Friday, July 01, 2005

பொறுவாசகம்

சிவன் கோயிலில் சாயரட்சை நேரத்தில் பஞ்சமுக ஆரத்தி எடுப்பதற்கு முன்னால் அந்த பண்டிதர் பாடும் தமிழிசை பாட்டுக்கு நடுவே வெஸ்டர்ன் மியூசிக் வந்தால் எப்படியிருக்கும்? இளையராஜாவின் திருவாசகத்தில் அந்த ப்யூஷன்தான். வெஸ்டர்ன் கிர்ர்ர்ர்ர்ர் லூலூவுக்கு நடுவே ராஜாவின் குரலில் தேனூறும் திருவாசகம். ஒரு வழியாக புலி வந்தே விட்டது. நெருக்கடியடிக்கும் கூட்டத்தில் நீச்சலடித்துக்கொண்டிருந்தது மியூசிக் அகாடமி. வண்டியை பார்க் பண்ணவே நாலு தெரு தாண்ட வேண்டியிருந்தது. அரசியல், ஆன்மீகம், சினிமான்னு ஏகப்பட்ட பிரபலங்கள் வந்திருந்தாலும் அரசியல் முகங்களுக்குத்தான் மெஜாரிட்டி. வை.கோ, பீட்டர் அல்·போன்ஸ் தவிர என்.ராம், பாரதிராஜாவையெல்லாம் அரசியல் லிஸ்ட்டுல சேர்த்துக்கிட்டா தப்பில்லையே! டெல்லியிலிருந்து பறந்து வந்து சிம்பிளான ஆங்கிலத்தில் புரியும்படி பேசினார் ஜெய்பால் ரெட்டி. அடுத்து பேச வந்த எந்த தமிழனும் ஜெய்பால் ரெட்டி அளவுக்கு இளையராஜாவை புகழ்ந்து தள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் திருவாசகத்துக்கு தோள் கொடுத்திருப்பவர்களில் நிறைய பேர் கிறிஸ்தவர்கள் என்பது நெஞ்சைத் தொட்ட விஷயம்.

மேடையிலேயே கமலும் பாரதிராஜாவும் ஓரங்கட்டிக்கொண்டார்கள். விழா முடியும் வரை ரஜினியோடு இளையராஜா பேசிக்கொண்டே.......இருந்தார். அதே மாதிரி வைகோவும் என். ராமும். பாவம், பாலமுரளி கிருஷ்ணாவுக்கு சரியான கம்பெனி கிடைக்கவில்லை. நடுவில் மாட்டிக்கொண்டு அவஸ்தையாய் உட்கார்ந்திருந்தார். வைகோவுக்கு நடைபயண அனுபவம் இன்னும் மறக்கவில்லை. அடிக்கடி மேடையிலேயே நடைபயின்று கொண்டிருந்தார். ரஜினியும் கமலும் தமிழ் சினிமாவின் இரட்டைக்குழல் துப்பாக்கின்னு பீட்டர் சொன்னதை மறுத்த கமல் நாங்க ரெண்டு பேரும் ரெட்டை மாடுகள் மாதிரின்னு சொன்னார். தொடர்ந்து விளக்க வந்த பாரதிராஜா ரெண்டு பேரும் அசோக சக்கரத்திலிருக்கும் சிங்கங்கள் என்றார். (அட..அட விடுங்கப்பா, திருவாசக விழாவுக்கு வந்தா திட்டம் போட்டு தனிக்கச்சேரி நடத்துறீங்களேன்னு யாராவது சொல்லக்கூடாதா?) இரண்டையும் இணைக்கும் சக்கரம் இளையராஜா என்பதையும் மேலிருக்கும் மகுடங்கள் தன்னைப்போன்ற இயக்குநர்கள் என்பதும் பின்னிணைப்பு. நாளைக்கு 'சிங்கங்கள் காலடியில் சிக்கியிருக்குது தமிழ் சினிமா'ன்னும் சொல்வார், சினி·பீல்டுல பிரச்னை வந்தா! (காலடியில் இருந்த தண்ணீர் பாட்டிலை தேட கமல் கொஞ்சம் கஷ்டப்பட்டது தனி கொசுறு)

Image hosted by Photobucket.com

கஷ்டப்பட்டு வாங்குற சம்பளத்தை பொண்டாட்டிக்கிட்ட கொடுக்கிறதும் ஒண்ணுதான்; திருப்பதி உண்டியலில் போடறதும் ஒண்ணுதான்னு ரஜினி போட்ட ரிலாக்ஸ் குண்டில் அரங்கம் கொஞ்சம் கலகல. ரஜினிக்கு பிடிச்ச மேடை பேச்சாளர் வைகோவாம். (நோ கமெண்ட்ஸ்!) வை.கோ பேசறதை நேர்ல பார்க்க சான்ஸ் கிடைச்சுருக்குன்னு சொல்லி எதிர்பார்ப்பை எகிற வைக்க, வை.கோ மைக்கை பிடிச்சதும் காமிரா ரஜினியையும் வைட் ஆங்கிளில் படம் பிடிக்க ஆரம்பித்தது. வை.கோவின் பரபரப்பான ஆன்மீகப்பேச்சும் ரஜினியின் படபட ரியாக்ஷனையும் காமிரா சுட்டுத்தள்ளி வெளியே பெரிய திரையில் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து விசிலை அள்ளிக்கொண்டது. 'நீங்க ஏன் அரசியலில் இருக்கணும்'னு வைகோவிடம் இளையராஜா கேட்டதில் தப்பேயில்லை. தனக்கு இன்னென்ன விஷயம் தெரியுங்கிறதை வை.கோ அரசியல் கலக்காம பேசி தான் அரசியல்வாதி மட்டுமல்ல என்பதை ஆடியன்ஸ்க்கு சொன்னாரோ இல்லையோ ரஜினி புரிஞ்சுக்கணுங்கிற மாதிரிதான் பேச்சு இருந்தது. கடைசியாக, பேச்சு எப்படி இருந்தது என்பதை ரஜினியிடம் கேட்டு கமெண்ட்ஸ் வாங்கவும் மறக்கவில்லை. விழாவுக்கு வைரமுத்து வராதது பெரிய குறை. பா.விஜய்யை பாராட்ட போய்விட்டாரோ என்று நினைத்தால் அதுவுமில்லை.

மனுஷனுக்கு தேவை சந்தோஷமோ, கஷ்டமோ இல்லை. அமைதிதான்னு ரஜினி சொன்னதை வழிமொழிந்து பேச்சை ஆரம்பித்த ராஜா வழக்கம்போல தனது ஸ்டைலில் தொடர்ந்தார். கொஞ்சம் வெடிகுண்டு + சப்பைக்கட்டு, கொஞ்சம் சுயபுராண ஆன்மீக அனுபவங்கள், இசை பத்தின விளக்கங்கள், ஒரு நாலு வரி பாடல்...இளையராஜாவின் ஆன்மீகம் இன்னும் பக்திமார்க்கத்தில் மட்டுமே இருக்கிறது. சாம்பிளுக்கு ஒரு வெடிகுண்டு. 'கமலுக்கு கடவுள் மேல நம்பிக்கை கிடையாது; கடவுளுக்கும் கமல் நம்பித்தான் ஆகணுங்கிற அவசியம் கிடையாது'

நடுநடுவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குறேன் பேர்வழின்னு பிளேடை கழுத்தில் வைக்காத குறையாக இம்சைப்படுத்திய ஆசாமி உச்சகட்டமாய் ஒரு பாடலையும் பாட ஆரம்பித்து கூட்டத்தை கலைக்க வைக்க பிரயத்தனப்பட்டார். இளையராஜாவுக்காக யாகூ குழுமம் நடத்துபவரையும் மேடையில் கூப்பிட்டு வெச்சு கெளரவித்தார்கள். (ம்... நமக்கும் ஒரு காலம் வரும்!) நன்றி சொல்லுகிறேன் பேர்வழின்னு வந்த ஒரு பாதிரியாரோ சொந்தக்கதை சோகக்கதையையெல்லாம் அள்ளிவிட்டு, போகும்போது மறக்காம பிரசங்க நோட்டீஸ் வாங்கிக்கவும் சொன்னார். திருவாசகத்தை பத்தி எல்லோரும் திருவாய் மலர்ந்தருளுவதை கேட்கவும் கொஞ்சம் பொறுவாசகம் வேண்டும். நதிநீர் இணைப்பு பற்றி வை.கோவும் ரஜினியும் ஸ்டெப் எடுக்கவேண்டும்னு பாதிரியார் சொன்னதை அரசியல் பேச்சுன்னு இளையராஜா சொன்னதும் செம பாலிடிக்ஸ்தான்! இதே விழாவை நேரு ஸ்டேடியத்தில் கலைஞரையோ, ஜெயலலிதாவையோ கூப்பிட்டு எம்.எஸ்வியிலிருந்து வித்யாசாகர் வரை, டி.எம்.எஸ் முதல் தேவன் வரை, வாலியிலிருந்து யுகபாரதி வரை, கே.பாலசந்தர் முதல் பாலா வரை எல்லோரின் முன்னிலையில் நிகழ்த்தப்பட வேண்டிய விழா, அனுபவமில்லாதவர்களின் அரென்ச்மெண்ட்டில் சொதப்பலாகிவிட்டது. ரஜினி வந்த பரபரப்பில் கூட்டம் திமிலோகப்பட்டு, மியூசிக் அகாடமியின் வாசல் கண்ணாடி உடைந்து, பால்கனி நிரம்பி வழிந்து, லோக்கல் போலீஸ் உள்ளே வந்து 'தள்ளு முள்ளு' நடத்தினாலும் 'இதெல்லாம் எனக்கு சம்பந்தமில்லாத விஷயம்'ங்கிற மாதிரி நடந்துகிட்டவங்க விழாவை ஏற்பாடு பண்ணினவங்கதான். அது சரி, நமக்கு மட்டும் என்ன சம்பந்தமாம்? வந்தோமோ நம்ம ஆளை பார்த்தோமா.. நடையை கட்டுனோமான்னுதானே இருந்தோம். இதெப்படி இருக்கு?

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

46 comments:

 1. ராம்கி,

  சுடச்சுட ரிப்போர்ட்டிங் என்று இதைத்தான் சொல்வார்கள்.

  /"நமக்கும் ஒரு காலம் வரும்"/ கூடிய சீக்கிரம் வர வாழ்த்துக்கள்.

  அன்புடன்

  ராஜ்குமார்

  ReplyDelete
 2. //சிவன் கோயிலில் சாயரட்சை நேரத்தில் பஞ்சமுக ஆரத்தி எடுப்பதற்கு முன்னால் அந்த பண்டிதர் பாடும் தமிழிசை பாட்டுக்கு நடுவே வெஸ்டர்ன் மியூசிக் வந்தால் எப்படியிருக்கும்? இளையராஜாவின் திருவாசகத்தில் அந்த ப்யூஷன்தான்.//

  வன்மையாய் மறுக்கிறேன். ராம்கி ராஜாவின் இசை மற்றும் ஃபியூஷன் இரண்டு குறித்தும் மட்டையடித்திருக்கிறார். அதில் தவறில்லை. ஆனால் ராஜா குறுக்கப்படுவதால் சொல்கிறேன்.

  வழக்கமாய் ஃபியூஷன் என்ற வார்த்தையால் சொல்லப்படுபவை'பஞ்சமுக ஆரத்தி எடுப்பதற்கு முன்னால் அந்த பண்டிதர் பாடும் தமிழிசை பாட்டுக்கு நடுவே வெஸ்டர்ன் மியூசிக் ' என்று ஒருவேளை சொல்லலாம். அப்படி சில உண்டு. ஆனால் பல ஃபியூஷன் இதை தாண்டியவை. ராஜாவின் இசையை பியூஷன் என்று, இது போன்ற வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. மேற்கத்திய இசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி, நாட்டுபுரம் இவையெல்லாம் பிரித்தெடுக்க இயலாமல் கலந்திருக்கும். தனி தனி யூனிட்களாய் பிரித்து பார்க்கவே முடியாது. உதாரணம் how to name it? அந்த தலைப்பில் வரும் இசைதுண்டையே எடுத்துகொள்ளலாம். எங்கே அது கர்நாடகத்தனமை கொண்டது, எங்கே மேற்கத்திய தன்மை கொண்டது என்று பிரிக்கவே முடியாது. 'தென்றல் வந்து தீண்டும் போது..' பாடலை எடுத்துகொள்ளலாம். இன்னும் எததனையோ உதாரணம்('ராக்கம்மா கையத்தட்டு' கூட),அதுதான் ராஜாவின் தனித்தனமை. இதனுடன் யாரையும் ஒப்பிடவும் முடியாது. இது போன்ற எளிமையான வாக்கியங்களால் விளக்கவும் முடியாது. 'திருவாசகம்; கேட்ட பின்பு மீதி.

  மற்றபடி விரிவான பதிவிற்கு நன்றி.

  ReplyDelete
 3. எல்லாம் சரிதான். தகிடு எப்படி? (தகிடு தகிடு)

  மாதிரிக்கு போட்டுக் காட்டினாங்களா? வாங்கலாமா?

  ReplyDelete
 4. காலையில் தான் சன் நியூஸில் சின்னதாய் ஒரு க்ளிப்பிங்ஸ் பார்த்தேன். நல்ல தொகுப்பு ராம்கி. நன்றி.

  ReplyDelete
 5. "இதே விழாவை நேரு ஸ்டேடியத்தில் கலைஞரையோ, ஜெயலலிதாவையோ கூப்பிட்டு எம்.எஸ்வியிலிருந்து வித்யாசாகர் வரை, டி.எம்.எஸ் முதல் தேவன் வரை, வாலியிலிருந்து யுகபாரதி வரை, கே.பாலசந்தர் முதல் பாலா வரை எல்லோரின் முன்னிலையில் நிகழ்த்தப்பட வேண்டிய விழா,"
  http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/7635.html

  ReplyDelete
 6. // வாங்கலாமா? // தர்பூஸ் நல்லாயிருக்கா வாங்கலாமங்கறது மாதிரி கேக்கறீங்க... இசை என்பது ஒரு அனுபவங்க... நீங்க அனுபவிச்சி பாத்து நல்லாயிருந்தா வாங்குங்க... ம்யூசிக் வேர்ல்டுல அந்த வசதி உண்டு...

  அப்புறம் ராம்கி விழாவ பத்தி சொல்லிட்டீங்க... வட்டு விற்பனை எப்படி போகுது... என்ன விலை? நம்மூர்ல இந்த இசைக்கு எப்படி வரவேற்பு போன்ற மத்த மேல் விபரமெல்லாம் உண்டா?

  ReplyDelete
 7. //இதே விழாவை நேரு ஸ்டேடியத்தில் கலைஞரையோ, ஜெயலலிதாவையோ கூப்பிட்டு எம்.எஸ்வியிலிருந்து வித்யாசாகர் வரை, டி.எம்.எஸ் முதல் தேவன் வரை, வாலியிலிருந்து யுகபாரதி வரை, கே.பாலசந்தர் முதல் பாலா வரை எல்லோரின் முன்னிலையில் நிகழ்த்தப்பட வேண்டிய விழா//

  நிகழ்த்தப்பட்டிருக்கலாம். ஆனாலும்
  இது நம்பிக்கை சம்பத்தப்பட்டது ராம்கி. திருவாசகத்தில் முழு நம்பிக்கையுள்ள தலைவரும், ராஜாவின் மீது முழு நம்பிக்கையுள்ள கமலும் விழாவிற்கு வந்ததே போதுமானது.

  ReplyDelete
 8. சுடச்சுட விவரம் & வர்ணனை !! நல்லா இருக்கு ராம்கி!!! கண்காணாத இடத்துலே உக்காந்துக்கிட்டு இருக்கற
  என்னை மாதிரி ஆளுங்களுக்கு நாட்டுநடப்பும் தெரியவருதுன்னா அது உங்களைப்
  போல இருக்கறவங்க செய்யறதாலேதான்!!!

  நல்லா இருங்க.

  என்றும் அன்புடன்,
  துளசி.

  ReplyDelete
 9. விரிவாக அறியத் தந்தமைக்கு நன்றி ராம்கி.

  ReplyDelete
 10. நன்றி! நன்றி! நன்றி!

  ReplyDelete
 11. //சிவன் கோயிலில் சாயரட்சை நேரத்தில் பஞ்சமுக ஆரத்தி எடுப்பதற்கு முன்னால் அந்த பண்டிதர் பாடும் தமிழிசை பாட்டுக்கு நடுவே வெஸ்டர்ன் மியூசிக் வந்தால் எப்படியிருக்கும்? இளையராஜாவின் திருவாசகத்தில் அந்த ப்யூஷன்தான். // - J.rajni ramki.

  இசை நன்றாக இருக்கிறதா? இல்லையா?

  இலக்கணங்கள் புதிதாய் படைக்கப்பட்டுள்ளனவா? இல்லை உடைக்கப்பட்டுள்ளனவா?

  திருவாசகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளதா? இல்லை சிறுமை ஏதும் வந்துள்ளதா?

  ஞானபீடம்.

  ReplyDelete
 12. அன்பு ரஜனி ராம்கி,

  பதிவிற்கு நன்றி.

  நான் கூட இந்த விழாவிற்கு போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் ரஜினியும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார் என்று கேள்விப்பட்டவுடனே, பெருந்திரளாய் வரப் போகிற அவரது ரசிகர்களை நினைத்துக் கொண்டேன். எனக்கு Mad Rush என்றால் ஆகாது. எனவே போகும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். உங்கள் பதிவிலிருக்கிற புகைப்படங்களை பார்க்கிற போது போகாமலிருந்தது நல்லது என்றே தோன்றுகிறது. :-))

  அதுசரி. திருவாசக இசையின் ஒரு பகுதியை மேடையில் வாசித்தார்களாமே? அதைப் பற்றி ஒன்றும் காணோமே? சிடிக்களும் விழா முடிவில் விற்கப்பட்டதா? வருகையாளர்களிடமிருந்து ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?

  - Suresh Kannan

  ReplyDelete
 13. ராம்கி, நான் கடுமையாக எதுவும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அப்படி நினைத்து எழுதவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. இளையராஜா இசையை மிகவும் குறுக்கும் வகையில் சொல்வதாக தோன்றியதால் மறுக்க விரும்பினேன். ஏதோ தோன்றியதால் மீண்டும் எழுதுகிறேன்.

  ReplyDelete
 14. //பண்டிதர் பாடும் தமிழிசை பாட்டுக்கு நடுவே வெஸ்டர்ன் மியூசிக் வந்தால் எப்படியிருக்கும்//

  ரோசவசந்தின் கருத்துகளை ஆமோதிக்கிறேன் ..

  //திருவாசகத்தில் முழு நம்பிக்கையுள்ள ரஜினியும், ராஜாவின் மீது முழு நம்பிக்கையுள்ள கமலும் விழாவிற்கு வந்ததே போதுமானது.//

  இது நல்லாருக்கே ..

  //ம்... நமக்கும் ஒரு காலம் வரும்//

  பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு...


  திருவாசக இசைக்காக இளையராஜாவுக்கு நன்றி ..இந்த பதிவுக்காக உங்களுக்கும் நன்றி

  ReplyDelete
 15. Ramki's last lines in the post sums up his idea about the event. (another chance to see his thalaivar) i am not against it either, but the way he reported the event is simply biased. I was present in the event and when they played one part of the TIS sung by ilayraja it was out of the world experience. No words to describe it. U can simply say that it was a unique spiritual experience. The audience felt it. One thing is sure its not what ramki described it (about fusion and all). I dont know why he covered everything except the music. Waiting for unbiased reports of the event.

  ReplyDelete
 16. அன்புள்ள ராம்கி,
  விழாவுக்கு சென்று வந்ததில் மகிழ்ச்சி. நீங்கள் திருவாசக இசை வெளியீட்டு நிகழ்ச்சியைக் கூட,
  ரஜினி ரசிகனென்ற பார்வையில் தான் காண வேண்டுமா? இது ரஜினி-25 இல்லை தலைவா...
  இளையராஜா எனும் மகா கலைஞன், திருவாசகத்தை இசையால் அலங்கரித்த விழா.
  ரஜினி ச(கா)ப்தமாவில் ரஜினியை ஒதுக்கி வைத்து விட்டு, ராம்கியாக இடம் பெற்ற நீங்கள்...
  இது போன்ற நிகழ்ச்சிகளிலும் ராம்கியாக சென்று ராம்கியாவே மட்டும் எழுதினால் நன்றாயிருக்கும்
  என்பது எனது தோழமையான அபிப்ராயம்.

  - அன்புடன்,அருண் வைத்யநாதன்

  ReplyDelete
 17. அருண்,
  நான் சொல்ல வந்ததை அசத்தலா சொன்னீங்க போங்க!'திருவாசகம்!!

  -ஜோ

  ReplyDelete
 18. His name already included Rajini in his name. What can you expect? He basically attended this function to get good glimpse of Rajini and not becuase of IR.

  If Rajini has not attended this function, his view might be general.

  Ramki,

  you should have placed this item in Rajinifans Blogspot. Not here!

  ReplyDelete
 19. It is so strange some one who sosays so what if I support Sanakr, so be it I dont have to be impartial says this.
  If you read without remebering this was posted by a rajini's fa, I think I see a good report like the one you read in Vikatan. I also read annakannan's. Good job Ramki.

  ReplyDelete
 20. He..he..hee...
  I went to Shankar movie and told my reasons for supporting 'him' as an artist, although I blasted the movie's logical holes. There is a difference anonymous you see!
  Ramki...I hope you took my comment in right sprit :-)

  ReplyDelete
 21. ramki,i too agree with rosavasanth.This topic is missing the main part about "thiruvasagam" eppo paathalum nakkalthana? & more over the yahoo group moderator {His name's Dr.Vijay Venkatraman} & the members of this group collected an contribution{ like our operation PMK} for this project

  ReplyDelete
 22. மன்னிக்கவும் ராம்கி பதிவிற்கு தொடர்பில்லாதது தான், ஆனால் முந்தைய பின்னூட்டத்தில் வந்துவிட்டதால் கேட்கின்றேன்

  //collected an contribution{ like our operation PMK} for this project
  //
  அப்படியா? operation PMK விற்கு நீங்களாம் தான் காசு கொடுத்தீர்களா? அடடா நான் கூட அதற்கு மொத்தம் 60 லட்சம் ரூபாய் செலவான தாக செய்திகளில் அறிந்தேன், அது அவரின் சொந்தப்பணம் என்றல்லவா நினைத்தேன்... இப்போதுதான் தெரிகிறது அது கூட ரசிகர்களின் பணமென்று.... ஆனாலும் அவர் வெவரம் தானுங்க தன்னுடைய சொந்த பிரச்சினைக்கும் கூட ரசிகனுங்க காசை ...

  ReplyDelete
 23. ரஜனியின் பிரச்சினையை ரசிகர்கள் தங்கள் பிரச்சினை போல் பாவித்து பணம் திரட்ட வேண்டும்.ஆனால் ரசிகனுக்கு ஒரு பிரச்சினை வந்தால் ரஜனி வந்து உதவுவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. அடிபட்ட கட்சித் தொண்டனை அரசியல் கட்சித்தலைவர்கள் வந்து பார்ப்பார்கள், பெயில் எடுக்க கட்சி உதவும் அல்லது கட்சி சார்ந்த வழக்கறிஞ்ரகள் உதவுவார்கள். இதுதான் எல்லாக் க்டசியிலும் உள்ள நடைமுறை. ஆனால் ரசிகனுக்கு பெயில் எடுக்க ரஜனி உதவியிருக்கிரா என்று கேட்டுப்பாருங்கள். அவர் அப்போது இமயமலை, அமெரிக்கா என்று ஆன்மிக விசிட் அடித்துவிடுவார். பாட்ஷா வெற்றி விழாவில் ரஜனி பேசிய பேச்சு அதிமுகவினரை எரிச்சலடைய வைத்தது. பின்னர் பா.ம,க வுடன் தகராறு. இதில் களத்தில் அடியும் உதையும் வாங்கிய ரசிகனுக்கு ரஜனி தந்தது என்ன. ராம்கி தன் மனச்சாட்சியினைக் கேட்டு பதில் சொல்லட்டும். என்னுடைய வருத்தமெல்லாம் ராம்கி போன்றவர்கள் கூட ரஜனி மாயையில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்களே என்பதுதான். நான் பெயரை சொல்லாவிட்டாலும் நான் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

  ReplyDelete
 24. ரஜனியின் பிரச்சினையை ரசிகர்கள் தங்கள் பிரச்சினை போல் பாவித்து பணம் திரட்ட வேண்டும்.ஆனால் ரசிகனுக்கு ஒரு பிரச்சினை வந்தால் ரஜனி வந்து உதவுவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. அடிபட்ட கட்சித் தொண்டனை அரசியல் கட்சித்தலைவர்கள் வந்து பார்ப்பார்கள், பெயில் எடுக்க கட்சி உதவும் அல்லது கட்சி சார்ந்த வழக்கறிஞ்ரகள் உதவுவார்கள். இதுதான் எல்லாக் க்டசியிலும் உள்ள நடைமுறை. ஆனால் ரசிகனுக்கு பெயில் எடுக்க ரஜனி உதவியிருக்கிரா என்று கேட்டுப்பாருங்கள். அவர் அப்போது இமயமலை, அமெரிக்கா என்று ஆன்மிக விசிட் அடித்துவிடுவார். பாட்ஷா வெற்றி விழாவில் ரஜனி பேசிய பேச்சு அதிமுகவினரை எரிச்சலடைய வைத்தது. பின்னர் பா.ம,க வுடன் தகராறு. இதில் களத்தில் அடியும் உதையும் வாங்கிய ரசிகனுக்கு ரஜனி தந்தது என்ன. ராம்கி தன் மனச்சாட்சியினைக் கேட்டு பதில் சொல்லட்டும். என்னுடைய வருத்தமெல்லாம் ராம்கி போன்றவர்கள் கூட ரஜனி மாயையில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்களே என்பதுதான். நான் பெயரை சொல்லாவிட்டாலும் நான் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

  ReplyDelete
 25. ரஜனியின் பிரச்சினையை ரசிகர்கள் தங்கள் பிரச்சினை போல் பாவித்து பணம் திரட்ட வேண்டும்.ஆனால் ரசிகனுக்கு ஒரு பிரச்சினை வந்தால் ரஜனி வந்து உதவுவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. அடிபட்ட கட்சித் தொண்டனை அரசியல் கட்சித்தலைவர்கள் வந்து பார்ப்பார்கள், பெயில் எடுக்க கட்சி உதவும் அல்லது கட்சி சார்ந்த வழக்கறிஞ்ரகள் உதவுவார்கள். இதுதான் எல்லாக் க்டசியிலும் உள்ள நடைமுறை. ஆனால் ரசிகனுக்கு பெயில் எடுக்க ரஜனி உதவியிருக்கிரா என்று கேட்டுப்பாருங்கள். அவர் அப்போது இமயமலை, அமெரிக்கா என்று ஆன்மிக விசிட் அடித்துவிடுவார். பாட்ஷா வெற்றி விழாவில் ரஜனி பேசிய பேச்சு அதிமுகவினரை எரிச்சலடைய வைத்தது. பின்னர் பா.ம,க வுடன் தகராறு. இதில் களத்தில் அடியும் உதையும் வாங்கிய ரசிகனுக்கு ரஜனி தந்தது என்ன. ராம்கி தன் மனச்சாட்சியினைக் கேட்டு பதில் சொல்லட்டும். என்னுடைய வருத்தமெல்லாம் ராம்கி போன்றவர்கள் கூட ரஜனி மாயையில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்களே என்பதுதான். நான் பெயரை சொல்லாவிட்டாலும் நான் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

  ReplyDelete
 26. ரஜனியின் பிரச்சினையை ரசிகர்கள் தங்கள் பிரச்சினை போல் பாவித்து பணம் திரட்ட வேண்டும்.ஆனால் ரசிகனுக்கு ஒரு பிரச்சினை வந்தால் ரஜனி வந்து உதவுவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. அடிபட்ட கட்சித் தொண்டனை அரசியல் கட்சித்தலைவர்கள் வந்து பார்ப்பார்கள், பெயில் எடுக்க கட்சி உதவும் அல்லது கட்சி சார்ந்த வழக்கறிஞ்ரகள் உதவுவார்கள். இதுதான் எல்லாக் க்டசியிலும் உள்ள நடைமுறை. ஆனால் ரசிகனுக்கு பெயில் எடுக்க ரஜனி உதவியிருக்கிரா என்று கேட்டுப்பாருங்கள். அவர் அப்போது இமயமலை, அமெரிக்கா என்று ஆன்மிக விசிட் அடித்துவிடுவார். பாட்ஷா வெற்றி விழாவில் ரஜனி பேசிய பேச்சு அதிமுகவினரை எரிச்சலடைய வைத்தது. பின்னர் பா.ம,க வுடன் தகராறு. இதில் களத்தில் அடியும் உதையும் வாங்கிய ரசிகனுக்கு ரஜனி தந்தது என்ன. ராம்கி தன் மனச்சாட்சியினைக் கேட்டு பதில் சொல்லட்டும். என்னுடைய வருத்தமெல்லாம் ராம்கி போன்றவர்கள் கூட ரஜனி மாயையில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்களே என்பதுதான். நான் பெயரை சொல்லாவிட்டாலும் நான் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

  ReplyDelete
 27. ரஜனியின் பிரச்சினையை ரசிகர்கள் தங்கள் பிரச்சினை போல் பாவித்து பணம் திரட்ட வேண்டும்.ஆனால் ரசிகனுக்கு ஒரு பிரச்சினை வந்தால் ரஜனி வந்து உதவுவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. அடிபட்ட கட்சித் தொண்டனை அரசியல் கட்சித்தலைவர்கள் வந்து பார்ப்பார்கள், பெயில் எடுக்க கட்சி உதவும் அல்லது கட்சி சார்ந்த வழக்கறிஞ்ரகள் உதவுவார்கள். இதுதான் எல்லாக் க்டசியிலும் உள்ள நடைமுறை. ஆனால் ரசிகனுக்கு பெயில் எடுக்க ரஜனி உதவியிருக்கிரா என்று கேட்டுப்பாருங்கள். அவர் அப்போது இமயமலை, அமெரிக்கா என்று ஆன்மிக விசிட் அடித்துவிடுவார். பாட்ஷா வெற்றி விழாவில் ரஜனி பேசிய பேச்சு அதிமுகவினரை எரிச்சலடைய வைத்தது. பின்னர் பா.ம,க வுடன் தகராறு. இதில் களத்தில் அடியும் உதையும் வாங்கிய ரசிகனுக்கு ரஜனி தந்தது என்ன. ராம்கி தன் மனச்சாட்சியினைக் கேட்டு பதில் சொல்லட்டும். என்னுடைய வருத்தமெல்லாம் ராம்கி போன்றவர்கள் கூட ரஜனி மாயையில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்களே என்பதுதான். நான் பெயரை சொல்லாவிட்டாலும் நான் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

  ReplyDelete
 28. //நான் பெயரை சொல்லாவிட்டாலும் நான் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். //

  ஹைய்யா எனக்குத் தெரியுமே!!!

  ReplyDelete
 29. operation PMK - இது நான் இதுவரை கேள்விப்படாதது... யாராவது மேல் விபரம் தர இயலுமா??

  முகமூடி { நீங்கள் காலமெல்லாம் தேடி அலைந்த லிங்க் கைக்கெட்டும் தூரத்தில்}

  ReplyDelete
 30. Thank you for bringing up on "Operation PMK". At least we have the chance to elaborate the common people on Rajini and his fans real interest and what we do to the community!

  I have extracted the recent message from Rajinidotcom Group for your information.

  "We already collected around 25,000) for MP election in the name of
  Operation PMK. But when we approached sathi sir with that amount he
  just did a great thing which i really never thought he will do so. He
  issued a strict order not to spend even a single paise from the money
  we collected for OperationPMK. He asked us to get back to us after
  the election. After the MP election he called us and adviced to help
  one poor Medical student who scored good marks. Rajnifans.com
  sponsored his first year fees Rs.10000/-.

  Couple of months back we got another that kind of advice from sathi
  sir, to help about 50 school students in Kodambakkam. Rajinifans.com
  spent sponsored the uniforms worth Rs.6,000/-.

  Later Rajinifans.com kept a huge banner in front of Sivaji House for
  Chandramukhi Pooja - we spent about Rs.10,000/- for that including
  transportation. Sathi clearly told that time not to spend any more
  money for advertisements. So, we kept the same banner this time in
  shanthi theater."

  For further note on the above mail, pls check
  http://movies.groups.yahoo.com/group/Rajinidotcom/message/15432

  ReplyDelete
 31. எல்லோருக்கும் நன்றி.

  ராஜாவின் மேதமை குறித்து எனக்கு இரண்டாவது கருத்தில்லை. கூச்சல்களுக்கு நடுவே திருவாசகம் ஒலித்தபோது எனக்கு தோன்றியதை மட்டுமே இரண்டு வரிகளில் சொல்லியிருக்கிறேன். திருவாசகத்தை முழுவதுமாக கேட்கவில்லை. திருவாசகத்தை புதிய தலைமுறைக்கு சென்று சேர்க்கும் இம்முயற்சி பெருமையே தவிர நிச்சயம் சிறுமையாக இருக்காது. தனிமையில் கேட்டால் பரமானந்தமாக இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். கேட்டுவிட்டு நிச்சயம் எழுதுகிறேன்.

  ராஜாவின் திருவாசக விற்பனை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. ஆடியோ கேஸட்டுகள் விற்பனைக்கு வர நாளாகும். ஆடியோ சிடிக்கள் அதிகபட்ச விலையாக 150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சினிமா ஆடியோ கேஸட்டுகளை விற்பனையில் விஞ்சினால் அது ராஜாவின் இசைக்கு நாம் செய்யும் கெளரவம்.

  இளையராஜாவுக்காக யாகூ குழுமத்தை நடுத்துபவர்களை கிண்டலடிப்பது போன்ற தொனி என்னுடைய பதிவில் வந்தமைக்கு வருந்துகிறேன். தமிழ் மையத்தின் முயற்சிகளுக்கு இளையராஜா யாகூ குழுமம் நிறையவே கைகொடுத்திருப்பதாக தாமதமாகத்தான் அறிந்துகொண்டேன். ஒரு மிகப்பெரிய விழாவில் நிகழ்ச்சியின்போது நடுவே குறுக்கீடு செய்து சிறிய அளவில் உதவியவர்களுக்கு கூட நன்றி சொல்வது பெரும்பாலான பார்வையாளர்களை நெளிய வைக்கும். அதுவும் 6.30க்கு தொடங்கிய விழா, பத்து மணியை தாண்டி நீடிக்கும்போதும், பேச்சாளர்களை விட வர்ணணையாளர்கள் அதிகமாக பேசும்போது எரிச்சல் வருவது சகஜம்தான். அதே மூடில் எழுதும்போது வந்து விழுந்த வார்த்தைகள்தான் அவை. தனிப்பட்ட முறையில் எவரையும் தாழ்த்துவது என்னுடைய எண்ணமில்லை. அதற்கு அவசியமுமில்லை. அப்படியொரு முயற்சி எந்நாளும் வெற்றிப்பெறப்போவதுமில்லை.

  என்னுடைய பதிவில் நடுநிலை இல்லையென்று வரும் விமர்சனங்கள் குறித்து எனக்கு வருத்தமில்லை. மனதில் பட்டதை மறைக்காமல் எழுதியதில் எனக்கு திருப்திதான். நிறைய பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கமிருப்பதால் எந்தவொரு விழாவைப் பற்றிய ரிப்போர்ட்டிங்காக இருந்தாலும் வழக்கமான அம்சங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது என்னுடைய வழக்கம். யார், யார் என்னென்ன பேசினார்கள் என்கிற விபரம் எப்படியும் மீடியாவில் வந்துவிடும் என்பதால்தான் அவற்றையெல்லாம் கவனமாக தவிர்த்துவிட்டு எழுதியிருந்தேன். எல்லாவற்றையும் எழுதியிருந்தால் நிச்சயம் நாலு பக்கத்திற்கு மேல் எழுத வேண்டியிருந்திருக்கும்.

  மறக்காமல் காமிராவை கையிலெடுத்துக்கொண்டு...
  அஞ்சுமணிக்கே ஆபிசிலிருந்து ஜூட் விட்டு...
  நாலு தெரு தாண்டி வண்டியை பார்க் செய்து, நடந்தே வந்து...
  அழைப்பிதழ் இல்லாமல் வெளியே நின்று, அண்ணா கண்ணன்கள் உள்ளே போவதை வேடிக்கை பார்த்து...
  கூட்ட நெரிசலுக்கு நடுவே பேலன்ஸ் செய்து, போட்டோ எடுத்து...
  மியூசிக் அகாடமியின் கண்ணாடி கதவுகளை உடைத்து தள்ளி உள்ளே நுழையும்
  கூட்டத்தோடு கூட்டமாய் கண்ணாடி சில்லுகளை மிதித்தபடி...
  பால்கனியில் சுவரோரமாய் மூன்று மணி நேரம் ஒண்டிக்கொண்டு வியர்வையில் குளித்து...
  வைகோ பேச்சோடு நிகழ்ச்சியின் கடைசிவரை கால்கடுக்க நின்று எல்லோருடைய பேச்சையும் கேட்டுவிட்டு..
  பதினொன்றரைக்கு பேட்டை வந்து, காமிராவை கவிழ்த்துப்போட்டு, தட்டச்சி...
  இவ்வளவுக்கும் காரணம், சொல்லித் தெரியவேண்டியதில்லை!

  அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் நான் சாதாரண சில்லுண்டிதான்!

  ReplyDelete
 32. For those who missed the launch function of Thiruvasakkam held on 30th June
  at Music academy Chennai will be telecast on 10.07.2005. The timing will be
  around 12.00 Noon as a special show.

  Channel : SS Music

  ReplyDelete
 33. சாட்டையால் அடியுங்கள், நடுத்தெருவில் நிறுத்தி காறித்துப்புங்கள் என்பதில் ஆரம்பித்து யார் சொல்லவும் கூசத் தயங்கும் நாகூசும் வார்த்தைகளைக் கூறி அதன் ஈரம் காய்வதற்குள் அந்தர் பல்டி அடித்து சென்று ஐக்கியமாகிய அரசியல்வாந்தியை கண்மூடித்தனமாக பின்பற்றி அவருடைய வாரிசை அரியணை ஏற்ற அயலாது பாடுபடும் கேணத்தனத்தை விட சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ரசிகராக இருப்பது கோடானு கோடி தடவை மேல்!

  (நானும் யாருன்னு சொல்லாட்டாலும் எல்லாருக்கும் நான் யாருன்னு தெரிஞ்சிருக்குமே!)

  அப்புறம், தனது கட்சிக்காரர்கள் வன்முறையாளர்கள் தான் என்று சுய வாக்கு மூலம் கொடுத்த பெயர் சொல்லாத மற்றும் குழலிக்கு தெரிந்த அந்த அநாநிமாஸே...சேம் சைடு கோல் போட்டுடீங்களே மேடம்!

  ReplyDelete
 34. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 35. நடிகர்களின் சொந்தப் பிரச்சினையையும் கவுரவப்பிரச்சினையையும் தன் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு பணம் வசூலித்து தந்தவர்களை காணும் போது மெய்சிலிர்த்து போகின்றேன், இப்படி பட்ட தலைவரும் இப்படி பட்ட ரசிகர்களும் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் தான், தமிழகமும் கொடுத்து வைத்தது தான்...

  அது சரி ரூ.25,000 த்தை வைத்து 10 டிஜிட்டல் பேனர் கூட வைக்கமுடியாதுனு தெரியாதா என்ன?

  அது சரி அரசியல் கட்சிகாரங்க உள்ள போனா வன்முறை அப்புறம் ஏன் அகிம்சைவாதிகளான அவரோட ஆளுங்க உள்ளப்போனாங்க?? நல்லா இருக்குப்பா உங்க நியாயம்...

  //சூப்பர் ரசிகராக இருப்பது கோடானு கோடி தடவை மேல்!
  //
  சினிமா வெளிச்சத்தில நீங்க தேடிக்கொண்டே இருங்க, அவர் கடையை விரிச்சோமா கல்லா கட்டுனோமா நடைய கட்டுனோமானு போய்க்கொண்டே இருப்பார்,

  இளையராஜாவைப்பற்றிய பதிவில் அனாவசியமாக திசை திரும்புகின்றது, வாங்க நம்ம ரசிகர் மன்றங்கள் ஒரு பார்வை-1 பதிவுக்கு வாங்க அங்க பேசிக்கலாம் மீதியை...

  ராம்கி மன்னிச்சிக்கோப்பா, ஒரு பின்னூட்டத்தில வந்த கேள்வியை கேட்கப்போய் ஏதோ வந்துடுச்சி...

  இனி இங்க அதைப்பற்றி பேசலை...

  ReplyDelete
 36. ramki...

  thank u for the super fast report...

  one thing i hate is ur view on ilayaraja sprituality...

  u say his spitual is still in bakhthi path...whats wrong in it...

  some fools say bakhthi is starting point and v have to move further...u read it and u also say that..its wrong....
  if ilayaraja's spritual is in bakthi path till the end it will be so good.....

  --billa

  ReplyDelete
 37. ramki....sorry for mentioning about operation pmk!{ i should ve mention wat sathi sir said after he came to know abot collecting the money} is adi that just to give an idea about maestro's yahoo group's contribution!.
  hmm...... yedhaio solla poi...adhu yedhuvagavo aaidichu!:) Varundhukiren!:)

  ReplyDelete
 38. அந்த மெடிக்கல் காலேஜ் மாணவனின் கதி அடுத்த வருஷத்திலிருந்து அதோ கதிதானா?

  ReplyDelete
 39. Dear Friends,

  Regarding the payment of Medical student, Sathiyanarayan will arrange payment from Arunachala Trust (Sathiya is the Secretary of this trust). In the final year, our Superstar will make payment directly.

  ReplyDelete
 40. உங்கள் திரு 'வாசக' த்திற்கும் ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓ ................,,,,,,,,,,,,,, போடலாம்

  ReplyDelete
 41. Why comparision between Rajini, Ilayaraja? They are industry friends and they have their own paths. Each of them are distinct superstars. This function is all about Thiruvasagam CD release function. Rajini was just one of the VIPs invited for the function. Also everyone should not take it for granted that people came to see Rajini, Kamal etc. That is unacceptable.

  I hope in future the guy who wrote this review does not hurt the feelings of both the fans of Raaja and Rajini any more.

  ReplyDelete
 42. தமிழ்திரை, பாரதிராஜாவின் பேச்சை மட்டும் காட்டுகிறது. எஸ்.எஸ் மியூசிக் டி.வி, கமல் பேச்சை காட்டவில்லை. பத்திரிக்கைகளும் தங்கள் விருப்பபடி கட்டுரை வரைந்துவிட்டனர். கல்கியின் கட்டுரை மட்டுமே விழா பற்றிய முழுமையான விபரங்களை கொடுத்துள்ளது. எதற்காக ராம்கியை விமர்சிக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

  ReplyDelete
 43. கார்த்திக் ரமாஸ் வலைப்பூவில் ராம்கி *பின்வாங்கி* இருக்கும் பின்னூட்டம்
  -----------------------------------
  ஜெகத்கஸ்பர் பற்றி நான் முன்னரே அறிந்திருக்கவில்லை என்பது உண்மைதான். குறிப்பாக எனது நண்பர் மயிலாடுதுறை சிவா விரிவாக ஒரு பதிவு எழுதிய பின்னரே அவரைப்பற்றி அறிந்தேன். திருவாச விழா முழுவதையும் தொகுத்து தந்தவர் அவர்தான். சுவாராசியமாகவே அதை அவர் செய்திருந்தார்.

  திருவாசக விழா குறித்த பதிவுக்கு நான் ஏற்கனவே விளக்கம் அளித்திருக்கிறேன். நான் குறிப்பிட்ட பாதிரியார் ஜெகத்கஸ்பர் நிச்சயமாக இல்லை. நான் குறையாக சொல்லியிருந்தது ஒரு மூத்த பாதிரியாரையும் விழா நடத்தியவர்களையும்தான். வைகோ பேசி முடித்ததும் விடாப்பிடியாக மைக்கை கெட்டியாக பிடித்துக்கொண்டு இரவு பத்து மணிக்கு மேல் நெளிய வைத்த வயதில் மூத்த பாதிரியாரின் பெயரை சொல்வது நாகரீகமாகாது. உண்மையில் அவரது பெயரும் எனக்கு தெரியாது. திரு. ஜெகத்கஸ்பரிடம் தொடர்பு கொண்டால் நிச்சயம் அவர் இது குறித்த விளக்கங்களை தருவார்.

  திருவாசக விழா பற்றிய ரிப்போர்ட் இதுவரை கல்கியில்தான் முழுமையாக வந்துள்ளது. சரியாக ஆறரை மணிக்கு ஆரம்பித்த விழா சரியாக பத்து மணிக்கு முடிக்கப்பட்டாக வேண்டும். வெவ்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பேசி முடிக்க நேரமானாலும் விழா நடத்துபவர்கள்தான் இவற்றிற்கான பொறுப்பேற்க வேண்டும். அரங்கம் சின்னது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். இங்கு விழா நடத்துவதற்கு எப்படி இளையராஜா ஓகே சொன்னார் என்பதும் திடீரென ரஜினியை அழைத்ததும், பா.விஜய் விழாவுக்கு போகவிருந்த கமலை அழைத்தும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. விழா முடிவதற்குள் பார்வையாளர்கள் மிகவும் களைத்துப்போனது உண்மை. மேலும் விபரங்களுக்கு அண்ணா கண்ணனிடமே கேட்கலாம்.

  மியூசிக் அகாடமியின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்த பால்கனியை நிரப்பிய கூட்டத்தை கட்டுப்படுத்த விழா ஏற்பாடு செய்தவர்கள் முயற்சி செய்திருக்கவேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு மேடை நிகழ்ச்சிகளில் விஐபிக்களை கவனிப்பதிலேயே எல்லோரும் மும்முரமாக இருந்தார்கள். இளையராஜா கையால் பரிசு வாங்குவதற்காக தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலிருந்து வந்த பிஞ்சு குழந்தைகளின் அலறல் சத்தத்தை கமல், ரஜினி தவிர யாருமே கவனிக்கவில்லை. செல்போன் சகிதம் பிஸியாக இருந்த வைகோ, ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கும்பிட்டுக்கொண்டிருந்த இளையராஜா எல்லோருமே இதில் உள்ளடக்கம். குழந்தைகளின் கூக்குரல் தாங்கமுடியாமல் யாரோ ஒரு பெரியவர் போன் செய்தபின்னர்தான் போலீஸார் உள்ளே பால்கனியில் நுழைந்து கூட்டத்தை வெளியேற்றினார்கள்.

  ஆறரை மணிக்கு ரஜினி பின்னாலேயே அரங்கத்தில் நுழைந்து சீட் கிடைக்காமலேயே பதினோரு மணி வரை நின்று விழா நிகழ்ச்சிகளை கவனித்துவிட்டு பேட்டைக்கு திரும்பி பன்னிரெண்டு மணிக்குள் நான் தட்டச்சிய பதிவு அது. களைப்பு, எரிச்சல், விரக்தி போன்றவை என்னை மீறி என் பதிவில் தென்பட்டதற்காக வருந்துகிறேன்.
  ---------------------------------
  ஆப்பு மேல ஆப்பு வெச்சாத்தான் அடங்குவீங்க

  ReplyDelete
 44. ஆப்பு மேல ஆப்பு வெச்சாத்தான் அடங்குவீங்க

  ReplyDelete