Tuesday, July 19, 2005

திருப்பங்கள்

Image hosted by Photobucket.com

திருப்பங்கள் எப்போதும் நமக்கு சுவராசியம்தான். எல்லா திசைகளையும் எப்போதும் உற்றுநோக்க வைப்பது திருப்பங்கள்தான். எதிர்பாராத விஷயங்களை அறிமுகப்படுத்தி வைப்பவையும் திருப்பங்கள்தான். சில சமயம் எதிர்பாராத திசைகளை நோக்கி நம்மை பயணிக்க வைப்பதும் திருப்பங்கள்தான்.

Image hosted by Photobucket.com

திருப்பங்களே இல்லாத சீரான பாதையில் கவனிக்க எதுவுமில்லை. மாறாக நம் கவனத்தை திசை திருப்பி விபத்துகளை விளைவிக்கும் ஆபத்துகள் உண்டு. அடிக்கடி வரும் திருப்பங்கள் நம் கவனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவை. வேகத்தை மறக்கடித்து விவேகத்தை நினைக்க வைக்கும் விஷயஞானிகள்.

Image hosted by Photobucket.com

போகவேண்டிய தூரம் அதிகமில்லை என்பதே ஒவ்வொரு திருப்பங்களும் சொல்லும் செய்தி. பல திருப்பங்கள் நம்மை யூகிக்க விடுவதில்லை. ஒவ்வொரு திரும்பங்களுக்கு பின்னரும் செல்லும் பாதையின் உயரம் கூடுவது பிரமையில்லை, உண்மை. கடந்து போன திருப்பங்களை திரும்பிப் பார்க்க கண்கள் திரும்புவதில்லை. திரும்பினாலும் தெரிவதில்லை, வாழ்க்கையை போல!

13 comments:

 1. உங்களுடைய புதுக்கேமரா என்ன மாடல்!? படங்கள் கலக்கலா இருக்குது.

  ReplyDelete
 2. ராம்கி படங்கள் எல்லாம் சூப்பர்........

  ReplyDelete
 3. சுனாமி நேரத்தில் நான் சுட்டுத் தள்ளியிருந்த ஓட்டை காமிரா படங்களை பார்த்துவிட்டு நொந்து போய், சுரேஷ் பிரபு என்னும் நண்பர் கொடுத்த அன்பளிப்புதான் இந்த காமிரா. ஏதோ முன்னணி பத்திரிக்கையில் வேலைபார்க்கும் ரிப்போர்ட்டர் மாதிரி காமிராவை கையிலெடுத்துக்கொண்டு ஸீன் போடுவதுதான் இப்போதைக்கு என்னுடைய பொழுதுபோக்கு.

  ReplyDelete
 4. மொத படம் மாயவரம்<->கும்பகோணம், மாயவரம்<->திருவாரூர் பிரிவா?

  ReplyDelete
 5. "எதிர்பாராத விஷயங்களை அறிமுகப்படுத்தி வைப்பவையும் திருப்பங்கள்தான். சில சமயம் எதிர்பாராத திசைகளை நோக்கி நம்மை பயணிக்க வைப்பதும் திருப்பங்கள்தான்"

  திருப்பங்களும் வளைவுகளும் ஒண்ணுங்களா?

  அப்படின்னா இந்த வாரத்து ஆ.வி-யில "ஹாய் மதன்" வளைவுகளப் பத்தி ஒரு சூப்பர் மேட்டர் போட்டிருந்தார்.அத்தப் படிச்சீங்களா???

  மத்தபடி நீங்க எடுத்த எல்லா ஒளி ஓவியங்களுமே நன்னா இருக்கு...

  ReplyDelete
 6. இந்த படங்களில் ( ஓளி ஓவியங்களில் ) என்ன இருக்கு ? ஏன் எல்லோரும் இப்படி புகழ்ந்து தள்ளி கொண்டு இருக்கிறார்கள்.. யாராவது விளக்குவீர்களா?

  ReplyDelete
 7. மாப்ளே,

  கரெக்டா சொன்னீங்க. 1. மாயவரம் ஜங்ஷன் 2. முட்டுக்காடு 3. நன்னிலம்

  சுதர்ஷன்,

  ரெண்டும் ஒண்ணுதான். ஆனா, வளைவுகள் சொன்னா கொஞ்சம் வம்பை விலை கொடுத்து வாங்கிறமாதிரி!

  ReplyDelete
 8. சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....

  இந்த பின்னூட்டத்தின் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. அது இங்கே இதில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கஸ்மாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயில் அட்டாச்மெண்டில் அனுப்பி வைக்கப்படும்...

  இது ஒரு ஜாலி முயற்சி அவ்வளவே... உங்கள் பதிவை திசை திருப்பும் எண்ணம் இல்லை... தயவு செய்து இந்த ஒரு முறை கண்டுக்காதீங்க...

  ReplyDelete
 9. போக வேண்டிய தூரம் அதிகமில்லை என்பதைத் தெரிவிப்பதும் திருப்பங்கள்தான்.. நல்ல தத்துவம். எனக்குத் தெரிந்து சாலைகளைவிட சேலைகளில் தான் அதிகத் திருப்பங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 10. Adheppadai Ramki,

  Vivek madhiri adhuva varudha ezhudhuvadharku!!

  ReplyDelete
 11. மனோஜ் & விஜய்,

  விவேக்கா? அப்ப விவேக் மாதிரி சீக்கிரமா காணா போயிடுவனா?

  ReplyDelete
 12. இரயில்வே தண்டவாளம் PHOTO
  சூப்பர் ஆன எந்த ஊர் என்று தன் தெரியவில்லை.
  கொஞ்சம் சொல்லுங்க

  ReplyDelete
 13. இரயில்வே தண்டவாளம் PHOTO
  சூப்பர் ஆன எந்த ஊர் என்று தன் தெரியவில்லை.
  கொஞ்சம் சொல்லுங்க

  ReplyDelete