Friday, May 12, 2006

செய்திகள் வாசிப்பது...

'உங்கள் பொன்னான, மணியான, முத்தான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் எங்கள்....' டயலாக் இல்லை; தொங்கும் தோரணம், அலறும் ஆட்டோ எதுவுமேயில்லை. அமைதியான தேர்தலும் அதிகபட்ச வாக்குப்பதிவும் அதிசயம் என்றால் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகளிலும் நிறைய ஆச்சர்யம். 'செங்குட்டுவன் ஒன்றரை லட்சம் ஓட்டில் முன்னணியில் இருக்கிறார்' என்கிற ரேடியோ செய்தியை கேட்டே பழக்கப்பட்டவனுக்கு ஆயிரம் ஓட்டு, அம்பது ஓட்டு என்று வித்தியாசத்தை அடுக்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஓட்டுப்போடாத குற்றவுணர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் கருத்து சொல்லியே ஆகணும்னு நினைச்ச பிறகு ஆசை வெட்கமறியாது!

இந்த தேர்தலில் நிறைய ஹீரோக்கள். கருணாநிதியில் ஆரம்பித்து கலர் டி.வி வரை. ஜெயலலிதாவும் இந்த லிஸ்ட்டில் உண்டு. எட்டாயிரம் ஓட்டில் ஆரம்பித்து பதினாலு ஓட்டு வரை கஞ்சத்தனமாய் கைப்பற்றி கரை சேர்ந்திருக்கும் திராவிட பெரிசுகளை பார்க்கும்போது ஆண்டிப்பட்டியில் அம்மாவின் குவார்ட்டர் செஞ்சுரி பெரிய விஷயம். இந்த தேர்தலிலும் காமெடியன்களுக்கு பஞ்சமில்லை. அதற்காக கிண்டலடிக்க தேவையில்லை. காமெடியன்கள் என்று நாம் நினைக்கும் பலரும் வில்லன் வேஷத்தை மறைக்க காமெடி வேஷம் போட்டவர்கள்தான். தேர்தல் முடிவுகளால் அவர்களுக்கு பாதிப்பே இல்லை. அதையெல்லாம் அலசிப்பார்த்தால் கடைசியில் காமெடியன்கள் நாம்தான் என்கிற உண்மை உலகத்துக்கு தெரியவரும்.

Photobucket - Video and Image Hosting

வை.கோ நிச்சயமாய் ஜீரோ இல்லை; ஹீரோதான். வரப்போகும் மூன்று வருஷத்துக்குள் அதை நிரூபிப்பார். பத்து வருஷத்துக்கு முன்னர் தனியாக நின்று டெபாசிட்டை பறிகொடுத்த வை.கோவுக்கும் ராமதாசுக்கும் விஜயகாந்தின் வெற்றி எரிச்சலாகத்தான் இருக்கும். வன்னியர்களின் கோட்டையாக சொல்லப்படும் ஏரியாவிலேயே கால் வைத்து எட்டி உதைத்திருக்கும் விஜயகாந்தின் ஆம்பிளைத்தனத்தை ஆளாளுக்கு சிலாகிக்கிறார்கள்! அதை விட முக்கியமான ஒரு விஷயமிருக்கிறது. தன்னுடைய ஜாதியின் பெயரைச்சொல்லி ஓட்டுக்கேட்காமல் இருந்ததுதான். விருத்தாச்சலத்தில் விஜயகாந்தை விடாமல் துரத்திச் போய் கிண்டலடித்து ஜாதியின் பெயரைச்சொல்லி தெனாவட்டாக ஓட்டுக்கேட்ட பா.ம.கவுக்கு எதிராக மக்கள் பொங்கியெழுந்திருப்பது அந்த பதினெட்டாயிரம் வாக்குகளில் தெரிகிறது. ஜீன்ஸ், டீஷர்ட் போட்டு தமிழை பாதுகாத்த, சினிமா சான்ஸ் கிடைக்காத சில தமிழ் அறிஞர்களின் முகத்தில் கரி. நமக்கெதுக்கு இந்த வம்பு? விஜயகாந்தின் அசெம்ப்ளி எண்ட்ரி பத்தி மதன் போடப்போகும் கார்ட்டூனை கெஸ் பண்ண ஆரம்பிக்கலாம்!

விருத்தாச்சலவாசிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல சென்னைவாசிகள். தி.மு.க கோட்டையில் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக அலையே அடித்திருக்கிறது. ·பதர் சயீத் கூட ஜெயித்திருக்கிறார் என்பது முக்கியம். சென்னையில் அம்மா இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்பது ரொம்ப முக்கியம். சைதாப்பேட்டை எதிர்பார்த்ததுதான். சங்கத்து ஆளுங்களை காணாம முழிக்கும் கட்டத்துரையை விட காமெடியான விஷயம் இங்கே நடந்தது. கூட்டிக்கழித்து பார்த்தால் சென்னைவாசிகளின் அந்தர் பல்டிக்கு இரண்டே காரணம்தான் இருக்க முடியும். ஒன்று தயாநிதி மாறன். இன்னொன்று செட்டப் பாக்ஸ்!

கொஞ்சம் அடக்கி வாசிச்சுருக்கலாமோன்னு டெல்லி கணக்குப்பிள்ளை இந்நேரம் நினைக்க ஆரம்பிச்சுருப்பார். 'இரண்டு ரூபாய்க்கு அரிசி தரமுடியுமா? இலவசமாக கலர் டி.வி தரமுடியுமா என்று அவர்கள் கேட்கிறார்கள்.. நான் சொல்கிறேன்....அது சாத்தியம்' என்று நிதானமாக சர்ட்டிபிகேட் கொடுத்ததை யார் மறப்பார்கள்? கொஞ்ச நாளைக்கு டெல்லியிலிருந்து தமிழ்நாட்டை பார்க்கலாம். இல்லாட்டி இப்படியொரு பன்ச் டயலாக் விடலாம்! 'நான் சாத்தியம் என்றுதான் சொன்னேனே தவிர சத்தியம் என்று சொல்லவில்லை!'

திருமா திரும்பவும் வெறுமா ஆகியிருக்கிறார். விஜயகாந்தை நினைத்து பல்லை கடித்துக்கொண்டிருப்பார். தமிழ்நாட்டில் காயடிக்கப்படாத வயசுப்பசங்க கூட்டம் கம்மிதான். தியாகி அவார்டு இருந்தால் கார்த்திக்குக்கு ஸாரி மு. கார்த்திக் தேவருக்கு கொடுத்துவிடலாம்! தேவர் ஓட்டை பிரித்த இனக்கோடாரி என்கிற பட்டம் கிடைக்கலாம். பா.ம.க என்கிற பலூனுக்கு யாரும் பஞ்சர் பார்க்காமலேயே காத்து இறங்க ஆரம்பிச்சுட்டதை சொல்லத் தேவையில்லை. மெதுவா ஒரு ஜாதி சங்கத்தை ஆரம்பிச்சு அப்படியே கட்சியா மாத்தி ஆட்சியை புடிக்கிறோமோ இல்லையோ டெல்லியில மினிஸ்டர் ஆயிடலாம்னு நினைக்கிறவங்க இப்போதைக்கு பதுங்கிக்கிறது உத்தமம்! இதுதான் தேர்தல் 2006 சொல்லும் மெகா செய்தி!

30 comments:

 1. //மெதுவா ஒரு ஜாதி சங்கத்தை ஆரம்பிச்சு அப்படியே கட்சியா மாத்தி ஆட்சியை புடிக்கிறோமோ இல்லையோ டெல்லியில மினிஸ்டர் ஆயிடலாம்னு நினைக்கிறவங்க இப்போதைக்கு பதுங்கிக்கிறது உத்தமம்! இதுதான் தேர்தல் 2006 சொல்லும் மெகா செய்தி!//

  சன் டிவில முந்தானை முடிச்சி போடறான். அதுவும் ராசா இளையராசா 'விளக்கு வெச்ச நேரத்திலன்னு பாட்டு பாடுறார்' (அமெரிக்கால) வுடு ஜுட்.

  ReplyDelete
 2. ---'இரண்டு ரூபாய்க்கு அரிசி தரமுடியுமா? இலவசமாக கலர் டி.வி தரமுடியுமா என்று அவர்கள் கேட்கிறார்கள்.. நான் சொல்கிறேன்....அது சாத்தியம்' ----

  இலவசமாக கலர் டி.வி தருவது 'சாத்தியம்'தான்; தரப்பட வேண்டியதுதான் என்று அவர் எங்குமே சொல்லவில்லை. (தரமுடியாது என்றும் சொல்லவில்லை என்பது வேறு விஷயம் :-) அவர் அத்தாட்சி காண்பித்ததெல்லாம் 'அரிசி'யைக் குறித்து மட்டுமே!

  ReplyDelete
 3. நல்ல அலசல் ராம்கி!

  ReplyDelete
 4. ராம்கி,
  நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

  அன்புடன்
  குமரேசன்.

  ReplyDelete
 5. ///
  சென்னைவாசிகளின் அந்தர் பல்டிக்கு இரண்டே காரணம்தான் இருக்க முடியும். ஒன்று தயாநிதி மாறன். இன்னொன்று செட்டப் பாக்ஸ்!
  ///
  செட்டாப் பாக்ஸ் ஒரு காரணமென்றாலும் ரவுடியிசத்தை ஒழித்ததும், குடிநீர் பிரச்சனையை கொஞ்சமாவது தீர்த்ததும் தான் முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன்.

  ReplyDelete
 6. //விஜயகாந்தின் ஆம்பிளைத்தனத்தை ஆளாளுக்கு சிலாகிக்கிறார்கள்!//

  எல்லாம் சரிதான். உங்கள் பெயரோடு ஒட்டி கொண்டிருக்கும் ஒருவர் எப்போது ஆம்பிளைத்தனத்தை காண்பிப்பார்

  ReplyDelete
 7. //ஜீன்ஸ், டீஷர்ட் போட்டு தமிழை பாதுகாத்த, சினிமா சான்ஸ் கிடைக்காத சில தமிழ் அறிஞர்களின் முகத்தில் கரி.//

  சூப்பர்மா

  ReplyDelete
 8. ராம்கி,
  நல்ல விலாவரியான செய்தி வாசிச்சதுக்கு நன்றி.

  அப்பப்ப இப்படி செய்தி வாசிங்க. அங்கே என்ன நடக்குதுன்னு நாங்களும் தெரிஞ்சுக்கறோம்.

  ReplyDelete
 9. Hello Ramki,

  Dr. Ramadoss is probably licking his own wounds. Captain has given him a typical anti-gravity kick!!!

  Vignesh

  ReplyDelete
 10. தங்கள் ஜாதிக்கட்சி தோற்றபிறகு இன்னமும் அந்தக்லட்சியை ஆதரித்தும் கலைஞரைத் திட்டியும் பதிவுகள் எழுதும் மாயவரத்தான் ரமேஷ்குமார், லண்டன் ஜெயக்குமார், ஊசி போன்றவர்களைப் பற்றியும் கருத்து சொல்லுங்க ரஜினி ராம்கி.

  ReplyDelete
 11. ரஜினி ராம்கி உங்கள் பதிவு பார்த்த பிறகு தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. இளய தலைமுறை நல்லவிதமாக சிந்தித்தாலே நாடு நலம் பெறும்.

  ReplyDelete
 12. //அத்தாட்சி காண்பித்ததெல்லாம் 'அரிசி'யைக் குறித்து மட்டுமே!

  வாங்க தலை வாங்க! இன்னும் எத்தனை பேரு சிதம்பரம் பேச்சுக்கு டிக்ஷ்னரி போடப்போறாங்களோ?! :-)

  வெளிகண்ட நாதர், குமரேசன் நன்றி.


  //ரவுடியிசத்தை ஒழித்ததும்,

  கண்டிப்பாக. சென்னையில் மட்டுமல்ல ஸ்டேட் முழுக்கவும்தான்.

  ReplyDelete
 13. //எல்லாம் சரிதான். உங்கள் பெயரோடு ஒட்டி கொண்டிருக்கும் ஒருவர் எப்போது ஆம்பிளைத்தனத்தை காண்பிப்பார்
  //

  கேள்வி, தோழியருக்கு சமர்ப்பணம்! :-)

  மாயவரத்தான், துளசி கோபால் நன்றி.

  விக்னேஷ், கரெக்ட்தான். இனிமே டாக்டரை சாமாளிக்கிறது கேப்டனுக்கும் கேப்டனை சாமாளிக்கிறது டாக்டருக்கும் முழு நேர வேலை! :-)

  ReplyDelete
 14. நல்ல அலசல்; நல்லா எழுதி இருக்கீங்க:)

  ReplyDelete
 15. மனு, நடப்பதெல்லாம் நல்லதுக்கே. ஆரோக்கியமான முடிவுகள். கலைஞர் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும்.

  SK, என்ன கேப்டன் கூடாரம் சந்தோஷத்தில் இருக்குதா? இருக்க வேண்டியதுதான். ஆனாலும் இருபது லட்சம் ஓட்டு கம்மிதான்.

  ReplyDelete
 16. கொஞ்சம் சரியாப் படிங்க!
  13 மாவட்டத்துல 20 லக்ஷம்
  இன்னும் மொத்தக் கனக்கு வரல்ல!
  மதிமுக, பாஜக வைல்லாம் விட அதிக ஓட்டு வாங்கி இருக்குன்னு சொல்லி இருக்காரு!

  ReplyDelete
 17. புதிய எதிர்கட்சியினரின் பார்வையில் இருந்து அலசப்பட்டிருக்கும் இந்த அலசல் நன்றாகவே உள்ளது.

  ReplyDelete
 18. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த ரோட்டில் பறக்க ஆரம்பித்திருக்கும் விஜயகாந்த் கட்சி கொடி ஸ்டில், அட்டகாசம். கவிதை மாதிரி இருக்கிறது.

  ReplyDelete
 19. ராம்கி நல்ல அலசல்.

  சென்னைத் தோல்விக்கு இன்னும் சிலக் காரணங்கள்
  1. சுனாமி நிவாரணத்தில் தி.மு.க காட்டிய அக்கறையின்மை
  2. சில பல தொகுதிகளில் தவறான வேட்பாளர் தேர்வு.

  கேப்டனுக்கு வாழ்த்துக்கள் அவசியம் தெரிவிக்கலாம்.. ஆனால் அவரைக் கொண்டாடுவது என்பது அவசரம்.

  வென்றால் அடிவருடுவதும் தோற்றால் தலையில் அடிப்பதும் தமிழன் பண்பாடு அல்லவா?

  இப்போத் தானே வந்து இருக்கார்...
  LET HIM COME...

  கடைசியாகக் கிடைத்தச் செய்தி நேற்று விருத்தாச்சலத்தில் எந்த ஒரு வெற்றி கொண்டாட்டங்களும் வெற்றி பெற்ற வேட்பாளர் சார்பாக அவர் தொண்டர்களால் செய்ய முடியவில்லையாம்... கடைகள் அடைத்தும் தெருக்கள் வெறிச்சோடியும் கிடந்தனவாம்.

  வாழ்க சனநாயகம்....

  ReplyDelete
 20. ராம்கி, off topic : புக் எப்படி விக்குது..?

  கூடிய சீக்கீரம் இன்னமும் நிறைய பிரதிகள் விக்கும். மஞ்சத் துண்டு தாத்தாவுக்கு அதுக்காவது தேங்க்ஸ் சொல்லுவீங்களா..அல்லது ..அப்பவும் கொள்கைப் பிடிப்போடவே இருப்பீங்களா..?? ;-) ஹி..ஹி..ஹி

  ReplyDelete
 21. இதுவும் off the Record(!?)தான்:

  ராம்கி,

  கோவையில் இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெடிவிக்கவும்.

  ReplyDelete
 22. //தங்கள் ஜாதிக்கட்சி தோற்றபிறகு இன்னமும் அந்தக்லட்சியை ஆதரித்தும் கலைஞரைத் திட்டியும் பதிவுகள் எழுதும் மாயவரத்தான் ரமேஷ்குமார், //

  இதே டயலாக்கை 1977-லேயே ஆரம்பிச்சிருந்தோம்னா நீங்க இப்ப வாயே திறக்க முடியாது தெரியுமா? ஓ.. தி.மு.க. காலத்திலே வாயை திறக்க விட மாட்டோம் அப்படீன்னு சொல்றீங்களா? முதல் நாளே குள.சண்முகசுந்தரத்திகிட்ட ஆரம்பிச்சிட்டீங்களே?!

  ReplyDelete
 23. ----இன்னும் எத்தனை பேரு சிதம்பரம் பேச்சுக்கு டிக்ஷ்னரி போடப்போறாங்களோ?! ----

  நான் அன்றே அகரமுதலி போட்டுட்டேனே :D :P

  ப.சி புள்ளி விவரமும் ஜெயாவின் காதில் வரும் புகையும் - மோகன்தாஸ் பதிவில் எழுதியது (April 25, 2006)

  ப. சிதம்பரத்தின் பேச்சு வாக்காளர்களை எவ்வளவு தூரம் சென்றடையும் என்று தெரியவில்லை. ஆனால், நீங்கள் சொன்னது போல் ஒவ்வொரு மேடையிலும் அத்தாட்சிப் பத்திரத்துடன் மக்களுக்கு சான்றுகளை வைப்பது;

  கொடுத்தது எவ்வளவு (vs) பயன்படுத்திக் கொண்டது எவ்வளவு போன்ற துல்லிய தகவல்கள் (ரகசிய காப்பு ஆவணம் அல்ல போன்ற விஷயங்களையும் சொல்லிவிட்டு) மானியங்களையும் சான்றுகளையும் விலாவாரியாக அமைதியாகப் பேசுவது...

  கலர் டிவி குறித்து எதுவும் குறிப்பிடாமல், இரண்டு ரூபாய் அரிசி குறித்த கணக்கு வழக்குகளை விளக்குவது; குட்டிக் கதை, குத்தாட்டம் எல்லாம் போடாமல், இவரைப் போலவே பலரும் பேசினால், கட்சி கூட்டங்களுக்கு செல்வதே சுவாரசியத்துடன் பயனுள்ளதாக அர்த்தபூர்வமாக இருக்கும்!

  ReplyDelete
 24. //ஆயிரம் ஓட்டு, அம்பது ஓட்டு என்று வித்தியாசத்தை அடுக்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. //
  உண்மை தான். இந்த தடவை வெற்றி வித்தியாசம் பலத் தொகுதிகளில் மிகவும் குறைவு.
  //ஓட்டுப்போடாத குற்றவுணர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் //
  ஜனநாயக கடமையை செய்ய தவறிய ரஜினி ராம்கியை நாகை சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 25. கலக்கல் post ராம்கி !!
  //விஜயகாந்தின் அசெம்ப்ளி எண்ட்ரி பத்தி மதன் போடப்போகும் கார்ட்டூனை கெஸ் பண்ண ஆரம்பிக்கலாம்!//
  ராமராஜன் அசெம்ப்ளி எண்ட்ரி பத்தி மதன் போட்ட கார்ட்டூன், இன்னும் கண் முன்னே நிற்கிற்து !!

  ReplyDelete
 26. //வை.கோவுக்கும் ராமதாசுக்கும் விஜயகாந்தின் வெற்றி எரிச்சலாகத்தான் //
  இன்னொரு பெரிய நட்சத்திரம் கூட எரிச்சல் அடைந்திருப்பாரோ ?

  ReplyDelete
 27. //இன்னொரு பெரிய நட்சத்திரம் கூட எரிச்சல் அடைந்திருப்பாரோ ?

  ஓகோ... நாங்க சண்டை போட்டு உஙகளை காப்பத்தனும்.. நீங்க எட்ட நின்னு வேடிக்கை பார்ப்பீங்க அப்படித்தானே? :-)

  ReplyDelete
 28. Ennoru periya natchathiram adirchi agieruppar.

  ava late tta vara vaippu erukku enn na

  "namakku eni vecha kuda ettadha endha paiyan 9% vangierukkanne appo namma guarentee ya varalam"

  ethu than nidarsana unmai..

  ReplyDelete
 29. தோற்றுவிட்டு சப்பைக்கட்டு கட்டுவது மாதிரி இருக்கு....

  ReplyDelete