Wednesday, July 13, 2005

உட்லண்ட்ஸ் சந்திப்புகள்

வலைப்பதிவாளர்களின் சந்திப்பு இப்போதெல்லாம் அடிக்கடி உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் நடக்கிறது. பி.கே.சிவகுமார்தான் இதை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து சுஜாதா, காசி. சமீபத்திய காசியுடனான சந்திப்பு பற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்று நிறைய சென்னை நண்பர்கள் வருத்தப்பட்டிருந்தார்கள். பிரகாஷ்ஜி கவனிக்க! தற்போது 'தமிழோவியம்' கணேஷ் சென்னைக்கு வந்திருக்கிறார். இன்னொரு பிரபல வலைப்பதிவாளரும் சென்னை வர இருப்பதாக ஒரு தகவல். அடுத்த முறையாவது சாம்பாரில் மூழ்கடித்த வடைக்கு பதிலாக வேறு டிஷ் கிடைக்குமா? பிரகாஷ்ஜி இதையும் சேர்த்தே கவனிக்க! நான் ரொம்ப சமத்து. கூட்டத்தில் கலந்து கொண்டாலும் வாத, விவாதங்களில் கலந்து கொள்வதில்லை. காமிராவை கையிலெடுத்து சுத்திச் சுத்தி வந்து சுட்டுத்தள்ளியதில் கிடைத்த ஸ்டில்கள்...

Image hosted by Photobucket.com
சுரேஷ் கண்ணன் , பிரசன்னா, பிரகாஷ், ராஜ்குமார், பிகேசிவக்குமார்

Image hosted by Photobucket.com
இரா.முருகன், பத்ரி

Image hosted by Photobucket.com
சுரேஷ் கண்ணன், பிரசன்னா

Image hosted by Photobucket.com
சுஜாதா

Image hosted by Photobucket.com
ராஜ்குமார், பிரகாஷ், கிருபா ஷங்கர், பிரதீப், தேசிகன்

Image hosted by Photobucket.com
பிரகாஷ், ஷங்கர், ப்ரதீப், தேசிகன்,

Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com
அருள்செல்வன், .இராம.கி, மதுமிதா, உஷா, காசி, சந்திரன்

Image hosted by Photobucket.com
நாராயண், பத்ரி, மாலன், பிரகாஷ், செல்வராஜ், சுரேஷ் கண்ணன்
Image hosted by Photobucket.com
வெங்கடேஷ், கல்யாண் ( சாகரன் ), நாராயண், பத்ரி
Image hosted by Photobucket.com
வெங்கடேஷ், கல்யாண், நாராயண்
Image hosted by Photobucket.com
வெங்கடேஷ், கல்யாண் ( சாகரன் ), நாராயண், பத்ரி

Image hosted by Photobucket.com
நாராயண், பத்ரி, மாலன், பிரகாஷ், செல்வராஜ்

22 comments:

 1. ராம்கி,

  அப்படியே எந்தப் படத்துல யாரு யாரு இருக்காங்கன்னு ஒரு வரி போட்டுடுங்க. போண்டா கிடைக்காட்டாலும் படம் பாத்து மக்கள்ஸ் திருப்தி பட்டுப்பாங்க ;-)

  - அலெக்ஸ்

  ReplyDelete
 2. வேலை இல்லாவிட்டால் வீட்டுக்குப் போய் படுத்துத் தூங்கு. வெட்டிவேலை செய்வதைக் காட்டிலும் வீணே இருப்பது சுகம்.

  -மகான் ஸ்ரீலஸ்ரீ கோயிஞ்சாமி சுவாமிகள்

  ReplyDelete
 3. சாம்பார் வடை செலவெல்லாம் இல்லாம சிம்பிளா முடிஞ்சது நம்ம மீட் தான் போலருக்கு :-)).

  உங்க சகாப்தம் தான் படிச்சிகிட்டு இருக்கேன், வரேன் வரேன் ;-).

  ReplyDelete
 4. >>பி.கே.சிவகுமார்தான் இதை ஆரம்பித்து வைத்தார்

  Uthai pada poringa

  >>இன்னொரு பிரபல வலைப்பதிவாளரும் சென்னை வர இருப்பதாக

  yaaruppaa athu. adutha klue koduthu oru post(er) podu

  -bench Govindh

  ReplyDelete
 5. பெயர்களைப் போடுங்கையா? நிறம்பப்பேர் இருக்கின்றார்கள் யார் யார் என்று தெரியவில்லை.

  ReplyDelete
 6. அருமையான புகைப்படங்கள். சிலரைத் தவிர மற்றவர்களை அடையாளம் தெரியவில்லை. நேரம் கிடைத்தால் யார் யார் என புகைப்படத்தின் கீழே பதியுங்கள்.

  அப்றம் அடுத்த சந்திப்பு நிகழும் போது சில நாட்கள் முன்னதாய்ச் சொன்னால் எங்களைப் போன்றவர்கள் திட்டமிட வசதியாய் இருக்கும். (ஹைத்ராபாத்திலிருந்து வரனுமில்ல...)

  ReplyDelete
 7. புகைப்படங்களில் இடம்பெற்றவர்கள் பெயர்கள் இடமிருந்து வலமாக..

  1. சுரேஷ் கண்ணன் , பிரசன்னா, பிரகாஷ், ராஜ்குமார், பிகேசிவக்குமார்

  2. இரா.முருகன், பத்ரி

  3. சுரேஷ் கண்ணன், பிரசன்னா

  4. சுஜாதா

  5. ராஜ்குமார், பிரகாஷ், கிருபா ஷங்கர், பிரதீப், தேசிகன்

  6. பிரகாஷ், ஷங்கர், ப்ரதீப், தேசிகன்,

  7. கும்பல்

  8. அருள்செல்வன், .இராம.கி, மதுமிதா, உஷா, காசி, சந்திரன்

  9. நாராயண், பத்ரி, மாலன், பிரகாஷ், செல்வராஜ், சுரேஷ் கண்ணன்

  10. வெங்கடேஷ், கல்யாண் ( சாகரன் ), நாராயண், பத்ரி

  11. வெங்கடேஷ், கல்யாண், நாராயண்

  12. வெங்கடேஷ், கல்யாண் ( சாகரன் ), நாராயண், பத்ரி

  13. நாராயண், பத்ரி, மாலன், பிரகாஷ், செல்வராஜ்

  ReplyDelete
 8. ராம்கி முதன்முறையாக தெளிவாக அனைவர் முகத்தையும் யார் யார் இன்னார் என்று அடையாளம் காட்டியதற்கு நன்றி.நண்பர்களை நேரில் பார்த்த உணர்வு.நன்றி பிரகாஸ்

  ReplyDelete
 9. Dear Ramki and prakash,

  Thanks for the proof which is indicationg that i attended the meeting with kasi. :-)

  - Suresh kannan

  ReplyDelete
 10. அன்புள்ள ரஜினி ராம்கி

  நல்லா படம் காமிச்சிருக்கிங்கா
  கோயிஞ்சாமி நம்பர் 9 ஏன் வாயை
  மூடிட்டு நிக்க்குறார் ? :-)

  என்றும் அன்பகலா
  மரவண்டு

  ReplyDelete
 11. ண்ணா, மரவண்டுங்க்னா. வாய மூடிக்கொண்டிருப்பது நாந்தானுங்க்னா. ஆனா நான் கோயிஞ்சாமி 9 இல்லிங்க்னா. டாப் 5-ல இருக்கேங்க்னா.

  க்ருபா

  ReplyDelete
 12. ஏதோ உள்குத்து நடக்குது.... யாருப்பா அது.. 'பொல்லா வினையே..' சவுண்டு கொஞ்சம் ஜாஸ்தியா வைப்பா..

  ReplyDelete
 13. கோயிஞ்சாமி 9 = rajni rami ?

  ReplyDelete
 14. ராம்கி, பிரகாஷ்,

  பெயர்களை வெளியிட்டதற்கு நன்றி. படங்களை நன்றாக எடுக்கிறீர்.

  ராம்கி: இது உண்மையா
  http://www.maalaimalar.com/asp/cinema/dis_cine_malardet.asp#213

  - அலெக்ஸ்

  ReplyDelete
 15. என்னுடைய அனுமதியில்லாமல் என் படத்தினை வெளியிட்டு என் இமேஜினை டேமேஜ் செய்ததற்காகவும், என்னை ஒழுங்காக நிறைய படங்களில் காட்டததற்காகவும், ராம்கியின் மீது 1 கோடி டாலர்கள் மான நஷ்ட வழக்கு போடும் எண்ணமுண்டு. நல்ல வழக்குரைஞர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.

  ராம்கி, நல்லா இருப்பய்யா நீ!!! நடத்து ராசா நடத்து

  ReplyDelete
 16. இந்தப் படங்களைப் பார்த்த போது எனக்கும் ஒரு வழக்குத் தொடுக்க வேண்டும் போலுள்ளது. நாராயணன். பீஸ் சரியா வந்தா உங்கட வழக்கை நான் எடுத்து பீஸ் பீஸ் ஆக்கிடமாட்டன்.

  என்னுடைய வழக்கு என்னவென்றால். ஏன் மதுமிதாவும், உஷாவும் பின்னால் இருக்கின்றார்கள்? அதிக நாற்காலிகளைக் கைப்பற்றிக் கொண்ட ஆண் வர்க்கம் அவர்களைப் பேச விட்டதா? சாப்பாடு கொடுத்ததா? வெத்திலை போட விட்டதா? இல்லாவிட்டால் தமிழ் படங்களில் பெண்களின் பங்களிப்புப் போல் வெறுமனே வந்து போக வைத்ததா? குழுமிக் குழுமி ஆண்கள்தானே ஏதோ பேசித் தள்ளுகின்றீர்கள்.

  பி.கு நாராயணன் படத்தில் ஜமாக்கின்றீர்கள்.

  ReplyDelete
 17. என்ன கூறுகிறீர்கள் கறுப்பி அவர்களே? உஷா பதிவு போடத்தான் நிலைமையே கட்டுக்கு வந்தது? அவர்கள் பதிவை பாருங்கள். (31 பின்னூட்டங்கள்) ஆனால் கருத்து பெட்டியைத்தான் மூடி விட்டார்.

  பார்க்க http://nunippul.blogspot.com/2005/07/blog-post_112114101310373341.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 18. அடுத்த சந்திப்பு நிகழும் போது சில நாட்கள் முன்னதாய்ச் சொன்னால் எங்களைப் போன்றவர்கள் திட்ட வசதியாய் இருக்கும்.

  தட்டச்சு உதவி : கோபி(gopi) :)

  ReplyDelete
 19. அலெக்ஸ்,

  அப்படியா?! ஹி..ஹி.. எல்லாம் மாயை!

  நரேன்,

  ஒரு கோடி டாலரா? கஷ்டமேயில்லை. ஆமா, எத்தனை சைபர்? அடுத்த தடவை சினிமாவுல வர்ற டாக்டர் மாதிரி கண்ணாடியை துடைக்க கையிலெடுக்கறச்ச 'கிளிக்'கிடுறேன்!

  கறுப்பி, மாயவரத்தான்,

  வாங்க...வாங்க. நான் என்னத்தை சொல்றது... வானா வேனா ஸ்டைலுல வேணும்னா ஒண்ணு சொல்லாம்.... குதூலகமா இருக்குற குடும்பத்துல கும்மியடிச்சுட்டு போய்டாதீங்க!

  ReplyDelete
 20. குதூலகமா இருக்குற குடும்பத்துல கும்மியடிச்சுட்டு போய்டாதீங்க!


  so you are not a bachelor

  ReplyDelete
 21. //நரேன்,

  ஒரு கோடி டாலரா? கஷ்டமேயில்லை. ஆமா, எத்தனை சைபர்? அடுத்த தடவை சினிமாவுல வர்ற டாக்டர் மாதிரி கண்ணாடியை துடைக்க கையிலெடுக்கறச்ச 'கிளிக்'கிடுறேன்!//

  எனக்கும் தெரியாது 7-ன்னு நினைக்கிறேன். இப்ப இது வேறயா, நல்ல வழக்குரைஞர்களோடு, நல்ல கணித மேதைகளும் விண்ணப்பிக்கலாம்.

  ReplyDelete