவது நல்லது. ஏனென்றால் இது ஒன்றுதான் விசாரம் செய்து பார்க்கும்போது நிலைப்பட்டு இருக்கும் எல்லாவிதமான கொள்கைகளும் அடிபட்டுப் போகும்.


  முதல் வாசிப்பில் தயானந்தர் என்ன சொல்ல வருகிறார் என்பதே எனக்குப் பு£¤யவில்லை. மீண்டும் மீண்டும் படித்து கேள்வி கேட்கப்பட்ட தருணத்துடன் பொருந்திய போதுதான் தௌ¤வு ஏற்பட்டது. கேள்வி சாதி பற்றியது. 'யாவரும்' என்று குறிப்பிடப்படுவது அதுதான் எல்லா சாதியினரும் வேதம் படிக்கலாமா, அர்ச்சகராகலாமா, பிராமணர் மட்டும் அதைச் செய்தால் போதுமா என்பதே கேள்வி.


  தயானந்த சரஸ்வதி 'கடமை' என்பது என்ன? இங்கு சாதிக்கடமைதான். பிறப்பின் மூலம் தீர்மானிக்கப்படும் தொழில்தான். இல்லையேல் வேதம் படிப்பதும் கோயிலில் அர்ச்சகராக ஆவதும்தான் தன் கடமை என யாரும் நினைக்கலாமே? தயானந்தர் சொல்வது இதுதான். இக்கடமையை சா¤வர செய்து தான் மோட்சம் அடையமுடியும். கடமையை மாற்றுவதனால் பயனில்லை. காரணம் உண்மையில் அக்கடமை மட்டுமே நீடித்து நிற்கும். மற்ற எல்லாவிதமான கொள்கைகளும் அடிபட்டு போகும். எக்கொள்கைகள்? மனிதன் பிறப்பால் சமம் என்றும், மனிதர்கள் அனைவருக்கும் உ£¤மைகளும் கடமைகளும் பொதுவே என்றும் கூறும் நவீன மனிதாபிமான முற்போக்குக் கொள்கைகள்.


  ஆக, தயானந்த சரஸ்வதி மிகுந்த மொழித்திறனுடன் தன் பதிலை அமைத்திருப்பதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. இந்த தேசத்தில் அமுலில் உள்ள தீண்டாமை ஒழிப்புச் சட்டம். தன் பதில்களில் தயானந்தர் கூறுவது போல இங்கு 'ஆன்மிக வழிகாட்டி' களின் ஆலோசனைப்படி நடக்கும் அரசு வருமெனில் அச்சட்டம் ரத்து செய்யப்படலாம். தயானந்தா¤ன் அருளுரையில் தௌ¤வு ஏறலாம்."

  இதற்கு பின்தான் ஜெயமோகன் தனது ஸாக்கர் விளைய்யட்டை துவக்குகிறார். இதிலிருந்து எல்லா தயானந்த சர்ஸவதி பேசுவது மற்றும் எல்லாவற்றிற்கும் எப்படி பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் திட்ட முடியும்? மேலே ஜெயமோகன் கட்டிரையை படிக்க
  http://www.thinnai.com/pl0415042.html

  தங்கமணி இதை முன் வைச்சு ஒரு தனி பதிவே நீங்க எழுதினீங்களே! அதையே மறந்து போகும்படி என்ன ஆச்சு? ஏதாவது காதல், கீதல்..! அப்படி இருந்தா சந்தோஷம்தான்!

  ReplyDelete
 12. ரஜினி, அநாமதேயம் டீஃபால்டா இருக்கறத மாத்துங்க, ப்ளீஸ்!

  சென்ற பின்னூட்டம் நன்து!

  ReplyDelete
 13. "முதல் வாசிப்பில் தயானந்தர் என்ன சொல்ல வருகிறார் என்பதே எனக்குப் பு£¤யவில்லை"யாம்! மீண்டும் மீண்டும் படித்து கேள்வி கேட்கப்பட்ட தருணத்துடன் பொருந்திய போதுதான் தௌ¤வு ஏற்பட்டதாம். அவ்வளவு அப்பாவி ஜெயமோகன் எவ்வளவு புத்திசாலியாய் பின்பாதியில் தர்கிக்கிறார் பாருங்கள்!

  ReplyDelete
 14. நன்றி ரோ.வ, தங்கமணி, மருதையா...

  வர்ணாசிரமம் பற்றி தயானந்த சரஸ்வதி, ஜெயமோகன் கருத்துக்களை இதுவரை நான் படித்ததில்லை. அதைப்பற்றி வெளிப்படையாக விவாதிக்க அவர்களுக்கு இருக்கும் தயக்கம்தான் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் காந்தியின் கருத்துகள் ஏற்புடையதாக இருக்கின்றன. அதைப்பற்றி தமிழோவியத்தில் நான் எழுதியதிலிருந்து...

  காந்தீய விழுமியங்கள் - ஹரிஜன்கள்

  தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி அழைப்பது என்கிற சர்ச்சைக்கு வயது ரொம்பவே ஜாஸ்திதான். 'ஹரிஜன்' என்கிற பதத்தை முதன்முதலாக பயன்படுத்தியவர் காந்திஜிதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஹரிஜன் என்கிற சொல் கூட தங்களை இழிவுபடுத்துவதாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கருதுவதால் 'தலித்' என்கிற சொல்லாக்கம் தற்போது பிரபலமாகிவருகிறது. இதுவும் ஒரு காலகட்டத்திற்கு பின்னர் ஒதுக்கி வைக்கப்படக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

  'ஹரிஜன்' என்பதன் அர்த்தம் ஆண்டவனின் அருளை நேரடியாக பெறக்கூடிய பாக்கியம் பெற்றவர்கள் என்பதுதான். தெய்வமே துணைக்கு நிற்கும் ஜனங்கள் என்று குறிப்பிட மிக பொருத்தமானவர்களாக நான் நினைப்பது இந்த திக்கற்ற, நாதியற்ற, நலிவுற்ற, இழிவாக கருதப்படுகின்ற ஜனங்களைத்தான்.'
  (ஹரிஜன், 11.2.1933)

  திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று நாம் சொல்வதைப்போல, தாங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டதாக தாழ்த்தப்பட்டவர்கள் நினைக்கக்கூடாது என்பதற்காகத்தான் காந்திஜி கடவுளின் நேரடி அருட்கடாட்சம் பெற்றவர்கள் என்பதற்காக ஹரிஜன் என்று குறிப்பிட ஆரம்பித்தார். இந்தியா சுதந்திரமடைவதற்குள் தீண்டாமை போன்ற விஷயங்கள் நாட்டை விட்டு அகலவேண்டும் என்று சொன்னார் காந்திஜி. அவர் நினைத்தது சரிதான் என்பது இன்றும் ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

  'அந்நிய ஆட்சியில் கீழ் 'பஞ்சமர்' என்று சொல்லப்படும் ஹரிஜன்களின் நிலைமை சீர்படவில்லை என்றால், சுயராஜ்யம் என்னும் போதை நம் தலைக்கேறும்போது அவர்களின் நிலையை மாற்ற நம்மால் முடியாது'
  (யங் இந்தியா, 12.6.1924)

  தீண்டாமையெல்லாம் ஹிந்து மதத்தில் சகஜம்தான் என்று நினைத்துக்கொண்டு சும்மா இருப்பவர்களுக்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்துவிடுவதால் ஒரு பயனுமில்லை. எந்தவொரு மதத்தின் சம்மதத்தையும் பெறாத தீண்டாமை போன்றவற்றை ஒழிப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் முக்கியமாக ஒவ்வொரு இந்துவுக்கும் கடமையாக இருக்கவேண்டும் என்கிறார்.

  'பசுவைப் போற்றி பூஜை செய்ய விதித்திருக்கும் ஒரு மதம், மனிதர்களை இரக்கமின்றி, மனிதத்தன்மைக்கு புறம்பாக விலக்கீடு செய்ய இடமோ, அங்கீகாரமோ அளிக்கக்கூடியதன்று. மகிமை வாய்ந்த மதத்தை அவமதிப்பில் ஆழ்த்தி வைத்திருக்கும் வரை இந்துக்கள் சுதந்திரம் பெற அருகதையற்றவர்கள். நமது நாட்டில் ஐந்தில் ஒரு பங்கினர் நம்மோடு சரிநிகர் சமானமாக கூடி வாழும் உரிமையை மறுப்பது கடவுளையே மறுப்பதாகும்' (யங் இந்தியா 6.10.1921)

  நூற்று பத்து கோடியை தொடும் இந்நேரத்திலும் காந்திஜி சொல்வது போல ஐந்தில் ஒரு பங்கு மக்கள் ஒதுக்கப்பட்டு வருவதை பார்க்கமுடிகிறது. இந்த கடையவர்களில் லிஸ்ட்டில் தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், ஊனமுற்றோர் என்று எல்லோரும் அடக்கம். இவர்களுக்கான சமூக நீதியை வலுக்கட்டாயமாக அமலாக்க முடியாது என்பதே காந்திஜி சொல்லும் விஷயம். அப்படி வலுக்கட்டாயமாக ஆக்கப்படும் பட்சத்தில் அது தற்காலிகமானதாகவே இருக்கமுடியும் என்பது அவரது நம்பிக்கை.

  ஒடுக்கப்பட்டவர்களை பற்றிய சிந்தனைகள் காந்திஜியை ஆக்ரமித்ததற்கு காரணம் தென்னாப்ரிக்காவில் ரயிலுக்கு வெளியே தூக்கியெறிப்பட்டது மட்டுமல்ல. திரும்பவும் டர்பன் நகருக்கு வரும்போது காந்திஜி ரசித்து படித்த ரஸ்கின் எழுதிய 'அன் டு திஸ் லாஸ்ட்' புத்தகமும் ஒரு காரணம். ரஸ்கின் வலியுறுத்திய சமத்துவம், சகோதரத்துவம் உள்ளக்கிய மூலக்கோட்பாடுகளையே இந்தியா திரும்பியதும் பல பிரச்னைகளுக்கு தீர்வாக அவர் பயன்படுத்தி வந்தார். முக்கியமாக சமூக படிநிலைகளின் அடித்தளத்திலிருக்கும் ஹரிஜனங்களை ஒதுக்கக்கூடாது என்பதற்காக காந்திஜி வலியுறுத்திய விஷயங்கள் ரஸ்கினின் மூலக்கோட்பாடுகளை உள்ளடக்கியவைதான்.

  ஹரிஜன குடியிருப்புகளில் சுகாதாரம் இரண்டாம் பட்சமாக கருதப்பட்டு வருவது பற்றி காந்திஜி கவலைப்பட்டிருக்கிறார். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர பல வழிமுறைகளையும் சொல்கிறார். பல வழிமுறைகள் இன்றைய காலத்துக்கு ஒவ்வாத விஷயமென்றாலும் சுகாதாரம் பேணுவது பற்றிய விஷயங்கள் இன்னும் சரிவர கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று சொல்லாம். இக்குறைகளை நீக்க காந்திஜி சொல்லும் அறிவுரைகள். ஹரிஜனங்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு சென்று அவ்விடங்களை சுத்தம் செய்வது, முடிந்தால் ஹரிஜனங்களையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு சுகாதர பணிகளை மேற்கொள்வது, ஹரிஜன சிறுவர்களுக்கு சுற்றுப்புறத்தை பற்றியும், வரலாறு, புவியியல் பற்றிய விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பது. முக்கியமாக அவர்களை அழுக்கு போக குளிப்பாட்டி உடல் நலம் பேணுவது பற்றி கிளாஸ் எடுப்பது என்று நிறைய.

  ஹரிஜன்களை பற்றி பேசும்போது வர்ணாஸ்ரமம் பற்றியும் பேசியே ஆகவேண்டும் என்பது இங்கே எழுதப்படாத விதி. காந்திஜியின் பார்வையில் வர்ணாஸ்ரம் எப்படியிருக்கிறது?

  'வர்ணாஸ்ரம விதிமுறை, சமூக, சமய, பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்கிறது. விதிமுறையை பின்பற்றுவது சமுதாய தீமைகளை தவிர்க்கிறது. இரக்கமற்ற பொருளாதாரப் போட்டியை முற்றிலும் தவிர்க்கிறது. இந்த விதிமுறை ஒரு வகுப்பின் உரிமைகளையோ அல்லது சலுகைகளையோ முன் வைக்காமல் அவர்களின் கடமையை வலியுறுத்துகிறது. இந்த விதிமுறையில் ஒருவன் பெற்றோர்கள் பார்த்து வந்த தொழிலைத்தன் பின்பற்றவேண்டும் என்கிற வலுக்கட்டாயம் எதுவுமில்லை. வர்ணதர்மத்தை நாம் பின்பற்றத் தவறியதே நமது பொருளாதார, ஆன்மீக அழிவுகளுக்கு காரணமாகிவிட்டது. '
  (யங் இந்தியா, 24.11.1927)

  ReplyDelete
 15. அன்புள்ள ரோஸா வசந்த்,
  ஜெயமோகன் கட்டுரையில் திராவிட இயக்கத்தையோ அல்லது தந்தை பெரியாரையோ திட்டுவதாக ஒன்றும் எனக்குத் தோன்றவில்லையே! சொல்லப் போனால், திராவிட இயக்கத்தைப் பற்றியே ஒன்றும் காணவில்லை.
  ஒரு வேளை, நீங்கள் கூறியது வேறு ஏதேனும் கட்டுரை குறித்தா?

  ReplyDelete
 16. Birthday wishes to you "Rajni" Ramki.
  I read your comments about Gandhiji's view. Very well written.
  I agree that the original vedha's might not have devised this to segregate people. But nevertheless we can not deny that this was the first step that created all these divisions that cursed our religion and people for thousands of years.
  In that way , I think it was a failure. Those visionaries should have realized that this might lead to division among people and necessary precautions should have been taken care that time.

  ReplyDelete
 17. வித்யாசாகரன்,
  இப்போதுதான் பார்தேன்.

  நான் கட்டுரையை மீண்டும் படிக்காமல் பழைய ஞாபகத்திலேயே எழுதினேன். ஜெயமோகனின் கட்டுரை ஏற்கனவே மருதம்.காமில் வந்தது. அதை சற்று திருத்தி (மடுதம் மூடப்பட்டுவிட்டதால்) திண்ணையில் எழுதியிருந்தார். நான் குறிப்பிட்டது இதைத்தான்.

  //ஐம்பது வருட முற்போக்கு மனிதாபிமானக் கொள்கைப் பிரச்சாரத்திற்குப் பிறகும் இங்கு ஒரு பிரபல இதழில் இக்கருத்தை கூச்சமின்றி எழுத முடிகிறது என்றால் என்ன அர்த்தம்? உண்மையில் கடந்த சில வருடங்களாக இங்கு ஒரு மறு எழுச்சி நிகழ்கிறது. அடிப்படைவாதமும் பழமைவாதமும் வேகம் கொண்டு எழுகின்றன. அதற்கு முக்கியமான காரணம் இங்கு முற்போக்கு மனிதாபிமானக் கருத்துக்களைக் கூறியவர்கள் தங்களை முழு நாத்திகர்களாக அடையாளம் காட்டிக் கொண்டு ,ஆன்மிகத்தை ஒட்டு மொத்தமாக எதிர்த்தார்கள் என்பதே. அவர்களில் பலர் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளாகவும் சீரழிந்தார்கள்.//

  திட்டவில்லை, ஆனால் தயானந்தர் கூற்றுக்கான பழியை திராவிட இயக்கத்தின் மீது போடுவதை காணலாம். நான் கட்டுரையை மீண்டும் படிக்காமல் எழுதியதற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 18. என்னுடைய கேள்வி இப்படித்தான் எப்போது ஆரம்பிக்கும்.
  அவர்கள்[தயானந்த சரசுவதி, போன்றவர்கள்] இத்தனை சிரத்தையுடன், அமெரிக்கா முதல் கொண்டு ஆசிரமங்கள் அமைத்து பெறும் முக்தி எனபது தான் என்ன எழவு எனபது?
  இதை ஜெயமோகனிடம் கூட நேரடியா(கடிதத்தில்) கேட்டிருந்தேன்.
  சாட்சியமே இல்லாத ஒன்றை கட்டி அழும் சமூகத்தில் முதன்மையான ஒன்றாய் நம் சமூகம்தான் இருக்கமுடியும். ஜெயமோகனின் அதிக பட்ச பதில் " நீங்கள் ஒழுக்கங்கள் என்று சொல்லப்படுபவற்றை, அறம் சார்ந்த ஆன்மிகம் சார்ந்த ட்விஷயங்களில் இருந்துதான் பெறுகின்றீன்கள் என்பது".

  என்னைப்பொறுத்தவரை , "மதம்" என்ற வார்த்தை மிகவும் கொச்சைபடுத்தப்பட்டுவிட்டதால்,
  இவர்கள் கண்டுபிடித்து உபயோகிக்கும் அடுத்த ஜீபூம்பா வார்த்தைதான் ஆன்மீகம். என்பது.

  ஆன்மிகம் எதற்கு? என்று கேட்டால் , "மனதை பக்குவப்படுத்த" என்று பதில் சொல்வார்கள்.
  அந்த மசிரைத்தான் , சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் செய்வானே என்றால், இவர்களிடம் பதிலில்லை. இந்த தற்காலிக மன ப்பக்குவத்தை ,ஒரு குவார்ட்டர் மானிட்டர் மார்க் சரக்கு கூட செய்யும்

  அந்த காலத்தில், சைக்கியாரிட்ஸ்ட் டாக்டர் இருந்திருக்க முடியாது. அதனால் இப்படி ஏதாவது இருந்திருக்கும். அதுக்கு காவி அடிக்கிறானுங்களே பாவிங்க. இதில் ஜெமோ அடிப்பது டீசன்ட் காவி!

  பெரியவர்கள் குழந்தைகளை பயமுறுத்தி அறிவுரை செய்வது போல்தானா என்று கேட்டால்,
  இல்லை என்று சொல்வார்கள், வெட்கத்துடன்.
  என்னமோ அங்கே பெரிசு முன்னாடி உட்காருகிறவன் எல்லாம், மனம் பக்குவப்பட்ட மேதை என்றும், மத்தவ்ன் எல்லாம் விலங்கு என்பது மாறியும் செயல்படுவதைப்பார்த்தால்தான் அடிவயிறு பத்திக்கிட்டு எரியும். :))

  ReplyDelete