Tuesday, August 23, 2005

பொல்லா வினையே...

எண்பதுகளின் கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களை மறக்க முடியாது. ஒரு கையில் பூக்கூடையும் இன்னொரு கையால் எனது கரத்தையும் இழுத்துப்பிடித்தவாறே முன்னே நடப்பாள். தருமபுர மடத்துக்கு வடக்கே முழுங்காலை தொட்டுக்கொண்டு ஓடும் காவிரியில் முதலில் என்னை குளிப்பாட்டி கரையில் உட்கார வைத்துவிட்டு கழுத்தளவு தண்ணீரில் கால் கடுக்க காத்திருப்பாள். வழக்கம்போல் லேட்டாக வந்து தீர்த்தம் கொடுத்த சாமி சீக்கிரமாக திரும்பிப் போவதற்குள் மூங்கில் பாலத்தின் மேலேறி ஈரத்துணியை இழுத்துப்பிடித்தவாறே கருங்குயில்நாதன் பேட்டை நோக்கி நடக்கும் பாட்டியின் உள்ளங்கையிலிருந்த அதே ஜில்லிப்பு, காவிரிக்கரையோரம் அவளின் கடைசிப் பயணத்திலும் இருந்தது.

Image hosted by Photobucket.com

'பாட்டி' என்று யாரும் விளித்தாலும் என் பாட்டிக்கு பிடிக்காது. பாட்டி என்று இப்போது நான் எழுதுவது கூட இரண்டு விஷயங்கள் உறுதியாக தெரியும் என்பதால்தான். ஒன்று, பாட்டிக்கு எழுதப் படிக்க தெரியாது. இரண்டாவது அப்படியே பாட்டி என்று எழுதியிருந்தாலும் திரும்பி வந்து கோபித்துக்கொள்ள முடியாத இடத்திற்கு போய்விட்டவள் அவள். நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு அவள் 'அம்மா'தான். உண்மையில் ஒரிஜினல் அம்மாவை விட ஒரு ஸ்தானம் மேல். குடும்பத்தை துரத்திய வறுமை காரணமாக பதினாலு வயதில் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு பத்தே வருஷத்தில் அந்த வாழ்க்கையையும் பறிகொடுத்துவிட்டு ஒரே பெண்ணை படிக்க வைத்து டீச்சராக்கியதையெல்லாம் பாட்டி எப்போதே மறந்துவிட்டிருந்தாள். பாட்டியை பொறுத்தவரை கடந்த முப்பது வருஷங்களில் நடந்து நிகழ்வுகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தாள். சினிமா, டி.வியை விட மூன்று பேரப்பிள்ளைகளையும் சுற்றி சுற்றி வந்து பார்த்துக்கொள்வதுதான் அவளின் பொழுதுபோக்கு. ஐந்து மணி அடித்ததும் தெருவை வெறித்தபடி வாசலில் காத்துக்கிடப்பாள். எல்லோரும் வந்து சேர எட்டு மணி ஆனாலும் இருக்கும் இடத்தைவிட்டு நகரவேமாட்டாள்.

Image hosted by Photobucket.com

பாட்டிக்கும் பேரனுக்கும் பிடித்தமான பிள்ளையார் கோயில் அது. தருமபுர மடத்தில் ஞானசம்பந்தம் பிரஸ் நடத்திக்கொண்டிருந்த தனது கணவர் எப்போதும் உட்கார்ந்திருக்கும் அந்த பிள்ளையார் கோயில் வாசலை ஐம்பது வருஷமானாலும் பாட்டியால் மறக்க முடியவில்லை. தருமபுரம் வரும்போதெல்லாம் பிள்ளையாருக்கு விசேஷ கவனிப்பு உண்டு. அளவுக்கதிகமான அக்கறையும் அன்பும், எரிச்சலை கொண்டு வரும் என்பதை பாட்டி உணரவேயில்லை. அதற்கான எந்தவொரு வாய்ப்பையும் யாரும் ஏற்படுத்திக்கொடுக்கவேயில்லை. காவிரிப்பூம்பட்டினத்தில் பாட்டியின் கடைசி அஸ்தியை கரைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் நடக்கும்போது அந்த குற்றவுணர்ச்சிதான் வதைத்தது. உடம்பு சரியில்லாத நாட்களில் பத்து நிமிடத்திற்கொரு முறை நெற்றியை தொட்டுபார்த்தவாறே பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும் பாட்டியின் கடைசிக்காலங்களில் ஒரு பத்து மணி நேரம் கூட பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ளமுடியவில்லையா என்கிற மனசாட்சியின் குரலை எதிர்கொள்ளும் திரணி எனக்கில்லை. ஆனால், பாட்டி இதையெல்லாம் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டாள். அந்த கருப்பு ஞாயிற்றுக்கிழமையின் இருட்டு வேளையில் எந்த டாக்டரையும் தொந்தரவு செய்யாமலேயே காசி தண்ணீரை ஒரு மடக்கு குடித்துவிட்டு, சொந்த பந்தங்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும்போதே விழியோரம் ஒரு துளி கண்ணீரையும் மூக்கோரமாய் ஒரு துளி ரத்தத்தையும் சிந்திவிட்டு நிரந்தரமாக தூங்கிப்போனாள்.

Image hosted by Photobucket.com

'ஸார், சைஸ் ரொம்ப கம்மியா இருக்கே.. Resoultion பத்தலை. பெரிய சைஸ் படமா பிரிண்ட் எடுக்க முடியாதே...' கலர் லேப்காரன் சொன்ன வார்த்தைகளின் கூர்மை, ஆணியை விட நெஞ்சை அதிகமாகவே பதம் பார்த்தன. எத்தனையோ படங்களை எங்கேங்கோ போய் எடுத்து வந்திருந்தாலும் வீட்டுக்குள்ளேயே இருந்த பாட்டியை குளோஸப்பில் எடுக்க மறந்தது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய மடத்தனம். இத்தனைக்கும் பாட்டிக்கு காமிராவை கண்டால் அலர்ஜி என்றெல்லாம் சொல்வதற்கில்லை. நாகரீகமாக உடுத்தி, நெற்றியில் விபூதி இட்டு, கழுத்தில் இரட்டை வட செயின் சகிதம் எப்போதும் பளிச்சென்றுதான் இருப்பாள். எப்போதும் பிள்ளையார் பைத்தியமாக இருந்த பேரனோடு தான் எடுத்துக்கொண்ட போட்டோதான் பாட்டிக்கு பிடித்தமான போட்டோ. பிள்ளையார் இருந்தால்தான் போஸ் கொடுப்பேன் என்று அழுது அடம்பிடித்த பேரனை சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிலேயே இருந்த போட்டோவை கழட்டி பேரனிடம் கொடுத்துவிட்டு ஒரு கையில் பேத்தியையும் இன்னொரு கையில் போட்டோவையும் நழுவ விடாமல் பத்திரமாக பிடித்துக்கொண்டு பேரப்பிள்ளைகளே என்னுடைய உலகம் என்று முப்பது வருஷமாய் மனதுக்குள் தீர்மானம் செய்து வைத்திருந்த பாட்டிதான் எனக்கு மகளாக பிறக்கவேண்டும். ராட்டிகளும் சவுக்கு கட்டைகளும் ஆக்கிரமிப்பதற்குள் பாட்டியின் சிதைந்து போன கால் கட்டைவிரல் நகத்தை வருடியவாறு நான் சமர்ப்பித்த அந்த அப்ளிகேஷனை ஆண்டவன்தான் பரிசீலிக்கவேண்டும்.

23 comments:

 1. நிச்சயம் பாட்டி உங்களை ஏமாற்ற மாட்டார்.... உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட நாங்களும் பிரார்த்திக்கிறோம்...

  ReplyDelete
 2. நெகிழ்வான பதிவு ராம்கி. ஆழமான சிந்தனை நிகழ்வாக மாறும், உங்கள் ப்ரார்த்தனையும் நிச்சயம் நிறைவேறும். வெகுளியான நல்ல ஆத்மா தெய்வத்தின் மறுவடிவம் என்பது என் கருத்து. எல்லைச்சாமிகள் அவ்வகைதானே. உங்கள் பாட்டியின் ஆத்மாவும் உங்களை வழிநடத்தும்.

  ReplyDelete
 3. நல்ல பதிவு ராம்கி,
  அப்பறம் இன்னொன்னு கவனிச்சிருக்கிங்களா ராம்கி, Cunningness இல்லாதவங்க , ரொம்ப சூதுவாது தெரியாதவங்க, சுருக்கமா இளிச்சவாயங்க எல்லாம்
  தாத்தா, பாட்டிக்கிட்ட வளர்ந்தவங்களா இருப்பாங்க பாருங்க

  ReplyDelete
 4. கனபமடனதபமடதனகமடதபாகபதா
  கபாhகபாகபா
  கபாகபாகப

  ReplyDelete
 5. Dear Ramki,
  Very sorry to hear the demise of ur loving Grandma.

  Arun Vaidyanathan

  ReplyDelete
 6. "....ஆனால், பாட்டி இதையெல்லாம் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டாள்......."

  இதுதான் நிஜம். இப்படி அன்பைப்பொழிபவர்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். இந்தப் பதிவை அவர் படிக்காவிட்டாலும் உங்கள் பாசம் அவருக்குப் புரிந்திருக்கும். அதனால் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், மனம் கலங்காமல் அவருடைய நல்ல குணங்களை உங்கள் வாழ்க்கையிலும் உங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கையிலும் படர விடுங்கள் ராம்கி. அவரே வழிகாட்டுவார்.

  ReplyDelete
 7. நெகிழ்வான பதிவு .

  ReplyDelete
 8. உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட நாங்களும் பிரார்த்திக்கிறோம்...

  ReplyDelete
 9. உடம்பு சரியில்லாத நாட்களில் பத்து நிமிடத்திற்கொரு முறை நெற்றியை தொட்டுபார்த்தவாறே பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும் பாட்டியின் கடைசிக்காலங்களில் ஒரு பத்து மணி நேரம் கூட பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ளமுடியவில்லையா என்கிற மனசாட்சியின் குரலை எதிர்கொள்ளும் திரணி எனக்கில்லை.

  எனக்கும். :-(

  இதப்பத்தி நெனச்சாலே கவலையா இருக்கு. :-((

  சென்னையை விட்டு வெளியூர்ப் போகும்போது ஒவ்வொருதடவையும் நெனச்சுப்பேன்.


  பிள்ளையார் இருந்தால்தான் போஸ் கொடுப்பேன் என்று அழுது அடம்பிடித்த பேரனை சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிலேயே இருந்த போட்டோவை கழட்டி பேரனிடம் கொடுத்துவிட்டு ஒரு கையில் பேத்தியையும் இன்னொரு கையில் போட்டோவையும் நழுவ விடாமல் பத்திரமாக பிடித்துக்கொண்டு பேரப்பிள்ளைகளே என்னுடைய உலகம் என்று முப்பது வருஷமாய் மனதுக்குள் தீர்மானம் செய்து வைத்திருந்த பாட்டிதான் எனக்கு மகளாக பிறக்கவேண்டும்.

  ரொம்ப touchingஆ இருக்கு.

  பாட்டிதான் எனக்கு மகளாக பிறக்கவேண்டும்.

  "கொள்கை" தளர்ந்திருப்பதால் வரமும் கிடைக்கும். :-)

  ReplyDelete
 10. Nekilvaana pathivu. ungalin unarvu intha pathivin nadaiyil thelivaaga therikindrathu.
  mm..mm...Aaruthalai thavira enna solla?

  ReplyDelete
 11. ராம்கி
  நெகிழ வைத்து விடீர்கள். நினைவுகள், மனதில் எப்போதும் நிரந்தரமாய் இருந்து வழிகட்டும். அனுதாபங்கள்

  ReplyDelete
 12. அற்புதமான மனதைத் தொட்ட பதிவு.

  ReplyDelete
 13. ராம்கி,
  படிக்கும் போதே கஷ்டமாக உணர்ந்தேன். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 14. ஒரிஜினல் அம்மாவை விட ஒரு ஸ்தானம் மேல்

  இப்படிக் கிடைப்பவர்கள் அரிது. ஞாபங்களுக்கு வலிமை அதிகம். கவனிக்க மறந்தது என்று நாம் நினைத்திருப்பவைகள் கூட எதிர்பாரா நேரத்தில் மனதில் மேலுழும்பும். பாட்டிக்கு அஞ்சலி. பாட்டியைத் தந்த கடவுளுக்கு நன்றி. அன்பான பாட்டி உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 15. அன்பு ராம்கி,
  வாழ்க்கையை உங்களூக்கு கற்றுக்கொடுத்த 'துரோணாச்சாரியார்'களுல்அவரும் ஒருவராய் இருந்திருப்பார்.

  அன்னை உள்ளம்(ங்கள்) வாழ்க!

  எம்.கே.குமார்.

  ReplyDelete
 16. மென் அனுதாபங்கள் ராம்கி...

  ஒரு சரித்திரமே நம்மை விட்டு போய்விட்ட மாதிரியான உணர்வைக் கொடுக்க கூடியது பெரியோர்களின் மரணம்.

  ReplyDelete
 17. a poem i liked,i want to share...

  thinnaikku thuruthapatta amma
  meendum veettukul vandhaal
  photovaaga...

  the mom who was out of house reentered house as a picture(after death)..
  there are many pepole who never cares and loves elders when they alive,and after they gone decortiong their photos and show the world how much they love them..but when they lived no care....

  but i belive ramki love is real....

  ReplyDelete
 18. நம்மை உண்மையிலேயே நேசிப்பவர்கள் நம்மை விட்டுப் பிரியமாட்டார்கள். ஏதாவது ஒரு வழியில் நம்முடன் திரும்பச் சேர்ந்து விடுவார்கள்.

  உங்கள் பாட்டியும் உங்களோடு சேர்வார். நீங்களும் உங்கள் மகளாகச் சீராட்டத்தான் போகின்றீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேற நான் முருகனை வணங்குகிறேன்.

  ReplyDelete
 19. ராம்கி,
  நெகிழ வைத்த பதிவு.. பாட்டியின் ஆத்மா உங்களுடனே இருந்து உங்களுக்கு வழிகாட்டும்..

  ReplyDelete
 20. Great blog you have here! I have a site about betteruniverse and I thought it might be of interest to you and your readers.
  Keep up the good work ;-)

  ReplyDelete
 21. Your blog is great If you a health issue, I'm sure you'd be interested in homeopathic Stop the issue with homeopathic

  ReplyDelete
 22. Google Wants to Expand Offline Ads
  The company confirmed the test Wednesday, but provided few other details in a statement.
  Hey, you have a great blog here! I'm definitely going to bookmark you!

  I have a Most Guarded secrets site/blog. It pretty much covers Most Guarded secrets related stuff.

  Come and check it out if you get time :-)

  ReplyDelete
 23. Romba touchingana irunthatu Mayavarathare. Padichu midikkumbothu manasu romba ganamaiduchu. Ungaloda ovvoru padaippilaum, oovvoru valarchiyilum unga pattioda athama ungalai aasirvathikkum. Romba pasam vechavangaloda aathma eppovaum thunaiya koodave irukkum.

  Namakkal Shibi.

  ReplyDelete