Friday, October 07, 2005

டோட்டல் டேமேஜ்

இந்தியா டுடே இதழில் குஷ்புவின் பேட்டியில் ஒரு இடத்தில் கூட தமிழ்ப் பெண்கள் என்கிற சொற்றொடரே கிடையாது. 'என்னைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உடல் பற்றியது மட்டுமல்ல; அதில் மனதும் சம்பந்தப்பட்டிருக்கிறது' என்று சொன்ன குஷ்புவின் நேர்மை பாராட்டப்பட வேண்டியதே தவிர கண்டிக்கப்படவேண்டியது அல்ல. அவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தை நடத்திய, ஏற்பாடு செய்த, தூண்டிய ஒரு அரசியல் தலை கூட இதே நேர்மையோடு தங்கள் காதல், திருமண வாழ்க்கையைப் பற்றி பேசமாட்டார்கள்.

குஷ்புவின் கருத்துக்கு எதிர்ப்பு என்கிற பெயரில் நடந்திருக்கும் அராஜகங்களில் தமிழ்நாட்டு அரசியல் ஆம்பளை சிங்கங்கள் பலரும் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கருணாநிதியின் 'தமிழ் முரசு' பேரக்குடும்பம் முதல், 'இங்கிலீஷ் தாத்தா' ராமதாஸ், 'எல்லோரும் விபசாரி' புகழ் தங்கர் பச்சான், 'ஜக்கி பக்தர்' திருமாவளவன், 'நடிகர் சங்க' கேப்டன் விஜயகாந்த், த.மு.முக என பலரும் தங்கள் ஆம்பளைத்திமிரை வெவ்வெறு விதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

குஷ்புவின் பேட்டிக்கு பல தரப்பிலிருந்து கண்டனம் எழுந்துள்ளது என்று 23.9.2005 இதழில் முதல் பக்கத்தில் தன் பொய்யை தொடங்கிய தமிழ் முரசு தொடர்ந்து 'தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா? என்று தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வந்தது. எந்த சன் டிவிக்கு ஆங்கிலப் பெயர் இருப்பதை நியாயப்படுத்தி அறிக்கை கொடுக்குமளவுக்கு பேரப்பாசம் கருணாநிதிக்கு பொங்கி வருகிறதோ, அதே சன் டிவி குழுமம்தான் தமிழ் முரசு ஏட்டை தமிழர்களுக்கு¡க 'டக்கராக' நடத்திக் காட்டிக்கொண்டிருக்கிறது.

Image hosted by Photobucket.com

தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும் தன் பேரக்குழந்தைகளை டெல்லியில் ஆங்கிலப்பள்ளியில் சேர்த்துவிட்டு இங்கே 'டமில்' பாதுகாப்பு இயக்கம் நடத்தும் மருத்துவர் மாலடிமைடியின் குடும்பக்கட்சியின் மகளிர் அணிதான் குஷ்புவுக்கு எதிராக தமிழ்ப் பெண்களின் கற்பை பாதுகாக்க வழக்குகள் போட்டுக்கொண்டிருக்கிறது.

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கார் மூவருமாக ஓருருவில் அவதரித்த ஜக்கி வாசுதேவரிடம் யோக நிஷ்டை பயின்ற திருமாவளவனுக்கு, திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த ஆதிக்க சாதிக்காரர்கள் வீடு நோக்கியோ மேலவளவு முருகேசனைக் கொன்றவர்கள் வீடு நோக்கியோ கழுதை ஊர்வலம் நடத்த தோன்றவில்லை. ஜக்கி வாசுதேவின் சீடர்களில் குஷ்புவும் உண்டு என்பது திருமாவுக்கு தெரியாதா? குஷ்புவின் கருத்தை விட புரட்சிகரமான கருத்துகளை அதே இதழில் சொல்லியிருக்கும் சுகிர்தராணியை எதிர்த்து துடைப்ப ஊர்வலம் நடத்தாது ஏன்?

உழைத்த தொழிலாளி தினசரி பேட்டா கேட்டதை ஆதரித்த நடிகையை, காசுக்காக வேலை செய்யும் விபசாரியுடன் ஒப்பிட்ட 'தமிழ் சினிமாவின் ஓரே அறிவு ஜீவி' தங்கர்பச்சான், ஒரு ஆண் வேண்டுமானால் எப்படியும் வாழ முடியும் ஆனால் ஒரு பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை தன் திரைப்படங்களில் பதிவு செய்து காட்டியிருப்பதாக குமுதம் ரிப்போர்ட்டரில் கருத்து சொன்ன தங்கர்பச்சான், அப்பேர்ப்பட்ட எனக்கு நேர்ந்த அவமானம்தான் இப்போது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் நேர்ந்துவிட்டது என்கிறார். கி.ராஜநாராயணன் தொகுத்து தள்ளிய கிராமிய பாலியல் கதைகள் எந்தப் பண்பாட்டிலிருந்து வந்தவையாம்?

தமிழ்ப் பெண்களின் கற்பு பக்கம் நிற்கப்போகிறாரா அல்லது அதை கொச்சைப்படுத்திய சக நடிகர் பக்கம் நிற்பாரா என்கிற தர்மசங்கடத்தை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உண்டாக்க நினைத்ததை உணர்ந்தததால்தான் விஜய்காந்த் நடிகர் சங்கத்தலைவர் என்கிற முறையில் குஷ்பு சார்பாக எடுக்க வேண்டிய நிலையை எடுக்காமல் நழுவிவிட்டார்.

குஷ்பு ஒரு முஸ்லீம் பெண்ணானாலும் அவரை நாங்கள் முஸ்லீமாகவே கருதவில்லை என்று அறிக்கை வெளியிட்டது முஸ்லீம் முன்னேற்றக்கழகம். பாலியல் பிரச்னைகளில் குஷ்புவுக்கு நிகராக கருத்து தெரிவிக்கும் படைப்புகளை எழுதும் தமிழ்நாட்டு சல்மாவை த.மு.மு.க ஏன் இன்னும் முஸ்லீம் அல்ல என்று அறிவிக்கவில்லை?

தமிழ் ஆணுக்கு இவர்கள் வைக்கும் ரோல் மாடல் கோவலன். மனைவிக்கு வைக்கும் ரோல் மாடல் கண்ணகி. ஆனால் இவர்களுக்கு மாதவியும் வேண்டும். மாதவிகள் கோவலனின் கற்பை கேள்விக்குள்ளாக்கினால் இவர்களால் தாங்க முடியாது. கண்ணகியே நெடுஞ்செழியனிடம் நீதி கேட்பதற்கு முன்னால் கோவலனிடம் நீதி கேட்டிருந்தால் கோவலன் அவளிடம் என்ன சொல்லியிருப்பான்?

'தமிழ் நாட்டை விட்டு ஓடு'

நன்றி - தீம்தரிகிட அக்டோபர் 2005.

மும்பையிலிருந்து ஞாநி கொடுத்திருக்கும் வாய்ஸை படிச்சா வடிவேலு டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது. 'ஏய்.. வேணாம்...மம்மி பாவம்... நோ..நோ.. டாடி பாவம்.... ஏய்....வேணாம்...சொல்லிட்டேன்...சிஸ்டரை வம்புக்கிழுக்காதே... நோ..நோ... தாத்தா பாவம்.. பிரதர் ரொம்ப பாவம்... ஐயோ...அடிப்பாவி, என் குடும்பத்தை நடுத்தெருவுக்கு இழுத்து இமேஜை டேமேஜ் பண்ணிட்டாளே....'

31 comments:

 1. எப்போதாவது ஒருமுறை இப்படி ஞாநி எழுதுவதே - இடையில் இளையராஜாவின் திருவாசகம் முதலியவை பற்றி அவர் உளறியவை மாதிரியான கட்டுரைகளை மீறி - அவர் மீது இருக்கிற நம்பிக்கையை இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வெல்டன் ஞாநி!

  அன்புடன், பி.கே. சிவகுமார்

  ReplyDelete
 2. பிகேஎஸ் கரெக்டா சொன்னீங்க. ஆனாலும் 'போயும்.. போயும் ஒரு சினிமாக்காரி சொன்னதையா சீரியாஸா எடுத்துக்கணும்' என்கிற ரீதியில் வலைப்பூக்களிலிருந்து திண்ணை வரை ஒரு வித அலட்சிய மனப்பான்மை தெரியுது. அதைப்பத்தி அப்புறமா வாய்ஸ் கொடுக்கலாம்னு இருக்கேன்!

  ஞாநி கட்டுரையை மூச்சு முட்ட தட்டச்சிவிட்டு பெரிய வேலையை செஞ்சுட்டோம் என்கிற நினைப்பில் பிளாக்கில் தள்ளிவிட்டுவிட்டு தமிழ்மணத்தை எட்டிப்பார்த்தால், தெருத்தொண்டன் தீவிரமா எல்லாத்தையும் தட்டச்சிருக்காரு...அடேங்கப்பா!

  ReplyDelete
 3. கொஞ்சம் இன்ஸ்ந்டந்த் பின்னூட்டங்க உட்டுகிறேம்பா...

  1. திரு. ஞாநியும், ராம்கியும் சேர்ந்தால் வேறு என்ன விதமாக எழுதிவிட முடியும்.
  2. ஞாநியின் RSS/இந்து/தமிழன் எதிரி/ஆரிய/பஜ்ரங் தள்/சிவசேனா வெறி இதன் மூலம் தெரிகிறது
  3. இதே குரங்கு வித்தைகளை திராவிடர்கள் இல்லாமல் ஆரியர்கள் செய்திருந்தால் ஞாநி இப்படித்தான் எழுதியிருப்பாரா. அதை வெளியிடும் தைரியம்தான் ராம்கிக்கு இருந்திருக்குமா?
  4. விளிம்பு நிலை மக்களின் தலைவர்களின் விமர்சிப்பதே இவர்களுக்கு பொளப்பா போச்சி
  5. சொன்னவர்கள் செக்கூலரிஸ்ட் என்பதால் கேள்வி கேட்கும் ஞாநி சங்கர மடத்தை கேள்வி கேட்பாரா?
  6. தமிழ் பெண்கள் இல்லை என்று சப்பைகட்டு கட்டும் ஞாநி, சொன்னவர் தமிழில்தான் கருத்து சொன்னார் என்பதை மறுக்க முடியுமா?

  பெரியவர்கள் இந்த பதிவை திட்டி எழுதிய பிறகு
  1. சரியா சொன்னீங்க ஒரு தரம், சரியா சொன்னீங்க ரெண்டு தரம், சரியா சொன்னீங்க மூணு தரம்.

  ReplyDelete
 4. ராம்கி
  இது ஞானி கடிதமா? அவரது பார்வை எப்போழுதுமே வித்தியாசமானவை.
  நன்றி
  மயிலாடுதுறை சிவா...

  ReplyDelete
 5. முகமூடியாரே, உருட்ட என் மண்டைதான் கிடைச்சுதா? ஏற்கனவே ஏகப்பட்ட குட்டு வாங்கி மேடும் பள்ளமுமா நிறைஞ்சு கிடக்கிற இடமய்யா அது! பை த பை, ஒரு பதிவா போட்டு நாலு பேரை சிரிக்க வைக்கிறதுக்கு பதிலா கமெண்டா போட்டு நிறைய பேரை முறைக்க வெச்சுக்கிட்டீங்களே!

  ReplyDelete
 6. தங்கர் பச்சானின் குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த அந்த பேட்டி மடத்தனமானது இந்த காரணத்திற்காக தங்கர் பச்சானை எதிர்த்து குரல் கொடுப்பது நியாயமானதும் கூட (ஆனால் அதற்கு முந்தைய பேட்டியில் நடிகர்,நடிகைகள் மிகை உணர்ச்சி காண்பித்தார்கள் என்பது தான் இப்போதும் என் கருத்து),

  ஆனால் ஞானி குறிப்பிட்ட எந்த தலைவரும் கற்பு பெண்ணுக்கு மட்டும் தான் ஆணுக்கு இல்லை என்று கூறியதாக தெரியவில்லை... குறைந்தபட்சம் குஷ்பு பிரச்சினையில் கூட ஆண்கள் எல்லாம் எங்கே வேண்டுமானாலும் போங்க, பெண்கள் மட்டும் ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டுமென்று கூறியது போல தெரியவில்லை.

  இதை படித்தால் என்னமோ குஷ்புவை எதிர்த்த அத்தனை பேரும் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் பெண்களுக்கு மட்டுமே ஒழுக்க குறியீடுகள் பொருந்தும் என்று வலியுறுத்தியது போல் உள்ளது

  என்னை பொறுத்தவரை ஒழுக்க குறியீடுகள் பெண்களுக்கு மட்டுமே என்று கூறாத சமயத்தில் இப்படி பொருள்பட எழுதியிருப்பதே திரிப்பாகத் தான் கருதுகின்றேன்.

  ReplyDelete
 7. சிவா, எங்கே ஆளையே காணோம்? ஹி...ஹி.. நீங்க கேட்கறதுக்குள்ளே நான் முந்திக்கணுமே! ஞாநியோட கட்டுரைதான். கடைசியா சொன்னது மட்டும்தான் நம்ம கமெண்ட். என்னாது, இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்களே!

  ReplyDelete
 8. குழலி, தங்கர் பச்சானை விடுங்க. திரும்பவும் அவரைப் பத்தி பேசி பெரிய ஆளா ஆக்கிட வேணாம்! 'இந்தப் பிரச்னையில் ஆண்கள் பதில் சொல்லவே கூடாது'ன்னு திருமா பேட்டி கொடுத்திருப்பதன் அர்த்தம் பத்தி நாம ஆராய்ச்சி பண்ணலாம். அப்படீன்னா இது பெண்களுக்கான பிரச்னைன்னு அவர் சொல்ல வர்றரா... அப்படீன்னா ஞாநி சொல்றது கரெக்டாத்தான் கீது.. ஆம்பளை சிங்கம்! சரி, வேற மாதிரி எடுத்துக்கலாம். பெண்களுக்கான பிரச்னை, பெண்களே தீர்த்துக்கட்டும்னு நினைச்சாரா.. அதாவது பாபா ரிலீஸ் சமயத்துல வந்த பிரச்னையை 'அவரே' தீர்த்துக்கட்டும்னு பெருந்தன்மையா நினைச்ச கலைஞர் மாதிரி...? பெண்களே தீர்த்துக்கட்டும்னு திருமா நினைச்சுருந்தா ஆம்பளை சிங்கம் கேரக்டர் கரெக்டாவே மாட்ச் ஆவுதே!

  ReplyDelete
 9. http://www.rediff.com/news/2005/oct/03sw.htm

  சென்னையின் கலாச்சாரமாம்...!!!

  ReplyDelete
 10. மூக்காரே, பார்த்தேன், படிச்சேன்! வாங்க.. வாங்க... இதைப்பத்தியும் ஞாநி கொஞ்சம் டச் பண்ணியிருக்காரு.... ஆனா, எனக்கு கொஞ்சம் காமெடியா இருந்ததால விட்டுட்டேன். இப்ப திரும்பவும் புடிக்கிறேன்!

  'சென்னை பார்க் ஒட்டலில் நடனக்களத்தில் ஜோடிகள் முத்தமிட்டுக்கொள்வதை அவர்கள் அனுமதியின்றி படம் எடுத்து வெளியிட்டது முற்றிலும் அராஜகமானது. அத்து மீறலானது. இதுபோன்ற நடவடிக்கையை வெளிநாடுகளில் செய்தால் நஷ்ட ஈடு கோரி சம்பந்தப்பட்டவர்கள் போடும் வழக்கில் சன்டிவியே திவாலாகிவிடும். நம் நாட்டில் இத்தகைய தனி நபர் உரிமைகளுக்காக சட்டப்படி நீதி பெற கடும் முயற்சிகள் தேவை என்பதால் தப்பித்துக்கொள்கிறார்'

  தனி நபர் உரிமைகள் பற்றி கவலைப்படும் ஞாநி, எத்தனை தனிநபர்களை தனது பேனாவினால் இஷ்டத்துக்கு கிறுக்கி கிழித்திருக்கிறார் என்பதையெல்லாம் மறந்துவிடுவோம்... அவரோடு கூடவே சேர்ந்து தனிமனித உரிமை பற்றி கோஷ்டி கானம் பாடலாம்!

  ReplyDelete
 11. // 'இந்தப் பிரச்னையில் ஆண்கள் பதில் சொல்லவே கூடாது'ன்னு திருமா பேட்டி கொடுத்திருப்பதன் அர்த்தம் // ஆண்கள் பதில் சொல்லி நேரத்தை வேஸ்ட் செய்தால் அப்புறம் பெண்களை தூண்டிவிடுவது, அவர்களுக்கு தேவையான பழந்துடைப்பம், அறுந்து போன செருப்பு, காது போன கழுதை ஆகியவற்றை சேகரித்து கொடுப்பது போன்ற வேலையெல்லாம் யார் செய்வதாம் என்ற தொலைநோக்கு சிந்தனனயாலேயே என்கிறார் ஜும்பலயா அறிஞர் ழ்பா

  ReplyDelete
 12. ராம்கி,

  பத்திரிக்கையாளர் எழுதி கிழிக்கறதை எல்லாம் தனிமனித உரிமைகளை பாதிக்கிற மாதிரி எடுத்துக்கக் கூடாது நைனா. அது அவங்களோட ஜனநாயகக் கடமை. அப்படிப் பாத்தா நாம யாருமே வலைப்பதிய முடியாது :-). உலகத்தில் நடக்கரதைப் பத்தி எழுத ஒரு கூட்டமுன்னா, சக வலைப்பதிவாளர் பத்தி எழுத ஒரு குழுமம்னு நாம அபார வளர்ச்சி அடஞ்சிருக்கோம் இன்னக்கி. கேட்டா, சக வலைப்பதிவாளரும் இந்த உலகத்தில்தான வாழராரு. so, உலக விஷயங்கள்ள அவரும் வருவாரும்பாய்ங்க. எனவே நண்பர்களே...(ஒரு ஜோடா குடுப்பா..) :-)

  சந்தடி சாக்குல நீங்க ஞாநியப் போட்டுப் பாக்கலானு பாக்கறீங்களா...நடக்காது சார். :-)

  ReplyDelete
 13. இதை படித்தால் என்னமோ குஷ்புவை எதிர்த்த அத்தனை பேரும் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் பெண்களுக்கு மட்டுமே ஒழுக்க குறியீடுகள் பொருந்தும் என்று வலியுறுத்தியது போல் உள்ளது


  நச்.

  அவர்கள்தான் கண்ணகி சிலையை எடுத்ததிற்காக அதிமுகவை திட்டி
  தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். நம் கலாச்சார (கோ)காவலன் ஸ்டாலின் கூட
  ஜெயலலிதா போற வழியில் கண்ணகி சிலை இருந்தால் இடைஞ்சலாக இருக்குமென்று
  எடுத்துவிட்டதாக நக்கலடித்தது நியாபகம் வருகிறது.

  இந்தியா டுடே முழு பேட்டி எங்க இருக்குன்னு யாராவது சொல்றீங்களா?

  ReplyDelete
 14. தமிழ் ஆணுக்கு இவர்கள் வைக்கும் ரோல் மாடல் கோவலன். மனைவிக்கு வைக்கும் ரோல் மாடல் கண்ணகி. ஆனால் இவர்களுக்கு மாதவியும் வேண்டும். மாதவிகள் கோவலனின் கற்பை கேள்விக்குள்ளாக்கினால் இவர்களால் தாங்க முடியாது. கண்ணகியே நெடுஞ்செழியனிடம் நீதி கேட்பதற்கு முன்னால் கோவலனிடம் நீதி கேட்டிருந்தால் கோவலன் அவளிடம் என்ன சொல்லியிருப்பான்?

  'தமிழ் நாட்டை விட்டு ஓடு'


  நச்.

  அவர்கள்தான் கண்ணகி சிலையை எடுத்ததிற்காக அதிமுகவை திட்டி
  தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். நம் கலாச்சார (கோ)காவலன் ஸ்டாலின் கூட
  ஜெயலலிதா போற வழியில் கண்ணகி சிலை இருந்தால் இடைஞ்சலாக இருக்குமென்று
  எடுத்துவிட்டதாக நக்கலடித்தது நியாபகம் வருகிறது.

  இந்தியா டுடே முழு பேட்டி எங்க இருக்குன்னு யாராவது சொல்றீங்களா?

  Ignore previous comment to kuzhali's remark.It was cut and paste error.

  ReplyDelete
 15. நண்பரே

  திண்ணைக் கட்டுரைகளில் எங்கும் கேவலம் நடிகை சொன்னதுதானே என்ற தெனி எங்கும் வரவில்லை. ஒரு நடிகை சொன்னதையும் ஒரு மாபெரும் தலைவர் சொல்வதையும் கணக்கில் எடுக்கும் பொழுது நடிகை சொல்வதை விட தலைவர் சொல்வதற்கு மதிப்பு அதிகம் இருக்கும் என்ற அர்த்ததில் மட்டுமே சொல்லப் பட்டிருக்கிறது. நன்றாகப் படியுங்கள். நடிகை தன் பார்வையில் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்றிருக்கிறதே ஒழிய, கேவலம் நடிகை சொன்னதுதானே என்ற பொருளில் அர்த்தம் எடுத்துக் கொள்ளாதீர்கள். மற்றபடி ஞாநி சொல்வதிலும் எப்பொழுதாவது ஒரு நியாயம் இருந்து விடுகிறது. அடுத்த வாரமே இந்த ஞாநி வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிடும்.

  அப்புறம் நிதானமாக தொலை பேசலாம்.

  ReplyDelete
 16. 'இந்தப் பிரச்னையில் ஆண்கள் பதில் சொல்லவே கூடாது'ன்னு திருமா பேட்டி கொடுத்திருப்பதன் அர்த்தம் // ஆண்கள் பதில் சொல்லி நேரத்தை வேஸ்ட் செய்தால் அப்புறம் பெண்களை தூண்டிவிடுவது, அவர்களுக்கு தேவையான பழந்துடைப்பம், அறுந்து போன செருப்பு, காது போன கழுதை ஆகியவற்றை சேகரித்து கொடுப்பது போன்ற வேலையெல்லாம் யார் செய்வதாம் என்ற தொலைநோக்கு சிந்தனனயாலேயே என்கிறார் ஜும்பலயா அறிஞர் ழ்பா


  idha paththi pesina aprom penn yane adimai aanalnu pesa vendi varum.apuram sothurimai pathi pesanum. periyar sonnadhellam pesanum.

  pinnadi poi makalir aniya thoondi vitta prachnai illai.

  ReplyDelete
 17. சில விஷயங்களைப் பேசும்போது வார்த்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டும் என்பதற்கு தங்கர், குஷ்பூ சம்பவங்களே சாட்சி.

  ReplyDelete
 18. ////கி.ராஜநாராயணன் தொகுத்து தள்ளிய கிராமிய பாலியல் கதைகள் எந்தப் பண்பாட்டிலிருந்து வந்தவையாம்?

  ////

  ஞாநியா இதையும் எழுதியிருப்பது?... என்ன ஒரு அறியாமை. பாலியலும் அதைச் சார்ந்த இலக்கியங்களும் கூட பதிவு செய்யப்பட வேண்டியவையே என்று கூட புரிந்து கொள்ளாமலிருக்கிறாரே?

  அது சரி. இதை வைத்து இன்னும் எத்தனை பதிவுகள் ஓட்டப்படுமோ? :-)

  - Suresh Kannan

  ReplyDelete
 19. சம்பத் அண்ணாசாமிSaturday, October 08, 2005

  அது சரிங்க!

  அதெப்படி சொன்னவரை குத்தம் சொல்லாம விமர்சனம் செஞ்சவரையே எல்லாரும் குத்தம் சொல்றீங்க?

  சொன்னவரும் வாயடக்கம், சொல்லடக்கம் இல்லாம சொல்லியிருக்காரு. விமர்சனம் பண்ணவங்களும் பாமரத்தனமான உள்நோக்கத்தோட நடந்துக்கிட்டிருக்காங்க.

  ரெண்டு சைட்லயும் தப்பிருக்கு. நான் அடிப்பேன் நீ திருப்பியடிக்கக்கூடாதுங்கறது என்ன நியாயம்.

  ReplyDelete
 20. ஆனால் ஞானி குறிப்பிட்ட எந்த தலைவரும் கற்பு பெண்ணுக்கு மட்டும் தான் ஆணுக்கு இல்லை என்று கூறியதாக தெரியவில்லை...

  sila samayam pesi karuthai sollalaam. sila samayam pesamalum karuthu sollalaam.

  vijayakanth, karunanidhi, endru yaarume kushbuvuku adharavu kural kodukkamal aamai otuukul pona madhiri olindhiruppadhai sollgiraar.

  ReplyDelete
 21. //sila samayam pesi karuthai sollalaam. sila samayam pesamalum karuthu sollalaam.

  vijayakanth, karunanidhi, endru yaarume kushbuvuku adharavu kural kodukkamal aamai otuukul pona madhiri olindhiruppadhai sollgiraar.
  //
  அப்படி போடுங்க அருவாளை, ஆக உங்க அளவுகோள் படி குஷ்புவை ஆதரிக்கலைனா அவர்கள் ஆணாதிக்கவாதி அப்படிதானே சொல்ல வருகின்றீர், நீங்க ஒருவராவது உங்கள் அளவுகோலை ஒத்துக்கொண்டீரே மிக்க நன்றி....

  ReplyDelete
 22. சுரேஷ்,

  கி.ரா மீதான ஞாநியின் விமர்சனமாக இதை எடுத்துக்கொள்ளவேண்டாம். ஞாநியின் கட்டுரையை தெருத்தொண்டன் முழுவதுமாக கொடுத்திருக்கிறார். மறக்காமல் படித்துப் பாருங்கள். கி.ரா பற்றி ஒரு தடவை திருமாவளவன் சிலாகித்து பேசியிருந்ததால்தான் இதை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். பெரியாரின் தொண்டர்களாக தன்னை வாரித்துக்கொண்ட தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் மாலன் குறிப்பிட்டிருப்பது மாதிரியான விஷயம்தான். எப்படியோ, இது போன்ற பிரச்னைகளெல்லாம் நிறைய வந்தால்தான் தமிழ் கலாசாரம், தமிழுணர்வுக்கு சரியான அர்த்தத்தை நம்மால் ஒருவழியாக கண்டுபிடிக்க முடியும்!

  மூக்கண்ணே, கரெக்ட்தான். நான் யாரையும் 'இடி'க்கணும்னு நினைக்கலை. தப்பா எடுத்துக்காதீங்க! நான் எப்பவும் பொடிசுதான்! பொதுவாக பிரச்னைங்க எதாவது வெடிக்குறப்ப, ஞாநியும், சோவும் என்ன சொல்றாங்கன்னு கொஞ்சம் ஆர்வமாவே கவனிப்பேன். அதான் காரணம். சோ என்ன சொல்றார்னு இப்போ பார்க்கலாம்....

  "குஷ்பு பிரச்னை சேனல் யுத்தத்தை தவிர வேறில்லை. குஷ்பு பிரச்னையை வைத்து பெரிதுபடுத்திய பத்திரிக்கைகளை யாரும் கவனிக்கவே இல்லை. (இதைத்தான் கல்கியின் தராசும் சொல்கிறது)

  குஷ்பு அம்மாதிரிதான் நடக்கிறது என்று சொன்னது பிதற்றல். 99 சதவீத பெண்கள் அப்படியெல்லாம் நடந்து கொள்வதில்லை.

  குஷ்பு தமிழ்ப் பெண்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை. பொதுவாக பெண்களை பற்றித்தான் சொன்னார்."

  கடைசி பன்ச்

  "குஷ்புவின் கருத்தை தமிழகப் பெண்கள் (கவனிக்க தமிழ்ப் பெண்கள் அல்ல!) அலட்சியப்படுத்துவார்கள். ஆனால், இந்த 'பாதுகாவலர்'களிடமிருந்து, பெண்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்."

  ReplyDelete
 23. ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்

  ReplyDelete
 24. kushbuvai aatharikatha kootani katchi thalaivar thudappam thookiyavargalai aadharikirargal endru artham. alladhu irandukkum idayil veru edhavadhu nilai irundhal adhayavadhu solli yirukavendum.

  karunanidhiyai gnani vambukku izuthirukalam. avare kovalan pola vazndhukondu, penngal kannagi
  pola vazha vendum endru solla mudiyuma? aprom veetuku poga mudiyadhu. kushbuvai atharithal thamiznatu pengal vote poividum.

  ReplyDelete
 25. //6. தமிழ் பெண்கள் இல்லை என்று சப்பைகட்டு கட்டும் ஞாநி, சொன்னவர் தமிழில்தான் கருத்து சொன்னார் என்பதை மறுக்க முடியுமா?//

  Mugamoodiyare! Thamizhil Sonnathal Adhu Thamizh pengal patriya karuthu endru eduthukolla mudiyma? India Today Thamizh Idhazhil irunthu karuthu kettiruppargal. Illaiendral Avar Aangilathilo Allathu veru ethavathu oru mozhiyilo solliyirakka koodum.
  - Namakkal Shibi

  ReplyDelete
 26. ஒஹோ. அப்படியா விஷயம்.

  ராம்கி வழக்கமாக வாங்கும் பொட்டிக்கடையில் இனிமேல் இந்தியா டுடே பத்திரிக்கைப் பிரதிகள் வந்தவுடனேயே தீர்ந்துபோக க்ருபாஷங்கராகப்பட்டவன் ஏற்பாடு செய்வான். இந்தியாடுடே இனி ராம்கி கண்களில் படாமலிருக்கக் கடவதாக!

  ReplyDelete
 27. "குஷ்புவின் கருத்தை தமிழகப் பெண்கள் (கவனிக்க தமிழ்ப் பெண்கள் அல்ல!) அலட்சியப்படுத்துவார்கள். ஆனால், இந்த 'பாதுகாவலர்'களிடமிருந்து, பெண்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்."

  gurumurthy kalidamirundhu pengalai yaar kapatruvadhu?

  ReplyDelete
 28. அன்புள்ள ராம்கி,
  குஷ்பு எழுதியதில் ஒரு விஷயம் மட்டுமே எனக்கு உடன்பாடு இல்லாதது. அது படித்த ஆண் தன் மனைவி கன்னித்தன்மைஉடன் இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டான் என்பதே. நமது பெண் சமுதாயமே ஆண் எப்படி வேண்டுமானலும் இருப்பான் என்பதை ஏற்றுக்கொண்டதால் தான் இன்றைகும் விபசாரம் எனும் தொழில் இருக்கிறது.நடிகையை படம் முழுவதும் அவள் தேகத்தை உண்டியலாக அழகுக்காக ரசித்து விட்டு, அவளை ஒரு போகப் பொருளாக மட்டும் காட்டும் கலை உலகில் மட்டுமல்ல எல்லா இடத்திலும் அவளைப் பற்றிய பார்வை இப்படித்தான் இருக்கிறது."மானிடராக பிறக்க மாதவம் செய்திடவேண்டுமம்மா நடிகையையாய் பிறக்க மாபாதகம் செய்திடவேண்டுமம்மா" என்பதே உண்மை.கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமென்று வைப்போம் என்ற் பாரதியின் கூற்று உண்மையானால் மட்டுமே நடிகை பேசவும் எழுதவும் முடியும்.

  ReplyDelete
 29. ஞானி கேட்காத கேள்விகளா... ???சூப்பர் ஸ்டாரை கூட ஒரு முறை பக்கம் பக்கமாக கேள்விகள் கேட்டு வாங்கி கட்டிக்கொண்டவர் தானே...

  தமிழ் முரசு டக்கராக பொய் சொல்லி ஆரம்பித்தது என்று எப்படி கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை.. இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கிறதே (சரியோ , தவறோ)... அது எப்படி ..ஒரு வேளை ஞானி இதெல்லாம் தமிழ்முரசு தந்த பொய் செய்தியின் விளைவு என்று சொன்னால்.. அவர் டமாசுக்கு அளவே இல்லை என சொல்லி இதனை ஒதுக்கலாம்..

  குங்குமம் போல இலவச இனைப்புக்காக வாங்கப்படுகிற பத்திரிகை தான் தமிழ் முரசுவும்..

  ReplyDelete
 30. chandramuki ku appuram ithil pinnoottam 100 thoduma ramki....

  ReplyDelete