Friday, May 05, 2006

வாளுக சனநாயகம்

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

கண்ணாமூச்சி ஆட்டம் நடக்குது
காணாமப் போச்சு நம் தேசம்...
மேடை போட்டு பேசும் தலைவரை
பாருங்க எல்லாம் பொய் வேஷம்.
ஆறு ஓடுற ஓட்டத்தைப் பார்...
அதுதானே சுதந்திரம்தான்.
வந்த சுதந்திரம் போனது எங்கே?
சட்டமும் பட்டமும் விக்குது இங்கே.
விக்கிறவன் வேலை எனக்கேண்டா?

Photobucket - Video and Image Hosting

40 நாள் லேட்டாக முட்டாளுங்க தினத்தை கொண்டாடப்போகும் தமிழனுக்கு வாழ்த்துக்கள்!

20 comments:

 1. நானும் எனது வாழ்த்துக்களை வழிமொழிகிறேன்!

  (நமக்கும் சேர்த்துத்தான்) :)

  ReplyDelete
 2. சத்தியமா என்னன்னு புரியல. என்னை மாதிரியான அரசியல்னா என்னன்னு புரியாத அப்பாவிகளுக்காக என்ன மேட்டருன்னு எடுத்து உடுங்களேன். கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. கொடியல்லாம் கட்டிருக்கு!

  ReplyDelete
 3. திருத்தக் கூடிய, திருத்த முடிந்த, திருந்தக் குரல் கொடுத்த சமுதாயத்தை விடிடு ஒதுக்கிய, கேட்டவர்க்குத் தர மறுத்த, பயந்து ஓடிய என் -இன்னும்] உள்ளங்கவர் நடிகன் ரஜினிகாந்த் செய்த தவறை என்னால் மறந்து இப்பதிவை ஏற்க முடியவில்லை!

  இனி வருவது வர்ட்டும்!
  முரசு ஒலிக்கட்டும்!
  வீரமுள்ள ஆண்மகன் விரைந்து வருகிறான்!
  முரசு அடித்து ஓட்டு கேட்டு வருகிறான்!
  முடிந்தால் அவனை[யாவது] அனுப்பிப் பாருங்கள்!
  ஆட்சி செய்ய வருவானா என்று!

  ReplyDelete
 4. நாற்காலிக்கு சண்டை போடும் நாடு நம் பாரத நாடு,

  நாடு நம் பாரத நாடு,

  நான் சொன்னா கேட்பது யாரு..\

  நாளும் நீ பேப்பர பாரு...

  நான் போட்டு நீயும் போட்டு

  என்னாச்சு நம்ம ஓட்டு

  கூத்தாடி பொழப்பா போச்சு

  ஜனங்க பாடு இப்ப ததீங்கனதோம்.....

  வாழ்க ஜனனாயகம்

  ReplyDelete
 5. //நமக்கும் சேர்த்துத்தான்) :)

  நான் வோட் போட போகப்போவதில்லை! :-)

  //என்னை மாதிரியான அரசியல்னா என்னன்னு புரியாத அப்பாவிகளு

  உங்களுக்கு அரசியல் தெரியாது, எளக்கியம்தான் தெரியும்னு எனக்கு தெரியுமே! :-)

  //அவனை[யாவது] அனுப்பிப் பாருங்கள்!
  ஆட்சி செய்ய வருவானா என்று!


  வாழ்த்துக்கள்! அடி வாங்க தெம்பும் இல்லை, அவசியமும் இல்லை என்பதால் நாங்க ஜகா வாங்கிக்குறோம்! :-)

  //நான் போட்டு நீயும் போட்டு
  என்னாச்சு நம்ம ஓட்டு

  'வேண்டாம் நமக்கு அரசியல் சாக்கடை
  அதனால் நாட்டுக்கு தொல்லையப்பா'ன்னு தொடரலையா?

  ReplyDelete
 6. தேர்தல் தினத்தை முட்டாள்களின் தினம் என கூறியதை உண்மையாக வன்மையாக கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 7. ஆயிரம் சொன்னாலும் ஓட்டுப் போட மாட்டேன் என்று சொல்லுவதை என்னால் ஏற்றுகொள்ளமுடியாது... உங்கள் முடிவு வருத்தத்துக்குரியது... திருத்தத்துக்குரியது....

  ReplyDelete
 8. //நான் வோட் போட போகப்போவதில்லை! :-)//

  நானும் தான்

  ReplyDelete
 9. இன்னா தலை?

  ஒன்னுமே நெஸ்மாவே பிரில..

  போலிடோண்டு ரசிகர்மன்றம்
  மாயவரம் கிளை.

  ReplyDelete
 10. //தேர்தல் தினத்தை முட்டாள்களின் தினம் என கூறியதை உண்மையாக வன்மையாக கண்டிக்கிறேன்

  உங்கள் கருத்தை நான் மதிக்கின்றேன். (இதான் பக்கா அரசியல் டயலாக்!) :-)

  //ஆயிரம் சொன்னாலும் ஓட்டுப் போட மாட்டேன் என்று சொல்லுவதை என்னால்

  ஆனால் 'ஆயிரம்' கொடுத்தால் பரிசீலிப்பேன்! :-)

  //நானும் தான்

  நாம மட்டுமில்ல இன்னும் ஓட்டு போடும் வயசுக்கு வராத சிம்ரன், விந்தியா வகையறாக்களும் அப்படியே!

  ReplyDelete
 11. தலிவர் இந்த மொறை மவுனமாயிட்டாருன்ன்னு சொல்லி...
  //40 நாள் லேட்டாக முட்டாளுங்க தினத்தை கொண்டாடப்போகும் தமிழனுக்கு வாழ்த்துக்கள்!
  //
  அப்படிங்கிறது கொஞ்சம் ஓவர் நைனா...

  ReplyDelete
 12. துருப்பிடித்த "சைக்கிள்" கடைசியாக சென்று நின்றிருக்கும் இடம் திமுக பூத்!

  டப்பா ஸ்பீக்கர் கட்டி வலம்வரும் JJ வேன் முட்டிக்கொண்டிருக்கும் இடம் அரிவாள்சுத்தி கம்பம்!

  ஒரு ரூவா STD பூத்தின்மேல் திமுக பேனர்!

  குட்டி ஹைகூ:
  நிஜத்தையும் மீறி
  நீள்கிறது நிழல்
  "சூரியன்" மறையும் நேரம்!

  இத்தனை கண்டுபிடிச்சிருக்கேன்!

  இதனால் தாங்கள் கூற விரும்புவது?! :)

  ReplyDelete
 13. //தலிவர் இந்த மொறை மவுனமாயிட்டாருன்ன்னு சொல்லி...

  இப்ப இல்லை. இனிமே எப்பவும்தான்! உமக்கு இன்னும் இருக்குது ரிப்போர்ட்டர் புத்தி! :-)

  //இத்தனை கண்டுபிடிச்சிருக்கேன்!

  சூப்பர். கலக்கிட்டீங்க!

  //சூரியன்" மறையும் நேரம்!

  ஏன் "இலையுதிர்" காலமா இருக்கக்கூடாதா? :-)

  ReplyDelete
 14. //ஏன் "இலையுதிர்" காலமா இருக்கக்கூடாதா? :-) //

  காசா பணமா?! உங்க ஆசையை கெடுப்பானேன்?! :)

  வாடி வதங்கி
  உதிர்ந்து மக்கி
  "மக்களால்" அள்ளி
  குப்பைக்குப் போகும்
  பச்சை இலைகள்
  பசுமையாகத்தான் தென்படும்

  உதிக்கப்போகும் "சூரியனின்"
  உக்கிரம் காணும்வரை!

  (அடடா! கவிஞன்னா இப்படித்தான் இருக்கனும்! எந்தப்பக்கம் பொற்கீழியோ அந்தப்பக்கம்.. ஹிஹி.. )

  ReplyDelete
 15. //உதிக்கப்போகும் "சூரியனின்"
  உக்கிரம் காணும்வரை!

  சம்மர் (1996-2001) காலத்திலேயே சூரியனால் உக்கிரமா இருக்க முடியலை. இதுல எங்கே புதுசா? :-)
  மூணு வருஷத்துல எம் பி தேர்தல் இருக்கப்பு!

  ReplyDelete
 16. உதய(நிதி) சூரியன் எப்படிய்யா உக்கிரமமா இருக்க முடியும்?

  ReplyDelete
 17. //நான் வோட் போட போகப்போவதில்லை! :-)//
  ஆமாம்,நானும்தான்.நான் எம்.எல்.ஏ ஆன பிறகுதான் ஓட்டு போடுவேன்.(சில பேர் சி.எம்மாதான் சட்ட சபைக்கு போவேன்றாங்க)

  ReplyDelete
 18. தேர்தல் தினத்தை முட்டாள்களின் தினம் என கூறியதை உண்மையாக வன்மையாக கண்டிக்கிறேன்.//

  அதானே

  வருஷத்துல மத்த நாளெல்லாம் புத்திசாலித்தனம் பொங்கியா வழியுது நம்மாளுகளுக்கு?புதுசா அன்னைக்கு மட்டும் ஏமாந்து போற மாதிரி.:-)

  ராம்கி உண்மையை தான சொல்றாரு?உண்மைய சொல்றதுக்கு வன்மையான கண்டனம் எதுக்கு?

  ReplyDelete
 19. பிரதமரே ஓட்டு போடறதில்லையாம். அதுவுமில்லாம நான் எல்லாம் 'சின்ன பையன்' அப்படீன்னு வலையுலக சென்சஸ் அதிகாரி அய்யா சொல்லிருக்காரு. அதனால எனக்கு ஓட்டெல்லாம் கிடையாதுங்கோவ்!

  ReplyDelete