Tuesday, March 08, 2005

லேடீஸ் ஒன்லி

பெண்கள் தினம்: பெண்கள் நினைப்பது என்ன?

தென்மண்டல ஐ.ஜி. ராஜேந்திரனின் மனைவி ரோகிணி:

ஆண்குழந்தைகளுக்கு மட்டும் சில பெற்றோர் சலுகைகள் கூடுதலாக தருவது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு சமுதாயமோ, ஆசிரியர்களோ கற்று தருவதை விட தாய்தான் கற்றுத் தரவேண்டும். அடிப்படை விஷயங்களை தாயிடமிருந்து கற்றுக் கொண்டால் தான் வெளியில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப பெண்கள் நடந்து கொள்ள முடியும். டி.வி., தொடர்கள் முழுவதும் பெண்கள் அழுவதைத் தான்காட்டுகிறது. இவர்களுடன் சண்டை போடுவதை விட தொடர்களை தவிர்த்தால் நிறைய விஷயங்களை உருப்படியாக செய்யலாம்.

வக்கீல் பரிமளா:

சட்டத்தில் பெண்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைப்பதில்லை. சமுதாயத்தில் பெண்குழந்தைகளுக்கு நிறைய பாலியல் கொடுமைகள் நடந்து வருகிறது. பாலியல் தொடர்பான விஷயங்களை தாய் கற்று கொடுப்பதன் மூலமே பெண் குழந்தைகள் மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பு உணர்வோடு பழக முடியும். பெண் குழந்தைகளை பாசத்தின் காரணமாக உறவுக்கார ஆண்களிடம் விட்டுச் செல்வதோ, பழக விடுவதோ தவறு. அத்தகைய சூழ்நிலையில் பெண்குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தாய்தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.

மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ராஜாமணி மனைவி ராணி:

வீட்டிலிருந்து தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். வேலைக்கு செல்லும் போது, பயணத்தின் போது என எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் நம்மைத் தற்காத்து கொள்ளும் மனவலிமை வேண்டும். நிறைய படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் என எந்த பெண்ணாக இருந்தாலும் கணவனையே முழுமையாக சார்ந்திராமல் சுயமாக இருக்க கற்று கொள்ள வேண்டும். பெண்களின் உரிமைகளை மற்றவர்களிடம் கேட்டு பெற வேண்டியதில்லை.

செருப்பு தைக்கும் தொழிலாளி பொன்னம்மா:

யார் என்ன பண்றாங்கன்னு எங்களுக்கு தெரியாது. பெண்கள் தினம் கொண்டாடுறது எல்லாம் சும்மா பேச்சுக்கு தான் சரியா வரும். நிஜத்துல ஒத்துவராது. இன்னைக்கு 10ஜோடி செருப்பு தைச்சா தான் எங்க பொழப்பு ஓடும். எங்ககிட்ட எந்த மாற்றமும் இல்லை. நிறைய பொம்பளைங்க தைரியமா வெளியே போய் வேலைபார்க்கறாங்க. அதுவரைக்கும் எங்களுக்கு சந்தோஷம் தான்

நன்றி - தினமலர்


Image hosted by Photobucket.com



"பெண்ணின் அத்தனை பட்டுணர்வுகளுக்கும் நங்கூரமாக இருப்பது அவள் உடல்தான். அவள் பட்டுணர்வுடன் இணைந்துள்ள உடலை அவள் எழுத வேண்டியிருக்கிறது. அதில் ஏற்றப்பட்டிருக்கும் மொழியை உடைக்க வேண்டியிருக்கிறது. ............ அவள் அங்கங்களுக்கு அவள் நேரடியான, மறைமுகமற்ற, முகத்தில் அறையும் உருவத்தை தரவேண்டியிருக்கிறது. அந்த நேரடியான உணர்வுடன் நேரெதில் உடலையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இது ஒரு சரித்திர நிகழ்வு, வெளிப்பாட்டின் ஒரு பகுதி. இதில் அழைப்புக்குரல் கேட்பவர்களுக்குச் செவியில் கோளாறு போலும்"

- அம்பை, பிப்ரவரி மாத காலச்சுவடில் (சென்ஸார் செய்யப்பட்டுள்ளது)


மார்ச் 8, உலக பெண்கள் தினம் என்பது எல்லோருக்கும் தெரியும். 1911 ஆம் வருஷத்திலிருந்துதான் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது கொஞ்ச பேருக்குத்தான் தெரியும். மார்ச் எட்டாம்தேதிக்கு இன்னபிற விசேஷங்களும் உண்டு. கோள்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகின்றன என்பதை கெப்ளர் கண்டுபிடித்த நாள் (1618). இண்டாம் உலகப்போரின்போது மார்ச் 8ஆம்தேதியன்றுதான் ஜப்பானின் கை ஓங்கியது. ரங்கூன், பர்மா பகுதிகளை பிடித்தது. (1942), சோவியத் யூனியன் முதல் முதலாக தான் தன்னிடம் அணு ஆயுதம் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. (1950), சூயஸ் கால்வாயை எகிப்து போக்குவரத்திற்காக திறந்தது இதே நாளில்தான் (1957) மாக்ஸ் கோனார்டு எட்டுநாளில் உலகத்தை சுற்றி சாதனையை முடித்த நாள் (1961), வியட்நாமில் அமெரிக்கப் படைகள் காலடி வைத்த நாள் (1965)