Thursday, December 01, 2005

1977 பாடல்கள்

ஹி..ஹி.. வணக்கம்பா. எல்லாரும் எப்பிடி கீறீங்கோ? கொஞ்ச நாளா தலையை மறைச்சுக்கினு இருக்க வேண்டியதா போச்சு. அதான் வரமுடியலை. அதாகப்பட்டது அம்மா டிவியை கிண்டலடிச்சாலும் தப்பு அய்யா டிவியை கிண்டலடிச்சாலும் தப்புன்னா இன்னாதான் பண்ணமுடியும்? சரி பாலிடிக்ஸ் மேட்டரெல்லாம் வேண்டாம்னு நினைச்சாலும் போரடிக்குதே. அதான் திரும்ப வந்தாச்சு!



சரி, ஒரு சூப்பர் மேட்டரோட ஸ்டார்ட் பண்ணுவோம். 'நீ மூணாம் கிளாஸ் படிக்கிறச்ச வந்த படம்டா இது'ன்னு யாராவது சொன்னா மனசுல கொஞ்சம் குளிர் அடிக்குமில்லியா.. அப்படியோரு ஜில் மேட்டர். 'ரெண்டு வயசா இருக்கும்போது வந்த சினிமாப்பா இது'ன்னு ஒரு பெரிசு சொன்னவுடன் பசக்குன்னு உட்கார்ந்துட்டேன். வெள்ளிக்கிழமை ராத்திரி சீரியல் தொல்லையெல்லாம் இல்லாத ஒரு சுபவேளை. பதினோரு மணிக்கு ஜெயா டிவியில 77 ஆம் வருஷம் வந்த பாட்டெல்லாம் வரிசையா எடுத்து வுட்டாங்க.....தூக்கம் போயோ போச்!

டெலிவுட் : 1977 பாடல்கள் More in www.tamiloviam.com

List of Movies

Aarupushpangal
Alukkoru Aasai
Andaman Kathali
Avar Enakke Sontham
Avargal
Chakravarthi
Dheepam
Dhurga Dhevi
Maduraiyai Meeta Sundara Pandian
Navarathnam
Nee Vazha Vendum
Odi Vilaiyaadu Thaaththaa
Palabhisekham
Pathinaru Vayathinile
Pattina Pravesam
Pen Jenman
Ponmani
Punniyam Seithaval
Rowdy Rakkamma
Sainthadamma Sainthadu
Sonnathai Seiven
Thunaiyiruppaal Meenatchi
Vayilla Poochi

3 comments:

  1. என்ன ராம்கி எங்க போயிருந்தீங்க?

    அது சரி என்ன யாரோ புண்ணியவாங்க உங்க பதிவோட ஸ்டார் வால்யூவை குறைச்சிட்டான்க. உங்களுக்கு யாராவது எதிரிங்க இருக்காங்களா?

    சரி நாளைக்கி என்னோட என்கதையுலகம் நகைச்சுவை சீரியலோட கடைசி பகுதி பதிவ மறக்காம படிங்க. அதுல நீங்களும் ஒரு ரோல் பண்றீங்க.

    ReplyDelete
  2. ராம்கி, அப்படியே என்னென்ன பாட்டுகன்னும் சொல்லக்கூடாதா? தெரிஞ்சுக்கிருவோம்ல.

    ஆறு புஷ்பங்களில் வரும் "ஏண்டி முத்தம்மா" பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். போட்டாங்களா?

    ReplyDelete
  3. ஜோசப் ஸார், நெகடிவ் ஓட்டா... என்னை பிடிக்காதவங்களும் இருக்குறாங்களா.. ஊருக்குள்ளே?!

    கணேஷ், பரவச நிலையில இருந்ததால எல்லாத்தையும் நோட் பண்ண முடியலை... பின்னாடி ஞாபகத்துக்கு வந்த லிஸ்ட்டை மட்டும்தான் பதிவுலே போட்டிருக்கேன்.

    ReplyDelete