Tuesday, January 17, 2006

ஓரங்கட்டேய் - 7

'ஏண்டா அம்பி...கோயிஞ்சாமி... உனக்கேண்டா அவா பொல்லாப்பு... சித்த சும்மா இருக்க மாட்டியோ? ராகு காலத்துல பொறந்தவனே!'

'வாங்க மாமா வாங்க... எதுவா இருந்தாலும் மெதுவா பேசுங்கோ... 'அவா' பேச்சு எனக்கு ஆப்பு வெச்சுடும். ஏற்கனவே 'பிராமண கைகூலி'ன்னு சொல்லி பெருமைப்படுத்தியிருக்காங்க. இப்போ 'அடிவருடி'ன்னு சொல்லி அழ வெச்சுடாதீங்க!

'சரிடா அம்பி... டோண்ட் வொர்ரி....'

'ஐயோ... இதுல இங்கிலீஷ் வேறேயா... செத்தேன் நான்!'

'அதில்லைடா அம்பி...ஒரு சந்தேகம். மொதல்ல தங்கர்பச்சான், குஷ்பு, அப்புறம் சுகாசினி இப்போ குட்டி ரேவதி... வரிசையா ஒரே விவகாரமா இருக்குதேடா...'

Image hosted by Photobucket.com

'ஆமா. நீயே ஏன்னு கண்டுபிடிச்சு சொல்லிட வேண்டியதுதானே... எல்லாத்துக்கும் பொதுவா ஒரு காரணம் இருந்தே ஆகணுமா? ஏன் மாமா மண்டையை போட்டு உடைச்சுக்கிறீர்? '

'இல்லேடா அம்பி... எல்லாமே திட்டம் போட்ட மாதிரியே இல்லை? அவாளுக்கு என்னதான் வேணுமாம்?'

'பப்ளிசிட்டிதான். மாமா...நீர் டிடெக்டிவ் ஏஜென்ஸியிலே உட்கார வேண்டிய ஆளு. ஒரே கும்பல்தான் ரூம் போட்டு தண்ணியடிச்சு எப்படியெல்லாம் பிரச்னை பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொண்ணா பண்றதா கதையை எடுத்து வுடு... கேட்கத்தான் நிறைய ஆளுங்க இருக்காங்களே!'

'என்னதான் சொன்னாலும் 'ஸார்' மேட்டர்லதானே உமக்கு சர்ரன்னு கோவம் வந்துச்சு?'

'ஸார்' மேட்டரெல்லாம் ஏற்கனவே சப்புன்னு ஆனதுதானே... அது எதுக்கு இப்போ?'

'இதுல என்ன தப்பு இருக்குங்குறேன். யார் யாருக்கு மரியாதை குடுக்கணும்னு ஒரு விவஸ்தை இருக்கோல்லியோ...'

'கரெக்டுதான் மாமா. அறிவாலயம் அப்புறம் தைலாபுரம் பக்கம் போய் 'ஐயா' போடாம பேசிப்பார்த்துட்டு பத்திரமா திரும்பி வாங்கோ... அப்புறமா பதில் சொல்றேன்'

'என்ன மிரட்டறேளா? அவா ஒண்ணும் கோச்சுக்க மாட்டாள்... என் ஓட்டு அவாளுக்கு வேணுமோல்லியோ!'

'ஓஹோ...அப்படி வர்றீரா? அப்போ செக்ரட்டரியேட் பக்கம் போய் சிஎம் பேரைச்சொல்லி கூப்பிட்டு பாருமய்யா!'

'நன்னா கூப்பிடுவேன். அவா பெரிசா என்னத்தை பண்ணிடுவா? '

'என்ன பண்ணிடுவாளா? நீர் என்ன சங்கரச்சாரியா? பேர் சொல்லி கூப்பிட்டு பிரசாதம் குடுக்க... 'மேடம்' போடாம வெறும் பேரை மட்டும் சொல்லி பாருமய்யா.... பல்லை பேத்து மாமிக்கு பார்சல்ல அனுப்பிடுச்சுவா!'

'கோயிஞ்சாமி...நீ நிறைய பேச ஆரம்பிச்சுட்டே... உன்னோட சேர்த்து என்னையும் கவனிச்சுடப்போறா... ஆளை வுடுடா அம்பி!'

14 comments:

 1. //'என்ன மிரட்டறேளா? அவா ஒண்ணும் கோச்சுக்க மாட்டாள்... என் ஓட்டு அவாளுக்கு வேணுமோல்லியோ!'
  //

  என்னதான் எலக்ஷன் வற்றதுண்ணாலும்
  சாதாரண மனுஸாலுக்கு இவ்வளவு எகத்தாளம் கூடாது ஓய். எலக்ஷன் ஒரு நாள்தான். ஆனா ஆட்சி அஞ்சி வருஷமாக்கும்.

  ReplyDelete
 2. இதுக்கும் அதுக்கும் பொருத்தம் இருக்குமா, அதுக்கும் இதுக்குமாவது சம்மந்தம் இருக்குமா, இல்ல அதுதான் சரியான காரணமா இருக்க முடியும், இப்படியெல்லா எழுதறவர் எதுக்கு அப்படி எழுதல, அப்படி இல்லையின்னா ஏன் தமிழ் வாழ்கன்னு சொல்லல, எழுதற ஆளோட பிறந்த ஜாதி என்னவா இருக்கும், அதுக்கும் எழுத்துக்கும் நேரடி தொடர்பு இருந்தே ஆகணும் -- ஆராய்ச்சியாளர் (கள்) வர்றதுக்கு முந்தி "நல்ல கற்பனை"ன்னு மட்டும் சொல்லிட்டு ஜூட் விட்டுக்கறேன்.

  ReplyDelete
 3. ஆஹா... லோகத்துலே ஒண்ணு நடந்துடப்டாதே, ஒடனே எல்லாருமா இப்படி பாஞ்சுண்டு வரா.
  அவாளவாளுக்கும் பப்ளிசிடி வேண்டியிருக்கோல்யோ? அதான்....

  பாத்துரா அம்பி. செக்ரட்டரியேட், அறிவாலயம்னு சொல்லிண்டு திரியாதேடா.... யாராவது 'நோட்' பண்ணி
  வச்ச்சாலும் வச்சிண்டுடுவா.

  ReplyDelete
 4. திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத முறையில், இப்படத்தை காண வருமாறு கட்சியினருக்கு கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். தாய், தந்தை, பிள்ளை, பெண், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள் பாசத்தை விட, வீட்டிலும், நாட்டிலும் உடன்பிறப்புகள் காட்டும் பாசமும், உடன்பிறப்புகளிடம் நாம் காட்டும் பாசமும்தான் மிக, மிக உயர்ந்தது என விமர்சித்துள்ளார்.

  "ஆணாதிக்கத்தின் அக்கிரமம், அநியாயம் எல்லை கடக்கும் போது, பெண்ணியம் பொறுமையிழந்து பிரளயமாய் புறப்பட்டு விடும் என்பதற்கான எச்சரிக்கை' எனக் கூறி கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.

  ReplyDelete
 5. இது ஏதோ திட்டமிட்ட சதி என்றுதான் தோன்றுகிறது. எஸ்ரா இந்தப் பெயரை எழுதவில்லை என்றால் அந்தப் பெயரைக் குறிப்பிட்டு எழுதிய துணை இயக்குனரோ யாரோ, அவர் யாரிடம் காசு வாங்கி இதை எழுதினார் என்று முதலில் கண்டுபிடித்தால் போதும். உண்மை விளங்கலாம். கதாவிலாசம், தற்போது தேசாந்திரி என்று நம் வேர்களை அடையாளம் காட்டும் வேகமாய்ப் பிரபலமாகி வரும் எழுத்தாளர் எஸ்ராவினைக் குறிவைத்துப் பின்னப்பட்டுள்ள இந்தச் சதிவலையில் குட்டிரேவதி வெறும் பகடைக்காய்தான்.

  ReplyDelete
 6. Did Kungumam ask S.Ra to start a series in their magazine and which he refused but continued in A.V which is considered by Kungumam as betre noire ? Is this the reason behind all these ghallata ?

  if you look at each controversy where Tamil Murasu / suntv gives publicity - it is always the people who did not accept to align with "THEM"

  - Kushboo as competitor in Jayatv
  with award for her sunday program

  - Suhasini with her program in rajtv

  - Vijayakanth - mandapam idippu - interviews regularly in AV or JV

  - Anti-Ajith - Beer Abishekam now that Vijay has been compromised with Pongal stamp release by PM and interview near India Gate by D.Maran.

  There is a pattern in all these.
  Whoever is getting a good name/publicity/sales in media area as a competition to suntv or kungumam or tamil murasu - they will try to go to any level to malign that person.

  ReplyDelete
 7. Ramki, see this

  http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=44&fldrID=1

  particularly notedown the lines....

  பொதுவாக எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருப்பது தமிழில் வெகு அபூர்வமான ஒன்று. பொது இடங்களில் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசிக் கொள்வார்களேயன்றி நட்போடு பழகுவதோ, தங்களது படைப்புகள் பற்றி கலந்து பேசிக் கொள்வதோ சாத்தியமேயில்லை. சில்வியா பிளாத் சொல்வது போல இன்னொரு எழுத்தாளரைச் சந்தித்து நட்பு கொள்ளும் அளவு தான் இன்னமும் மனச்சிதைவு அடைந்துவிடவில்லை என்று நினைத்திருப்பார்களோ என்னவோ.

  ஆனால் சமகால இலக்கிய போக்குகள் குறித்தும், கலாச்சார சமூக விஷயங்கள் குறித்தும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள எவ்வளவோ இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒரு எழுத்தாளர் மற்றவோடு பழகுவதற்கு தடையாக இருப்பது அவரின் ஈகோ மட்டுமே. அதைக் களைந்து எறியும் போது நட்பும், பகிர்தலும் சாத்தியமே.

  இதற்காகவே சமீபத்தில் குற்றாலத்தில் இரண்டு நாட்கள் கதையின் பாதை என்ற ஒரு இலக்கியச் சந்திப்பினை நடத்தினேன். இந்தச் சந்திப்பு எழுத்தாளர்களுக்கு மட்டுமேயானது. தமிழில் முக்கிய எழுத்தாளர்களான 25 பேர் இரண்டு நாட்கள் எவ்விதமான கட்டுபாடுகளும் இன்றி ஒன்றாகத் தங்கி காலையில் இருந்து மாலை வரை பல்வேறு உலக இலக்கியங்கள் குறித்தும், தமிழின் மூத்த படைப்பாளிகளான வண்ணநிலவன், வண்ணதாசன், பூமணி ஆகியோரின் படைப்புலகம் பற்றியும் விவாதம் செய்தபடி, ஒன்றாக அருவியில் குளித்துக் கொண்டு யாருமற்ற குற்றாலத்தின் சாலைகளில் அமர்ந்து விவாதம் செய்து கொண்டு இரண்டு நாட்கள் கூடியிருந்த சந்தர்ப்பம் ஏற்பட்டது.

  பூமணி, வண்ணதாசன், தேவதச்சன், பிரபஞ்சன், சா.தேவதாஸ், கலாப்ரியா, முருகேச பாண்டியன், காலபைரவன், ஜி. குப்புசாமி. ராஜகோபால். சு. வெங்கடேசன். சோ. தர்மன். நா. முத்துகுமார். வசந்தபாலன். அப்பாஸ், லேனா குமார், பூபதி, முரளி மனோகர், உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

  ReplyDelete
 8. //பொதுவாக எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருப்பது தமிழில் வெகு அபூர்வமான ஒன்று.//

  ஏன் இல்லை பாலமுருகன்? எழுத்தாளர்கள் சுபா (இருவர்தானே)
  அவர்கள் நட்பாய் இருக்கவில்லையா?

  ReplyDelete
 9. //பொதுவாக எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருப்பது தமிழில் வெகு அபூர்வமான ஒன்று.//

  ஏங்க பாலமுருகன்,

  வலைஞர்கள் எல்லாம் இன்னும் எழுத்தாளரிலே சேர்த்தி இல்லையா?(-:

  ReplyDelete
 10. thambi ammava bagachikkatha adhuvum therthal naerathula ,adakki vasi

  ReplyDelete
 11. //பொதுவாக எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருப்பது தமிழில் வெகு அபூர்வமான ஒன்று.//


  அதுதானே? துளசி, இலக்கியவாதியாய் மாற என்னோட "கா" விட்டுடுங்க :-)

  ReplyDelete
 12. //பொதுவாக எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருப்பது தமிழில் வெகு அபூர்வமான ஒன்று.//

  இது எஸ்.ரா எழுதுனது. பால முருகன் இல்ல.

  ReplyDelete
 13. '... எல்லாமே திட்டம் போட்ட மாதிரியே இல்லை?//
  ம்க்கும்!!!.

  ReplyDelete