Friday, March 11, 2005

முதல்வன்

தி.நகர். கண்ணதாசன் சிலை பக்கத்தில் ஒரு சாலையோரப் பூங்கா. பரபரப்பான பத்து மணி காலையில் தொப்பை தெரியும் டி-ஷர்ட்டும் பத்ரி பேடன்ட் வாங்கி வைத்திருக்கும் ஷார்ட்ஸ் சகிதம் குனிந்த தலை நிமிராமல் அந்தச் சின்ன பூங்காவை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது ஒரு உருவம். வாக்கிங்! நெற்றியிலிருந்து வழிந்து ஓடும் வியர்வையை துடைக்க நிமிரும் போதுதான் அடையாளம் தெரிகிறது. அட நம்ம ர·பி பெர்னார்ட்!

Image hosted by Photobucket.com

தமிழ்நாட்டின் எந்த மூலையில் என்ன நிகழ்ந்தாலும் காமிரா, மைக் புடை சூழ ஒரு கும்பல் வந்துவிடுகிறது. தாறுமாறாக கேள்வி கேட்கிறார்கள். வரும் கும்பலில் சில சுடிதார்களும் உண்டு. எப்பேர்ப்பட்ட அரசியல்வாதியாக இருந்தாலும் மூக்கை இடிப்பது போல மைக்கை நீட்டி மடக்கும் இவர்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் எடுத்த கவரேஜ் எல்லாமே டிவியில் வராது. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா... பத்து வருஷங்களுக்கு முன்பு மீடியா இப்படியா இருந்தது? தொண்டைக்குழியையும் கிராஸ் செய்துவிட்ட கேள்வியை பிரசவிக்க யாருக்கும் தில் இருக்காது. லஜ்ஜையே இல்லாமல் கேள்வி கேட்டால் வீட்டுக்கு ஆட்டோ வருமா அல்லது கூட்டத்திலிருந்து தப்பித்து வெளியே போக முடியுமா என்று ஏகப்பட்ட குழப்ப ரேகை முகத்தில் குடியிருக்கும். அப்படிப்பட்ட இறுக்கமான நேரத்தில் அழுத்தம் திருத்தமாக வாதம் செய்ய வந்தாரய்யா ஒரு ஆள். அரசியல்வாதிகள் அவ்வப்போது சொல்லியிருந்த 'அருள்வாக்கை'யெல்லாம் ஞாபகப்படுத்தி காமிராவுக்கு முன்னால் வழிய வைத்த ர·பி பெர்னார்டின் வருகை பல அரசியல்வாதிகளின் தூக்கத்தை தொலைத்தது உண்மைதான்.

ஒரு காலத்தில் எப்படி இருந்தவர்? இன்றைக்கு 'உள்ளது உள்ளபடி' என்கிற பெயரில் அம்மா ஆட்சியின் சாதனை டாக்குமெண்ட்ரிக்கு காம்பியர் பண்ணிக்கொண்டு இருக்கிறார். இது தவிர லெட்டர் பேட் கட்சித் தலைவர்களை கூப்பிட்டு ஜெயா டிவி ஆபிஸில் உட்கார வைத்து பட்ஜெட் பற்றி விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார். சன் டிவிக்கொரு வீரபாண்டியன் போல ஜெயா டிவிக்கு ர·பி பெர்னார்ட். ஓரே சவசவ!

இப்போதெல்லாம் ரிமோட்டுக்கு வேலை ஜாஸ்தியாகிவிட்டது.. புதுமையான விஷயமெல்லாம் சின்னத்திரையில்தான் சாத்தியம் என்று சொன்னவர்களை காணவில்லை. டி.வி என்றாலே சீரியல்தான் என்கிற அர்த்தம் வந்துவிட்டது. போனவாரம் முன்னணியிலிருக்கும் ஒரு டி.வி சீரியலில் காமெடி காட்சிகள் அதிகமாக இருந்ததால் ரேட்டிங்கில் படுத்துவிட்டதாம். தேவுடா..தேவுடா! டி.வி பக்கமும் சூடுடா! ர·பி பெர்னார்ட் போன்ற வித்தியாசமான, விவரமான ஆசாமிகளையெல்லாம் காலம் நிஜமாகவே காணாமலடித்துவிட்டது.

10 comments:

 1. //பத்ரி பேடன்ட் வாங்கி வைத்திருக்கும் ஷார்ட்ஸ் சகிதம் //

  பத்ரி = ஷார்ட்ஸ், ஷார்ட்ஸ் = பத்ரி. பாவம் பத்ரி ;-(

  -அல்வாசிட்டி.விஜய்

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. வாங்க..வாங்க...சென்னைப்பட்டினத்துக்குவந்து சத்தம் போடாம ஜூட்டு வுட்டுட்டு எங்களுக்கெல்லாம் அல்வா கொடுத்துட்டீங்களே! உங்க பக்கத்துக்கே போய் புலம்பினால் கமெண்ட் பாக்ஸ் எடுத்துக்கமாட்டேங்குதே!

  ReplyDelete
 4. எம்ஜிஆருக்கு தொப்பி, கலைஞருக்கு மஞ்சள் துண்டு, அம்மாவுக்கு கோட் மாதிரி.. பத்ரிக்கு ?!

  ReplyDelete
 5. ராம்கி எல்லோருடைய கமெண்ட் பாக்ஸ்-ம் அடி வாங்குது இன்னிக்கு. உங்களை மாதிரி தனி பின்னூட்ட பெட்டி வச்சவங்க மட்டும் தான் தப்பிச்சாங்க போல. தனிமடல் அனுப்புகிறேன் தாங்களுக்கு.

  -அல்வாசிட்டி.விஜய்

  ReplyDelete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 7. அன்பு நண்பர் ராம்கிக்கு
  வணக்கம். நீங்கள் சொல்வதுப் போல் ரபி பெர்னார்ட்டை காலம் காணமல்போக அடித்தாலும், அவரிடம் தான் ஓர் பெரிய ஆள் என்ற தலைகனமும், தனக்கு அரசியலில் பல விசயங்கள் தெரியும் என்ற ஆணவமும், எந்த அரசியல்வாதியுடமும் எப்படிப் பட்ட கேள்வி கேட்க முடியும் என்ற திமிறும் இருந்தாகவே நான் கருதுகிறேன். அதே சமயத்தில் வாழப்பாடி, திருநாவுகரசர் சில பேரிடம் பேட்டியின் பொழுது வாங்கி கட்டி இருக்கிறார். எல்லாவற்றிக்கும் மேலாக காஞ்சி சங்கரிடம் பவ்யமாக பேட்டி கெட்டதை அனைவரும் அறிவர். சன் டிவியில் ஜொலித்த அவரால் ஏன் மற்ற டிவியில் நன்கு ஜொலிக்க முடியவில்லை? தன்னை அவர் சுய பரிசோதனை செய்து கொள்வது நலம்!!!
  நன்றி. மயிலாடுதுறை சிவா...

  ReplyDelete
 8. அன்பு நண்பர் ராம்கிக்கு

 9. அன்பு நண்பர் ராம்கிக்கு

 10. அன்பு நண்பர் ராம்கிக்கு