Wednesday, October 05, 2005

கலக்கி

குடும்பத்துடன் களிக்க... கல்கி! கல்கியோட லோகோ மாறியிருக்குது. குடும்பத்துடன் கண்டுகளிக்க.. டூரிங் தியேட்டர் நோட்டீஸ் ஞாபகத்துக்கு வருது. விகடன், குமுதம் மீட்டரோட கல்கியும் போட்டி போடுது. மீட்டர்னா வேற என்ன, சினிமா மேட்டர்தான். வழக்கம் போல வட்டமேஜைக்கு வர்றவங்க லிஸ்ட் இன்னும் மாறலை. சிதம்பரம் ஸ்ரீவித்யா காளிதாஸ், திருப்பரங்குன்றம் சுப்ரமணியன், சேலம் சியாமளா ஈஸ்வரன், திருவண்ணாமலை சண்முகம், தஞ்சை வளர்மதி... ஹை.. நம்ம டீம் இன்னும் அப்படியேதான் இருக்குது. இந்த வாரம் பாட்டு வாத்தியாருங்களை பத்தின துணுக்கு ஸ்பெஷல். தமிழ் சினிமாவில் பெரிய புரட்சி நடக்குப்போவது. பின்னே, இன்னொரு 'கல்யாணந்தான் கட்டிக்கிட்டு' பாட்டை எழுதமாட்டேன்னு சினேகன் சொல்லியிருக்கிறாராம்! ஆளாளுக்கு விடற பீட்டர்தான் கல்கியின் இந்தவாரத்து மேட்டர்! சாம்பிளுக்கு கொஞ்சம். கல்கியோட கொஞ்சம் கலக்கி....

"நான் சொன்ன கதையில் இம்ப்ரஸ் ஆன உலக அழகி ஐஸ்வர்யாராய், இன்றுவரைக்கும் அதுபற்றி விசாரித்து வருகிறார்."
- பிரவீண்காந்த்

எதுக்கு தேடிட்டிருக்கார்.. எதை தேடிட்டிருக்காரு... அதெல்லாம் ரகசியம். எத்தனை நாளைக்கு ஐஸ்வர்யா ராய் உலக அழகிங்கற விஷயம் தெரியமாத்தான் எல்லோரும் தேடிட்டிருக்காங்க.

"நியூ படத்தை தடை செய்யறதை பார்த்தா, எங்களை மாதிரியானவர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதை தடுக்கறாங்களோன்னு சந்தேகமா இருக்கு."
- சிம்பு

'ஆடறா..சக்கை... ஆடறா.. சக்கை... மாயவரத்து திமிர் ஆரம்பத்துல ஆட்டம் போடத்தான் வைக்கும்.. போகப்போக அடங்கிடும். அதான் பார்க்குறோம்ல...' கமெண்ட் உதவி : நாகர்கோவில் ரூம்மேட்

"குஷ்பு, உருது பேசும் முஸ்லீம் பெண். சிறுபான்மை இனத்தை சேர்ந்தவராக இருப்பதால் இந்துத்வா சக்திகளும், தமிழ் தேசியவாதிகளும் அவரைப் பழிவாங்குகிறார்கள் என்பதே உண்மை."
- கவிஞர் சல்மா

கவிஞருங்க வாயிலேர்ந்து கவித தவிர வேறு எதுவும் வரக்கூடாதுன்னு அம்மா கிட்ட சொல்லி ஒரு ஆர்டர் வாங்கணும். வைரமுத்து சினிமா பாட்டையெல்லாம் குறைச்சுக்கிட்டு இலக்கியம் படைக்கப்போறாராம். சல்மா மாதிரியான கவிதாயினிகளும் கொஞ்சம் நல்ல கழுத.. ஸாரி.. கவித எழுத ஆரம்பிக்கலாமே!

"தன் கருத்தை சொல்வதற்கு குஷ்புவுக்கு உரிமை உள்ளது. ஆனால் அவர் கருத்துக்கு மதிப்பு கொடுக்க நான் விரும்பவில்லை."
- வழக்கறிஞர் அருள்மொழி.

பவுடர் பசங்க என்ன சொன்னாலும் அத யாரும் கண்டுக்கக்கூடாதுன்னு முந்திக்கிட்டு நாமளே சவுண்டு விட்டுடறதுதான் அறிவு ஜீவித்தனம். பெரியார் இப்ப இருந்தா குஷ்பு பத்தி ஸாரி...குஷ்புவோட ஸ்டேட்மெண்ட் பத்தி என்ன கமெண்ட் அடிச்சிருப்பாரு? நல்லா யோசிங்கப்பா!

"இந்தப் பிரச்னையில் ஆண்கள் பதில் சொல்லவே கூடாது"

- தொல். திருமாவளவன்.

சொல்லலாமா.. வேணாமா... எதை சொன்னாலும் உனக்கு.......சரி, சரி....மனசுல எதுவும் வெச்சுக்க வேணாம். சொல்ல வந்ததை சொல்லிடலாம். நோ கமெண்ட்ஸ்!

Image hosted by Photobucket.com

"நவ்யா நாயரு அட்டகாசம் பண்ணியிருக்காங்க. ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மாவா நடிச்சதே பெரிய விஷயம். அதுல சூப்பரா ஆக்ட் கொடுத்துருக்கிறது இன்னும் தூளு. மத்த ஹீரோயினுங்க இவங்ககிட்ட கத்துக்க வேண்டிய விஷயம் நிறையவே கீது. 'தேனு...தேனு'ன்னு பொண்டாட்டிகிட்ட தங்கரு உருகறப்போ படம் பார்க்க விடலைங்களுக்கே 'ச்சே... சீக்கிரம் கண்ணாலம் பண்ணிக்கணும்'னு தோணும்."
- சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, விமர்சனம்.

ஹைய்யா.. ஒரு ஸ்டில்லை எடுத்துவுடுப்பா.. தலை தப்பிக்க வெச்ச அந்த மேக்கப் வுமனுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிடுங்க.. தங்கர்!

"இமயமலையின் அமைதியான பிரம்மாண்டம் எனக்குள்ளே அடக்கத்தையும் மன அமைதியையும் ஏற்படுத்துகிறது. அங்கே கார் ஓட்டுவது சவாலான விஷயம்."
- ரேவதி

ஹி...ஹி....அம்மிணி, உங்களுக்கும் நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்! யாராவது நெசமாவே ஓட்ட போறாங்க!

5 comments:

 1. >>பெரியார் இப்ப இருந்தா குஷ்பு பத்தி ஸாரி...குஷ்புவோட ஸ்டேட்மெண்ட் பத்தி என்ன கமெண்ட் அடிச்சிருப்பாரு? <<

  ஓரிரு நாள்கள் பொறுத்திருந்து, வெளியாக உள்ள திசைகள் பார்க்கவும். ரொம்ப அவசரம் என்றால் சென்ற ஞாயிற்றுக் கிழமை (அக்.2) எகஸ்பிரஸ் பார்க்கவும். அதன் சுட்டி என் பதிவில் உள்ளது.

  அது சரி, ஒவ்வொரு படத்திலும் பெண்களை அடக்கி வைப்பதைப் போல டயலாக் விடும் ரஜனி என்ன சொல்கிறார்?
  மாலன்

  ReplyDelete
 2. //To him it was like a person eating his favorite food at the restaurant of his choice or shopping at his favorite mall. According to him personal gratification and liberty play a deciding role in these acts and any intrusion is unwarranted, unnecessary and displays an attitude to dictate. //

  It's very clear. Thanks for ur remark which reveals that Periyar is purely a realistic person. Now, it's become very big question mark as u mentioned...

  //Both Ramdoss and Thirumavalavan hold Periyar E V Ramasamy in high esteem and have said that they draw their inspiration for social work from him.//

  Reg. Rajinikanth, i think, it's better to take the stand of Advocate Aurlmozhi which is very safe. No one can arise question?! Anyway, this may be the comment of Rajnikanth... Of course, it may be the comment of ordinary middle class people!

  ரஜினிகாந்த் பேசும் போது பத்திரிகைகளை குறைபட்டுக் கொண்டார். அவர் பேசியதாவது:

  ""சமீபகாலமாக பத்திரிகைகள் திரையுலகத்தினரை பிரச்னைக்கும், டென்ஷனுக்கும் ஆளாக்கிக் கொண்டிருக்கின்றன; இது தவிர்க்கப்பட வேண்டும். "சந்திரமுகி' பட விழாவில் இதைத் தெரிவிக்கலாம் என்று கூட நினைத்தேன். ஆனால், வேண்டாம் என்று விட்டுவிட் டேன். இங்கு பத்திரிகை நிருபர்கள் யாருமில்லை. அதனால் தான் இதை தெரிவிக்கிறேன்,'' என்றார்.

  Courtsy : dinamalar

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. hi ,
  I am not able to read the text in this blog peroperly.The tamizh text is not rendered properly both in Mozilla firefox as well as Internet explorer.
  Any workarounds.

  ReplyDelete
 5. Which Operating System u r using? Pl. check whether it supports UNICODE. Pl. let me know ur mail id, i will write to you detailly. Thanks.

  ReplyDelete