Wednesday, April 05, 2006

தி.மு.க

பத்து வருஷத்துக்கு முன்னால் நடந்த விஷயம். காங்கிரஸிலிருந்து வெளியே வந்து மூப்பனார் தி.மு.கவுடன் கூட்டணி வைக்கப்போவதாக செய்திகள் கசிந்து கொண்டிருந்த நேரத்தில் கலைஞர் கருணாநிதி குங்குமத்தில் வாசகர் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். 'எதை மறக்கக்கூடாது? எதை மறக்க வேண்டும்?' கேட்டது நானேதான். கருணாநிதி சொன்ன பதில் 'நன்றி மறக்கக்கூடாது; நன்றி கொன்ற செயலை மறந்து விட வேண்டும்' (குங்குமம், 9.2.96)

Image hosting by Photobucket

ஏதோவொரு குறளை உல்ட்டா பண்ணி பதில் சொல்லியிருக்கிறார் என்று ஒதுக்கிவிட்டு அடுத்து என்ன கேள்வி கேட்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தது இன்று ஞாபகத்துக்கு வருகிறது. கருணாநிதி சொன்ன பதிலை முழுதாக புரிந்து கொள்ள பத்து வருஷம் தேவைப்பட்டிருக்கிறது. கருணாநிதி ஏமாற்றிவிட்டதாக சொன்னவர்களை விட கருணாநிதியை ஏமாற்றியவர்களின் லிஸ்ட் பெரிது. கருணாநிதி வெறும் அரசியல்வாதியாக மட்டும் இருந்திருந்தால் சறுக்கல்களிலிருந்து எழுந்து வந்திருக்க முடியாது. சின்ன வயதில் கிட்டப்பா அங்காடி வாசலில் விக்ஸ் மாத்திரையை முழுங்கிவிட்டு மைக்கை பிடித்த கருணாநிதிக்கும் இரண்டு மாசத்துக்கு முன்னால் பேரனை பிடித்தபடி நகர்ந்து வந்து மைக்கை பிடித்த கருணாநிதிக்கும் பெரிய வித்தியாசமில்லை. அப்போதெல்லாம் கருணாநிதி ஒரு அரசியல்வாதி; நல்ல பேச்சாளர் என்பதை தவிர வேறு எதுவும் தெரியாது. சின்ன வயதில் 'பொன்னர் சங்கர்' குங்குமத்தில் வந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு வாரம் கூட படிக்கப் பொறுமையில்லாமல் பக்கங்களை கடந்தவனுக்கு கருணாநிதியை பற்றியே ஒரு புத்தகம் எழுதவேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்திருக்க நியாயமில்லை. தமிழுக்கு சோதனை!

பா.ரா கூப்பிட்டு சொன்னவுடன் பரபரப்பாக ஆரம்பமானது வேலை. அடுக்குமொழி வசனம், இலக்கியம், லெமூரியா கண்டம், சுயமாரியாதை, கழகம், சமூக நீதி லொட்டு லொசுக்கையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இருபது பிளஸ் வயசுக்காரங்களுக்கு கருணாநிதி என்கிற தனிநபரின் வாழ்க்கையை சொல்வது என்பதுதான் முதலில் போட்ட ஸ்கெட்ச். ரஜினியின் சினிமா சாதனையை ஓரங்கட்டிவிட்டு மத்ததை ஹைலைட்டும் அதே ட்ரீட்மெண்ட்தானா என்கிற கேள்விக்கு பா.ராவிடமிருந்து பளிச்சென்று ஒரு பதில். 'பயோகிரா·பியோட பின்னணியில் தமிழ்நாட்டின் ஐம்பது வருஷத்து அரசியல் இருந்தாகணும்'

கருணாநிதியின் திருக்குவளை வாழ்க்கையில் ஆரம்பித்து திமிறும் கூட்டணிக்கட்சிகளை இழுத்து பிடித்துக்கொண்டு தேர்தல்களத்தில் நிற்கும் தற்போதைய நிலை வரை எல்லாவற்றையும் விவரிக்க நிறைய படிக்க வேண்டியிருந்தது. நிஜமாகவே நுரை தள்ளியது. எழுதியதை விட படிப்பதற்குத்தான் முக்கால்வாசி நேரம் காலியானது. பக்கம் பக்கமாக நிறைய எழுதி தள்ளியிருக்கிறார் மனுஷர். பாதி சுயபுராணம்; மீதி கிண்டல், எள்ளல் எல்லாமே. சில இடங்களில் ஆச்சர்யம்; பல இடங்களில் எரிச்சல்! நாட்டில் நடக்கிற எல்லா விஷயங்களுக்கெல்லாம் அவ்வப்போது கருத்து சொல்லி ஐம்பது வருஷங்களில் கருத்து கந்தசாமியாகியிருக்கிறார் கருணாநிதி. அதிலிருந்து அவர் பேசியிருக்கும் 'அரசியலை' ஒதுக்கி மீதியை எடுத்துக்கொள்ள ரொம்ப யோசிக்க வேண்டியிருந்தது. உடன்பிறப்புக்கான கடிதங்களோடு பழைய முரசொலியையும் தூசிதட்டி பரப்பிக்கொண்டு உட்காரும்போது முறைத்த அந்த சைதாப்பேட்டை தி.மு.க ஆபிஸ் கழக தொண்டரின் அவஸ்தையை தனியாக எழுத வேண்டும். உதவி செய்ய ஓடி வந்தவர்கள் லிஸ்ட் போட்டால் பத்ரியில் ஆரம்பித்து முகமூடி வரை நிறைய பேரை சொல்ல வேண்டியிருக்கும். பெயரை வெளியே சொல்ல வேண்டாம் என்று மறுத்த அந்த பத்திரிக்கையாளருக்கும், எலெக்ஷன் நேரத்திலும் நேரம் ஒதுக்கி விளக்கம் சொன்ன அந்த இரண்டு அரசியல்வாதிகளுக்கும் பகிரங்கமாக நன்றி சொல்ல முடியாது. நிறைய புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்து தந்த குத்துராமனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

கருணாநிதியின் சினிமா சாதனையை சாதாரணமாக சொல்லிவிடமுடியாது. 60 வருஷத்தில் 60 பிளஸ் படங்களுக்கு கதை வசனம். தமிழ் சினிமாவில் கைதட்டல் வாங்கிய முதல் டெக்னீஷியன் கருணாநிதியாகத்தான் இருக்க முடியும். முதல் பன்ச் டயலாக் எழுதியதும் கருணாநிதிதான். 'சிலரை சில காலம் ஏமாற்றலாம்; ஆனால் பலரை பல காலம் ஏமாற்ற முடியாதம்மா!' ஏகப்பட்ட நாவல், கதைகள் எழுதி குவித்திருக்கிறார். ஒரு பிஸியான அரசியல்வாதியால் இதெல்லாம் முடியுமா என்று ஆச்சர்யப்பட வைக்கும் சங்கதிகள். இன்னமும் அரசியல் முடிவுகளுக்கு கொள்கையை கூப்பிடுவது தமிழ்நாட்டில் கருணாநிதி மட்டும்தான். சொல்வது, செய்வது எல்லாவற்றையும் எழுதி வைத்துவிடுவது இவருக்கு பெரிய பிளஸ். அதுவே சில நேரங்களில் மைனஸ் ஆகிவிடுகிறது. உதாரணத்துக்கு புலிகள் ஆதரவு.

தமிழ்நாட்டின் சிறந்த அரசியல்வாதி; சிறந்த நிர்வாகி என்று எப்படி லிஸ்ட் போட்டாலும் டாப் 3 லிஸ்ட்டில் கருணாநிதியை ஒதுக்க முடியாது. மற்றவர்களிடமிருந்து தன்னை பிராண்ட் செய்து கொள்வதில் கருணாநிதியை மிஞ்ச யாராலும் முடியாது. வேலை தேடி இண்டர்வியூக்கு போகும் சாமானியன் கற்றுக்கொள்ள கருணாநிதியிடம் சரக்குகள் ஜாஸ்தி. சாதாரண தொண்டனாய் வாழ்க்கையை ஆரம்பித்த கருணாநிதிதான் இன்று கட்சி; கட்சிதான் கருணாநிதி. எம்.ஜி.ஆர் சொன்னதைப்போல தி.மு.கவின் உண்மையான அர்த்தம் திருவாரூர் முத்துவேலர் கருணாநிதிதான்!

'நம் சரித்திர நாயகர்களை பற்றிய விருப்பு வெறுப்பற்ற முன் தீர்மானங்கள், சாய்வுகள் அற்ற, கட்சி சார்புகள் அற்ற ஆய்வுகள் இருந்ததில்லை; எழுதப்படுவதில்லை. இம்மண்ணில் அதற்கு இடமில்லாமல் போய்விட்டது. அந்தந்த கட்சி பிரச்சாரங்களைத்தான் நாம் தெரிந்தவர்களாவோம். தமிழக வரலாறு ராஜாஜி, ஈ.வே.ரா, காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி என்னும் சரித்திர நாயகர்களால் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு தரப்பானது அல்ல. இது சமூகத்தினால் அவ்வப்போது கட்டமைக்கப்பட்டும் உள்ளது. இருப்பினும் இவர்கள் நாயகர்களானதும் இவர்களும் நம் சிந்தனைகளால், செயல்களால் சமூகத்தை மாற்றியமைத்தும் உள்ளனர். இரண்டும் பரஸ்பர இயக்கம். இது ஆக்குவதும் ஆக்கப்படுவதுமான இயக்கம். இந்த இயக்கத்தின் சரிதம் இவர்களை சார்ந்த கட்சியாளர்களாலோ, எதிர்க்கட்சியாளர்களாலோ நிச்சயம் எழுதப்படக்கூடாது. இவர்களின் எவர் பற்றியும் சார்பற்ற புறநிலைப்பார்வையில் எழுதப்படவேண்டும். அது நிகழவில்லை. வெறும் தூற்றலும் போற்றலுமே நம் மரபாகியுள்ளது. இந்நிலை இந்நாயகர்களுக்கு நாம் நியாயம் செய்ததாகாது' கருணாநிதி பற்றி வெங்கட் சாமிநாதன், ஜூன் 2000.

எலெக்ஷனுக்கு முன்னால் புத்தகம் ரெடியாகிவிடுமாம்! புத்தகத்தின் ஒரு காப்பியை வெங்கட் சாமிநாதனுக்கு அனுப்பியாக வேண்டும்!

45 comments:

 1. நீ நடத்து தலைவா! வாழ்த்துக்கள்!

  :-)

  புக் பேரென்ன?

  ReplyDelete
 2. இவர்களின் எவர் பற்றியும் சார்பற்ற புறநிலைப்பார்வையில் எழுதப்படவேண்டும். அது நிகழவில்லை.

  ditto.

  i dont think you fall in this category either Rajni Ramki.

  a pity that a person with your preconcieved notions should write a book on karunanidhi. a pity indeed.

  ReplyDelete
 3. அட..அதான் இவ்ளோ நாளா காணுமா..??

  புத்தகம் எப்படி வந்திருக்கிறது என்று "நிஜமாகவே" பார்க்க ஆசையாக இருக்கிறது. கிட்டத்தட்ட இது அவர் போட்டியிடும் கடைசி தேர்தலாக இருக்கும் என்கிற பட்சத்தில், இந்த சமயத்தில் இந்த புத்தகத்துக்கு ஐடியா தந்த மூளை, நிஜமாக்வே ஐடியா அய்யாசாமி முளைதான்..!!

  தன் பிரந்த நாளைக்கூட திமுக வசூல் நாளாக்கி இருக்கும் கருணாநிதியை வைத்தே நல்ல வசூலுக்கு வழி.

  திருப்பதிக்கே லட்டு ;-)

  வாழ்க..வளர்க.!!!!

  ReplyDelete
 4. அவர்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ நீங்கள் நன்றாகவே எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி விடுகிறீர்கள்..

  அன்பன்
  ஷாஜி

  ReplyDelete
 5. மனம் நிறைந்த பாராட்டுக்கள். எழுதிய அனுபவத்தை இன்னும் விரிவாக சொல்லி இருக்கலாம்.

  ReplyDelete
 6. வாழ்த்துகள் ராம்கி!

  அன்புடன்
  ஆசாத்

  ReplyDelete
 7. வாழ்த்துகள் ராம்கி.

  ஒங்க வீட்டுக்கு ஆட்டோ வராம இருக்கவும் வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 8. என்ன சொல்றீங்க சார்? எனக்கு புரியவில்லையெ...நீங்கள் புத்தகம் எழுதியுள்ளீர்களா?

  இதெல்லாம் என்னை போன்ற புதிய அப்பாவிகளுக்கு முதலிலேயே சொல்லக்கூடாதா?
  ரஜினிபத்தியுமா?

  ReplyDelete
 9. ரஜினி ரசிகரை வைத்து ரஜினி பற்றி புத்தகம் ,கலைஞர் வெறுப்பாளரை வைத்து கலைஞர் பற்றி புத்தகம்..ஹும்..நடக்கட்டும் ..நடக்கட்டும்..(சும்மா தமாசு) ..வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. Thanks Srikanth. இன்னும் பெயரில்லாத குழந்தைதான்!

  Thanks Anonymous. அதே. எனக்கும் பத்ரி, பாராவை பார்த்தா பாவமா கீது!

  Thanks Mooks. பார்க்கதான் ஆசையா, படிக்க இல்லையா?! :-)

  Thanks Shaaji & Padma madam

  ReplyDelete
 11. 'நன்றி ஆசாத்'ன்னு போஸ்ட்லேயே போட்டுருக்கனும்!

  Thanks Alex. ஆட்டோ மட்டும்தானா... இன்னும் ஏகப்பட்ட சோதனை இருக்கே!

  Thanks Muthu. கஷ்டகாலத்தை காசு கொடுத்து வாங்குற லிஸ்ட்டுல நீங்களும் இருக்கீங்களா?

  ReplyDelete
 12. Thanks Joe.
  //ரஜினி ரசிகரை வைத்து ரஜினி பற்றி புத்தகம் ,கலைஞர் வெறுப்பாளரை வைத்து கலைஞர் பற்றி

  அவ்ளோதானா? தப்பிச்சேன்டா சாமி!

  ReplyDelete
 13. நிச்சயமாய் கருணாநிதியின் தனிப்பட்ட அரசியல் சார்பற்ற, போராடும் குணம் கொண்ட personality படிக்கப்பட வேண்டியதுதான். நடுநிலையோடு சொல்லப்படும் எல்லா கருத்துக்களுக்கும் என்னுடைய முழு ஆதரவு உண்டு.

  இந்த அறிமுக கட்டுரை போலவே புத்தகமும் மிக சிறந்த முறையில் வெளிவரும் என நம்புகிறோம் ராம்கி.

  வாழ்த்துக்கள். மென்மேலும் எழுத்தில் வளருங்கள்.

  ReplyDelete
 14. ரஜினி புத்தகத்திலேயே உங்களுடைய நடுநிலை எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கலைஞர் பற்றிய புத்தகமும் அதே போல் இருக்க வாழ்த்துக்கள். கலைஞர் பற்றிய உங்களின் விமர்சனத்தையும் புத்தகத்தில் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 15. http://rajniramki.blogspot.com/2005/03/blog-post_31.html#comments

  அடடே ! போன மார்சுல ஒன்னு, இந்த ஏப்ரல்ல ஒன்னு.

  போட்டுதாக்கு ராசா.

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் ராம்கி. புக் டைட்டில் ? எதாவது விவகாரமா இருக்கபோவுது !!

  ReplyDelete
 17. "இடைவேளை" முடிந்துவிட்டதா என்று தினமும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

  Trailer-ஏ சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் னா..
  Main Picture......கண்டிப்பா பார்க்கனும் ( படிக்கனும்).

  இடைவேளையிலும் இடைவிடாது வெலைகள் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. "இடைவேளை" முடிந்துவிட்டதா என்று தினமும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

  Trailer-ஏ சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் னா..
  Main Picture......கண்டிப்பா பார்க்கனும் ( படிக்கனும்).

  இடைவேளையிலும் இடைவிடாது வெலைகள் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. மனப் பூர்வமான வாழ்த்துக்கள் ராம்கி,
  புத்தகத்தை பார்க்க மிக ஆசையாக உள்ளது.
  கிழக்கு பதிப்பகத்தின் மற்றும் ஓரு தரமான புத்தகமாக இருக்கட்டும்.
  தொடரட்டும் உங்களது எழுத்துப் பணி...
  நன்றி
  மயிலாடுதுறை சிவா...

  ReplyDelete
 20. Wishing you all success for the new "Padaipu"!!

  Hope it becomes a successful launch as your earlier book :-)

  ReplyDelete
 21. Thanks Siva. நடுநிலைக்கு கண்டிப்பா உத்திரவாதம் உண்டு!

  Thanks Balamurugan. எப்போதும் என்னோட கருத்தை எதிர்பாக்காதீங்க ப்ளீஸ்!

  Thanks Anonymous. அய்யோ... நான் ரொம்ப லேட்டு!

  Thanks Guru. நோ விவகாரம். இன்னும் டைட்டில் ரெடியாகலை!

  ReplyDelete
 22. யோவ் ர.ரா,
  நான் நெனச்சேன், நீரு பண்ணுதீரு.
  பட்டைய கெளப்பும்!

  புத்தகம் பாத்துட்டு மிச்சத்தை வெச்சுக்குறேன்.

  எம்.கே.குமார்

  ReplyDelete
 23. Thank Thaasan. இனிமே இடைவேளையும் கிடையாது...கிளைமக்ஸ்ம் கிடையாது! அது சரி உங்க கருப்பு
  டெம்ப்ப்ளெட்டை மாத்த மாட்டீங்களா?!

  Thanks Shiva, ரவிக்குமார் நம்பர் கிடைக்குமா?

  Thanks Narsi. What you think is not what you get ! :-)

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள் ராம்கி

  கலக்குங்க தலைவா...:-)

  ராம்கியை ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணாமேன்னு பார்த்தேன், உருப்படியான வேலை பார்த்திருக்கீங்க...

  ReplyDelete
 25. வெங்காயம்Thursday, April 06, 2006

  //உதவி செய்ய ஓடி வந்தவர்கள் லிஸ்ட் போட்டால் பத்ரியில் ஆரம்பித்து முகமூடி வரை நிறைய பேரை சொல்ல வேண்டியிருக்கும்.//

  அது என்ன முகமூடி? பிகேசிவக்குமார் மற்றும் திருமலை என்று எழுதுங்கள்.

  //நிறைய புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்து தந்த குத்துராமனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!//

  யோவ். அது முத்துராமன்யா. பாவம் அந்தாளு.

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் ர.ரா. புத்தகத்தின் கூட கருணாநிதி அவர்களின் ப்ளோ- அப் ப்ரீயா :-)))))))))

  ReplyDelete
 27. வாழ்த்துகள்! தேர்தல் நேரத்தில் வெளியிடுவது திமுக-வினரில் பலரை ஊக்குவிக்கலாம்; அதேசமயம் இது நல்ல வியாபார உக்தியும் கூட ;-)

  ReplyDelete
 28. //Thanks Alex. ஆட்டோ மட்டும்தானா... இன்னும் ஏகப்பட்ட சோதனை இருக்கே!//

  IMM..BETTER CONSULT WITH KARATE THIAGARAJAN..

  AS FAR AS I KNOW KALAIGNAR IS NOT THAT SORT OF PERSON....

  ReplyDelete
 29. innnaa thaliivaa ipdi kalakkuRiyee,

  avanavan jeyalalithaava thidnamaa, kalaingkara thidnamaa appadiyee illainaalum puurvajenmabantham maathiri intha theerthallayum rajiniya eeppadiyaavathu thiddamudiyumaannu paaththukkunu irukka solla ni mattum 10 pLakku ezhuthinamaa, 4 suyasarithai ezhuthinamaa, oru 15 naaval 50 siRukathai ezhuthinamaa 10 padaththukku Skriin pLee.........
  ipdinnu vaazkkaila munneeRikkinee irukka paarththiyaa athaambaa manasukku romba kushaalaa irukkuthu..
  vaazhththukkaL paa ..

  ReplyDelete
 30. Thanks Kumar. வாங்க தலை, வேட்டையாடு விளையாடுக்கு விமர்சனம் எழுத ஆரம்பிச்சா? :-)

  Thanks Sasi. உங்க தேர்தல் அலசல் பாமக ஏரியாவுக்கு மட்டும்தானா?

  Thanks வெங்காயம், பாலிடிக்ஸ் நல்லா வரும் போலிருக்கு...முகமூடியை எனக்கு நல்லா தெரியும்... போதுமா?

  ReplyDelete
 31. Thanks Usha madam. ப்ளோ- அப் உண்டாம். ஜெயலலிதாவுக்கு மட்டுமாம்!

  Thanks Radhakrishnan. வாங்க.. வாங்க ரொம்ப நாளாச்சு! ஆஸிலதானே இருக்கீங்க? எப்போ இந்தியாவுக்கு?

  ReplyDelete
 32. //AS FAR AS I KNOW KALAIGNAR IS NOT THAT SORT OF PERSON....

  Kalkignar's not. திமுககாரங்க? அண்ணா நான் இருக்குறது சைதாப்பேட்டைன்ணா!

  //
  அவனவன் ஜெயலலிதாவ திட்னமா, கலைங்கர திட்னமா அப்படியே இல்லைனாலும் பூர்வஜென்மபந்தம் மாதிரி இந்த தேர்தல்லயும் ரஜினிய ஏப்படியாவது திட்டமுடியுமான்னு பாத்துக்குனு இருக்க சொல்ல நி மட்டும் 10 ப்ளக்கு எழுதினமா, 4 சுயசரிதை எழுதினமா, ஒரு 15 நாவல் 50 சிறுகதை எழுதினமா 10 படத்துக்கு ஸ்க்ரீன் ப்ளே.........//

  நியோ, இதுக்கு நீங்க என்னை திட்டியிருக்கலாம்! :-)

  //வாழ்த்துக்கள் பா .. //

  Thankspaa

  ReplyDelete
 33. Great Expectations ..... Thamizhina Thalaivar pathi book... appuram oru rendu vaarthai englishlley sollaati eppidi...

  Wishing u success in your sincere efforts as always

  ReplyDelete
 34. குசும்பன்Friday, April 07, 2006

  வாழ்த்த வயதில்லை. வணங்குகின்றேன் தல!

  :-)

  ReplyDelete
 35. கலக்கறீங்க... உடனடியா அடுத்த ப்ராஜெக்ட் புக் செஞ்சிடும்

  ReplyDelete
 36. தீபாவளி ட்ரீட் மாதிரி இது தமிழ்ப்புத்தாண்டு ட்ரீடா ராம்கி?

  வாழ்த்துக்கள். எனக்கு ஒரு பிரதிக்கு இப்பவே ஆர்டர் எடுத்துக்குங்க!


  (இதன் நகல்:
  http://commentsofshibi.blogspot.com/2006/04/06-2006.html)

  ReplyDelete
 37. // Thamizhina Thalaivar pathi book... appuram oru rendu vaarthai englishlley sollaati eppidi...
  //

  நம்ம தேவ்க்கு குசும்புதான்.

  இதன் நகல்:
  http://commentsofshibi.blogspot.com/2006/04/06-2006.html)

  ReplyDelete
 38. வாழ்த்துக்கள் ராம்கி. தங்களின் இப்படைப்பும் மாபெறும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  புத்தகதின் பெயர் என்ன, திருவாளர் திருகுவளை தானே. just kidding...!!!

  - லக்ஷ்மண்

  ReplyDelete
 39. வாழ்த்துக்கள் ராம்கி. தங்களின் இப்படைப்பும் மாபெறும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  புத்தகதின் பெயர் என்ன, திருவாளர் திருகுவளை தானே. Just kidding. Congrats..

  - லக்ஷ்மண்

  ReplyDelete
 40. வாழ்த்துகள் ராம்கி.

  வருசாவருசம் ஒரு 'தலை'யைப் பத்தி எழுதறதுன்னு நிச்சயமாயிருச்சு.

  அடுத்தவருசம் 'அம்மா'வா?

  ReplyDelete
 41. Thanks.

  Kusumban & Dev இதெல்லாம் ஓவர்... (என்) உடம்புக்கு ஆகாது! :-)

  சிபி, உங்களுக்கு இல்லாமலா?

  பாபா, அதுக்குள்ளே இன்னொரு சோதனையா?

  இருக்கலாம். ஸ்ருதிபேதம்னு கூட இருக்கலாம்!

  பின்னூட்ட தலைவியே, இந்த பின் ஊட்டம் மட்டும் வேணாம்! உடம்பு ரணகளமா இருக்கு!

  ReplyDelete
 42. >> நியோ, இதுக்கு நீங்க என்னை திட்டியிருக்கலாம்! :-) >>

  I did not comment on this post Ramki! It was someone called 'Remo'!

  rOmba padichingaLA?! power check pannikunga!

  apdiyE kalaignar paRRi - JJ, Subramaniam Swamy muthal R. Venkatraman varai kEttu athai vachu ezuthineengannA innum nallA irukkum!

  ;-)))

  ReplyDelete
 43. Dear Ramki,
  You are going places !!!
  வாழ்த்துக்கள்!
  enRenRum anbudan
  BALA

  ReplyDelete
 44. ரெமொவா? ஒரே கொழ்ப்பமா இருக்கே! நீங்களாவாது நல்ல பேரா வெச்சுக்க கூடாதா? உங்க உள்குத்து புரியுது. ப்ளாக் வேற புஸ்தகம் வேற! :-)

  ன் நன்றி பாலாஜி ஸார். எங்கியோ போவப்போறேன்னு எல்லோரும் சொல்றதை பார்த்தா பயமாத்தான் இருக்குது! :-(

  ReplyDelete
 45. Dear Ramki,

  Hearty Congrats from Rajinifans.com family.

  All the very best .. Keep going..

  -Nat.

  ReplyDelete