Monday, March 14, 2005

ரஜினி - சகாப்தமா?

கிட்டதட்ட தலைப்பிரசவம் போலத்தான். வாழ்க்கையில் எப்போதும் இருந்திராத டென்ஷன் இப்போது. சந்தோஷத்தையும் கலக்கத்தையும் சரிவிகிதமாக கலந்து கொடுத்த அந்த நாளை என்றுமே மறக்க முடியாது. ஆறு தொகுதிகளில் அடிவாங்கி ஒதுங்கியிருந்த காலம். உடனே கிளம்பி ஆபிஸ் வரும்படி பா. ராகவனிடமிருந்து போன். நேராகவே விஷயத்துக்கு வந்துவிட்டார். ஒரு புத்தகம் எழுதி தரவேண்டும். அதுவும் ரஜினியைப் பற்றி.

'ஸார்.. நெஜமாத்தான் சொல்றீங்களா...?'

'ஆமாய்யா.. நீதான் எழுதணும்'

'புத்தகம் எழுதறதுங்கிறது சாதாரண விஷயமா.. என்னால அது முடியுமா ஸார்?'

'நீதான் எழுதுறே...இன்னிக்கே வேலையை ஆரம்பிக்குறே'

'ஸார்.. ரஜினியை பத்தி நான் எழுதுனா எத்தனை பேர் ஒத்துப்பாங்க?!'

'உன்னால முடியும். உள்ளதை உள்ளபடி அப்படியே எழுது. நிச்சயம் நல்லா வரும்'

'ரஜினியை பத்தி அதிகமா எங்கேயும் நான் கமெண்ட் அடிச்சது இல்லை. முகமூடி போட்டுக்கிட்டு கூட. அதான் கரெக்டா வருமான்னு பயமா இருக்குது. சரி, ரஜினின்னு சொன்னா எதைப்பத்தி எழுதறது?'

'சிம்பிள். கண்டக்டரா இருந்த சிவாஜிராவ் எப்படி சூப்பர் ஸ்டார் ஆனது எப்படி... சூப்பர் ஸ்டாரா வந்தப்புறம் எப்படி அதை தக்க வெச்சுக்கிட்டார்... அரசியலுக்குள்ள வராமலே மீடியாவுல பரபரப்பான ஆசாமியாவே இருக்கிறது... இனிமே ரஜினி என்ன பண்ணலாம்... எடுத்துக்கிட்ட விஷயத்தை கச்சிதமா கட் அண்ட் ரைட்டா சொல்லிடணும்'

'நான் ரஜினியோட ரசிகன்ங்கிறது தெரியாத ஆளே கிடையாது...நடுநிலைமையில நின்னு என்னால எழுதமுடியுமா?'

'நிச்சயமா. ரஜினிகிட்ட நம்பிக்கை இருக்குதோ இல்லையோ ராம்கி கிட்ட எனக்கு நிறைய இருக்கு'

பா.ராகவன் என்மேல் வைத்த நம்பிக்கையை பேஸ்மெண்ட்டாக வைத்துதான் பிள்ளையார் சுழி போட்டேன். எவையெல்லாம் வரவேண்டும் என்பதை முடிவு செய்யவே ஒரு மாத காலமானது. இரண்டே மாதத்தில் முடிந்தாலும் திருப்தியே வரவில்லை. ரஜினியை பற்றிய விஷயங்கள் சாதாரண மக்களுக்கு நிறையவே தெரிந்திருக்கின்றன. ரஜினியின் சினிமா வெற்றிகள் பற்றி ஏற்கனவே எல்லோரும் சொல்லியிருப்பதையே திரும்பவும் சொல்லத் தேவையில்லை என்று முடிவு செய்தேன். பெங்களூரில் கண்டக்டராக இருந்தது, சினிமா சான்ஸ் தேடி சென்னையில் அலைந்தது போன்ற தெரிந்த விஷயங்களை கூட புதுவிதமான பார்வையில் சொல்ல வேண்டியிருந்தது.

Image hosted by Photobucket.com

சினிமா சூப்பர் ஸ்டாராக இருந்த அதே நேரத்தில் தனிமனித வாழ்க்கையையும் சீராக வைத்திருந்தததையும், ரசிகர்களிடம் முகம் கொடுத்து பேசாவிட்டாலும் அவர்களின் அன்பை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருப்பதற்கான காரணங்கள் பற்றியும் கூடுதலாக சில பிரத்யேக விஷயங்களை தந்திருந்தாலும் புத்தகத்தின் மையக்கருத்தாக அலசப்பட்டிருப்பது ரஜினி எடுத்த அரசியல் முடிவுகளும் அதற்கான பின்னணிகளும்தான்.

தொண்ணூறுகளில் ஆரம்பித்த ரஜினியின் அரசியல் (?) வாழ்க்கை ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களை சந்தித்து இன்னமும் 'அரசியலுக்கு வருவாரா?' என்கிற கேள்விக்கு விடை தெரியாமலே தொக்கி நிற்கிறது. ஊர் விட்டு ஊர் வந்து மொழி தெரியாத ஊரில், அதுவும் செல்வாக்குள்ள சினிமாத்துறையில் முன்னணிக்கு வந்து, அதையே முப்பது வருடங்களாக தக்க வைத்திருப்பதை விவரமாக சொல்லும் புத்தகம், இனி ரஜினி என்ன செய்யவேண்டும் என்பதை ஒரு கருத்துக்கணிப்பின் அடிப்படையில் ஆலோசனையாக சொல்வதோடு முடிகிறது.

எல்லாமுமாக இருந்த பா.ராகவன், ஆக்கபூர்வமான ஆலோசனைகளை சொன்ன பத்ரி சேஷாத்ரி, நேரிலும் மின்னஞ்சலிலும் ஊக்கப்படுத்திய இணைய நண்பர்கள், கிழக்கு பதிப்பக ஊழியர்கள், பிரத்யேக தகவல்களை தேடிக்கொடுத்து ஒத்துழைப்பு தந்த எங்களது இணையத்தள நண்பர்களான ஷாஜகான், ராஜா, ராஜேஷ், நடராஜ், விஷயத்தை கேள்விப்பட்டு வாழ்த்திய பத்திரிக்கையுலக பிரம்மாக்கள் என நன்றி தெரிவிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் பெரிது.

காட்டமான விமர்சனங்களோ, அதிகப்படியான புகழுரைகளோ இல்லாமல் உள்ளது உள்ளபடியே திருப்தியோடு வந்திருக்கும் புத்தகம், ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. அந்த நம்பிக்கையைக் கொடுத்த ஆண்டவனுக்கும் நான் நன்றி சொல்லியாகவேண்டும்.

ரஜினி 'சந்திரமுகி' வரை வந்துவிட்டார். நான் இப்போதுதான் அபூர்வ ராகங்களில் அடியெடுத்து வைக்கிறேன். வாழ்த்துக்களை மட்டுமல்ல பாராட்டுக்களையும் பெற்றாகவேண்டும். பார்க்கலாம்!

62 comments:

 1. ராம்கி ரஜனி என்னும் மனிதரைப் பற்றி தனிப்பட எனக்கு எந்தவித அபிப்பிராயமும் கிடையாது.அதே போன்று ரஜனி ராம்கி என்று நீங்கள் வைத்திருக்கும் பேரையும் கேலி பண்ணப்போவதில்லை.அது அவரவர் விருப்பம்/உரிமை.ரஜனியின் பேரால் நீங்கள் செய்யும் நல்ல காரியங்களுக்காகவாவது ரஜனியைப் பொறுத்துக்கொண்டு போகலாம்.
  முதன் முதலில் புத்தகம் எழுதியிருக்கிறீர்கள் அது ரஜனியுடன் நின்று விடாமல் உங்களுக்குப் பிடித்த ஆன்மீகம் சமூக சேவை என்று பல்துறைகளிலும் வளர நண்பனாய் வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 2. ராம்கி ரஜனி என்னும் மனிதரைப் பற்றி தனிப்பட எனக்கு எந்தவித அபிப்பிராயமும் கிடையாது.அதே போன்று ரஜனி ராம்கி என்று நீங்கள் வைத்திருக்கும் பேரையும் கேலி பண்ணப்போவதில்லை.அது அவரவர் விருப்பம்/உரிமை.ரஜனியின் பேரால் நீங்கள் செய்யும் நல்ல காரியங்களுக்காகவாவது ரஜனியைப் பொறுத்துக்கொண்டு போகலாம்.
  முதன் முதலில் புத்தகம் எழுதியிருக்கிறீர்கள் அது ரஜனியுடன் நின்று விடாமல் உங்களுக்குப் பிடித்த ஆன்மீகம் சமூக சேவை என்று பல்துறைகளிலும் வளர நண்பனாய் வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 3. வாழ்த்துகள் ராம்கி. உங்க தலைவர் திரைப்படத்துல சாதிச்சமாதிரி நீங்க எழுத்துல சாதிக்க வாழ்த்துகள்.
  அன்புடன்,
  சாத்தான்குளத்தான்

  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 5. வாங்க எழுத்தாளரே!! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. உங்க ஸெட்டிங்க்ஸ மாத்துங்க ப்ளீஸ், எழுதினது நான் -ரோஸு!

  ReplyDelete
 7. நான் எழுதியது

  "ராம்கி வாழ்துக்கள்! ரஜினி குறித்து, அதுவும் உங்கள் கையால், ஒரு புத்தகம் வருவது முக்கியமானதாய் எனக்கு தெரிகிறது. "

  ReplyDelete
 8. ராம்கி, ஒரு நடிகனை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பவர்கள் அவர்களுடைய ரசிகர்களே. ஒரு நல்ல ரசிகனால் மற்றவர்களையும் ரசிக்க வைக்க முடியும்.உங்களை பொறுத்தவரை ரஜினி என்ற நடிகரை போற்றி தான் பழக்கமாகையால் புகழ்ந்து எழுதவே நிறைய இடத்தில் தோனியிருக்கும். அதையும் உடைத்து நடுநிலமையுடன் எழுதுவது என்பது உங்களுக்கு மிகப்பெரிய சவாலாக தான் இருந்திருக்கும். நன்றாக ரசிக்க வைக்கும் படி எழுதியிருந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

  அபூர்வராகத்தில் நுழைந்த ரஜினி என்ற காந்தம் போல் நீங்களும் எதிர்காலத்தில் சமூக பிரச்சனைகளை/ஆன்மீகத்தை முன் நிறுத்தி பல புத்தகங்களை எழுதி உங்கள் பெயரும் தமிழ் இலக்கிய உலகத்தில் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.

  அன்புடன் அல்வாசிட்டி.விஜய்.

  ReplyDelete
 9. படைப்பாளியாகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. வாழ்த்துகள் ராம்கி.

  இத்த்னை பெரிய ஃபிகரைப் பற்றி புத்த்கம் எழுதுவது கம்பி மேல் நடக்கும் வேலை. கிட்டத்ட்ட ரஜினி வீட்டு நாய்க்குட்டி நகம் சைஸ் வரைக்கும் தமிழ்நாடு வரை பிரபலமாயிட்டுது. நீங்க என்ன விஷயத்தை சுவாரசியமா, புதுசா சொல்லி இருக்கீங்கன்னு பாக்க ஆவல்..

  அது சரி..புக் யார் ரிலீஸ் பண்றா... சந்திரமுகி ரிலீஸ் அன்னைக்கா..??

  -மூக்கன்

  ReplyDelete
 11. உங்கள் ஆக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்.
  அன்புடன் சுரதா

  ReplyDelete
 13. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 14. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 15. பல பேரின் அபிமானம் !!! நீங்கள்
  எழுதிய புத்தகத்தை படிக்க ஏங்குது என் மனம்!!!

  வாழ்த்துக்கள் ரஜினி ராம்கி சர்,,,

  உங்கள் முயற்சி வெற்றி பெற , , , உங்களையே வேண்டிக்கிறேன்......எழுதுவது நீங்கள் தானே !!!.

  நன்றி !.

  நேசத்துடன்
  நெல்லை பாபா .

  ஜெய்கிந்த் !!! சந்திரகிந்த்

  ReplyDelete
 16. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 17. அன்புள்ள ராம்கி,

  வாழ்த்துக்கள்!!!!

  என்றும் அன்புடன்,
  துளசி.

  ReplyDelete
 18. நன்றி ஈழநாதன். கூடிய சீக்கிரமே அடுத்த புத்தகம் பற்றிய அறிவிப்பை கொடுக்கமுடியும் என்று நம்புகிறேன்!

  நன்றி ஆசிப். பெரிய விஷயம்தான். இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.

  நன்றி நரேன். ஒரு புத்தகத்திற்கே எழுத்தாளர் பட்டமென்பது ஜாஸ்திதான். தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறேன்

  ரோ.வ, நன்றி. செட்டிங்ஸையும் மாற்றிவிட்டேன். புத்தகத்தின் மீதான உங்களின் விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன்.

  நன்றி விஜய். ரஜினியை எங்கேயும் போற்றியோ, தாக்கியோ எழுதியதில்லை என்பதால்தான் எனக்கு ஏகப்பட்ட தயக்கம். அதெல்லாம் தேவையில்லை என்று தவிர்த்துவிட்டு வேறு விஷயங்களுக்குள் போவதைத்தான் இதுவரை விரும்பிவந்தேன்.

  நன்றி வசந்தன், மூக்கன், துளசி, சுரதா & நெல்லை பாபா. புத்தகம் எழுதி கொடுத்தாச்சு.. இனிமேல் அந்த 'இருவர்'தான் எல்லாவற்றையும் முடிவு செய்தாகணும்!

  இன்னொரு முக்கியமான விஷயம். இதற்காக 'ஜெ. ரஜினி ராம்கி', வெறும் 'ஜெ. ராம்கி'யாகி இருப்பதை சொல்ல மறந்துவிட்டேன்!

  ReplyDelete
 19. ராம்கி,

  வாழ்த்துகள். கிழக்கு பதிப்பகத்துக்கும் சேர்த்துதான். தமிழ் பதிப்புலகத்தில் இவர்களது அணுகுமுறை தனி பெயர் பெற்று வருகிறது. அதற்கு ரஜினி ராம்கி போன்று, அங்கங்கே ஆட்களை தேடிப் பிடிக்கும் அணுகுமுறைதான் பிரதான காரணம். சூடான தலைப்பு... சரியான நேரம்... ராம்கிக்கு வெற்றி கதவைத் தட்டுவதாக அமையட்டும்.

  - சந்திரன்.

  ReplyDelete
 20. நாளைய மாணவ சமுதாயத்திற்கு நீங்கள் செய்துள்ள தொண்டு மாபெரும் தொண்டு. அப்படியே தனுஷ் கதையையும் துவங்கிவிடுங்கள். ஒரு வேளை தனுஷ் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்தால் உங்களுக்கு கல்வி அமைச்சர் பதவி கிடைக்கலாம். தலையெழுத்து. ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கும் கேவலத்தை செய்யும் தமிழக ஆமைச்சர்களைவிட நீங்கள் உயர்ந்தவர் தான்.
  //புத்தகம் எழுதறதுங்கிறது சாதாரண விஷயமா..//
  இதை மற்றவர்கள் சொல்லவேண்டும். வாழ்துக்கள்!

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள்.
  வாழ்த்துக்கள்.
  வாழ்த்துக்கள்.
  : )))))))

  ReplyDelete
 22. Rajni is full of controversies right from day one he entered politics. Talking about him without these, will be just one more attempt by fans and media to make him as demigod.

  Hope the publishers are not just riding on Rajni to make some money.

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் ராம்கி.

  அன்புடன்,
  சாகரன்.

  ReplyDelete
 24. Cngartulations. Please also publish your Gandhiya vizumanggal. I really enjoyed reading that.
  Padma Arvind

  ReplyDelete
 25. Cngartulations. Please also publish your Gandhiya vizumanggal. I really enjoyed reading that.
  Padma Arvind

  ReplyDelete
 26. Cngartulations. Please also publish your Gandhiya vizumanggal. I really enjoyed reading that.
  Padma Arvind

  ReplyDelete
 27. உங்கள் தொண்டை நினைத்தால் புல்லரிக்கிறது ...

  'சிலுக்கின் தமிழ் தொண்டு ' , 'இந்திய பொருளாதரத்தில் ஷகிலாவின் பங்கு' என்ற தலைப்புகளில் புத்தகம் எழுத பா.ராகவன்கள் தேடினால் சொல்லுங்கள்... என்னால் முடிந்த சேவையை செய்கிறேன் .

  எனக்கும் bloggers-ன் பாராட்டுகள் பெற ஆசையாக உள்ளது

  ReplyDelete
 28. ராம்கி சர்,
  வந்த மடல்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்லிவிட்டு ,இன்னொரு முக்கியமான விசயமென்று சொல்லி இனிமேல் ஜெ.ராம்கி தான் என்று சொன்னதும் மனதில் சின்ன வருத்தம்.நீங்கள் எழுதும் புத்தகத்தில் மட்டும் (ஜெ.ராம்கி) என்ற பெயர் இடம்பெறுமா இல்லை ....அனைத்திலுமா...?


  நன்றி.
  நெல்லை பாபா.

  ReplyDelete
 29. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 30. சற்று முன்னர் இந்த தாஸு எழுதிய கேடு கெட்ட கமெண்டை காஞ்சி ஃபிலிம்ஸின் பதிவில் படித்தேன். இது போன்ற கேடு கெட்டவர்களின் பதிவுகளை படிப்பதைவிட சிலுக்கு ஷகிலா பற்றி புத்தகம் எழுதுவதும், படிப்பதும் எவ்வளவோ மேல்!

  இது தவிர்த்து, ராம்கி ரஜினி பற்றி எழுதுவதை எந்த விதத்திலும் மட்டமானதாய் தரம் குறைந்ததாய் நினைக்க தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். சந்தேகமில்லாமல் ரஜினி தமிழகத்தின் வறலாற்றில் ஒரு phenomenon, அது குறித்து எழுத ராம்கி பொருத்தமான நபர், என்று நான் நினைக்கிறேன். ராம்கியின் புத்தகத்தை படித்தபின் அதன் மேல் பல விமர்சனங்கள் வரலாம் என்பது வேறு விஷயம். மீண்டும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் ராம்கி. ரஜினி என்ற ஒரு நடிகரை/தனி மனிதனைப்பற்றி எனக்குள்ள அபிப்ராயங்கள் வேறாக இருக்கலாம்; ஆனால், ரஜினி என்ற ஆளுமைக்குள்ள முக்கியத்துவம், புத்தகங்கள் எழுதப்படுமளவு வசீகரமானதே.

  தாஸுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. உள்ளூரில் இருப்பதால் ரஜினிகாந்த் கீழ்த்தரமாகப் போய்விட்டதாகக் கணக்கா? எடுத்தவுடனேயே ஒரு knee-jerk! கடவுளே!!

  ReplyDelete
 32. Best Wishes for your entry into the new platform.

  anbudan,
  -Kasi

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் ராம்கி. சென்னை வரும்போது வாங்குகிறேன். கமல் குறித்த புத்தகம் இன்னும் சுவாரசியமாய (மசாலாவுடன்) இருக்குமே... அதையும் ஒரு கை பாருங்கள் ;-)

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் ராம்கி.

  ரஜினி மீதுள்ள சொந்த காழ்ப்புணர்ச்சியில் உங்கள் எழுத்துப்பிரசவத்தை குறைகூறும் பதிவுகளை, "தேவுடா தேவுடா" பாணியில் இந்த காதில் வாங்கி அந்த காதில் தள்ளுங்கள்!

  இரவிக்குமார்

  ReplyDelete
 35. 'எலி ஏண்டா கோவணத்துடன் ஒடுது'ன்னு பார்த்தேன். சுனாமி நிவாரணப்பணி மாஞ்சுமாஞ்சு செஞ்சது இதுக்குதானா? cheap publicity பதிப்பகத்தார் பொழைச்சுப்பாங்க.

  அடியேன்,
  முகமூடி

  ReplyDelete
 36. புத்தகமும் தங்கள் எதிர்காலமும் அருமையாக அமைய வாழ்த்துகள்

  அன்புடன்,
  'சுபமூகா'

  ReplyDelete
 37. நல்ல புத்தகங்களை நாங்கள் நேசிக்கிறோம். தமிழ் வாசிக்கத் தெரிந்த அத்தனை பேரிடமும் இந்த நேசம் பரவவேண்டும் என்பது எங்கள் ஆசை.
  புத்தகம் என்பது ஒரு பொருளல்ல. அது ஓர் இயக்கம். இதனை மனத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே 'கிழக்கு பதிப்பகம்'. தமிழில் தரமான நூல்களை, சர்வதேசத் தரத்தில் வெளியிடுவதே எங்கள் நோக்கம். New Horizon Media Private Limited நிறுவனத்தின் ஓர் அங்கமான கிழக்கு பதிப்பகம், தமிழில் இலக்கியம், கலை, அறிவியல், அரசியல், சமூகம், ஆன்மிகம், வரலாறு, மானுடவியல், சமயம், வாழ்க்கை, கேளிக்கை எனப் பல்வேறு துறைகள் சார்ந்த ஆழமும் அக்கறையும் மிக்க படைப்புகளைத் தொடர்ந்து வெளியிடும்.

  உள்ளடக்கம், உருவம் இரண்டிலுமே சமரசமற்ற, உயர்தரத்தைப் பேண விரும்புகிறது கிழக்கு.

  இதனை ஏற்றுக்கொள்ளும் அத்தனைபேரையும் இப்புத்தக இயக்கத்தில் இணைந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். வாசகர்கள், எழுத்தாளர்கள், விமரிசகர்கள், விற்பனையாளர்கள் அனைவருக்கும் நல்வரவு.

  'NEW' manimekalaip pirasuram

  ReplyDelete
 38. வாழ்த்துக்கள் ராம்கி! ரொம்ப சந்தோஷம்! உங்கள் புத்தகம் பெரும் வெற்றி அடைய வேண்டுமென்று விழைகிறேன்.

  ஸ்ரீகாந்த்

  ReplyDelete
 39. வாழ்த்துகள் ராம்கி!

  ReplyDelete
 40. //'எலி ஏண்டா கோவணத்துடன் ஒடுது'ன்னு பார்த்தேன். சுனாமி நிவாரணப்பணி மாஞ்சுமாஞ்சு செஞ்சது இதுக்குதானா? //

  Very Cheap thinking Mugamoodi.

  All the very best ramki..

  ReplyDelete
 41. ராம்கி,
  ரஜினி பற்றிய உங்கள் அதீத ஆதர்சனமும்,மற்ற நடிகர்களை வேற்றுக்கண் கொண்டு பார்க்கும் பார்வையும் எனக்கு முழு உடன்பாடு இல்லையெனினும்,உங்கள் எழுத்துக்களை படிக்க ஆவலாயிருக்கிறேன்..உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவரைப்பற்றி முதல் புத்தகம் எழுதும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி..மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 42. நன்றி சந்திரன். கிழக்கு பதிப்பகம் போன்ற முன்னணி பதிப்பகத்தார் எனது கனவுக்கு கைகொடுப்பது மகிழ்ச்சிதான்.

  நன்றி ஜெயந்தி சங்கர் & சாகரன்.

  நன்றி கிறுக்கன். நீங்கள் எதிர்பார்க்கும் எதையும் நான் தவறவிடவில்லை. புத்தகத்தின் தலைப்பே ரஜினி - சப்தமா? சகாப்தமா? என்பதுதான். முடிவு உங்கள் கைகளில்தான்!

  நன்றி பத்மா அரவிந்த். காந்தீய விழுமியங்கள் போல இன்னொரு விஷயத்திற்கு நிச்சயம் முயற்சி செய்வேன்.

  நன்றி தாஸ். உங்களது கருத்துக்களை நான் மதிக்கிறேன்.

  நன்றி நெல்லை பாபா. அதெல்லாம் ஆண்டவனுக்குத்தான் தெரியும்!

  நன்றி ரோ.வ & மாண்ட்ரீஸர். தங்களைப் போன்ற ஆடியன்ஸை எழுதும் போது மனதில் வைக்க நான் தவறவில்லை.

  நன்றி காசி. எல்லோரும் ஓரிடத்தில் கூட வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவராயிற்றே...

  நன்றி பா.பா.. ம்ம்.. ரஜினியை பத்தியே ஒழுங்கா தெரியாது. இதுல கமல் பத்தி வேற எழுதணுமா? அதெல்லாம் இருக்கட்டும்.. தலை முழுக்க முடியோட வரும் இந்த போட்டோ நல்லா இருக்குதுங்க..

  இரவிக்குமார், சுபமூகா, ஸ்ரீகாந்த், ராஜா, மாயவரத்தான், ஜோ எல்லோருக்கும் நன்றி.

  ReplyDelete
 43. //நன்றி தாஸ். உங்களது கருத்துக்களை நான் மதிக்கிறேன். //

  மதியுங்க! காஞ்சி ஃபிலிம்ஸில் எழுதியதற்கு
  "இணையத்தில் எழுதுவதால் உள்ள சிக்கல்களில் இதுவும் ஒன்று. இல்லையெனில் தாஸுக்கு செருப்பால் நாலு குடுத்திருப்பேன். நேரில் சந்தித்தால் பார்கலாம்!"

  ReplyDelete
 44. Thosw who donno which post Rosavasanth refering to..


  http://kanchifilms.blogspot.com/2005/03/no-comments.html

  ReplyDelete
 45. ராம்கி, எழுத்தாளரானதற்கு வாழ்த்துக்கள். யாரோ ஷகீலா வை சொல்லியிருந்தார்கள். பாரா சார், விளையாட்டுக்கு சொல்லவில்லை, ஷகீலாவின் வாழ்க்கையை எழுதலாம். அவர் படங்கள் பார்த்ததில்லை, ஆனால் படித்த பத்திரிக்கை செய்திகளில் அவரின் வருத்தங்களும், கண்ணில் வழியும் சோகமும்.... என்ன சொல்ல? என்னதான் பணத்திற்காக என்றாலும், மனமுவந்தா இத்தகைய படங்களில் நடித்திருப்பார்?
  உஷா

  ReplyDelete
 46. //"ராம்கி வாழ்துக்கள்! ரஜினி குறித்து, அதுவும் உங்கள் கையால், ஒரு புத்தகம் வருவது முக்கியமானதாய் எனக்கு தெரிகிறது."//

  வேலையில்லாத நாய்கள்தான் ரஜினிக்கு banner கட்டி, ரசிகர் மன்றம் அமைத்து பொழுதை வீணடிப்பதுமல்லாமல் தங்கள் குடும்பத்துக்கும் உபயோகப்படாமல் தருதலைகலாக திரிகின்றனர் என்றால் இந்த ரோசாவசந்த் தம்பி L.L.தாஸை செருப்பால் அடிப்பராம். அடிக்கப்பட வேண்டியவர் தான் L.L.தாஸ்,ஏன் என்றால் அவருக்கு, தன்னுடைய(ரஜினிக்கு) சுய/குடும்ப நலத்துக்காக நடிகர் தொழில் செய்யும் ரஜினியை தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு phenomenonஆக பார்க்கும் தகுதி இல்லாததால்.

  தம்பி ரொசாவசந்து நீங்க வேண்டும் என்றால் ரஜினிக்கு திருப்பள்ளி எழுச்சி எழுதுங்களேன் நாங்கள் எலலாம் வாழ்த்துகிரோம். சுஜாத்தா வருவார் முன்னுரை எழுத. திருட்டு விடியோவில் சினிமா பார்த்து "ப்ளாகில்" விமர்சனமெழுதுவதை விட சிறந்தது. இல்லை வேண்டாம் வாருங்கள் ரஜினிக்கு கோவில் கட்டலாம்.

  அட பைத்தியக்கார நாய்களா இன்றைய நிலையில் இந்தியாவிற்கு என்ன தேவை என்று யோசிங்கடா. தமிழை நல்லதுக்கு பயன்படுத்துங்க. வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் உடனே சிவாஜிகணேசன்தான் நினைவுக்கு வரும் நிலையில்தான் இன்றைய தமிழனின் வரலாற்று அறிவு உள்ளது. நமது வரலாற்றின் உண்மையான "phenomenon"களின் படங்களுடன் சரித்திர பாட புத்தகங்களை எழுதி மாணவர்களுக்கு சமர்ப்பியுங்கள். உங்களையே ஒரு "phenomenon"னாக மாற்றுங்கள். இன்னும் கண்டதை எழுதி மீண்டும் மீண்டும் தமிழை காட்டுமிராண்டி பாஷை ஆக்காதீர்கள். போதும் தமிழில் உள்ள துதிபாடல்கள். ரோசா நீ கொஞ்சம் அடங்கு.

  ReplyDelete
 47. புனைப்பெயர் கூட வைத்து கொள்ள வக்கில்லாத நண்பா!

  ஒழுங்காய் வாசிக்க பழகலாமே! அதுக்கு பிறகு அடுத்தவனை திட்டலாம். தாஸை நான் செருப்பால் அடிப்பேன் என்று சொன்னது திருமாவளவனை பற்றி அவர் எழுதியுள்ள கீழ்தரமான சாதி வெறி பிடித்த பின்னூட்டத்திற்கு. இதை நான் தெளிவாய் சொன்னது மட்டுமின்றி அவரே உரல் தந்துள்ளார். (அதற்கு நன்றி, ஆனாலும் நேரில் பார்த்தால் நிச்சயம் செருப்பால் ஒரு குறியீடாகவாவது அடிப்பேன்!)

  முதலில் அடுத்தவன் எழுதியுள்ளதை பொறுமையாய் வாசிக்க பழகு. உனக்கொரு பெயர் வைத்துக்கொள். பிறகு என்னுடன் விவாதிக்கும் அளவிற்கு தகுதி வந்துவிட்டதாய் நீ நினைத்தால் என்னை அணுகு! ரஜினி ஏன் ஒரு எழுதப்படவேண்டிய முக்கிய phenomenon என்று விவாதிக்கலாம். அதற்கு பிறகு நெட்டில் சினிமா பார்பதில் உள்ள தார்மீக பிரச்சனை குறித்து பேசலாம். இன்னும் உனக்கு புரியும் அளவிற்கு நிதானமும் அறிவும் வர நேர்ந்தால் திருமா, ராமதாஸ் தொடங்கி நான் நினைக்கும் மற்ற முக்கிய phenomenon குறித்தும் விவாதிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.இன்னொரு முறை இப்படி கத்தினால் இந்த பதில் கூட கிடைக்காது.

  இது போன்ற அலட்டல்களால் ஒரு போதும் அடங்க வாய்பில்லாத ரோஸாவசந்த்.

  ReplyDelete
 48. http://moderngirl84.blogspot.com/2005/03/blog-post.html

  ReplyDelete
 49. ம். இனி இந்த நவ நங்கையைப் பற்றிக் கொஞ்சநாள் ஆராய்ச்சி செய்யலாம். ஒழுங்கா ஒரு பதிவ படிக்க விடுங்கப்பா.

  ReplyDelete
 50. காஞ்சி ஃபிலிம்ஸ்ன் படங்களை பார்க்கும்போது 'தம் இன மக்கள் மலம் சுமக்கும் கொடுமையில்
  இருக்கும்போது அதனை கவனியாது, திருமா தன் இன விரோதியாய் உள்ள ராமதாசோடு திறிகிறார் பார்' எனக்கூறுவதகத்தான் எனக்கு தோன்றியது . இந்த காமென்ட் அதற்குதான் . இது திருமாவை தவிர்த்து
  யாரையும் , எந்த இனத்தையும் கேவலப்படுத்தியல்ல .

  இது ஒரு இனத்தை கேவலபடுத்துகிறது என நீங்கள் கூறினால் , அந்த எண்ணம் வருமளவுக்கு என் காமென்டுகள் இருந்ததற்காக ( அந்த நோக்கம் இல்லையென்ராலும்) நான் மன்னிப்பு கோருவதில் வெட்கப்படவில்லை . ஆனல், திருமாவை, என் தலைவனை, நீ எப்படி இவ்வாறு கூறலாம் என நீங்கள் கேட்பீர்கள் என்றால் ... நான் எத்தனை முறை வேன்டுமானாலும் இதை திருப்பி கூறுவேன் .

  ராமதாஸால் கொல்லப்பட்ட தாழ்த்தபட்ட சகோதரர்கள் எத்தனை பேர் .. அவரோடு சேர்ந்து ஓட்டு வேட்டையாடும் திருமாவை வேரென்ன சொல்வது?

  ReplyDelete
 51. //'தம் இன மக்கள் மலம் சுமக்கும் கொடுமையில்
  இருக்கும்போது அதனை கவனியாது, திருமா தன் இன விரோதியாய் உள்ள ராமதாசோடு திறிகிறார் பார்'//

  இதெல்லாம் அரை வேக்காடுகளுக்கு புரியாது தாஸ்.

  ReplyDelete
 52. //ஒழுங்காய் வாசிக்க பழகலாமே//

  ஒழுங்காய் யோசிக்க பழகலாமே..

  ReplyDelete
 53. எனக்கு இல்லையா சாமி? உங்கள் செருப்பால் அடிவாங்கும் பாக்கியம் எனக்கில்லையா சாமி?
  அது சரி சாமி, பிஹார்ல மலம் அள்ளுகின்ற வேலையை செய்வதும் மனிதர்கள் தனே சாமி. அப்ப முதல்ல போயி அவங்கள மலம் வார வச்சவங்கள உங்க செருப்பால அடிச்சிட்டு வந்து மத்தவங்கள அடிக்கலாமே சாமி.
  அந்த ஈன யோனியிலிருந்து பிறந்தவங்கள மலம் வார வச்சவங்க யார் தெரியுமா சாமி? அவங்கள தான் உங்களுக்கு நல்லா தெரியுமே சாமி. அவங்க இணையத்துல உலா வர்ரவங்க இல்ல சாமி. மடம் அமச்சு வாழ இலையில மலம் கழிக்கிராங்க சாமி. எங்க, இப்ப போய் அடிங்க பாக்கலாம்?
  இந்த பாவயோனியில் அவதரித்த ஜென்மங்களுக்கு விடுதலை வாங்குகிர சிறுத்தை உலாவுர மாநிலத்துல நரி கூட்டம் எப்படியெல்லம் ஆட்டம் போடுது தெரியுமா? கலவையில முகாம் போட்டு இருக்கிர நரிய ஒரு சிறுத்த கூட்டம் போய் பார்த்து சலாம் போடுது சாமி. அதுக்கு நம்ம தல சிருத்தை கண்டும் காணாதது போல வாயையும் அதையும் மூடிக்கிட்டு சும்மா இருந்தத பாத்தியா சாமி. இப்ப சொல்லு சாமி திருமா என்ன வேலைய செய்யுறாருன்னு?

  ரசினி உங்க பெரியார பத்தி பாபாவுல பாடன பாட்ட பத்தி தெரியுமா சாமி?

  "ராஜ்ஜியமா இல்லை இமயமா?

  எங்கிவன்? நாளை எங்கிவன்?

  மன்னனா? இல்லை மௌல்வியா?

  யாரிவன்? நாளை யாரிவன்?

  ஆயிரம் அதிசயம் அமைந்தது

  பாபா ஜாதகம்!

  கேள்வியாய் வாழ்கிறான்;

  மவுனத்தை ஆள்கிறான்!

  ராஜ்ஜியமா? இல்லை இமயமா?

  கடவுளை மறுத்தவன் நாள்தோறும்

  கூறினானே நாத்திகம்;

  பகுத்தறிவாளனின் நெஞ்சினிலே -

  பூத்ததென்ன ஆத்திகம்!

  திருமகன் வருகிறான் திருநீறை

  நெற்றிமீது தினம்பூசி;

  அதிசயம்! அதிசயம்! பெரியார்தான் -

  ஆனதென்ன ராஜாஜி!

  தனதன்புத்தாயை -

  கைதொழும் பாபா தான்

  சிந்தையில் என்னாளும்

  சின்னஞ்சிறு பாப்பாதான்!

  ஏழைகள் பார்வையில் முழு

  மனிதனாய் தெரிகிறான்!

  ஆயிரம் அதிசயம் அமைந்தது

  பாபா ஜாதகம்!

  மிச்சத இங்க பாருங்க சாமி : http://kanchifilms.blogspot.com/2005/03/blog-post_111092022833340685.html

  வர்ட்டா சாமி ?

  அன்புடன்
  காஞ்சி பிலிம்ஸ்

  ReplyDelete
 54. please think beyond 'Serrupu' when you come tonight .

  Dasu

  ReplyDelete
 55. I will write a post on this later. I never planned a reply to doss anyway!

  To doss, if you read my writings and think, it will be clear I think (it is important to note that I think and it is) beyond seruppu. Seruppu is only a way of condemming. So you pl start thinking!

  ReplyDelete
 56. ராம்கி உஙகள் படைப்புகள் புத்தக வடிவில் கிடைப்பதில் மகிழ்ச்சி.உங்களுக்கும்,பதிப்பகத்தார்க்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

  உஙகளது சேவை தொடர வாழ்த்துக்கள்.

  R.Raja

  ReplyDelete
 57. Dear Ramki,

  My best wishes for the success of your I book.

  So, ezuththALar AyIttIngka :-) ezuththup paNi thodara vAzththukkaL

  enRenRum anbudan
  BALA

  ReplyDelete
 58. Thanks Balaji, Sorry i missed ur contact no

  ReplyDelete
 59. Congratulations Ramki!

  ReplyDelete
 60. திரு ராம்கி அவர்களே ரஜினி பற்றிய இந்த புத்தகத்திலே வட்டாள் நாகராஜின் கன்னட சலுவாலிய சங்கத்துக்கு ரூ.2 லட்சம் குடுத்தது, காஞ்சித்தலைவன் படம் ரிலீஸ் ஆனப்ப தியேட்டர்ல ரஜினி கல்லுவுட்டது, பெங்களூர்ல எந்த பிரச்சினைக்கும் தமிழர் கடைகளை ரஜினி உடைத்தது, எல்லாத்துக்கும் மேல சும்மா இருந்த கன்னட நன்பர்களை காவிரி உண்ணாவிரதப்போராட்டத்துல 40 லஷ்ஷம் தமிழன் கர்னாடகால இருக்காங்க அவங்களுக்கு ஒன்னும் ஆகக்கூடாதுனு சொல்லுறமாதிரி கன்னடகாரங்களை தூண்டிவிட்டது.

  அப்புறம் MGR கூட எதுக்கு பிரச்சினை, எதுனா பிகர் மேட்டரா? அப்புறம் இன்டஸ்டிரில ரஜினி ஹீரோயின்க கூட பன்ன டிஸ்கசன், வருமான வரி, பாமகவோடு மோதி மூக்கு உடைச்சிக்கிட்டது எல்லாம் இருக்கும் இல்ல இந்த புஸ்தகத்துல

  -- கபிலன்

  ReplyDelete