Friday, May 05, 2006

வாளுக சனநாயகம்

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

கண்ணாமூச்சி ஆட்டம் நடக்குது
காணாமப் போச்சு நம் தேசம்...
மேடை போட்டு பேசும் தலைவரை
பாருங்க எல்லாம் பொய் வேஷம்.
ஆறு ஓடுற ஓட்டத்தைப் பார்...
அதுதானே சுதந்திரம்தான்.
வந்த சுதந்திரம் போனது எங்கே?
சட்டமும் பட்டமும் விக்குது இங்கே.
விக்கிறவன் வேலை எனக்கேண்டா?

Photobucket - Video and Image Hosting

40 நாள் லேட்டாக முட்டாளுங்க தினத்தை கொண்டாடப்போகும் தமிழனுக்கு வாழ்த்துக்கள்!

Wednesday, May 03, 2006

ஓரங்கட்டேய் - 11

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

நோ கமெண்ட்ஸ்!

அருள்வாக்கு

"பாட்டாளி மக்கள் கட்சியில் 1 எம்.எல்.ஏ.வாக இருந்த இந்த கட்சியில் இன்று 20 எம்.எல்.ஏக்கள் அதிகரித்து உள்ளனர். இப்போது 31 எம்.எல்.ஏ.வாக ஆகப்போகிறோம். மேலும் மத்தியில் 6 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த கட்சியில் சிறந்த சுகாதார அமைச்சராக அன்புமணி உலகளவில் பாராட்டப்பட்டு விருதும் வழங்கப்பட்டுள்ளது. நம் உணர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது.நடிப்பில் எவரும் சீண்டாமல் இருந்ததால் இன்று கட்சியை ஆரம்பித்த ஒருவரால் இந்த மண்ணை பற்றி என்ன தெரியும். இளைஞர்களை கெடுத்து கெட்ட சக்திகளை பரப்புபவர்களை நான் தேர்தலுக்கு பிறகு விடப்போவதில்லை"

- டாக்டர் ராமதாஸ்

Tuesday, May 02, 2006

புரட்சி தொகுதிகள்

அடிதடி, வெட்டு குத்து, கோஷ்டி தகராறு, தள்ளுமுள்ளு, ஆள்கடத்தல் என்றெல்லாம் விதவிதமாக வார்த்தையை போட்டு விவரிப்பதற்கு பதிலாக சிம்பிளாக 'புரட்சி'ன்னு சொன்னாலே போதும். நம்மூரில் நிறைய பேருக்கு புரிந்துவிடும். எந்த ரவுடி ஜெயிப்பான்னு மண்டையை குடையுற 'புரட்சி' தொகுதி நிலவரம் கொஞ்சம் பார்க்கலாம். வேட்பாளர் புரொ·பைல் பார்த்தால் 'எரியுற கொள்ளி' டயலாக்கை சொல்ல தோணும். வேணாம், சொல்லி சொல்லி போரடிச்சுப் போச்சு! எதை தொட்டாலும் இம்சைதாங்கிற நிலைமையில இருக்கும் இந்தப்பகுதி குடிமகன்களை காப்பாத்த ஆண்டவனை ஒரு தபா வேண்டிக்கோங்கோ!

Photobucket - Video and Image Hosting

பூம்புகார்: கற்புக்கரசி பிறந்து, கருணாநிதி கண்டுபிடிச்ச ஊராக இருந்தாலும் எப்போதும் இது எம்.ஜி.ஆர் தொகுதிதான். இப்போது சுனாமி அலையால் ஆளுங்கட்சி பக்கம் சுருண்டு கிடக்குது. எப்படியாவது பொண்ணை நிக்க வெச்சுடணும்னு நம்பிக்கையோட தொகுதிக்கு ரவுண்டு வந்த மருத்துவர் திகைச்சுப்போய் வேட்பாளரை மாத்திட்டாராம். பூம்புகார் தமிழனுக்கு சினிமா மயக்கம் போக சான்ஸ் இல்லாமல் போய்விட்டது! இன்னொரு சுனாமி வந்து, அப்போ அம்மாவே ஆட்சியில இருந்தா இன்னும் நிறைய கிடைக்குமேன்னு நினைக்கிற அளவுக்கு மக்கள் இங்கே இருக்காங்கிறது ஷாக்கான சங்கதி. ஆதரவு ஓட்டை பங்கு போடுவதில் ஆளுங்கட்சிக்குள்ளேயே அடிதடி. அ.தி.மு.கவின் அக்மார்க் ரவுடிகளெல்லாம் ஏனோ இங்கேதான் பிறந்திருக்கிறார்கள். இப்போ பிரச்னை, கிளைமாக்ஸ் நேரத்தில் களத்தில் இறங்கியிருக்கும் 'கட்டபொம்மன் பேரன்' மாயா வெங்கடேசன்தான்! மாயவரத்து சுற்று வட்டார பகுதியில் அடிக்கடி போஸ்டரில் போஸ் கொடுக்கும் இந்த இம்சை அரசனிடம் ஏகப்பட்ட காசு. ஆளுங்கட்சி ஒரு பக்கம்; மாயா தரும் சாயா ஒரு பக்கம். பா.ம.க பெரியசாமியை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

திருவிடைமருதூர்: கட்சி நிக்கலையேன்னு கட்டை விரலை கட் பண்ணிக்கிட்ட விஷயத்தை யாரு மறந்தாலும் கலைஞர் மறக்கமாட்டார். அம்மா கட்சி தொண்டன் மாதிரி ஏகத்துக்கும் விசுவாசமா இருக்கானேன்னு கலைஞர் நினைக்கவும் மாட்டார். சிட்டிங் எம்.எல்.ஏ ராமலிங்கம் கட்டை விரலையே விலைக்கு வாங்குமளவுக்கு வசதியான பார்ட்டி. இந்த டிராமாவை ஜெயா டிவி. மிஸ் பண்ணியதுதான் ஆச்சர்யம். கோ.சி.மணிக்கு அடங்காத இந்த காளை இப்போது சிலிர்த்து நிற்கிறது. 'யாருமே இல்லாத இடத்தில் எதுக்குடா டீ ஆத்துறேன்'னு விவேக் தேவர் வந்தால் பா.ம.கவை நிச்சயம் கமெண்ட் அடிப்பார். ஜாதி ஓட்டு இல்லாத இடத்தில் உடன்பிறப்புகள் அடித்துக்கொள்வதை வேடிக்கை பார்த்த பா.ம.கவின் மேலேயே இப்போது புதுக்குண்டு. பாமகவின் ஆலயமணி, விடுதலைப்புலிகளுக்கு டீசல் கடத்திய கேஸில் மாட்டிக்கொண்டு அலைபவருக்கு அடிக்கடி ஷாக் ட்ரிட்மெண்ட் கொடுப்பது அ.தி.மு.க அல்ல தி.மு.கதான்!

Photobucket - Video and Image Hosting

வேதாரண்யம் : அடித்து துரத்துதல் (மணி சங்கர் அய்யரை மட்டும்!) ஸ்பெஷலிஸ்ட், இன்னபிற சங்கதிகளை கடத்தும் ஸ்பெஷலிஸ்ட்ம் மோதுகிறார்கள். வேதாரண்யத்தின் நிரந்தர எம்.எல்.ஏவை அசைத்துப்பார்க்க சாம, பேத, தான தண்டத்தில் இறங்கியிருக்கிறார் அம்மாவின் தளபதி. இரண்டு தரப்பும் கட்சிக்காரர்களை காசினால் குளிப்பாட்டுகிறார்கள். கலைஞர் பிறந்த ஊரில் இரட்டை இலை கொடி பறக்கிறது. திருக்குவளை தப்பித்தவறி இந்த தொகுதியில்தான் வருகிறது. நாகப்பட்டினத்திலிருந்து ஒண்ட வந்திருக்கும் பிசாசை நம்புவதா அல்லது ஊர்ப்பிசாசையே நம்பித்தொலைவதா என்று மக்கள் குழப்பத்திலிருப்பதால் வேதாரண்யம் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டே கிடக்கும்!

பண்ருட்டி: கிழட்டு நரிக்கும் குட்டி நரிக்கும் கல்யாணமாம் என்று ஆள்காட்டி விரலை ஆட்டிக்காட்டாததுதான் குறை. பண்ருட்டியார் பெரிய ஆளு. கருணாநிதி கூடவே இருந்து எம்.ஜி.ஆர் கட்சிக்கு ஆள் பிடித்தவர். ராஜீவ் காந்தியையும் பிரபாகரனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு தப்பும் தவறுமாக டிரான்ஸ்லேட் பண்ணி நிறைய சாதித்தவர்! குட்டி நரியும் சாதாரண ஆளில்லை. ஆறு மாதம் அரெஸ்ட் வாரண்ட்டுக்கு டிமிக்கி கொடுத்து டெல்லியில் தலைமறைவாக இருந்துவிட்டு எலெக்ஷன் நேரத்தில்தான் ஊருக்கு வந்திருக்கிறார். சிப்காட்டில் ஸ்டிரைக் நடந்தால் வேல்முருகனுக்கு சந்தோஷம். கம்பெனியும் சரி அதில் வேலை பார்க்கிறவர்களும் சரி கட்டை பஞ்சாயத்துக்கு வீடு தேடி வருவார்கள். பிடிச்ச பாட்டு... ராஜா.. வசூல் ராஜா! கடலூருக்கு கலவர மாவட்டம் என்று நல்ல பெயர் வாங்கி தந்த நாலு பேரில் இவரும் ஒருத்தர்!

Monday, May 01, 2006

ரவுண்ட் அப் - குத்தாலம்

இதுவும் ஒரு அக்மார்க் அ.தி.மு.க தொகுதிதான். வடக்கே திருப்பனந்தாள்; தெற்கே சன்னாநல்லூர். தொகுதி போலவே எல்லா கட்சியிலும் இரண்டு துருவங்கள் உண்டு. சன்னாநல்லூர், ஸ்ரீவாஞ்சியம் பகுதியிலிருந்து வேட்பாளர்களை நிறுத்துவது இதுவே முதல் முறை. அ.தி.மு.க சார்பில் நிற்கும் வேட்பாளர் பரம சாது. சொந்த ஊரில் ஏகப்பட்ட செல்வாக்கு. நல்ல அனுபவசாலி. கட்சிக்கூட்டங்களில் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருந்தவரை கூப்பிட்டு சான்ஸ் கொடுத்திருக்கிறார்களாம்! வம்பு தும்புவுக்கு போகாதவர் என்பதால் சாது இமேஜ் கைகொடுக்கிறது. ஜாதி கணக்குகள் எப்போதும் தோற்றுப் போவதால் இங்கே ஜாதிக்கட்சிகளுக்கு வேலையில்லை.

Photobucket - Video and Image Hosting

திரும்பவும் தி.மு.க சார்பில் நிற்க ஆசைப்பட்டு கிடைக்காமல் தன்னுடைய மகனையே களத்தில் இறக்கியிருக்கிறார் கல்யாணம். இரண்டு முறை தேர்தலில் நின்று தோற்றுப்போனாலும் ஒரே ஒரு தடவை ஜெயித்ததால் கல்யாணத்தின் கூரை வீடு சொற்ப காலத்தில் பங்களாவான அதிசயம் நடந்தது. அவ்வப்போது கூட்டம் போட்டு தன் இருப்பை காட்டிக்கொண்டே இருந்ததற்கு கைமேல் பலன். மூன்று மாதத்திற்கு முன்னால் கட்சியில் சேர்ந்த கல்யாணத்தின் வாரிசு மேல் உடன்பிறப்புகளுக்கு ஏகப்பட்ட கோபம். இருந்தாலும் வேறு வழியில்லை. மூன்று மாதத்தில் இந்த பொடிசு அரசியலில் கடைத்தேறிவிட்டது.

கோஷ்டி பிரச்னையை சமாளிக்க கோ.சி மணிதான் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கிறார். கோ.சி. மணி மகனுக்கே சீட் கொடுக்க மறுத்த கலைஞர், கல்யாணத்தின் கோரிக்கைக்கு தலையாட்டியதுதான் கட்சிக்காரர்களின் மண்டையை குடையும் கேள்வி. பஞ்சாயத்து பண்ணுவதில் கோ.சி.மணி எக்ஸ்பர்ட். இருந்தாலும் குடும்ப அரசியலால் நிறைய பேருக்கு எரிச்சல். இப்போதைக்கு குத்தாலம் தொகுதியின் வெற்றி ஆசைமணியின் கையில்தான். அதிருப்தியிலிருக்கும் இந்த முன்னாள் எம்.எல்.ஏ, அ.தி.மு.கவின் பெரும் புள்ளி. எம்.ஜி.ஆர் காலத்து ஆள். ஆசைமணிக்கு அம்மா மேல் கோபம் வந்தால் அ.தி.மு.க இங்கே காலி!

ரவுண்ட் அப் - சீர்காழி

திருமாவளவனுக்கே இது நம்ப முடியாத விஷயம்தான். பலமான தனது கோட்டையை சக கூட்டணிக்கட்சிக்கு விட்டுக்கொடுத்த அம்மாவை நினைத்து சந்தோஷத்தில் விம்மினாலும் நிலைமை இங்கே தலைகீழ். ஆளில்லாமல் தடுமாறிய விடுதலைச்சிறுத்தைகள் பட்டுக்கோட்டைக்கு போய் உஞ்சை அரசனை பிடித்து வந்தார்கள். கொள்ளிடத்திலிருந்து பூம்புகார் வரை இஷ்டகோணலுக்கு இருக்கும் தொகுதியை ஒரு ரவுண்டு சுற்றி வருவதற்குள்ளேயே சிறுத்தைக்கு மூச்சு வாங்கிவிட்டதாம். சுனாமி நிவாரணப் பணிகளைத்தான் பிரச்சாரத்தில் ஹைலைட்டுகிறார்கள். சுனாமிக்கு ஆறுதல் சொல்ல வந்த திருமா, தலித் மக்களை அம்மா கண்டுக்கவே இல்லையென்று திருவாய் மலர்ந்தருளிய இடம் இதுதான் என்பதை சைடில் வைத்துக்கொள்ளவும்.

Photobucket - Video and Image Hosting

விஜயகாந்த் ரசிகர்களின் முனகல் சத்தம் கொள்ளிடம் வரைக்கும்தான். திருமுல்லைவாசல் போன்ற சுனாமி ஏரியாக்களில் இன்னும் அ.தி.முக ராஜாங்கம்தான். சீர்காழி டவுணில் நிலைமையோ வேறு. 'எங்க கண்ணு முன்னாலேயே மூட்டை மூட்டையா லாரியில ஏத்திக்கிட்டு போய் அந்த மீனவ குப்பத்துல கொண்டு போய் கொடுத்தாங்க. எங்களுக்கு ஒரு தம்பிடி அரிசி கூட கிடைக்கலை!' சுனாமியால் பாதிக்கப்பட்டது மீனவர்கள் என்றால் நிவாரண உதவி நமக்கும் கிடைக்கவில்லையே என்கிற எரிச்சலில் ஏகப்பட்ட பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொகுதியில் வன்னியர்கள் ஜாஸ்தி. பாட்டாளி மக்கள் தலித் தம்பியை கடைசி நேரத்தில் கைகொடுத்து காப்பாற்றிவிடுவார்கள் என்று நிஜமாகவே நம்புகிறார்கள்.

இந்தப் புரளியையெல்லாம் கண்டுகொள்ளாமல் உடன்பிறப்புகள் உற்சாகம் குறையாமல் ஒடியாடி வேலை செய்கிறார்கள். பன்னீர்செல்வம் தொகுதிக்கு நன்றாகவே தெரிந்த முகம். அமைப்பு ரீதியாகவும் தி.மு.க இங்கே படு ஸ்ட்ராங்க். கலர் டி.வி அறிவிப்பு வந்ததுமே தொண்டர்கள் ஒரு தடாலடி வேலையை செய்தார்கள். வீடு வீடாக போய் ரேஷன் கார்டு ஜெராக்ஸை சேகரிக்க ஆரம்பித்ததால் மக்களுக்கு கலர் டி.வி கனவு உச்சத்துக்கு போயிருக்கிறது. இன்றைய நிலையில் பா.ம.கவே உதவிக்கு வந்தாலும் இங்கே சிறுத்தைகளை காப்பாற்ற முடியாது!